சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

10 பாடங்கள்  Khan11

10 பாடங்கள்

4 posters

Go down

10 பாடங்கள்  Empty 10 பாடங்கள்

Post by Atchaya Sat 20 Aug 2011 - 10:12


நமது நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் கொடி கட்டிப்பறக்கும் முக்கிய நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஜீம் பிரேம்ஜி, ஒரு விழாவில் மாணவர்கள் கற்க வேண்டிய பத்துப் பாடங்களை விளக்கினார். அவை…

1. பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள்

உங்களை நீங்களே நம்ப வேண்டும். அதேபோல மிகப்பெரிய சவாலைச் சந்திக்கும் போது, நீங்கள் அதைவிட்டு ஓடிவிட நினைக்கலாம். அல்லது பிரச்சினையை மற்றவர்களிடம் தள்ளிவிட நினைக்கலாம். அல்லது அதில் உங்களது தலையை நுழைக்கலாம். அப்படி இல்லாமல், உங்களது பணிகளை நீங்களே தீர்மானியுங்கள்.

2. மகிழ்ச்சியைச் சம்பாதியுங்கள்

நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்படும்போது, நினைவில் கொள்ளத்தக்க சாதனைகளை விளக்குகிறார்கள். அதேசமயம் அவர்கள் சந்தித்த கடினங்களும் கூட அவர்களது மகிழ்ச்சியின் ஒருங்கிணைந்த பகுதி தான். பாராட்டை சம்பாதிப்பதில் இருப்பதைப் போல வேறு பெரிய திருப்தி இல்லை என்பதைக் கண்டறிந்தேன். கஷ்டப்பட்டு போராடி சம்பாதித்தால் தான் அதன் மதிப்பு நமக்குத் தெரியும்.

3. தோல்வியே வெற்றிக்கு வழி

ஒவ்வொரு முறையும் பாராட்டே கிடைத்துக் கொண்டிருக்காது. வாழ்க்கையில் பல சவால்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். சில வெற்றிகளைப் பெறலாம். சில தோல்விகளைப் பெறலாம். வெற்றியால் மகிழலாம். ஆனால், அதைத் தலையில் ஏற்றிக் கொள்ளக்கூடாது. அவ்வாறு, தலையில் ஏற்றிக் கொள்ளும் கணத்திலிருந்தே நீங்கள் தோல்விப் பாதையில் பயணம் செய்யத் தொடங்கி விடுவீர்கள். தோல்வியை எதிர்கொள்ள நேர்ந்தால் கவலைப்படாதீர்கள். வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுங்கள். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள். இழப்பைச் சந்திக்கும் போது இழப்பிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதை இழந்துவிடாதீர்கள்.

4. வெற்றியைப் போல தோல்வி

தன்னம்பிக்கைக்கும் கர்வத்துக்கும் இடையே மெல்லிய கோடுதான் இருக்கிறது. தன்னம்பிக்கை உள்ளவர்கள் எப்போதும் கற்றுக் கொள்ள திறந்த மனதுடன் இருப்பார்கள். எந்த நிலையிலும் கற்றுக் கொள்ள விரும்புவதே தலைமைப் பண்புக்கு முக்கியமானது. மற்றொருபுறம் கர்வம். அனைத்தும் நமக்குத் தெரியும் என்று நினைப்பது, நாம் கற்றுக் கொள்வதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. மாறி வரும் உலகில் விதிமுறைகள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும். பிரச்சினைகளின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாமல் மனநிறைவு கொள்வது உங்களது உணர்வுகளை சோம்பேறி ஆக்கும். உங்களைச் சுற்றி நடப்பதைப் புரிந்து கொள்வதைத் தடுக்கும். இதுதான் தோல்விக்கு முதல்படி.

5. சிறந்த வழி இருக்கிறது.

சிறப்புடன் செயல்படுதல் என்பது இலக்கு அல்ல. அது தொடர்ந்து செல்ல வேண்டிய பயணம். தொடர்ந்து முன்னேற்றம் நிகழ வேண்டுமானால், அதில் நம்பிக்கை வைக்க வேண்டும். அதற்காக உழைக்கவும் விரும்ப வேண்டும். நமது படைப்பாக்கத்திற்கும் புத்தாக்கத்திற்கும் மற்ற துறைகளிலிருந்து ஊக்கம் பெற வேண்டியது அவசியம். இயற்பியலில் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவுக்கு இசையிலும் ஆர்வம் காட்டினார் ஐன்ஸ்டீன். பெட்ரண்ட் ரஸ்ஸல் தத்துவமேதை மட்டுமல்ல, கணிதவியலாளரும் கூட. திறமையும் படைப்பாக்கமும் ஒன்றிணைந்து நடைபோட வேண்டும்.

6. சாதகமான எதிர்வினை, எதிர்நிலைச் செயல்பாடு

அமைதியான மனநிலையில் நாம் மதிப்பீடு செய்யும்போது சாதகமாக எதிர்வினை செய்கிறோம். நமது செயல்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. ஆனால், எதிர்நிலையாக செயல்படும்போது, எதிராளிகள் நாம் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறார்களோ அதையே செய்து கொண்டிருக்கிறோம். ஒரு விசயத்தை ஏற்க இயலாத நிலையில், மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில் சாதகமான எதிர் வினை இருக்க வேண்டும். அதுவே தற்போதைய நிலைமைக்க்கு சவா லையும் வளங்குன்றாத சமூக சீர்திருத்தத்திற்கு யனுள்ளதாகவும் இருக்கும்.

7. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்

இளம் வயதில் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. 24 வயதில் நுழையும்போது நேரப்படி செயல்பட வேண்டியதிருக்கும். நேர நெருக்கடிக்குள் ஆளாகாமல் இருக்க பிசிக்கல் பிட்னஸ் அவசியம். உடற் பயிற்சி, நாம் உழைக்கச் செலவழிக்கும் நேரத்தின் தரத்தை மேம்படுத்துவ துடன், படுக்கச் சென்றதும் சீக்கிரம் தூக்கம் வரவும் உதவியாக இருக்கும். மன உளைச்சலை தவிர்க்கவும் உதவியாக இருக்கும்.

8. அடிப்படை நெறிகளில் சமரசம் வேண்டாம்

‘மனதின் ஜன்னல்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும். அதேசமயம், காற்றில் நமது கால்கள் அடித்துக் கொண்டு போய்விடக்கூடாது’ என்று மகாத்மா காந்தியடிகள் அடிக்கடி கூறுவார். நீங்கள் எதற்காக நிற்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அறநெறி என்பது சொல்லும் வார்த்தைகளில் இல்லை. செயல்களில் இருக்க வேண்டும். அடிப்படை நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் சமரசம் வேண்டாம்.

9. வெற்றி பெற விளையாடு

வெற்றி பெற விளையாடு. எப்படியாவது விளையாடு என்று அர்த்தம் அல்ல. கண்ணியமற்ற விளையாட்டு வேண்டாம். ஒவ்வொரு முறையும் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை. மற்றவர்களின் உழைப்பில் வெற்றி பெற வேண்டாம். கடந்த முறை செய்ததைவிட இந்த முறை மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டும். நோக்கத்தில் வெற்றி பெற முழுத் திறமையைக் காட்ட வேண்டும். இதற்கான உறுதி இருக்க வேண்டும்.

10.சமூகத்திற்குத் திருப்பிக் கொடு

இந்தியா மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்றாலும், பல சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, இதற்குத் தீர்வு காணும் வகையில் நம் அனைவருக்கும் ஒருங்கிணைந்த சமூகப் பொறுப்புணர்வு அவசியம் தேவை. அனைத்துச் சவால்களிலும் முக்கியமானது கல்வி. ஒரு புறம் வேலைக்குத் தகுந்த திறமையாளர்கள் கிடைக்காத நிலை உள்ளது. மற்றொருபுறம் வேலை இன்மையும், வறுமையும் உள்ளன. இந்த இரு முனைகளையும் இணைப்பதற்கு அனைவருக்கும் தரமான கல்வியை கிடைக்கச் செய்ய வேண்டும்.
நன்றி சித்தார்கோட்டை.காம்
Sikkandar Badusha
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

10 பாடங்கள்  Empty Re: 10 பாடங்கள்

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 10:18

நல்ல பகிர்வு ரவி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

10 பாடங்கள்  Empty Re: 10 பாடங்கள்

Post by ஹம்னா Sat 20 Aug 2011 - 10:25

அவர் சொன்ன 10 பாடங்களும் ஒரு மனிதனுக்கு முக்கியமாக தேவையான பாடங்களே.
நன்றி அண்ணா பகிர்வுக்கு. ##* ##*


10 பாடங்கள்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

10 பாடங்கள்  Empty Re: 10 பாடங்கள்

Post by நண்பன் Sat 20 Aug 2011 - 11:01

சிறந்த தகவலுக்கு நன்றி ரவி அண்ணா
நமது சிக்கந்தர் பாதுஷாதானா இதற்கு சொந்தக்காரர் வாழ்த்துக்கள் நன்றியும் கூட 10 பாடங்கள்  517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

10 பாடங்கள்  Empty Re: 10 பாடங்கள்

Post by Atchaya Sat 20 Aug 2011 - 11:05

வாருங்கள் நண்பா. அன்பு நன்றி... #heart
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

10 பாடங்கள்  Empty Re: 10 பாடங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum