சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, தமிழுக்கும் ஆபத்து வந்துள்ளது: கருணாநிதி பேச்சு Khan11

அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, தமிழுக்கும் ஆபத்து வந்துள்ளது: கருணாநிதி பேச்சு

Go down

அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, தமிழுக்கும் ஆபத்து வந்துள்ளது: கருணாநிதி பேச்சு Empty அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, தமிழுக்கும் ஆபத்து வந்துள்ளது: கருணாநிதி பேச்சு

Post by நண்பன் Fri 26 Aug 2011 - 9:51

சென்னை, ஆக.26-

கடந்த 16-ந் தேதி நடைபெற்ற
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், சட்டப்பேரவையில் நடைபெற்ற
விவாதங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் சென்னையில், சட்டமன்றத்தில்
ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் வடசென்னை மாவட்ட தி.மு.க. சார்பில்
கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.

சென்னை
தங்கசாலை மணிக்கூண்டு அருகே நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, வடசென்னை
மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில்,
தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:-

தமிழக
சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் இங்கு கண்டன கூட்டம்
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த தலைப்பில் ஒரு திருத்தத்தைக்கொண்டுவர
விரும்புகிறேன். ஜனநாயகமே இல்லாத சட்டசபையில், ஜனநாயகம் படும் பாடு என்று
எப்படி கூற முடியும்? ஜெயலலிதா ஆட்சிப்பொறுப்பேற்ற உடன் இனி தமிழ்நாட்டில்
வன்முறைகளுக்கு இடமில்லை. கொலை, கொள்ளை, திருட்டுகள், தாலி சங்கிலி
பறிப்புகள் இதற்கெல்லாம் இடமில்லை.

இந்த செயல்களில்
ஈடுபட்டவர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டார்கள் என்று கூறினார்.
ஆனால், இப்போது அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 100-வது நாளை
கொண்டாடினார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இந்த 100 நாட்களில் நடந்த கொலைகள்
86, கொள்ளைகள் 110, சங்கிலி பறிப்பு 38, வழிப்பறி கொள்ளைகள் 13. இவற்றையும்
100 நாள் கொண்டாட்டத்தில் ஜெயலலிதா கட்சியினர் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நான்
இன்று சட்டமன்றத்துக்கு சென்றேன். அங்கு என் கையெழுத்து பதிவாகாவிட்டால்
எம்.எல்.ஏ. பதவி பறிபோய்விடும். நான் தொகுதி மக்களுக்கு பணியாற்றுவேன்
என்று எனக்கு வாக்களித்த திருவாரூர் மக்கள் ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக
எம்.எல்.ஏ.என்ற முறையில் கடமையாற்ற பழைய சட்டமன்றத்துக்கு சென்றேன்.

புதிய
சட்டசபைக்கு அல்ல. அதுதான் பூட்டப்பட்டு கிடக்கிறதே. காரணம் நாம்
கட்டியதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைத்ததற்காக, திறப்புவிழாவில்
நம்முடைய சோனியா காந்தி முன்னிலை ஏற்றதற்காக. அந்த கட்டிடம் எதற்கும்
உதவாது என்றார்கள். ஆனால், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான
மருத்துவமனை அமைக்கப்படும் என்று அம்மையார் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில்,
தமிழுக்கு மரியாதை கொடுக்க மாட்டோம் என்று கூறுகிற ஆட்சியாளர்களுக்கு
துதிபாடும் சில கட்சிக்காரர்களும் இருக்கிற காரணத்தால், சட்டப்பூர்வமாக
நாங்கள் நிறைவேற்றியுள்ளவற்றை எல்லாம் மாற்றி அமைக்கிறார். உலகில் 6
மொழிகள் தான் செம்மொழியாக்கப்பட்டன. தமிழ் செம்மொழி ஆவதற்கு முதல் குரல்
கொடுத்தவர் பிராமணர் குலத்தில் உதித்த சூரிய நாராயண சாஸ்திரி.

அவர்
எழுப்பிய குரலை எழுப்பித்தான் 100 ஆண்டாக தமிழ்மொழி செம்மொழியாக வேண்டும்
என்று நாங்கள் மட்டுமல்ல. பொதுவுடமை கட்சியினர், கம்யூனிஸ்டு கட்சியினர் என
இன்னும் எத்தனையோபேர் குரல் கொடுத்தனர். இந்த நிலையில் சோனியா காந்தி
அம்மையாரை பலமுறை சந்தித்து, தமிழுக்கு செந்தமிழ் தகுதி தந்தாக வேண்டும்
என்று வலியுறுத்தினேன்.

இதைத்தொடர்ந்து, அவர்
உத்தரவுப்படி, மத்திய மந்திரி அர்ஜூன் சிங்கும், புலவர்கள், அறிஞர்கள்,
மொழி வல்லுனர்கள் ஆகியோருடன் கலந்து பேசி, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து
வழங்கப்பட்டது. இது குறித்து, சோனியா காந்தி எனக்கு கடிதம் எழுதினார்.
உங்களால்தான் தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டு
இருந்தார். அந்த கடிதத்தை நான் பத்திரமாக வைத்துள்ளேன்.

நான்
மறைந்த பிறகு அதை எனது கருவூலத்தில் வைக்கும்படி கூறியிருக்கிறேன்.
செம்மொழி என்ற வார்த்தையை ஏற்க இந்த ஆட்சி மறுக்கிறது. சமச்சீர்
புத்தகத்தில் எங்கெல்லாம் செம்மொழி என்ற வார்த்தை இருக்கிறதோ அவை, பேனா
கொண்டும், மை கொண்டும் அழிக்கப்படுகிறது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து
கிடைத்தது அதை கருணாநிதி பெற்று தந்தார் என்று எழுதப்பட்ட வாசகத்தை அழித்து
இருக்கிறார்கள்.

புத்தகத்தில் உள்ள வாசகத்தை
வேண்டும் என்றால் அவர்கள் அழித்து விடலாம். ஆனால், தமிழர்களின் இதயத்தில்
எழுதப்பட்ட வாசகத்தை எந்தக்கொம்பன் வந்தாலும் அழிக்க முடியாது.

மறைமலை
அடிகளாரும், 500 தமிழ் புலவர்களும் பச்சையப்பன் கல்லூரியில் கூடி
தமிழர்களுக்கு தனி ஆண்டு இல்லையே என்று ஆராய்ந்து, விவசாயிகளின் அறுவடை
காலம், நெல்மணிகள் குவியும் காலம் இவைகளையெல்லாம் பார்த்து, பொங்கல் நாள்
என்ற அறிவித்து, தை முதல் தேதி தமிழர் புத்தாண்டு பிறக்கிறது தை பிறந்தால்
வழி பிறக்கும் என்று தை மாதம் முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என்று
முடிவு செய்யப்பட்டது.

அதை தி.மு.க. ஆட்சியில்
சட்டமாக இயற்றி 2, 3 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா அதை
மாற்றி, சித்திரை முதல் தேதிதான் மீண்டும் தமிழ்ப்புத்தாண்டு என்று
அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில், அ.தி.மு.க. ஆட்சியில், ஜனநாயகத்துக்கு
மட்டுமல்ல தமிழ் மொழிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஜனநாயகத்தையும்,
தமிழையும், தமிழ் உணர்வுள்ள அனைவரும் காப்பாற்ற வேண்டும். தமிழ் வாழ
உயிரையும் கொடுக்கத்தயாராக இருக்கிறேன். நமது இளைஞர் பட்டாளம் உள்ள
வரையில், தமிழை யாரும் அழிக்க முடியாது. இவ்வாறு கருணாநிதி பேசினார்.

கூட்டத்தில்,
பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் துரைமுருகன்,
டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., கோவி.செழியன் எம்.எல்.ஏ.,மேயர்
மா.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு,
எஸ்.பி.சற்குண பாண்டியன், நடிகை குஷ்பு உள்பட பலர் பேசினார்கள்.

கூட்டத்தில்
முன்னாள் அமைச்சர்கள், பொன்முடி, தங்கம் தென்னரசு மற்றும் இந்நாள்,
முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர்
கலந்துகொண்டனர். முன்னதாக துறைமுக பகுதி செயலாளர் அ.மணிவேலன் வரவேற்று
பேசினார். முடிவில் வட்டச் செயலாளர் ஜெய்சங்கர் நன்றிதெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» எத்தனை வழக்குகள் போட்டாலும் தி.மு.க.வை வீழ்த்த முடியாது: கருணாநிதி பேச்சு
» அதிமுக ஆட்சியில் "இம்" என்றால் சிறைவாசம், "ஏன்" என்றால் வனவாசம்: கருணாநிதி
» பொய் வழக்குகள் மூலம் தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது; கருணாநிதி பேச்சு
» ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
» படிக்காதவர்களுக்கும் தேமுதிக ஆட்சியில் வேலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum