சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

நாடாளுமன்றத்தில் லோக்பால் விவாதம் தொடங்கியது-உண்ணாவிரதத்தை கைவிடுவார் அன்னா? Khan11

நாடாளுமன்றத்தில் லோக்பால் விவாதம் தொடங்கியது-உண்ணாவிரதத்தை கைவிடுவார் அன்னா?

3 posters

Go down

நாடாளுமன்றத்தில் லோக்பால் விவாதம் தொடங்கியது-உண்ணாவிரதத்தை கைவிடுவார் அன்னா? Empty நாடாளுமன்றத்தில் லோக்பால் விவாதம் தொடங்கியது-உண்ணாவிரதத்தை கைவிடுவார் அன்னா?

Post by யாதுமானவள் Sat 27 Aug 2011 - 10:18

டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று லோக்பால் மசோதா குறித்த விவாதம் தொடங்கியது. இதையடுத்து அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்த விவாதம் நேற்றே தொடங்க இருந்தது. ஆனால், அங்கு நிலவிய கடும் அமளியால் இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ராகுல் மீது ஹசாரே கோபம்:

முன்னதாக நேற்று லோக்பால் மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் தெரிவித்த கருத்துக்கள் ஏமாற்றம் தருவதாக அன்னா ஹசாரே தரப்பு கூறியுள்ளது.

ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசுகையில், தனிப்பட்ட நபர்கள் அரசுக்குக் கொடுக்கும் நிர்பந்தம் காரணமாக ஜனநாயக நடைமுறைகள் பலவீனமடைந்துவிடக் கூடாது. அதை நாம் அனுமதிக்கவும் கூடாது. இந்த விஷயத்தில் நாம் விட்டுக் கொடுத்துவிட்டால் அது மிகவும் அபாயகரமான முன் உதாரணத்தை ஏற்படுத்திவிடும்.

என்னதான் நல்ல எண்ணங்களைக் கொண்டிருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைத் தவிர்த்துவிட்டோ, நாடாளுமன்ற நடைமுறைகளை பலவீனமடையச் செய்யும் வகையிலோ நடத்தப்படும் போராட்டங்கள் ஜனநாயகத்துக்கு ஏற்றவை அல்ல.

இன்றைக்கு அது ஊழலுக்கு எதிரான இயக்கமாக இருக்கலாம். நாளை அது வேறு மாதிரியான உருவம் எடுக்கலாம். ஊழலை ஒழிக்க லோக்பால் மட்டுமே உதவாது.

ஊழல் எல்லா மட்டத்திலும் உள்ளது. அதை உடனடியாக ஒழிக்க முடியாது. அப்படி ஒழிப்பதற்குத் தேவையான மந்திரக் கோல் நம்மிடம் இல்லை.

ஊழலால் கடுமையாக பாதிக்கப்படுவது ஏழை மக்கள்தான். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. அதேசமயம், ஊழலை முற்றிலும் ஒழிக்க முடியாது. தொடர்ச்சியான செயல்பாடுகள், வலுவான அரசியல் திட்டங்கள் தேவை. அரசியல் துணிச்சல் தேவை.

அன்னா ஹஸாரே தனது போராட்டத்தின் மூலம் ஊழலுக்கு எதிரான பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதற்காக அவருக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.

தற்போதைய பிரச்சனையை தீர்ப்பது என்பது இப்போது பிரச்சனை இல்லை. இது மிகப் பெரிய விவகாரம். இதற்கு நீண்ட காலத் தீர்வைக் கண்டுபிடித்தாக வேண்டும்.

வலுவான லோக்பால் என்பது ஊழலுக்கு எதிரான போரில் ஒரு அஸ்திரமாக மட்டுமே இருக்க முடியும். லோக்பாலால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்று கூற முடியாது. தொடர்ச்சியான பல்வேறு சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்.

லோக்பால் என்பது தேர்தல் ஆணையம் போல சுயாட்சி படைத்த அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும்.

தேர்தலின்போது கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதிகள் குறித்து தீவிரமாக ஆராயப்பட வேண்டும். அனைவரும் உண்மையாக உழைக்க வேண்டும். ஜனநாயக நடைமுறைகளை பலவீனப்படுத்தும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது என்று கூறியிருந்தார்.

ராகுலின் இந்தக் கருத்துக்கு அன்னா தரப்பு எதி்ர்ப்பும் அதிருப்தியும் தெரிவித்துள்ளது.

இது குறித்து பிரசாந்த் பூஷண் கூறுகையில், ஒரு சட்ட மாற்றம், சட்ட வரைவு கொண்டுவர நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் வேண்டும். எனவே, காங்கிரஸ் முதலில் தன் முன் உள்ள லோக்பால் மசோதாவை முதலில் நிறைவேற்றட்டும். பிறகு மற்றதைப் பற்றி யோசிக்கலாம் என்றார்.

கிரண் பேடி கூறுகையில், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முன் உங்கள் முன் இருக்கும் சிறு சிறு மலைகளையும் ஏறிக் கடக்க வேண்டும். லோக்பால் மசோதா என்பது உங்கள் முன் உள்ள மிகப்பெரும் மலை. அதில் ஏறிவிட்டால், அதுவே உங்களை எவரெஸ்ட் சிகரத்துக்கு அழைத்துச் சென்றுவிடும். அதை முதலில் தொடங்க வேண்டும். இது தான் ராகுலுக்கு எனது பதில் என்றார்.

சமூக சேவகி மேதா பட்கர் கூறுகையில், ஹசாரே முன்வைத்த மிகப் பெரிய பிரச்னையைப் பற்றி ராகுல் காந்தி சிந்திக்கவில்லை. ஊழலுக்கு எதிராக லட்சோபலட்சம் மக்கள் கொண்டுள்ள ஒட்டுமொத்த உணர்வை ராகுல் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார். அவரது கருத்து லோக்பால் மசோதாவை கிடப்பில் போட வைத்துவிடும் என்றார்.

உண்ணாவிரதத்தை கைவிடுவார் ஹசாரே?:

இதற்கிடையே 12 வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஹசாரேவின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவரைப் பரிசோதிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்து வருவதாக டாக்டர் நரேஷ் தெரிவித்தார்.

இந்நிலையில் மத்திய அரசு உறுதியளித்தபடி இன்று நாடாளுமன்றத்தில் ஜன லோக்பால் மசோதா குறித்த விவாதத்தை தொடங்கிவிட்டது.

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது ஹசாரே உடனே உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

லோக்பால் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் தொடங்கிவிட்டதால், அன்னா தனது உண்ணாவிரதத்தைக் கைவிடலாம் என்று கூறப்படுகிறது
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

நாடாளுமன்றத்தில் லோக்பால் விவாதம் தொடங்கியது-உண்ணாவிரதத்தை கைவிடுவார் அன்னா? Empty Re: நாடாளுமன்றத்தில் லோக்பால் விவாதம் தொடங்கியது-உண்ணாவிரதத்தை கைவிடுவார் அன்னா?

Post by jasmin Sat 27 Aug 2011 - 10:22

ராகுல் சொல்லியிருப்பது சரிதான் ஒரு அரசை மிரட்டும் வகையிலும் நிர்பந்தப் படுத்தும் முறையிலும் ஒரு தனிப்பட்ட ஒருவர் உண்ணாவிரதம் என்ற போர்வையில் நடப்பது பிற்காலத்தில் ஒரு தவறான முனுதாரணமாக ஆகிவிடக்கூடும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நாடாளுமன்றத்தில் லோக்பால் விவாதம் தொடங்கியது-உண்ணாவிரதத்தை கைவிடுவார் அன்னா? Empty Re: நாடாளுமன்றத்தில் லோக்பால் விவாதம் தொடங்கியது-உண்ணாவிரதத்தை கைவிடுவார் அன்னா?

Post by யாதுமானவள் Sat 27 Aug 2011 - 23:54

jasmin wrote:ராகுல் சொல்லியிருப்பது சரிதான் ஒரு அரசை மிரட்டும் வகையிலும் நிர்பந்தப் படுத்தும் முறையிலும் ஒரு தனிப்பட்ட ஒருவர் உண்ணாவிரதம் என்ற போர்வையில் நடப்பது பிற்காலத்தில் ஒரு தவறான முனுதாரணமாக ஆகிவிடக்கூடும்

ithai yaadhumaanaval sonnaa yaarum kandukka maatteenga. Rahul sonaathan sariyaa paduthaakkum...

intha unnaviradham aarambichchadhula irnhdu ithaiththaan naan sollikittiriukken
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

நாடாளுமன்றத்தில் லோக்பால் விவாதம் தொடங்கியது-உண்ணாவிரதத்தை கைவிடுவார் அன்னா? Empty Re: நாடாளுமன்றத்தில் லோக்பால் விவாதம் தொடங்கியது-உண்ணாவிரதத்தை கைவிடுவார் அன்னா?

Post by kalainilaa Sun 28 Aug 2011 - 0:12

ராகுல் சொன்னாலும் ,யாதுமானவள் சொன்ல்ளும் கேட்பதை கேட்போம் .ராகுல் பேச்சு எப்ப இந்த உண்ணா விரதகாரகளுக்கு,
புடிக்க்வில்லியோ ,இதிலிருந்து தெரிவது ,காங்கிரசை பலகீனம் படுத்தவே இவரின் போராட்டம் என்பது தெளிவாகிறது.

இவரின் முந்தைய போராட்டம் ,பற்றி அறிந்தால் இன்வ்ரின் சுயரூபம் தெரிய வரும்!
ஊழலில் முழுகி தனது ஆட்சியை காப்பாற்ற துடிக்கும் பிஜேபி யை இதுவரை இவர் ஒன்றும் சொல்லாமல் ,அவர்களின் ஆதரவுடன் இருப்பது காணும் பொது ,முழுக்க முழுக்க அரசியல் நாடகம் தான் .
https://chenaitamilulaa.forumta.net/t19935-topic இதைப்படித்தால்
முழு விபரம் தெரிய வரும் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நாடாளுமன்றத்தில் லோக்பால் விவாதம் தொடங்கியது-உண்ணாவிரதத்தை கைவிடுவார் அன்னா? Empty Re: நாடாளுமன்றத்தில் லோக்பால் விவாதம் தொடங்கியது-உண்ணாவிரதத்தை கைவிடுவார் அன்னா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னா வலியுறுத்தல் இந்தியா வல்லரசாக லோக்பால் அவசியம்
» லோக்பால் மசோதா: அன்னா ஹசாரே-க்கு சோனியா பதில்
» உண்ணாவிரதத்தை நிறுத்திய அன்னா ஹசாரே சொந்த ஊர் திரும்பினார்
» அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்த பிரணாப்முகர்ஜி
» பாராளுமன்றத்தில் லோக்பால் விவாதம்: அன்னாஹசாரே உண்ணாவிரத போராட்டம் இன்று வாபஸ்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum