சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

மாதவிடாய் சிந்தையிலும், உணர்விலும் ஏற்படுத்தும் தாக்கம்:   Khan11

மாதவிடாய் சிந்தையிலும், உணர்விலும் ஏற்படுத்தும் தாக்கம்:

3 posters

Go down

மாதவிடாய் சிந்தையிலும், உணர்விலும் ஏற்படுத்தும் தாக்கம்:   Empty மாதவிடாய் சிந்தையிலும், உணர்விலும் ஏற்படுத்தும் தாக்கம்:

Post by ஹனி Sun 9 Jan 2011 - 17:34

பலபேர் மாதவிடாயின் போது, எவ்வளவு உணர்ச்சி ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை பற்றி உணருவதில்லை. சிலப் பெண்கள் அளிதில் எரிச்சலடைவது, உற்சாகமான மனநிலையிலிருந்து திடீரென விரக்தியான மனநிலைக்கு மாறுவது, மாதவிடாயின் போதும், அதன் முன்னும் சோகமான மனநிலைக் கொண்டிருப்பது போன்ற அறிகுறிகளை கொண்டிருக்கலாம். இவைகள் எல்லாம் ப்ரீ - மென்ஸ்ட்ரூவல் சின்ட்ரோம் (Pre - Menstrual Syndrome) எனப்படும் மாதவிடாய் முன் நிகழும் ஒழுங்கு குலைவின் அறிகுறிகளாகும். தசைப் பிடிப்பு, முதுகு வலி, உப்பிப்போனது போன்ற உணர்வு, பசியில் மாற்றம், மார்பகங்கள் மென்மையடைதல் போன்றவையும் ப்ரீ - மென்ஸ்ட்ரூவல் சின்ட்ரோமின் (Pre Menstrual Syndrome) அறிகுறிகளாகும். இது முற்றிலும் இயல்பானது. எனவே நீங்ங்ள் அதை குறித்து பயப்பட வேண்டியதில்லை.

சந்தேகங்கள்:

இந்நிலையில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் உள்ளதா என்பதை ஒரு தாளில் எழுதிக் கொள்ளுங்கள். சரி நாம் கிட்டத்தட்ட இந்த பாடத்தின் முடிவு பகுதிக்கு வந்து விட்டோம்.

இதுவரை பருவமடைதல் பற்றியும், மாதவிடாயைப் பற்றியும் நீங்கள் கற்றுக்கொண்ட ஏராளமான விசயங்களை இங்கே சோதித்து பார்ப்போம். கீழ் கண்ட கேள்விகளுக்கு சரி அல்லது தவறு என்று பதிலளிக்கவும்.

1. பருவமடையும் போது எல்லோரும் உடல் ரீதியாக ஒரே நேரத்தில் வளர்ச்சியடைகின்றனர்.

பதில்: தவறு. 8 முதல் 16 வயதிற்கு இடைப்பட்ட காலத்தில் பருவமடைதல் நடைபெறுகிறது. யாருக்கும் இது குறிப்பிட்ட சமயத்தில் நிகழ்வதில்லை. இது சில வருடங்களினூடாக படிப்படியாக ஏற்படும் மாற்றமாகும். இம்மாற்றங்களானது வெவ்வேறு பெண்களுக்கு வெவ்வேறு காலங்களில் ஏற்படுகிறது. எனவே ஒப்பிடுவது தவறு.

2. பருவமடையும் போது நம் உடல் தோற்றத்தில் மட்டுமே மாற்றம் ஏற்படுகிறது.

பதில்: தவறு. நம் உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படுவதைப் போலவே உள்ளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு நமது மூளைக்கும் புனருற்பத்தி உறுப்புகளுக்கும் இடையே நடக்கும் செயல்பாட்டின் மூலம்தான் நமக்கு மாதவிடாய் ஏற்படுகிறது.

மேலும் சில கேள்விகள்:

1. முதல் சில வருடங்களுக்கு மாதவிடாய் ஒழுங்கற்று ஏற்படுவது இயல்பானதே.

பதில்: சரி. முதல் சில வருடங்கள் மாதவிடாய் ஒழுங்கற்று ஏற்படுவது முற்றிலும் இயல்பானதே. ஆனால் இது சில வருடங்களுக்கு அப்புறமும் நீடிக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது.

2. மிகவும் சோகமானப் பெண்கள் மட்டுமே மாதவிடாயின் போது உணர்ச்சி வசப்படும் நிலைக்கு உள்ளாகின்றனர்.

பதில்: தவறு. அநேகமாக எல்லப் பெண்களுமே மாதவிடாயின் போது இவ்விதமான மனநிலை மாறுதல்களுக்கு உள்ளாகின்றனர். இது Pre- Menstrual Syndrome என்ற மாதவிடாய் ஒழுங்கு குலைவின் அறிகுறியாகும்.

நமக்கு மாதவிடாய் ஏற்படுகிறது ஏன் என்று உங்களால் விளக்க முடியுமா? அதைப் பற்றியும் சூலகத்திலிருந்து முட்டை மேற்கொள்ளும் பயணத்தை பற்றியும் யோசித்து பாருங்கள். அந்த பயணத்தை பற்றி ஒரு படத்தை வரையுங்கள். பின்னர் அந்த படமானது நான் வரைந்த படத்துடன் ஒத்து இருக்கிறதா என ஒப்பிட்டுப் பாருங்கள்.

மாதவிடாயும் சுகாதாரமும்:

மாதவிடாயின் போது ஒழுங்காக குளித்து உங்கள் உடம்பை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. இது நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கும், மாதவிடாயுடன் தொடர்புடைய வாடையை தடுப்பதற்கும் உதவும். மாதவிடாயின் போது தலைக்கு குளிப்பது தவறல்ல. உண்மையில் தலைக்கு குளிப்பத்தானது உங்களுக்கு சுத்தமாக இருக்கிறோம் என்ற புத்துணர்வை கொடுக்கும். மாதவிடாயின் போது சில சமயங்களில் உங்கள் பிறப்புறுப்புகளிலிருந்து அதிகப்படியான வாடை வெளிப்படும். இது அசாதாரணமானதல்ல. மேலும் Sanitary Napkin (சுகாதாரத் துண்டுகள்), தூய்மையானத் துணிகள் உபயோகிப்பது மாதவிடாயானது உங்கள் ஆடைகளை கறையாக்குவதை தடுக்கும்.

Sanitary Napkins (சுகாதாரத் துண்டுகள்) மற்றும் துணிகள்:

நீங்கள் Sanitary Napkins (சுகாதாரத் துண்டுகள்), உபயோகிக்கும் பட்சத்தில், ஒழுக்கு அதிகமாக இருக்கும் நேரங்களில், சில மணி நேரங்களுக்கு ஒரு முறை அவற்றை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் உடம்புக்கும் Pad' க்கும் இடையில் உள்ள கதகதப்பான ஈரத்தில் பாக்டீரியாக்கள் வளருவதை தடுக்க முடியும். இந்த Pad' களை கழிவறைகளிலோ, தெருக்களிலோ போடாதீர்கள். மாறாக அவற்றை பேப்பரில் சுற்றி கழிவுக் கூடையில் போடவும். துணியை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அவற்றை தண்ணீரில் சோப்பு கொண்டு நன்றாக கழுவி உலர்த்துவதென்வது மிக முக்கியமானது. நீங்கள் ஈரத்துணியை உபயோகித்தால் நோய் தொற்றிக்கொள்ளும் அபாயத்திற்கு உள்ளாவீர்கள்.

உங்கள் மாதவிடாயைப் பற்றி தெரிந்துகொள்ளுதல்:

மாதத்திற்கு மாதம் உங்கள் மாதவிடாய் பற்றி சரியாக தெரிந்து வைத்திருப்பது நல்ல விசயம். இந்த வகையில் நீங்கள் உங்களை மாதவிடாய்க்காக தாயார்படுத்திக் கொண்டு Napkin அல்லது துணிகளை தயாராக வைத்திருக்க முடியும். உங்களுக்கு உங்கள் மாதவிடாய் எப்போது வரும் என்று தெரிந்திருந்தால் உங்கள் மனநிலை மாற்றங்களும், உடலளவில் ஏற்படும் அறிகுறிகளும் ஏன் ஏற்படுகிறதென்று தெரிந்து கொள்ள முடியும்.

நம்மில் பலர் மாதவிடாயைப் பற்றிய பல தவறாவ நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர். இந்த தவறான நம்பிக்கைகள் வழிவழி கதைகள் அல்லது கட்டுக் கதைகள் (Myths) என அறியப்படுகின்றன. வருகின்ற சிலப் பக்கங்களில் நாம் இந்த வழிவழிக் கதைகளை (Myths) பற்றி பார்க்க போகிறோம். இந்த வழிவழிக் கதைகளானது அடுத்தவர்களால் நமக்கு சொல்லப்படுகிறது. இவை அநேகமாக ஒரு சந்ததியிலிருந்து மற்றொரு சந்ததியினருக்கு வழிவழியாக வந்து சேருகின்றன. அவைகள் நமக்கு வழிவழியாக வந்து சேருவதனாலேயே அவை எல்லாம் உண்மை என்று அர்த்தமல்ல. நாம் இந்த வழிவழி கதைக்களுக்கு மாற்றாக உண்மை விபரங்களை வைப்போம்.

வழிவழிக் கதை (Myth) 1

உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட துவங்கிய உடன் நீங்கள் பள்ளிக்கூடத்திற்கு போவதை நிறுத்த வேண்டும்.

உண்மை விபரம்: உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் நீங்கள் பள்ளிக்குப் போவதை நிறுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. மாதவிடாய் ஏற்படுவதானது நீங்கள் வயதிலும், அறிவிலும் வளர்ச்சியடைந்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை காட்டுகிறது. இதன் அர்த்தம் நீங்கள் பள்ளிக்குப் போவதை நிறுத்த வேண்டும் என்பதல்ல. உங்கள் மனமும் உடலும் முதிர்ச்சி அடையும் இந்த நேரம் கற்பதற்கான இன்றியமையாத காலமே.

வழிவழிக் கதை 2

மாதவிடாய் வரும்போது நீங்கள் தீட்டாகிறீர்கள்.

உண்மை விபரம்: இது உண்மையல்ல. மாதவிடாய் நாட்களின் போது நீங்கள் சற்று சுத்தக் குறைவாவாக இருப்பது போல் உணரலாம். ஆனால் மாதவிடாய் காரணமாக நீங்கள் தீட்டானவர்களாவதில்லை. இவ் மாதவிடாயானது பெண்களுக்கு மட்டுமே நடக்கக் கூடிய சக்திமிக்க அற்புதமான ஒன்று என்பதை நீங்கள் இப்போது உணர்ந்திருக்க முடியும். இது பின்னாளில் சந்ததிகளை உருவாக்குவதற்கு உதவுகிறது. இத்தகைய சிறப்பம்சம் கொண்ட நிகழ்வு எவ்வாறு தீட்டானதாக இருக்க முடியும்? மாதவிடாய் தீட்டானதல்ல என்பதால் மாதவிடாய் ஏற்படும் போது நீங்களும் தீட்ட்டானவர்களல்ல. இதுதான் உண்மை.

வழிவழிக் கதை 3

உங்களுக்கு மாதவிடாய் ஏற்படும் சமயத்தில் மற்ற்வர்களும் அதை பற்றித் தெரிந்துக் கொள்கிறார்கள்.

உண்னமை விபரம்: யாராலும் உங்களை பார்த்தவுடன் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாது. நீங்கள் Sanitary Napkin ( (சுகாதார துண்டு) அல்லது சுத்தமான துணியையோ உபயோகிக்காத பட்சதில் உங்கள் ஆடையில் கறை ஏற்பட வாய்ப்புள்ளது. இதை ஒருவர் பார்த்து உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது என்று கூறமுடியும். ஆனால் இதையும் நீங்கள் உங்கள் ஆடைகளில் கறையுள்ளதா? என கவனமாக பரிசோதிப்பதன் மூலம் தவிர்க்க முடியும். அல்லாமல், நீங்கள் சொல்லாத பட்சத்தில், உங்கள் முகமோ, உடலோ உங்களுக்கு மதவிடாய் ஏற்பட்டிருக்கிறது என்பதை எவ்விதத்திலும் காட்டுவதில்லை. எனவே ஒவ்வொரு மாதமும் இந்த சமயங்களில் நீங்கள் வெட்கமோ கூச்சமோ இல்லாமல் நிமிர்ந்து பெருமையுடன் நடந்து செல்லுங்கள்.

வழிவழிக் கதை 4

உங்களுக்கு ஒழுங்கற்ற முறையில் மாதவிடாய் ஏற்பட்டால் நீட்ங்கள் கன்னியல்ல என்று அர்த்தம்.

உண்னமை விபரம்: பருவமடைந்த பின் முதல் சில வருடங்களுக்கு ஒழுங்கற்ற முறையில் மாதவிடாய் ஏற்படுவது சாதாரணமாக நடக்கின்ற நிகழ்வே. எனவே இவ்வாறு ஒழுங்கற்ற சுழற்சி ஏற்படுவதால் நீங்கள் கன்னியில்லை என்று அர்த்தமல்ல. எனினும் நீங்கள் ஒரு ஆணுடன் உடலுறவு கொண்டு கருத்தரிக்கும் நிலையில் உங்களுடைய மாதவிடாய் சுழற்சி நின்றுவிடும். ஆனால் நீங்கள் ஆணுடன் உடலுறவு வைத்து கொள்ளாமல் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி கொண்டிருப்பது இயல்பான ஒன்றே. நீங்கள் உடலுறவில் ஈடுபட்டால் மட்டுமே கன்னித் தன்மையை இழக்கிறீர்கள். அல்லாமல், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியானது நீங்கள் கன்னியா இல்லையா என்பதை தீர்மானிப்பதில்லை.

மனநிலை மாற்றங்கள்:

பருவமடையும் போது உடம்பின் உள்ளும் வெளியும் ஏற்படும் ஏராளமான மாற்றங்களைப் பற்றி நாம் பேசியிருக்கிறோம். மேலும் மாதவிடாயின் போதும்,அதன் முன்னும் Pre-Menstrual Syndrome காரணமாக ஏற்படும் மனநிலை மாற்றத்தைப் பற்றியும் பெசியுள்ளோம். ஆனால் நாம் வளர்கிற மற்றும் பருவமடைகிற நிகழிச்சி போக்கின் போது ஏற்படும் உணர்ச்சிகள் மற்றும் மனநிலை மாற்றங்கள் மாதவிடாய் ஏற்படும் சமயத்தின் போது மட்டுமல்லாமல் எந்த நேரத்திலும் ஏற்படலாம். நீங்கள் வளர்ந்து கொண்டிருந்தாலும் பெரியவர்களாகி கொண்டிருக்கிறேன் என உணர்ந்தாலும், நீங்கள் தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு உங்கள் உணர்வுகள் உங்கள் உடல் வளர்ச்சிக்கு ஈடாக வளர்வதற்கு விட வேண்டும். உங்கள் வாழ்க்கையின் இந்த சமயத்தில் நீங்கள் ஏராளமான ஆவலேற்படுத்தக் கூடியதும், பயமேற்படுத்த கூடியதுமான. மனக் கொந்தளிப்புகளை (Emotions) உணர முடியும் நீங்கள் பொறுமையை கடைபிடித்தால் அவை நிலையானதாகவும், நீடித்ததாகவும் தோன்றாமல் இரூக்கும். பருவமடையும் போது உங்கள் மனக் கொந்தளிப்புகள் உச்சத்தை அடையும் என்பதையும், அவை எப்போதைக்குமாக நீடிக்கப் போவதைப் போல் தோன்றும் என்பதையும் நீங்கள் உணர வேண்டும். ஆனால் நீங்கள் தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு மற்றவர்களுடன் உங்கள் உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டு, கண்மூடித்தனமாக முடிவெடுக்காமல் இருந்தால், இந்த மனக் கொந்தளிப்புகள் வந்ததைப் போலவே வேகமாகப் போய் மறைவதை நீங்கள் உணரமுடியும்.






ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

மாதவிடாய் சிந்தையிலும், உணர்விலும் ஏற்படுத்தும் தாக்கம்:   Empty Re: மாதவிடாய் சிந்தையிலும், உணர்விலும் ஏற்படுத்தும் தாக்கம்:

Post by *சம்ஸ் Sun 9 Jan 2011 - 19:58

://:-: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மாதவிடாய் சிந்தையிலும், உணர்விலும் ஏற்படுத்தும் தாக்கம்:   Empty Re: மாதவிடாய் சிந்தையிலும், உணர்விலும் ஏற்படுத்தும் தாக்கம்:

Post by நண்பன் Sun 9 Jan 2011 - 23:31

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மாதவிடாய் சிந்தையிலும், உணர்விலும் ஏற்படுத்தும் தாக்கம்:   Empty Re: மாதவிடாய் சிந்தையிலும், உணர்விலும் ஏற்படுத்தும் தாக்கம்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum