சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

புதிதாய் எழுந்த இரவி Khan11

புதிதாய் எழுந்த இரவி

+4
முனாஸ் சுலைமான்
விஜய்
Atchaya
ஆசுகவி அன்புடீன்
8 posters

Go down

புதிதாய் எழுந்த இரவி Empty புதிதாய் எழுந்த இரவி

Post by ஆசுகவி அன்புடீன் Thu 1 Sep 2011 - 15:31

முப்பது நாட்கள் பூத்ததோர் பூவின்
முழுமணம் நுகர்ந்தோர் முகமலர்ந்திருந்தனர்
தப்பிதம் இன்றித் தவறுகள் இன்றித்
தயவுடன் நோன்புப் பூவினை நுகர்ந்தனர்
சிப்பியில் இருந்து சிதறிடும் முத்தாய்
சிரிக்கும் பெருநாள் அருமையில் லயித்தனர்
இப்பொழு தெங்கும் பெருநாள் பூத்தது
இப்புவி எங்கும் இனிமை சுரந்தது!

பெருநாள் என்னும் திருநாள் வந்ததால்
பேறுக ளெல்லாம் பெருக்கெடுத் தோடின
ஒருநாள் இதுபோல் உலகினில் உண்டோ?
ஒவ்வொரு வீட்டிலும் ஒளிமலர் சிரித்தது!
திருநாள் தந்த தித்திக்கும் நினைவில்
தெருவில் வந்தேன்: வளியிலோர் சிறுமி
பெருநாள் உடைகள் பேறுகள் இன்றி
பேந்தப் பேந்த விழித்தங்கு நின்றாள்!


சிறுமியை அழைத்து சிறுகதை கேட்டேன்
சிணுங்கி சிணுங்கி மறுமொழி சொன்னாள்
அருமை நாளில் புத்தாடை இல்லை
அதனை வாங்க வழிவகை இல்லை
பெருமை நிறைந்த பெரியைஇந் நாளில்
பெரிதாய் உணவுகள் படைத்திடவில்லை
சிறுமை இதுபோல் எங்குமோ உண்டோ?
சிந்தை எனக்குள் சீற்றம் எடுத்தது!


அடுத்தவன் பசியை அடுத்தவன் அறிய
ஆக்கிய நோன்பின் அறிவொளி எங்கே?
உடுக்கை இழந்தனும் உதவிடும் கரம்போல்
ஒருவருக் கொருவர் உதவிடத் தூண்டிடும்
அடுக்க டுக்கான சட்டங்கள் நிறைந்த
அருமை இஸ்லாத்தின் சமத்துவம் எங்கே?
இடுக்கன் எனக்குள் இசைந்து அழுதது
இரவி ஒன்று புதிதாய் எழுந்தது!


எல்லோர் எல்லாமும் பெறுவது இஸ்லாம்
இல்லாமை இல்லாத இருப்பிடம் இஸ்லாம்
இல்லானும் இருப்பானும் இல்லாத இஸ்லாத்தில்
இல்லான் ஒருவன் எங்ஙனம் வந்தனன்?
அல்லாஹ் ஹுவே ! அருட்கொடையாளா
அவனையும் படைத்தவன் நீயா ? இல்லைஇப்
பொல்லா உலகின் சமூக அமைப்பின்
புழுதியின் அவனா பிறந்தானா ? சொல் ! சொல் !

1983 இல் நான் எழுதி இலங்கை வானொலியில் நானே படித்தேன்.
ஆசுகவி அன்புடீன்
ஆசுகவி அன்புடீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

புதிதாய் எழுந்த இரவி Empty Re: புதிதாய் எழுந்த இரவி

Post by Atchaya Thu 1 Sep 2011 - 15:37

இடுக்கன் எனக்குள் இசைந்து அழுதது
இரவி ஒன்று புதிதாய் எழுந்தது!

அல்லாஹ் ஹுவே ! அருட்கொடையாளா
அவனையும் படைத்தவன் நீயா ? இல்லைஇப்
பொல்லா உலகின் சமூக அமைப்பின்
புழுதியின் அவனா பிறந்தானா ? சொல் ! சொல் !

அருமை....மூதரிஞ்சரின் அழகு கவிதை அருமை.... #heart #heart
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

புதிதாய் எழுந்த இரவி Empty Re: புதிதாய் எழுந்த இரவி

Post by விஜய் Thu 1 Sep 2011 - 15:38

அருமையான வரிகள் ஆசுகவி அன்புடீன் ஐயா உங்களின் வரிகள் முத்துகள் வாழ்த்துகள்
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

புதிதாய் எழுந்த இரவி Empty Re: புதிதாய் எழுந்த இரவி

Post by முனாஸ் சுலைமான் Thu 1 Sep 2011 - 15:43

அடுத்தவன் பசியை அடுத்தவன் அறிய
ஆக்கிய நோன்பின் அறிவொளி எங்கே?
உடுக்கை இழந்தனும் உதவிடும் கரம்போல்
ஒருவருக் கொருவர் உதவிடத் தூண்டிடும்
அடுக்க டுக்கான சட்டங்கள் நிறைந்த
அருமை இஸ்லாத்தின் சமத்துவம் எங்கே?
இடுக்கன் எனக்குள் இசைந்து அழுதது
இரவி ஒன்று புதிதாய் எழுந்தது!


சூப்பரான வரிகள் கவிஞரே வாழ்த்துக்கள்
இங்கிருக்கும் சின்னவர்கள் சிலர் பிறக்குமுன்னரே எழுதியிருந்தாலும் இன்றைய நியதிக்கு ஏற்றாற்போல் உள்ளது வாழ்த்துக்கள் கவிஞருக்கு :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

புதிதாய் எழுந்த இரவி Empty Re: புதிதாய் எழுந்த இரவி

Post by *சம்ஸ் Thu 1 Sep 2011 - 15:50

ஒவ்ஒரு வரிகளும் ஒன்றேடு ஒன்று முத்தமிட்டு செல்கிறது கவியே.
வாழ்த்த வார்தைகள் இல்லை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புதிதாய் எழுந்த இரவி Empty Re: புதிதாய் எழுந்த இரவி

Post by முனாஸ் சுலைமான் Thu 1 Sep 2011 - 15:54

*சம்ஸ் wrote:ஒவ்ஒரு வரிகளும் ஒன்றேடு ஒன்று முத்தமிட்டு செல்கிறது கவியே.
வாழ்த்த வார்தைகள் இல்லை
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

புதிதாய் எழுந்த இரவி Empty Re: புதிதாய் எழுந்த இரவி

Post by kalainilaa Fri 2 Sep 2011 - 2:47

அடுத்தவன் பசியை அடுத்தவன் அறிய
ஆக்கிய நோன்பின் அறிவொளி எங்கே?
உடுக்கை இழந்தனும் உதவிடும் கரம்போல்
ஒருவருக் கொருவர் உதவிடத் தூண்டிடும்
அடுக்க டுக்கான சட்டங்கள் நிறைந்த
அருமை இஸ்லாத்தின் சமத்துவம் எங்கே?
இடுக்கன் எனக்குள் இசைந்து அழுதது
இரவி ஒன்று புதிதாய் எழுந்தது!


எல்லோர் எல்லாமும் பெறுவது இஸ்லாம்
இல்லாமை இல்லாத இருப்பிடம் இஸ்லாம்
இல்லானும் இருப்பானும் இல்லாத இஸ்லாத்தில்
இல்லான் ஒருவன் எங்ஙனம் வந்தனன்?
அல்லாஹ் ஹுவே ! அருட்கொடையாளா
அவனையும் படைத்தவன் நீயா ? இல்லைஇப்
பொல்லா உலகின் சமூக அமைப்பின்
புழுதியின் அவனா பிறந்தானா ? சொல் ! சொல் !

கேள்வியோடு ஒரு கவி.
படைத்தான்,நல்லவனாகவே!
பிறந்தான் நல்லவனாகவே!
வளர்ந்ததில் ,குறை,
வளர்பப்தில் குறை,
விடை சொல்லும் மறை இருந்தும்,
தடைபோடும் மனசுக்கு எடைப்போடும்,
எண்ணமில்லை !
எண்ணியது எல்லாம் நடக்க நாடினால்,
இறைவன் என்பவன் தேவையில்லை.
இந்த நிலை மாறவே உங்கள் ,
கேள்விக்கு பதில் அறியவே,
இவன் செயல அறியவே,
இவன் கைகளும் ,கால்களும்,
கண்களும் பேசும்,மறுத்ததை சொல்லும்,
என்று மறை வழி,காட்டும் .


உங்கள் கவிதைக்கு நான் ரசிகன்.
தினமும் தாருங்கள் தமிழை,
நாங்களும் எழுத,உதவும் ,.நன்றி
.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

புதிதாய் எழுந்த இரவி Empty Re: புதிதாய் எழுந்த இரவி

Post by கலைவேந்தன் Fri 2 Sep 2011 - 7:17

அடுத்தவன் பசியை அடுத்தவன் அறிய
ஆக்கிய நோன்பின் அறிவொளி எங்கே?
உடுக்கை இழந்தனும் உதவிடும் கரம்போல்
ஒருவருக் கொருவர் உதவிடத் தூண்டிடும்
அடுக்க டுக்கான சட்டங்கள் நிறைந்த
அருமை இஸ்லாத்தின் சமத்துவம் எங்கே?
இடுக்கன் எனக்குள் இசைந்து அழுதது
இரவி ஒன்று புதிதாய் எழுந்தது!

அனைத்து வரிகளுமெ அசத்தல் எனினும் கோளிட்ட வரிகள் அருமையான சமத்துவ மதக்கொள்கையை கம்பீரமாக முரசறிவிக்கின்றன.

இறைவனின் படைப்பில் ஏற்றத்தாழ்வுகள் கண்ட மனிதத்தின் வீழ்ச்சி கூறி வேதனை வெளிப்படுத்துகின்றன.

உங்கள் வரிகளெனும் மதுவைப் பருகத் தொடங்கியுள்ளேன். வியக்க வைக்கிறீர்கள் ஐயா..

பாராட்டுகள்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

புதிதாய் எழுந்த இரவி Empty Re: புதிதாய் எழுந்த இரவி

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 Sep 2011 - 7:24

இருவது வருடங்களுக்கு முன் கண்டெடுத்த வைரம் போல் வரிகள் இன்றும் காதுகளுக்கு இனிமையாக ஒலிக்கிறது மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்காக


புதிதாய் எழுந்த இரவி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

புதிதாய் எழுந்த இரவி Empty Re: புதிதாய் எழுந்த இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum