சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை! Regist11

Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை! Khan11
ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை! Www10

ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை!

Go down

Sticky ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை!

Post by Atchaya on Sat 10 Sep 2011 - 5:18

ஜோதிடத்தை மறுத்து அறிவியல் விஞ்ஞானிகள் சிலர் முன் வைக்கும் வாதங்களையும் ஜோதிடத்தை ஆதரித்து ஜோதிட இயல் நிபுணர்கள்,மற்றும் பல விஞ்ஞானிகள் கூறும் வாதங்களையும் இந்தக் குறுந்தொடரில் பார்க்கலாம்! தீர்ப்பு வாசகர்களுடையதே!

ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை!

நோபல் பரிசு பெற்ற 18 பேர் உள்ளிட்ட 186 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு உலக மக்களுக்கு வெளியிட்ட 'ஜோதிடத்தை நம்பாதீர்கள்' என்ற அறிக்கை உலகில் வெகுவாக பேசப்பட்ட அறிக்கை. இந்த விஞ்ஞானிகள் பல்துறைகளைச் சார்ந்தவர்கள். இவர்களில் வானவியல் நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரும் உலகெங்கும் மிக வேகமாகப் பரவி வரும் ஜோதிடக் கலை பற்றிக் "கவலை" தெரிவித்தனர். இதை நம்புபவர்களுக்கு இதில் விஞ்ஞான அடிப்படை இல்லவே இல்லை என்று அடித்துக் கூற இவர்கள் முனைந்தனர்.

அறிக்கையின் சாரம்

இவர்கள் அறிக்கையின் சாரம் சுருக்கமாக இது தான்:- "பழைய காலத்தில் ஜோதிடர்களின் கூற்றை நம்புவது வழக்கமாக இருந்தது. அதில் மாயாஜாலம் கலந்திருந்தது. வானில் உள்ள கிரகங்கள் மனித வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நக்ஷத்திரங்கள் நமது வாழ்வில் நிகழும் சம்பவங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை என்றும் அவர்கள் நமது முன்னோரை நம்ப வைத்தனர். இப்போதோ விஞ்ஞான முன்னேற்றத்தால் துல்லியமாகக் கணிக்கப்பட்ட தூரங்களின் படி அவை எங்கோ இருக்கின்றன; ஆகவே அவற்றால் பூமியில் இருக்கும் நமக்கு ஒரு பாதிப்பும் நிச்சயமாக ஏற்படாது.
ஏன் ஜோதிடத்தை மக்கள் நம்புகின்றனர்? சில முக்கிய முடிவுகளை எடுக்கு முன் ஜோதிடம் பார்ப்பதன் மூலம் அவர்கள் ஆறுதல் பெறுகிறார்கள். வானில் உள்ள கிரகங்கள் மூலம் தங்களின் விதி முன்பே நிர்ணயிக்கப்பட்டு விட்டது என்றும் அதை மாற்ற முடியாது என்றும் அவர்கள் நம்புகின்றனர். ஆனால் நம்முடைய எதிர்காலம் நம்மிடம்தான் இருக்கிறது. அதை வகுப்பதே நாம்தான், வானில் உள்ள நட்சத்திரங்கள் அல்ல என்பதை உணர்ந்து வாழ்க்கையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.

அறிவும் கல்வியும் பெருகி வரும் இந்த நாட்களில் மாயாஜாலக் கொள்கைகளையும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பத்தாம்பசலி நம்பிக்கைகளையும் கொண்டிருத்தல் தவறு.இன்றைய மனிதரின் வாழ்க்கையில் ஜோதிடம் தவறாமல் இடம் பெறுகிறது என்பதை ஒப்புக் கொள்கிறோம். ஜாதகம் பார்ப்பதும் எதிர்கால பலன் கேட்பதற்காகக் காத்திருப்பதும், தினப் பத்திரிக்கைகளிலும் வார மாத இதழ்களிலும் பலன் கூறுவதும் ஊடகங்களில் இத்தகையை நிகழ்ச்சிகள் இடம் பெறுவதும் ஏராளமான புத்தகங்கள் இது குறித்து வெளி வருவதும் கவலை அளிக்கின்றது. பகுத்தறிவு ஒதுக்கப்படுவதையும் மூட நம்பிக்கை அதிகமாவதையுமே இவை காட்டுகின்றன.

இதை எதிர்த்து நேரடியாக சவால் விடும் நேரம் வந்து விட்டது என்று நாங்கள் நம்புகிறோம். ஜோதிடமும் ஜோதிடர்களும்
எதிர்காலப் பலனைக் கூறமுடியும் என்பதை வலுவாக எதிர்க்கிறோம், விஞ்ஞான ரீதியிலான ஆதரவு ஜோதிடத்திற்கு இல்லை என்பதை அறிந்தும் அதற்கு மாறாக அதற்கு எதிரான ஆதாரங்களே மிகுந்துள்ளன என்பதை உணர்ந்தும் கூடப் பலரும் ஜோதிடத்தை நம்புகின்றனர்."

ஜோதிடத்தை மறுப்பதற்கு மறுப்பு!

மேலே கண்ட அறிக்கையில் விஞ்ஞானிகளின் ஆதங்கம் வெளிப்படுகிறது. இதற்கு உலகெங்கும் உள்ள அறிஞர்களிடமிருந்தும் ஜோதிடர்களிடமிருந்தும் பொது மக்களிடமிருந்தும் ஏன், விஞ்ஞானிகள் பலரிடையே இருந்தும் கூட மறுப்புகள் தெரிவிக்கப்பட்டன.

ஜோதிடம் உண்மையா பொய்யா அதை ஏன் மறுக்க வேண்டும் என்று ஆராய வேண்டிய கால கட்டாயத்தில் இன்றைய நவீன யுகத்தில் இருக்கிறோம். மறுப்பையும் மறுப்பிற்கு மறுப்பையும் சற்றுப் பார்த்தால் உண்மை தெள்ளத் தெளிவாகப் புலப்பட்டு விடும், இல்லையா?

ஒவ்வொரு வாதமாக எடுத்து ஆராயலாம்!

ஜோதிடக் கூற்று உண்மையானதற்கு ஆதாரம் உண்டா?

முதலாவதாக ஜோதிடத்தை மறுப்போர் கேட்கும் கேள்வி: வரலாறு நெடுக உள்ள நெடும் காலத்தில் ஜோதிடக் கூற்று உண்மைதான் என்பதைக் குறிப்பிடும் ஆதார பூர்வமான குறிப்பிடத்தக்க சம்பவங்கள் ஏதேனும் உண்டா? உண்டு எனில் அவற்றைச் சொல்லுங்கள், பார்ப்போம்!

இதற்கு பதில் சொல்ல வேண்டுமெனில் ஆயிரமாயிரம் பக்கங்கள் கொண்ட மிக சுவாரசியமான சம்பவங்கள் அடங்கிய புத்தகத்தை எழுத வேண்டியிருக்கும். இதில் சம்பந்தப்பட்டவர்களே ஒப்புக்கொண்ட ஆதார பூர்வமான சம்பவங்கள் ஏராளம். அதிலும் குறிப்பிடத்தக்க உண்மை என்னவெனில் இதை நம்பாதவர்கள் பலனைக் கேட்டு அது பின்னால் நடந்தவுடன் வியந்து ஜோதிடத்தைப் போற்றிய சம்பவங்களே ஏராளம், அனைத்தும் அவர்களாலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. இடத்தைக் கருதி மிகச் சில சுவாரசியமான சம்பவங்களை மட்டும் இங்கே பார்க்கலாம். இவை அனைத்தும் பல நாடுகளில் பல் வேறு ஜோதிடர்களால் பல்வேறு பிரபலமான நபர்களுக்குக் கூறப்பட்டவை என்பது மிகுந்த ஆச்சரியம் ஊட்டும் விஷயம் ஆகும். ஜோதிடம் இடம், காலம், நாடு, அந்தஸ்து, பால், மதம், மொழி ஆகியவற்றைக் கடந்த ஒரு பெரும் விஞ்ஞானம் என்பதை இவை நிரூபிக்கின்றன!

சீரோவும் ஏழாம் எட்வர்ட் மன்னரும்!

முதலில் லண்டன் அரண்மனையில் நிகழ்ந்த ஒரு சம்பவம்! லண்டன் அரண்மனை மரண அமைதியில் இருந்தது. ஏழாம் எட்வர்ட் என பின்னர் முடிசூட்டிக் கொண்ட பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மரணப் படுக்கையில் இருந்தார். அவர் இறக்கும் தருணம் நெருங்கி விட்டது என அனைவரும் உணர்ந்தனர். இளவரசியோ மிக்க கவலையுடன் சோகமாக இருந்தார். அப்போது உலகின் பிரசித்தி பெற்ற கைரேகை மற்றும் எண் கணித நிபுணரான சீரோ அங்கு உள்ளே நுழைந்தார்.

இளவரசரின் படுக்கையை நெருங்கிய சீரோ மெதுவாக அவர் காதில் விழும்படி "நான் தான் சீரோ. உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதா? அமெரிக்க சொஸைடியைச் சேர்ந்த லேடி ஆர்தரின் பெல்க்ரேட் ஸ்குயர் இல்லத்தில் என்னைச் சந்தித்தது ஞாபகமிருக்கிறதா, இளவரசரே!" என்றார். மூச்சு விடவே திணறிக் கொண்டிருந்த இளவரசர் "ஆம்" என்று கூறும் வகையில் தலையை அசைத்தார்.

மாட்சிமை பொருந்திய இளவரசரே! உங்கள் அதிர்ஷ்ட எண்கள் ஆறும் ஒன்பதும்தான்! 1902ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நீங்கள் முடி சூடுவீர்கள் என்று நான் கணித்துச் சொன்னேனே, நினைவிருக்கிறதா?-சீரோ கேட்டார். இளவரசர் ஏதோ முணுமுணுத்தார். இளவரசி சீரோவை நோக்கி அவர் ஆம் என்கிறார் என்றார்.

சீரோ தொடர்ந்தார்: "இது ஜுன் மாதம். அடுத்த மாதம் கழிந்த பின்னர் ஆகஸ்ட் மாதம் வந்து விடும். அப்போது நீங்கள் முடி சூடுவீர்கள்! அதற்குள் உடல் நலம் சீராகி விடும்!"

இளவரசர் ஏதோ முணுமுணுத்தார்; இளவரசி அவர் சொன்னதைப் புரிந்து கொண்டு சொன்னார்:"நீங்கள் முன்பு சொன்ன எல்லாமே நடந்தது! இப்போது நீங்கள் சொல்வதும் நடக்கும் என நான் நம்புகிறேன்!"

1902ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி உடல் நலம் பூரணமாக குணம் அடைந்த இளவரசருடன் சீரோ தேநீர் விருந்து அருந்தினார்! அவர் கூறியபடியே ஆகஸ்டில் முடிசூட்டு விழா நடந்தது. பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் ஏழாம் எட்வர்ட் என்ற பட்டப் பெயருடன் முடி சூட்டிக் கொண்டார்!

ஆயிரக்கணக்கில் இது போன்ற துல்லியமான சம்பவங்களைக் கூறியவர் சீரோ. இவை அனைத்தும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டவை.

நன்றி நிலாச்சாரல்

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை!

Post by kalainilaa on Sat 10 Sep 2011 - 5:36

இறைவன் விதித்த விதியை தவிர வேற எதுவும் என்னை அணுகாது ,என்பதில் ,எனது நம்பிக்கை .

எந்த ஜோதிடரும்,ஒருங்கிணைந்த கூற்றை சொன்னது இல்லை .

ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது .

ஜோதிடர்களுக்கு தான் ,நாம் சொல்வது பொய்யா ,உண்மையா ,
என்று .

ஜோதிடர்கள் யாரும் அவர்கள் வாழ்கையை கணித்து
பெரிசா வாழ்ந்ததாக வரலாறில்லை .

ஜோதிடம் எனபது ஒரு வியாபாரம் .அதில் சொன்னது நடக்கலாம் ,நடக்காமலும் போகலாம் .நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஜோதிடம் ஜோடியாகும் ,இல்லை வில்லியாகும் !

நன்றி தோழரே
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை!

Post by Atchaya on Sat 10 Sep 2011 - 6:21

.நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஜோதிடம் ஜோடியாகும் ,
இல்லை வில்லியாகும் - ஜோதிடருக்கு (வருமானம் போச்சே!)

:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை!

Post by kalainilaa on Sat 10 Sep 2011 - 9:42

:’|: :’|:
Atchaya wrote:.நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஜோதிடம் ஜோடியாகும் ,
இல்லை வில்லியாகும் - ஜோதிடருக்கு (வருமானம் போச்சே!)

:!+: :!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை!

Post by Atchaya on Sat 10 Sep 2011 - 9:45

உங்களுக்கு ஜோதிடம் ஏற்புடையது அல்ல. இருப்பினும், ஒவ்வொரு பதிவையும் படித்து பின்னூட்டம் இடுங்கள்....அன்பு உறவுகளே....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை!

Post by lafeer on Sat 10 Sep 2011 - 11:06

இப்பதானா சொல்லுறாங்க இனியாவது கொஞ்சம் இதெல்லாம் நம்புறத விடுங்கப்பா
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Sticky Re: ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை!

Post by jasmin on Sat 10 Sep 2011 - 11:09

ஜோதிடத்தை நம்பக் கூடாது என்பது பகுத்தறிவைப் பயன்படுத்தும் யாவரும் எளிதில் உணர்ந்து கொள்ளும் உண்மை ..இதுக்கு இவ்வளவு விஞ்ஞானிகள் சொல்லனுமா .....ஆனால் ஆயிரக் கணக்கான ஜோதிடர்களின் பிழைப்பு ,..?
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை!

Post by Atchaya on Sat 10 Sep 2011 - 11:20

ஆஹா வந்துட்டாங்க! அன்பு சகோதரியே...என்ன கொஞ்ச நாளா சேனை பக்கம் வரவில்லையே! நலமா அன்பு சகோதரியே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை!

Post by jasmin on Sat 10 Sep 2011 - 11:22

ஆமாம் அட்ச்சயா அவர்களே கொஞ்சம் உடம்புக்கு முடையல அதான் ..தாங்கள் நலமா?
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை!

Post by நண்பன் on Sat 10 Sep 2011 - 11:29

kalainilaa wrote:இறைவன் விதித்த விதியை தவிர வேற எதுவும் என்னை அணுகாது ,என்பதில் ,எனது நம்பிக்கை .

எந்த ஜோதிடரும்,ஒருங்கிணைந்த கூற்றை சொன்னது இல்லை .

ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது .

ஜோதிடர்களுக்கு தான் ,நாம் சொல்வது பொய்யா ,உண்மையா ,
என்று .

ஜோதிடர்கள் யாரும் அவர்கள் வாழ்கையை கணித்து
பெரிசா வாழ்ந்ததாக வரலாறில்லை .

ஜோதிடம் எனபது ஒரு வியாபாரம் .அதில் சொன்னது நடக்கலாம் ,நடக்காமலும் போகலாம் .நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஜோதிடம் ஜோடியாகும் ,இல்லை வில்லியாகும் !

நன்றி தோழரே
ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை! 111433 ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை! 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை!

Post by ஹனி on Sat 10 Sep 2011 - 14:36

kalainilaa wrote:இறைவன் விதித்த விதியை தவிர வேற எதுவும் என்னை அணுகாது ,என்பதில் ,எனது நம்பிக்கை .

எந்த ஜோதிடரும்,ஒருங்கிணைந்த கூற்றை சொன்னது இல்லை .

ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது .

ஜோதிடர்களுக்கு தான் ,நாம் சொல்வது பொய்யா ,உண்மையா ,
என்று .

ஜோதிடர்கள் யாரும் அவர்கள் வாழ்கையை கணித்து
பெரிசா வாழ்ந்ததாக வரலாறில்லை .

ஜோதிடம் எனபது ஒரு வியாபாரம் .அதில் சொன்னது நடக்கலாம் ,நடக்காமலும் போகலாம் .நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஜோதிடம் ஜோடியாகும் ,இல்லை வில்லியாகும் !

நன்றி தோழரே

சிறப்பாக சொன்னீர்கள் நன்றி சார். @.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை!

Post by gud boy on Sat 10 Sep 2011 - 16:29

ஜோதிடம் என்பது மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்த தான்...ஒருவனுக்கு எத்தனை குழந்தை பிறக்கும் என்பதையும் ,குழந்தை எத்தனை மணிக்கு பிறக்கும் என்பதையும்,ஒருவனுக்கு இறப்பு எப்போது என்பதையும் இவர்களால் கூற முடியுமா?

இவர்களால் எதிர் காலத்தை கணிக்க முடியும் என்றால், இவர்கள் தான் கடவுளாக இருக்க முடியும்...நான் சோதிடம் பார்க்க கூடியவனுக்கு எவ்ளோ கூலி தருவேன் என்பதை கூட அவர்களால் சொல்ல முடியாது..

நம்முடைய முயற்சிகளுக்கு முட்டுக் கட்டாக இருப்பது தான் சோதிடம்..

இதனால்தான் இஸ்லாம் நல்ல நேரம் பார்ப்பது,குறி கேட்பது,சகுனம் பார்ப்பது இவற்றை எல்லாம் 1400
வருடங்களுக்கு முன்னரே தடை செய்தது..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை!

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 10 Sep 2011 - 16:45

என்னைப்பொறுத்த வரை நான் எனக்கு விருப்பமற்ற விடயங்கள் பற்றி பேசுவதில்லை விமர்சிப்பதில்லை அந்தப்பக்கம் நான் செல்வதுமில்லை காரணம் பொது இடங்களில் அனைவருக்கும் உரிமையிருக்கிறது அனைத்து மதங்களுக்கும் உரிமையிருக்கிறது அவர்களுக்கான உரிமை அவர்களது விடயங்களில் நாம் தலையிடாமலிருப்பதுதான் எமது நட்புறவுக்கு பாலமாக அமையும் என்பது எனது கருத்தாகும் நன்றி

ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை!

Post by நண்பன் on Sat 10 Sep 2011 - 16:50

நேசமுடன் ஹாசிம் wrote:என்னைப்பொறுத்த வரை நான் எனக்கு விருப்பமற்ற விடயங்கள் பற்றி பேசுவதில்லை விமர்சிப்பதில்லை அந்தப்பக்கம் நான் செல்வதுமில்லை காரணம் பொது இடங்களில் அனைவருக்கும் உரிமையிருக்கிறது அனைத்து மதங்களுக்கும் உரிமையிருக்கிறது அவர்களுக்கான உரிமை அவர்களது விடயங்களில் நாம் தலையிடாமலிருப்பதுதான் எமது நட்புறவுக்கு பாலமாக அமையும் என்பது எனது கருத்தாகும் நன்றி
நல்லது அனைவரும் கடைப்பிடிப்போம் ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை! 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை!

Post by gud boy on Sat 10 Sep 2011 - 17:33

kiwi boy wrote:ஜோதிடம் என்பது மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்த தான்...ஒருவனுக்கு எத்தனை குழந்தை பிறக்கும் என்பதையும் ,குழந்தை எத்தனை மணிக்கு பிறக்கும் என்பதையும்,ஒருவனுக்கு இறப்பு எப்போது என்பதையும் இவர்களால் கூற முடியுமா?

இவர்களால் எதிர் காலத்தை கணிக்க முடியும் என்றால், இவர்கள் தான் கடவுளாக இருக்க முடியும்...நான் சோதிடம் பார்க்க கூடியவனுக்கு எவ்ளோ கூலி தருவேன் என்பதை கூட அவர்களால் சொல்ல முடியாது..

நம்முடைய முயற்சிகளுக்கு முட்டுக் கட்டாக இருப்பது தான் சோதிடம்..

இதனால்தான் இஸ்லாம் நல்ல நேரம் பார்ப்பது,குறி கேட்பது,சகுனம் பார்ப்பது இவற்றை எல்லாம் 1400
வருடங்களுக்கு முன்னரே தடை செய்தது..

நான் யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத வில்லை. தயவு செய்து யாரும் தவறாக எண்ண வேண்டாம்..இது என்னுடைய சொந்த கருத்துக்கள் மட்டுமே..
நான் யாரையும் புண்படுத்தியிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை!

Post by நண்பன் on Sat 10 Sep 2011 - 17:39

kiwi boy wrote:
kiwi boy wrote:ஜோதிடம் என்பது மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்த தான்...ஒருவனுக்கு எத்தனை குழந்தை பிறக்கும் என்பதையும் ,குழந்தை எத்தனை மணிக்கு பிறக்கும் என்பதையும்,ஒருவனுக்கு இறப்பு எப்போது என்பதையும் இவர்களால் கூற முடியுமா?

இவர்களால் எதிர் காலத்தை கணிக்க முடியும் என்றால், இவர்கள் தான் கடவுளாக இருக்க முடியும்...நான் சோதிடம் பார்க்க கூடியவனுக்கு எவ்ளோ கூலி தருவேன் என்பதை கூட அவர்களால் சொல்ல முடியாது..

நம்முடைய முயற்சிகளுக்கு முட்டுக் கட்டாக இருப்பது தான் சோதிடம்..

இதனால்தான் இஸ்லாம் நல்ல நேரம் பார்ப்பது,குறி கேட்பது,சகுனம் பார்ப்பது இவற்றை எல்லாம் 1400
வருடங்களுக்கு முன்னரே தடை செய்தது..

நான் யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத வில்லை. தயவு செய்து யாரும் தவறாக எண்ண வேண்டாம்..இது என்னுடைய சொந்த கருத்துக்கள் மட்டுமே..
நான் யாரையும் புண்படுத்தியிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்..
ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை! 782880 ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை! 782880 ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை! 755559 ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை! 755559

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை!

Post by kalainilaa on Sat 10 Sep 2011 - 17:50

Atchaya wrote:உங்களுக்கு ஜோதிடம் ஏற்புடையது அல்ல. இருப்பினும், ஒவ்வொரு பதிவையும் படித்து பின்னூட்டம் இடுங்கள்....அன்பு உறவுகளே....
@. @. @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: ஜோதிடத்தை நம்பாதே - விஞ்ஞானிகளின் அறிக்கை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum