சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

அபூர்வ ஜோதிடர் Khan11

அபூர்வ ஜோதிடர்

Go down

அபூர்வ ஜோதிடர் Empty அபூர்வ ஜோதிடர்

Post by Atchaya Sat 10 Sep 2011 - 5:42



பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது. 'நூற்றாண்டுகள்' என்ற இவரது நூல் 942 செய்யுட்களைக் கொண்டது. ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு வரிகள் உள்ளன. இவைகள் காண்டமாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு காண்டத்திலும் நூறு பாடல்கள் உள்ளன..

14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துக்களையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன்தான் இந்த நூலை அணுக வேண்டியிருக்கிறது. ஆனால் ஹிந்து மதம் மிக உயரிய நிலையை இந்த நூற்றாண்டில் அடையப் போகிறது என்பதையும் இவர்தான் கூறியுள்ளார். லண்டனில் ஏற்பட்ட மாபெரும் தீ விபத்து, பிரெஞ்சுப் புரட்சி, ஹிட்லரின் எழுச்சியும் வீழ்ச்சியும், கென்னடியின் கொலை போன்றவற்றை இவரால் எப்படித் துல்லியமாகக் கூற முடிந்தது என்பது ஆச்சரியகரமான விஷயம்தான்!

லத்தீனில் ஆழ்ந்த புலமை பெற்ற நாஸ்டர்டாமஸ் அம்மொழியின் செழுமையான வார்த்தைகளைக் கையாண்டிருப்பதால் அதன் உள் அர்த்தம் புரியாமல் அறிஞர்களும் ஜோதிட ஆர்வலர்களும் இன்று வரை அச்சொற்பொருள்களை அறிய தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நான்கு ஆண்டுகளில் இந்நூலை முடித்து 1555ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி வெளியிட்டார். நூல் அச்சிடப்பட்ட மேஸ்பான்ஹோம் பிரஸ்ஸின் முன்னே வெகு தூரத்திற்கு நீண்ட வரிசையில் மக்கள் நின்று இதை வாங்கி மகிழ்ந்தனர். ஆனால் சங்கேத மொழியில் பலன்களைக் கொண்டுள்ள பாடல்கள் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தின

அவரது மகனுக்கே அவர் ஒரு எச்சரிக்கையை சங்கேத மொழியில் அளித்திருந்தார். ஒரு கடித வடிவில் அது இருந்தது, சீஸர் என்ற பெயருடைய அவரது மகன் 22ம் வயதில் தன் தந்தையின் பெயரைத் தீய வழியில் பயன்படுத்துவார் என்றும் அது அவருக்கு நலம் பயக்காது என்றும் எச்சரித்திருந்தார் நாஸ்டர்டாமஸ்.

இதை அலட்சியப்படுத்திய சீஸர், தந்தையைப் போல் பலன்கள் கூற வேண்டும் என்ற ஆர்வத்தில் விவாரிஸ் என்ற நகர் அழியப் போகிறது என்று ஆரூடம் கூறினார். ஆனால் அரசாங்கப் படைகளின் பாதுகாப்பில் இருந்த அந்த நகரத்திற்கு ஒரு ஆபத்தும் நேரவில்லை. மக்கள் சீஸரைச் சூழ்ந்து கொண்டு எப்போது நமது நகரம் அழியப் போகிறது என்று கேட்கலாயினர். பளீரென்று சீஸர் 'இன்னும் மூன்று நாட்களில்' என்றார். அடுத்த நாள் இரவு அவரே நகருக்குத் தீ வைக்க முயன்ற போது கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு அரசாங்க வீரர்களால் கொல்லப்பட்டார்.

இதே போல நடந்த இன்னொரு விசித்திரமான சம்பவம் அவர் புகழை வெகுவாகப் பரப்பி விட்டது. புகழ் பெற்ற மருத்துவராகவும் தீர்க்கதரிசியாகவும் அவர் திகழ்ந்ததால் பிரான்ஸிலுள்ள பெரும் தனவந்தர்களும் பிரபுக்களும் அவரை அழைத்துத் தங்கள்குறைகளைப் போக்கிக் கொள்வது வாடிக்கையாக இருந்தது, ஒரு சமயம் லொரெய்ன் என்ற மாகாணத்தில் இருந்த பெயின்ஸ் கோட்டையின் உரிமையாளரான லார்ட் ப்ளோரின்ஸ்வில்லி அவரை அழைத்தார். அவரது தாயாரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று பிரபு ப்ளோரின்ஸ்வில்லி கேட்டுக் கொள்ளவே சலான் என்ற தனது நகரிலிருந்து பயணப்பட்டு லொரெய்ன் வந்து தன் சிகிச்சையைத் தொடங்கினார் நாஸ்டர்டாமஸ். சீக்கிரமே அவர் குணமடைந்தார். இதனால் மனம் மகிழ்ந்த பிரபு தன் தாயார் குணமடைந்ததைக் கொண்டாட ஒரு பெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். விருந்து நடக்கும் நாளன்று காலையில் தோட்டத்தில் நாஸ்டர்டாமஸுடன் அவர் உலாவச் சென்றார். அங்கே ஒரு இடத்தில் இரண்டு குட்டிப் பன்றிகள் இருந்தன. ஒன்றின் நிறம் கறுப்பு. இன்னொன்றின் நிறம் வெள்ளை. அதைச் சுட்டிக் காட்டிய ப்ளோரின்ஸ்வில்லி நாஸ்டர்டாமஸிடம் கிண்டலாக "இந்த இரண்டு பன்றிகளின் எதிர்காலம் பற்றிச் சொல்ல முடியுமா" என்று கேட்டார். நாஸ்டர்டாமஸின் உண்மையான பெருமை அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. இரண்டு பன்றிகளையும் உற்றுப் பார்த்த நாஸ்டர்டாமஸ் ப்ளோரின்ஸ்வில்லியிடம் "இதோ இந்த கறுப்புப் பன்றி ஒரு ஓநாய்க்கு உணவாகப் போகிறது. இதோ இந்த வெள்ளைப் பன்றி நமக்கு இரவு விருந்தில் உணவாகப் போகிறது" என்றார். ப்ளோரின்ஸ்வில்லி இதைப் பொய்யாக்கி விட வேண்டுமென்று எண்ணம் கொண்டு தனது சமையல்காரரை ரகசியமாக அழைத்து கறுப்புப் பன்றியை விருந்து உணவிற்குக் கொல்லுமாறு கட்டளையிட்டார். இரவு விருந்தில் தனது அருகில் உட்கார்ந்திருந்த நாஸ்டர்டாமஸிடம் "உங்கள் கூற்றுப் பொய்யாகி விட்டது. இதோ நாம் சாப்பிடுவது கறுப்புப் பன்றியைத்தான்" என்றார். நாஸ்டர்டாமஸோ சிரித்தார். "இல்லை, இது நான் சொன்ன வெள்ளைப் பன்றிதான்" என்றார். உடனே பிரபு தன் சமையல்காரரை அழைத்தார். சமையல்காரர் நடந்ததை விளக்கினார். "கறுப்புப் பன்றியைக் கொன்ற பின்னர் சில நிமிடம் நான் வெளியே போனேன். அப்போது ஒரு நொண்டி ஓநாய் உள்ளே வந்து அந்த மாமிசத்தை உண்டு விட்டது. வேறு வழியின்றி வெள்ளைப் பன்றியையே சமைத்தேன்" என்றார்.

இந்த விஷயம் வெளியில் பரவவே நாஸ்டர்டாமஸின் புகழ் பெருமளவில் பரவியது. அவரை பய பக்தியுடன் அனைவரும் வணங்கினர்.

இன்னொரு சம்பவம்: ஒரு நாள் மாலையில் அவரைத் தாண்டிச் சென்ற ஒரு இளம் பெண் தனது மாலை வணக்கத்தைத் தெரிவித்து அருகிலுள்ள காட்டில் சுள்ளிகளைப் பொறுக்கப் போவதாகச் சொன்னாள். நாஸ்டர்டாமஸும் அவளிடம் "மாலை வணக்கம் இளம் பெண்ணே" என்று கூறினார். சற்று நேரம் கழிந்து இரவான போது அவள்திரும்பி வந்தாள். அவருக்குத் தனது இரவு வணக்கத்தைத் தெரிவித்தாள். நாஸ்டர்டாமஸ், "மாலை வணக்கம் கூறிய போது இளம் கன்னியாகப் போனாய்; இப்போது இளம் மனைவியாக வந்து விட்டாயே" என்று சிரித்துக் கொண்டே கூறினார். அரண்டு திகைத்துப் போன அவள் ஓடியே விட்டாள். தனது காதலனைக் காட்டில் சந்தித்த அவள் கன்னிமை இழந்ததை நாஸ்டர்டாமஸ் போகிற போக்கில் கூறியது அவரது எதையும் உணரும் ஆற்றலை உணர்த்தியது.

நாளுக்கு நாள் அவர் புகழ் பெருகவே அவர் வாயிலிருந்து என்ன சொல் உதிரப் போகிறது என்பதை அனைவரும் அறிய ஆவலுற்றனர். அவர் மரணத்திற்குப் பின்னும் கூட அவர் ஆரூடம் பலித்ததுதான் விசித்திரத்திலும் விசித்திரம்!

நன்றி நாகராஜன் & நிலாச்சாரல்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum