சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

புத்தக பிரியர்களுக்கான இணையதளம் Khan11

புத்தக பிரியர்களுக்கான இணையதளம்

2 posters

Go down

புத்தக பிரியர்களுக்கான இணையதளம் Empty புத்தக பிரியர்களுக்கான இணையதளம்

Post by *சம்ஸ் Mon 19 Sep 2011 - 13:33

புத்தக பிரியர்களுக்கான இணையதளம் Reading_001இசைக்காக ஸ்பாட்டிபை செய்ததை இலக்கியத்திற்காக செய்ய வந்திருக்கிறது என்னும் வரணனையோடு அறிமுகமாகியிருக்கிறது 24 சிம்பல்ஸ் இணையதளம்.இலக்கியத்திற்கான
ஸ்பாட்டிபை என்றும் சொல்லப்படக்கூடிய இந்த தளம் ஸ்பாட்டிபை எப்படி
பாடல்களை கேட்டு ரசிக்க உதவுகிறதோ அதே போல புத்தகங்களை படிக்க உதவுகிறது.

புத்தகங்களை படிக்க உதவும் இணையதளங்கள் ஏற்கனவே ஏராளமாக உள்ள நிலையில்
இதில் என்ன புதுமை இருக்கிறது என கேட்கலாம். இந்த தளத்தில் புத்தகங்களை
தரவிறக்கம் செய்யாமலேயே படிக்கலாம் என்பதே விஷயம்.

பொதுவாக இணையத்தில் புத்தகங்களை இபுக் வடிவிலோ அல்லது பிடிஎப் உள்ளிட்ட
கோப்பு வடிவிலோ தான் படிக்க முடியும். அநேகமாக அவற்றை தரவிறக்கம் செய்து
கொள்ள வேண்டும்.

தரவிறக்கம் செய்யாமல் புத்தகங்களை படிப்பது மிகவும் கடினம். தரவிறக்கம்
செய்வது என்பது சில நேரங்களில் புத்தகங்களை வாங்குவதையும் குறிக்கும்.
அதிலும் குறிப்பாக புதிய புத்தகங்கள் மற்றும் காப்புரிமை சிக்கல் உள்ள
புத்தகங்களை அதற்குறிய கட்டணம் செலுத்தியே இபுக் வடிவில் பெற வேண்டும்.

இணையத்தில் இலவசமாக படிக்க கிடைப்பவை பெரும்பாலும் காப்புரிமையில்
இருந்து விடுவிக்கப்பட்ட புத்தகங்களே. புதிய புத்தகங்கள் சுடச்சுட தேவை
என்றால் வாங்குவதை தவிர வேறு வழியில்லை.

ஆனால் பெரும்பாலான பதிப்பாளர்கள் இன்னும் புதிய புத்தகங்களை இபுக்
வடிவில் வெளியிட விருப்பம் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். இபுக் அச்சு
வடிவிலான விற்பனையை பாதிக்கும் என்றும் காசு கொடுக்க மனமில்லாத இலவச
வாசிப்பை ஊக்குவிக்கும் என்ற அச்சமே இதற்கு காரணம். அதோடு காப்புரிமை
சிக்கலும் இருக்கிறது.

இசை துறையிலும் இந்த பிரச்சனை இருக்கிறது. சொல்லப்போனால் இசை துறையில்
தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையே பெரும் போரே நடந்தது. புதிய
பாடல்களை சீடியில் வாங்குவதை விட இணையம் வழியே தரவிறக்கம் செய்து கொண்டு
தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் வழக்கம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து
வந்ததால் விற்பனையும் வருவாயும் பாதிக்கப்பட்ட நிலையில் இசை தயாரிப்பு
நிறுவனங்கள் அவர்கள் மிது காப்புரிமை போர் தொடுத்தது.

அனுமதி இல்லாமல் பாடல்களை தரவிறக்கம் செய்வது சட்ட விரோதமாக
கருத்தப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்பட்டன. இந்த போர் இன்னமும் தொடர்ந்து
கொண்டு தான் இருக்கிறது.

தரவிறக்க யுகம் இசை தயாரிப்பு நிறுவனங்களை இல்லாமல் செய்துவிடும்
என்பதால் தொழில்நுட்பம் ரசிகர்களுக்கு திறந்து விட்ட வாயில்களுக்கு பூட்டு
போடுவதில் மும்முரமாக இருக்கின்றன.

இதனிடையே ஐடியூன்ஸ் அறிமுகமானது. காப்புரிமை சிக்கல் இல்லாமல் புதிய
பாடல்களை கட்டணத்திற்கு தரவிறக்கம் செய்து கொள்ள ஆப்பிளின் இந்த சேவை வழி
செய்தது. இதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை.

இந்த நிலையில் தான் ஸ்வீடனில் இருந்து ஸ்பாட்டிபை உதயமானது. இந்த தளம்
சந்தா அடிப்படையில் புதிய பாடல்களை தரவிறக்கம் செய்யாமலேயே கேட்டு ரசிக்க
வழி செய்தது.

அதாவது இந்த தளம் பாடல்களை ஸ்டிடிமிங் முறையில் ஒலிபரப்பி கொண்டே
இருக்கும். உறுப்பினர்கள் அதனை இணையத்தில் கேட்டு மகிழலாம். தரவிறக்கம்
செய்யவும் முடியாது. மற்றவர்களோடு பகிரவும் முடியாது. பாடல்களை கிளிக்
செய்தால் அவரை ஒலிபரப்பாகும், கேட்டு ரசிக்கலாம்.

காப்புரிமை உள்ள பாடல்களை கூட ஸ்பாட்டிபை அனுமதி பெற்று இந்த தளத்தில்
வழங்குகிறது. ஆனால் அதனை கேட்டு ரசிக்க விளம்பரங்களை பொருத்து கொள்ள
வேண்டும். விளம்பரம் வேண்டாம் என்றால் கட்டண சேவைக்கு போக வேண்டும்.

ஸ்வீடனில் துவங்கி ஐரோப்பாவில் பிரபலமான இந்த சேவை சமீபத்தில்
அமெரிக்காவிலும் அறிமுகமானது. ஸ்பாட்டிபை போலவே 24 சிம்பல்ஸ் புத்தகங்களை
ஸ்டிரிமிங் செயது இணையத்திலேயே படிக்க உதவுகிறது.

புதிய புத்தகங்களை கூட இதன் முலம் இணையத்திலேயே படிக்கலாம். தரவிறக்கம்
செய்து படிக்க முடியாது. இலவசமாக படிக்க வேண்டும் என்றால் விளம்பரங்கள்
இடம் பெற்றிருக்கும் இல்லை என்றால் சிறப்பு கட்டண சேவையை பயன்படுத்தி
கொள்ளலாம். இபுக் சாதனங்களிலும் படிக்கும் வசதி உண்டு.

புதிய புத்தகங்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவையில்லாமல் அதெ
நேரத்தில் காப்புரிமை பிரச்ச்னை இல்லாமல் படிக்க இந்த சேவை மிகவும் ஏற்றது.
புத்தக பிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளது.

இப்போதைக்கு ஸ்பானிஷ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் மட்டுமே கிடைக்கின்றன.
அதிலும் ஸ்பானிஷ் மொழி புத்தகங்களே அதிகம் உள்ளன. விரையில் மற்ற மொழிகளும்
சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் புத்தகங்களை அப்படியே
இணையத்தில் இருந்தபடியே படிப்பதோடு அவற்றை பேஸ்புக் வழியே நண்பர்களோடு
பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.

அதே போல நண்பர்கள் படித்து கொண்டிருக்கும் புத்தகத்தையும் பார்க்கலாம்.
இன்னும் ஒரு படி மேலே சென்று புத்தகத்தில் நாம் படித்த பகுதியில் விமர்சன
குறிப்புகளை எழுதி அதையும் பகிர்ந்து கொள்ளலாம்.

இணையதள முகவரி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புத்தக பிரியர்களுக்கான இணையதளம் Empty Re: புத்தக பிரியர்களுக்கான இணையதளம்

Post by kalainilaa Mon 19 Sep 2011 - 18:14

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum