சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா.. Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா.. Khan11
ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா.. Www10

ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

Go down

Sticky ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

Post by சர்ஹூன் on Wed 21 Sep 2011 - 8:10


அன்புள்ள அம்மாவுக்கு,

நான் நலமாய் உள்ளேன். நீ எப்படி இருக்கின்றாய்?

நீ நலமாய் இருக்க மாட்டாய் என்பது எனக்குத்தெரியும் அதனால்த்தான் எப்படி இருக்கின்றாய் என கேட்டேன்.

நான் எப்போதும் நலமாய்த்தான் இருக்கின்றேன் இருந்திருக்கின்றேன் உன் தயவால்.. அதனால் எனது ஆரோக்கியத்துக்கு ஒன்ரும் குறைவில்லை.. ஆனாலும் உன்னை நினைத்தால்தான் தொண்டைவரி எதுவோ வந்து என்னை சுவாசிக்க முடியாமல் செய்துவிடுகின்றது.

அம்மா, நீ இல்லாத ஒரு உலகில் இப்போது நான் ஓரளவு நான் வாழப் பழகிவிட்டேன்.. ஆனாலும் நீ இன்னும் அப்படி ஒன்று பற்றி சிந்திக்க மறுப்பது எனக்கு எப்போதும் ஒரு உறுத்தலாகவே இருந்து கொண்டிருக்கின்றது. நான் ஒரு வேளை சுயநலமிக்க ஒருவனாக மாறிவிட்டேனோ என்ற சுய பச்சாதாபம் இப்போது என்னை அலைக்கழிக்கின்றது. அப்படியா அம்மா?. இப்போதும் நீ, ஏதும் பங்கிடும் போது எனக்கெனவும் எடுத்துவைப்பதாக என் தங்கைகள் சொல்லும் போது நீ எந்தளவு நானில்லா உலகொன்றினை நிராகரிக்கின்றாய் என்பதன் தீவிரம் எனக்கு புரிகின்றது.

ஆனாலும் இது நானோ நீயோ விரும்பி ஏற்ற ஒன்றல்ல. நிர்ப்பந்தம் என்னை இங்கே கொணர்ந்துவிட்டது அது உனக்கும் தெரியும் ஆனாலும் அதிலிருந்து மீள உனக்கு தெரிய வில்லை.

உனக்கு நான் எடுக்கும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்புகளின்போதும் உன் குரலின் நெகிழ்ச்சி என்னை உருக்கிவிடும். அப்போதெல்லாம் எல்லாவற்றையும் அள்ளி எறிந்துவிட்டு உன்னிடமே வந்துவிட வேண்டும் என்று எண்ணுவேன். ஆனாலும் அதன்பின்னான நிஜங்கள் அதற்கு அனுமதிப்பதில்லை.

நீ இன்னும் ஏன் என்னைப்பற்றி அதிகம் கவலை கொள்கின்றாய்? என அன்றொரு தரம் உன்னிடம் கேட்டேன். அதற்கு ஒரு சிரிப்புடன், “ போடா இவரு பெரிய ஆளு” என்றாய். எனக்கு அதற்கப்பால் சொல்ல ஒன்றும் இல்லை. ஒன்றும் மட்டும் புரிந்தது. நான் என்றும் உனக்கு ஒரு கைக்குழந்தையாக / ஒரு சிறுவனாகத்தான் இருக்கின்றேன். எனக்கும் அதுதான் வேண்டும்.

உன்னுடனான் ஒவ்வொரு உரையாடல்களும் எனக்கு முடியும் போது இதயம் கனத்து கண்கள் கசிந்த படியே முடிகின்றன. என் மீதான உன் விசாரணைகள் அதிகமாக இருக்காது. அவை அனேகமாக, “ என்ன சாப்பிட்டாய்?” ஒழுங்கா சாப்பிடுறாயா?” “உடம்ப பாத்துக்கோ” என சாப்பாடு பற்றியோ அல்லது, என் எதிர்காலம் பற்றிய உனது கவலைகளாகவோ , அல்லது நான் வருகின்ற நாள் பற்றிய உன் ஆவலாகவோ இருக்கும். இதையும் மீறி, உனது விசாரணைகள் ஒன்றினையும் நான் கேட்டில்லை. நீ சுகமாக இருக்கின்றாயா என நான் கேட்டால், உற்சாகக்குரலுடன் “ஆமாம்” என்பாய். அது பொய் என்பது எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும். ஆனாலும் நீ மகிழ்வாய்த்தான் இருப்பதாக நானும் காட்டிக்கொள்வேன்.

உனக்கென நான் இதுவரை எதுவும் செய்யவில்லை என நான் ஒவ்வொருநாளும் குமைந்து கொண்டே இருக்கின்றேன். ஆனால் நீ சொல்லலாம் நான் வாங்கித்தந்த சேலைகள் , நகைகள் பற்றி.. அவை உனக்கான கைமாறுகளா என்றால் இல்லை என்றே நான் சொல்வேன். வேறு உனக்கு என்ன செய்வது என்பது பற்றி இன்னும் எனக்கு குழப்பம் மட்டுமே எஞ்சியுள்ளது அம்மா.

நீ இப்போது எனது திருமணக்கவலைகளில் மூழ்கி உள்ளதாக என் தங்கைகள் என்னைக்கேலி செய்கின்றனர். அதை நான் வினவிய போது அதே கவலைகளுடன் நீ சொன்னாய், உன்ன எனக்கு பிறகு பாக்க ஒருத்தி தேவைதானே என்று. ஐயோ, எப்போதும் என்னையே நினைத்து உன்னை மறந்து போகின்றாயே. முதலில் உன்னைப்பார்த்துக்கொள் அதெல்லாம் இப்போது அவசியமில்லை என்ற என்னிடம் நீ இன்னும் ஒன்றும் சொல்லவில்லை. என்னிடம் வார்த்தைகளில்லை அம்மா..
இனி எனக்கும் எதுவும் வேண்டியதில்லை. உன் கையினால் சாப்பிட்டுவிட்டு, உன்னை திட்டுக்களினை கேட்டவாறே உன் சேலைத்தலைப்பினை பற்றிக்கொண்டே உன் பின்னால், ஒரு மிட்டாய்க்காகவோ அல்லது வேறு ஏதோ புகார் ஒன்றுடனோ சிணுங்கியவாறு அலைந்த அக்காலங்கள் வேண்டும். அதுவும் நீதான் எனக்கு தரவேண்டும்..இன்னும் நான் உன்னிடமிருந்துதான் எதிர்பார்க்கின்றேன் பார்த்தாயா? என்ன செய்வது எனக்கு உன்னிடமிருந்து எதையும் பெற்றுத்தானே பழக்கம்.

ஆனாலும் உன்னிடம் ஒன்று சொல்லுகின்றேன்.. நீ ஒன்றும் கவலைப்படாதே, நான் உன்னை நோக்கி எனது நாட்களினை கடத்துகின்றேன். அதுவரையிலும் நீ காத்திரு..

ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

Post by இன்பத் அஹ்மத் on Wed 21 Sep 2011 - 8:20

அருமையான கருத்துக்களுடன் பாசமுள்ள அம்மாவுக்கு எழுதிய
அன்பான மடல் அருமை நண்பரே நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

Post by ஹம்னா on Wed 21 Sep 2011 - 8:28

உன் கையினால் சாப்பிட்டுவிட்டு, உன்னை திட்டுக்களினை கேட்டவாறே உன் சேலைத்தலைப்பினை பற்றிக்கொண்டே உன் பின்னால், ஒரு மிட்டாய்க்காகவோ அல்லது வேறு ஏதோ புகார் ஒன்றுடனோ சிணுங்கியவாறு அலைந்த அக்காலங்கள் வேண்டும். அதுவும் நீதான் எனக்கு தரவேண்டும்..இன்னும் நான் உன்னிடமிருந்துதான் எதிர்பார்க்கின்றேன் பார்த்தாயா? என்ன செய்வது எனக்கு உன்னிடமிருந்து எதையும் பெற்றுத்தானே பழக்கம்.

என் கண்கள் கலங்கி விட்டது சர்ஹூன். இந்த மடலை உங்கள் தாய்க்கும் அனுப்பி வையுங்கள் அவங்க படித்தால் இன்னும் சந்தோஷப்படுவாங்க.


ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா.. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

Post by சர்ஹூன் on Wed 21 Sep 2011 - 16:56

அப்துல் றிமாஸ் wrote:அருமையான கருத்துக்களுடன் பாசமுள்ள அம்மாவுக்கு எழுதிய
அன்பான மடல் அருமை நண்பரே நன்றி பகிர்வுக்கு

:”@: :”@: :”@: :”@:
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

Post by இன்பத் அஹ்மத் on Wed 21 Sep 2011 - 16:58

ஹம்னா wrote: உன் கையினால் சாப்பிட்டுவிட்டு, உன்னை திட்டுக்களினை கேட்டவாறே உன் சேலைத்தலைப்பினை பற்றிக்கொண்டே உன் பின்னால், ஒரு மிட்டாய்க்காகவோ அல்லது வேறு ஏதோ புகார் ஒன்றுடனோ சிணுங்கியவாறு அலைந்த அக்காலங்கள் வேண்டும். அதுவும் நீதான் எனக்கு தரவேண்டும்..இன்னும் நான் உன்னிடமிருந்துதான் எதிர்பார்க்கின்றேன் பார்த்தாயா? என்ன செய்வது எனக்கு உன்னிடமிருந்து எதையும் பெற்றுத்தானே பழக்கம்.

என் கண்கள் கலங்கி விட்டது சர்ஹூன். இந்த மடலை உங்கள் தாய்க்கும் அனுப்பி வையுங்கள் அவங்க படித்தால் இன்னும் சந்தோஷப்படுவாங்க.
@. @. @.
உண்மையாகவே சந்தோசப்படுவார்கள்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

Post by சர்ஹூன் on Wed 21 Sep 2011 - 17:02

அப்துல் றிமாஸ் wrote:
ஹம்னா wrote: உன் கையினால் சாப்பிட்டுவிட்டு, உன்னை திட்டுக்களினை கேட்டவாறே உன் சேலைத்தலைப்பினை பற்றிக்கொண்டே உன் பின்னால், ஒரு மிட்டாய்க்காகவோ அல்லது வேறு ஏதோ புகார் ஒன்றுடனோ சிணுங்கியவாறு அலைந்த அக்காலங்கள் வேண்டும். அதுவும் நீதான் எனக்கு தரவேண்டும்..இன்னும் நான் உன்னிடமிருந்துதான் எதிர்பார்க்கின்றேன் பார்த்தாயா? என்ன செய்வது எனக்கு உன்னிடமிருந்து எதையும் பெற்றுத்தானே பழக்கம்.

என் கண்கள் கலங்கி விட்டது சர்ஹூன். இந்த மடலை உங்கள் தாய்க்கும் அனுப்பி வையுங்கள் அவங்க படித்தால் இன்னும் சந்தோஷப்படுவாங்க.
@. @. @.
உண்மையாகவே சந்தோசப்படுவார்கள்

நன்றிகள் றிமாஸ்.. ஏற்கனவே இது அவர்களுக்கு அனுப்பிவிட்டேன்.

நன்றிகள் மீண்டும்...
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 21 Sep 2011 - 17:30

நான் இந்த மடலை படிக்கும் போது என்னருகில் என் தோழனும் இருந்தான் முடித்தபோது என்னைப் பற்றி எழுதியிருக்கிறார் என்று சொன்னார் அவ்வாறே நானும் உணர்ந்தேன் உணர்வு ரீதியான மடல் மனம் கனக்கிறது எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி அனைவரது நிலையும் சரிவரும் இறைவன் எமக்குத் துணை


ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

Post by நண்பன் on Wed 21 Sep 2011 - 17:40

மிகவும் அருமையாக உள்ளது அமைதியாகப் படித்தேன் நானே அம்மாவுக்கு எழுதியதாக உணர்ந்தேன் நன்றி சர்ஹுன்

தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கத்தை தேடிக்கொள்ளுங்கள் ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா.. 1232338647


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

Post by முனாஸ் சுலைமான் on Wed 21 Sep 2011 - 17:45

நேசமுடன் ஹாசிம் wrote:நான் இந்த மடலை படிக்கும் போது என்னருகில் என் தோழனும் இருந்தான் முடித்தபோது என்னைப் பற்றி எழுதியிருக்கிறார் என்று சொன்னார் அவ்வாறே நானும் உணர்ந்தேன் உணர்வு ரீதியான மடல் மனம் கனக்கிறது எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி அனைவரது நிலையும் சரிவரும் இறைவன் எமக்குத் துணை
ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா.. 111433 ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா.. 111433
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

Post by kalainilaa on Wed 21 Sep 2011 - 19:55

மகனின் மனம் இங்கு பேசியது உண்மை .
தாய் இறப்பதில்லை ,உண்மை .
உமது ஒவ்வொரு தொகுப்பும் ஏதோ மனதை நெருடுகிறது .

தொடருங்கள் தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

Post by சர்ஹூன் on Thu 22 Sep 2011 - 7:15

நேசமுடன் ஹாசிம் wrote:நான் இந்த மடலை படிக்கும் போது என்னருகில் என் தோழனும் இருந்தான் முடித்தபோது என்னைப் பற்றி எழுதியிருக்கிறார் என்று சொன்னார் அவ்வாறே நானும் உணர்ந்தேன் உணர்வு ரீதியான மடல் மனம் கனக்கிறது எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி அனைவரது நிலையும் சரிவரும் இறைவன் எமக்குத் துணை


ஒரு படைப்பாளிக்கான நிஜமான சந்தோசம் இது போன்ற அங்கீகாரங்கள்தான் மிக்க மகிழ்ச்சி ஹாசீம்..

நன்றி உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும்
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

Post by சர்ஹூன் on Thu 22 Sep 2011 - 7:16

kalainilaa wrote:மகனின் மனம் இங்கு பேசியது உண்மை .
தாய் இறப்பதில்லை ,உண்மை .
உமது ஒவ்வொரு தொகுப்பும் ஏதோ மனதை நெருடுகிறது .

தொடருங்கள் தோழரே .

நன்றிகள் கலைநிலா
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

Post by சர்ஹூன் on Thu 22 Sep 2011 - 7:25

நண்பன் wrote:மிகவும் அருமையாக உள்ளது அமைதியாகப் படித்தேன் நானே அம்மாவுக்கு எழுதியதாக உணர்ந்தேன் நன்றி சர்ஹுன்

தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கத்தை தேடிக்கொள்ளுங்கள் ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா.. 1232338647

மிக்க நன்றிகள் நண்பன் .

நீங்கள் சொன்ன வார்த்தை நிதர்சனமானது
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

Post by அப்துல்லாஹ் on Thu 22 Sep 2011 - 8:21

உம்மாவை நினைக்க வைக்க இந்தத் திரி பயன்பட்டது...
என் உள்ளத்தோடும் உணர்வுகளோடு ஒருமித்துக்கலந்துவிட்ட என் தாய் என்னுடன் சிறிது நேரம் என்னோடு அளவளாவிச் சென்றது போல உணர்ந்தேன். நன்றி தம்பி
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

Post by பானுஷபானா on Thu 22 Sep 2011 - 12:44

இந்த கடிதம் படித்ததும் எனக்கு இந்த பாடல் தான் நினைவு வருகிரது
தாய் அழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா.. 2027189708 ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா.. 2027189708 ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா.. 2027189708 ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா.. 2027189708
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

Post by *சம்ஸ் on Sat 19 Jan 2013 - 18:46

என் கண்கள் கலங்கி விட்டது சர்ஹூன்.

அம்மா என்றால் சும்மா இல்லை இன்னும் தாயை மதிக்கதெரியாத மானிடர்கள் பாரில் உள்ளார்கள்.அப்படிபட்டவர்கள் இப்படியான பதிவுகளை பார்க படிக்க வேண்டும் படிக்க வேண்டும்.

தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கத்தை தேடிக்கொள்ளுங்கள் :+=+:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

Post by மீனு on Sun 20 Jan 2013 - 10:08

மிக மிக அழகாக உள்ளது அம்மாவிற்கு எழுதிய கடிதம் :!#: :];:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

Post by பானுஷபானா on Sun 20 Jan 2013 - 13:50

மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் பதிவு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

Post by *சம்ஸ் on Sun 20 Jan 2013 - 15:25

பானுகமால் wrote:மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் பதிவு
@. @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

Post by ansar hayath on Sun 20 Jan 2013 - 20:02

நண்பனின் உண்மையான ஒரு கடிதம் உருக வைத்தது என் கண்களையும் குழிர வைத்தது...
உண்மையான அன்பு என்றும் மறணிப்பதில்லை
அதற்கு உங்கள் கடிதமே சாட்சி...


நன்றி...தொடருங்கள்.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum