Latest topics
» பல்சுவை - by rammalar Yesterday at 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Yesterday at 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Yesterday at 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Yesterday at 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Yesterday at 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Yesterday at 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Yesterday at 15:59
» இனி - துளிப்பா
by rammalar Yesterday at 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Yesterday at 15:56
» மகா பெரியவா.
by rammalar Yesterday at 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Yesterday at 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Yesterday at 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Yesterday at 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09
» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20
» பல்சுவை- 10
by rammalar Tue 11 Jun 2024 - 16:39
» வெஜ் பால் பிரியாணி
by rammalar Tue 11 Jun 2024 - 12:50
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 10:18
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by rammalar Tue 11 Jun 2024 - 10:12
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46
» வாயாடிப் பெண்ணுக்கு பொருத்தமான மாப்பிள்ளை!
by rammalar Tue 11 Jun 2024 - 6:30
வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க
2 posters
Page 1 of 1
வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க
வளரும் நாடுகளில், வாந்தி, பேதியால், குழந்தைகள் பெருமளவில்
உயிரிழக்கின்றனர். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில், 26 சதவீதம் பேர்,
வாந்தி, பேதியால் இறக்கின்றனர். இவர்களில் இந்தியாவில் மட்டும், 1.87
மில்லியன் குழந்தைகள். இதுதவிர, வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்ட, 10
மில்லியன் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைவால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இதனால், பிற நோய்களை எதிர்கொள்ளும் சக்தி குறைந்து, மேலும், பல நோய்களுக்கு
ஆளாகின்றனர்.
ரோட்டா வைரஸ் கிருமி: வாந்தி, பேதி ஏற்படுவதற்கு முக்கிய காரணம், ரோட்டா
வைரஸ் (Rota virus) எனும் நுண்கிருமியே. சமீபத்திய ஆராய்ச்சி முடிவின்படி,
“ரோட்டா வைரஸ்’ கிருமி, 40 சதவீத சமயங்களில், வாந்தி, பேதிக்கு காரணமாக
இருக்கிறது. இதுதவிர, பல கிருமிகளும் பேதிக்கு காரணமாக இருந்தாலும்,
“ரோட்டா வைரஸ்’ கிருமியே, குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மிகவும் மோசமான வாந்தி, பேதி மற்றும் நீண்ட நாட்கள் பாதிக்கக்கூடிய
பேதிக்கு முக்கிய காரணம், “ரோட்டா வைரஸ்’ தான் என, ஆராய்ச்சி முடிவுகள்
தெரிவிக்கின்றன.
எவ்வாறு பரவுகிறது: ரோட்டா வைரஸ், மக்களின் சுகாதாரக் கேடுகளால் தான்
பரவுகிறது. கழிவறை சென்று வந்த பின், சோப்பு போட்டு கை கழுவுதல், கையை
சுத்தமாக கழுவிய பின், சாப்பாடு உட்கொள்ளுதல் மற்றும் உணவூட்டுதல் போன்ற,
மிகவும் அடிப்படை சுகாதார வழிமுறைகளை மேற்கொண்டாலேயே போதும்; வாந்தி, பேதி
பரவுவதை தடுத்துவிட முடியும்.
சிகிச்சை முறை: வாந்தி, பேதியால் குழந்தை பாதிக்கப்பட்டால், உடம்பில் உள்ள
நீர்ச்சத்து மிகவும் குறைந்து விடுகிறது. அதனால், குழந்தை மிகவும் சோர்ந்து
காணப்படுகிறது. மேலும், தொடர்ந்து போகும் பேதியால், உடம்பில் உள்ள உப்பு
மற்றும் நீரின் அளவு மிகவும் குறைவதால், உயிருக்கு ஆபத்தான நிலை
ஏற்படுகிறது. எனவே, சிகிச்சையின் முதற்படியே, உடம்பில் உள்ள நீரின் அளவை
கூட்டுவது தான். ஆகையால், வாந்தி, பேதி உள்ள குழந்தைகளுக்கு, கண்டிப்பாக
தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுக்காத குழந்தைக்கு
(உதாரணமாக 2 வயதுக்கு மேல்) உப்புக் கரைசல் தண்ணீரை கொடுக்க வேண்டும்.
ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து: நோய்கள் வந்த பின், சிகிச்சை
அளிப்பதை விட, வருமுன் காப்பதே சிறந்தது. ரோட்டா வைரஸ் சொட்டு மருந்து
(Rotarix), பிறந்த குழந்தைகளுக்கு, ஆறு வாரம் முதல் கொடுக்க வேண்டும். இதை
இரண்டு முறை, ஒரு மாதம் இடைவெளியில் கொடுக்கலாம். தற்போது, இது தனியார்
மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கிறது. வரும் காலங்களில், அரசு
மருத்துவமனைகளில், இந்த சொட்டு மருந்து கிடைக்கப் பெறும் போது, நம்
நாட்டில், வாந்தி, பேதி தொல்லை பெருமளவில் கட்டுப்படுத்தப்படும்.
- டாக்டர் கே.கே.ரவிசங்கர்
குழந்தை நல சிறப்பு மருத்துவர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» வாந்தி பேதி மருந்துகள்
» குழந்தைகளுக்கு வாந்தி நிற்க..
» ‘வாந்தி’ எடுக்க வச்சுட்டாரு...”
» தீராத வாந்தி நிற்க!
» தலவலி வந்தா கண்ணாடி போடுங்க....
» குழந்தைகளுக்கு வாந்தி நிற்க..
» ‘வாந்தி’ எடுக்க வச்சுட்டாரு...”
» தீராத வாந்தி நிற்க!
» தலவலி வந்தா கண்ணாடி போடுங்க....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|