சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

இஸ்ரேல் இராணுவ வீரரை மீட்க 1,027 பலஸ்தீன கைதிகள் விடுதலை Khan11

இஸ்ரேல் இராணுவ வீரரை மீட்க 1,027 பலஸ்தீன கைதிகள் விடுதலை

Go down

இஸ்ரேல் இராணுவ வீரரை மீட்க 1,027 பலஸ்தீன கைதிகள் விடுதலை Empty இஸ்ரேல் இராணுவ வீரரை மீட்க 1,027 பலஸ்தீன கைதிகள் விடுதலை

Post by *சம்ஸ் Thu 13 Oct 2011 - 6:29

இஸ்ரேல் இராணுவ வீரரை மீட்க 1,027 பலஸ்தீன கைதிகள் விடுதலை W-2
இஸ்ரேல் இராணுவ வீரரை மீட்க 1,027 பலஸ்தீன கைதிகள் விடுதலை
இஸ்ரேல் தனது இராணுவ வீரர் ஒருவருக்காக 1,027 பலஸ்தீன சிறைக் கைதிகளை விடுவிக்க முன்வந்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் அரசுக்கும் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக ஹமாஸ் அமைப்பிடம் கைதாகியுள்ள இஸ்ரேல் இராணுவ வீரர் கிலாட் ஷலிட்டுக்கு பகரமாகவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.

இது தமது தேசம் பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றி என்றும் இதனையிட்டு பெருமைப்பட வேண்டும் எனவும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலித் மிஷால் குறிப்பிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இஸ்ரேல் வீரர் ஷலித்துக்கு பகரமாக 1,027 பலஸ்தீனர்களை விடுவிக்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது என சிரியா சென்றுள்ள மிஷால் தெரிவித்துள்ளார்.

எனினும் பல நெருக்கடிக்கு மத்தியில் எடுக்கப்பட்ட கடினமான தீர்மானம் என இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இஸ்ரேல் தேசிய தொலைக் காட்சியில் உரையாற்றும் போது, நாம் கிலாட் ஷலிட்டை விடுவிக்க ஹமாஸ் அமைப்புடன் இணக்கத்திற்கு வந்துள்ளோம். இதன்படி எமது மகன் விரைவில் நாடு திரும்புவான் என்றார்.

ஹமாஸ் அமைப்புடனான கைதிகள் பரிமாற்றம் குறித்த ஒப்பந்தம் தொடர்பில் இஸ்ரேல் அமைச்சரவையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அவசர வாக்கெடுப்பில் ஆதரவாக 26 வாக்குகள் கிடைத்ததோடு எதிராக 3 வாக்குகள் மாத்திரமே பதிவானது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இஸ்ரேல் இராணுவ வீரரை மீட்க 1,027 பலஸ்தீன கைதிகள் விடுதலை Empty Re: இஸ்ரேல் இராணுவ வீரரை மீட்க 1,027 பலஸ்தீன கைதிகள் விடுதலை

Post by *சம்ஸ் Thu 13 Oct 2011 - 6:30

இஸ்ரேல் இராணுவ வீரரை மீட்க 1,027 பலஸ்தீன கைதிகள் விடுதலை W-2-1
இதன்படி இஸ்ரேல் இராணுவ வீரர் கிலாட் ஷலிட் ஹமாஸ் அமைப்பினால் விரைவில் விடுவிக்கப்படவுள்ளார். இதற்கு பகரமாக இஸ்ரேல் சிறையில் உள்ள 1,027 பலஸ்தீன கைதிகளும் இரண்டு கட்டமாக இஸ்ரேல் அரசு விடுவிக்கவுள்ளது. முதல் கட்டத்தில் 450 கைதிகள் ஒரு வாரத்திற்குள் விடுவிக்கப்படவுள்ளனர். தொடர்ந்து மேலும் 550 கைதிகளும் இரு மாத காலத்திற்குள் விடுவிக்கப்படவுள்ளனர்.

இவ்வாறு விடுவிக்கப்படும் கைதிகளில் 27 பெண்கள் உள்ளடங்குவதோடு ஆயுள் தண்டனைக்கு உள்ளான 315 கைதிகளில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறை அனுபவிக்கு கைதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

எனினும் முக்கிய கைதிகள் இந்த ஒப்பந்தத்தில் விடுவிக்கப்படமாட்டாது என இஸ்ரேல் உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக பத்தா அமைப்பின் முக்கிய தலைவர் மர்வான் பகவுடி, 2001ம் ஆண்டு இஸ்ரேல் சுற்றுலாத் துறை அமைச்சரை கொலை செய்தது தொடர்பில் கைதான அஹமட் சதாத் மற்றும் ஹமாஸ் அமைப்பின் அப்துல் பகவ்தி ஆகியோர் விடுவிக்கப்படமாட்டார்கள் என இஸ்ரேல் உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் சிறையில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உள்ளனர். இதில் பலரும் எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் சிறைவாசம் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த இணக்கப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து காசா பகுதியிலுள்ள மக்கள் ஒன்று திரண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நேற்று முன்தினம் காசா வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் இதனைக் கொண்டாடினர்.

இந்த கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கைச்சாத்தாவதற்கு எகிப்து அரசு முக்கிய பங்கு வகித்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் அமைப்பு எகிப்து அரசுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டன. 25 வயதான இஸ்ரேல் இராணுவ வீரர் கிலாட் ஷலிட் கடந்த 2006ம் ஆண்டு காசா பகுதிக்குள் ஊடுருவியதைத் தொடர் ந்து ஹமாஸ் அமைப்பினால் கைது செய்யப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளாக அவரை விடுவிக்க இஸ்ரேல் அரசு மேற் கொண்ட பல முயற்சிகளும் தோல்வி அடைந்த நிலையிலேயே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum