சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

Sathurangam -சதுரங்கம்  Khan11

Sathurangam -சதுரங்கம்

Go down

Sathurangam -சதுரங்கம்  Empty Sathurangam -சதுரங்கம்

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 11:08

Sathurangam -சதுரங்கம்  Sathurangam-683

ஒரு நிருபரின் வாழ்க்கையில் நடக்கும் சதுரங்க ஆட்டம்தான் கதை.

திசைகள் பத்திரிகையில் நிருபராக பணியாற்றுகிறார் ஸ்ரீகாந்த். அவர்
எழுதும் கட்டுரைகளுக்கு வாசகர்கள் மத்தியில் பாராட்டும், அதிகாரிகள்
மத்தியில் சலசலப்பும் ஏற்படுகிறது. அவரால் பாதிக்கப்படும்
அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஸ்ரீகாந்தை எச்சரிக்கின்றனர். என்றாலும்
நெஞ்சை நிமிர்த்தி எதற்கும் பயப்படாமல் தில்லாக நிற்கிறார் ஸ்ரீகாந்த்.

இந்த நிலையில் அவரது காதலியான சோனியா அகர்வால் அவர் கண்ணெதிரே ஒரு
கும்பலால் கடத்தப்படுகிறார். யார் கடத்தினார்கள் என்பது சஸ்பென்சாக
இருக்கிறது. போலீசில் புகார் செய்தும் அலட்சியம் செய்கிறார்கள். இதனால் பல
எதிரிகள் இருப்பதால் காதலியை கடத்தியவர் யார் என்று தெரியாமல்
தேடிக்கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த். அவர் காதலியை கண்டு பிடித்தாரா?
கடத்தியது யார்? என்பது போன்ற கேள்விகளுக்கு க்ளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு லேசான புன்முறுவலோடு எதிராளியின்
எச்சரிக்கையை அலட்சியம் செய்யும் ஸ்ரீகாந்த், அதே அலட்சியத்தை இறுதிவரை
காட்ட முடியாதளவுக்கு யதார்த்த வலையில் சிக்கிக் கொள்வதை ஊசி செருகியதை போல
உணர வைக்கிறார் டைரக்டர். தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை இவ்வளவு அழகாக
வெளிப்படுத்துவார் ஸ்ரீகாந்த் என்று யாருமே யூகித்திருக்கவும் போவதில்லை.

இவருக்கும் சோனியாவுக்குமான காதல் அழகான பூங்கொத்து. கரு.பழனியப்பனின்
கதாநாயகிகள் வெறும் மரம் சுற்றிகள் அல்ல என்பதை சோனியாவும் நிரூபிக்கிறார்.
பேங்க்குக்கு பேனா இல்லாமல் வரும் ஸ்ரீகாந்திடம் நான் பேனா கொடுக்க
மாட்டேன் என்று முகத்திற்கு நேரே கோபம் காட்டுவதும், அதற்காக அவர் தரும்
விளக்கமும் ஆஹா. பீச்சில் வெகு நேர காத்திருப்புக்கு பின் எப்பவும்
நான்தான் உனக்காக காத்திருக்கேன் என்று துவங்கி அவர் பேசும் அந்த டயலாக்
மனசை பிசைகிறது. பின்னணி குரல் கொடுத்தவருக்கும் சேர்த்தே ஒரு பாராட்டு
பத்திரம் தரலாம்.

ஒரு பக்கம் காதல், இன்னொரு பக்கம் அரசியல், அரசு அதிகாரிகளுடன் மோதல்
என்று முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. சோனியாவை கடத்தி வைத்திருக்கும்
ஜெயில் அதிகாரி, ஸ்ரீகாந்தை அங்குமிங்கும் அலைய விடும் காட்சிகள் முதலில்
சீரியசாக இருந்தாலும் பின்னர் எதிர்பார்த்த திரில் இல்லை. வழக்கமான
திரைக்கதையாக செல்கிறது.

சரண்யா பொன்வண்ணன், இளவரசு, மனோபாலா, பத்திரிகை ஆசிரியராக வரும்
மணிவண்ணன் என அவரவர் தங்களின் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

பத்திரிகை சார்ந்த கதையை கே.வி.ஆனந்த் 'கோ' படம் மூலம் கொடுத்து வெற்றி
பெற்று விட்டார். இந்த 'சதுரங்கம்' 2004-ல் எடுத்த படம். அப்போதே இது வெளி
வந்திருந்தால் சினிமா ரசிகர்களுக்கு புதுமையானதாக இருந்திருக்கும் என்பதில்
மாற்றுக் கருத்தில்லை.

கரு.பழனியப்பன் பத்திரிகையாளராக இருந்தவர் என்பதால் ஸ்ரீகாந்தை அச்சு
அசலாய் பத்திரிகையாளராக மாற்றியிருக்கிறார். மந்திரியாக வரும் மகாதேவன்,
ஸ்ரீகாந்தைப் பார்த்து "எங்கள மாதிரி தப்பானவங்க ஜெயிப்போம்னு நம்புறோம்.
உங்களை மாதிரியான நல்லவங்க தோத்துடுவோம்னு நம்புறீங்க. முதல்ல ஜெயிப்போம்னு
நம்புங்க.." என்று பேசுகையில் பத்திரிகையாளர்களை உயர்த்தி வைக்கிறார்.

வித்யாசாகரின் இசையில் மகாகவி பாரதியாரின் 'ஆடுவோமே...' பாடல் மனதில்
நிறைகிறது. 'விழியும் விழியும்...' பாடல் இனிமை. 'என்ன தந்திடுவேன்... நான்
என்னை தந்திடுவேன்' பாடல் 'தைய தா தைய தா... தைய தைய தா...' பாடலை நினைவு
படுத்தினாலும், காதுக்கு இதமாய்த்தான் இருக்கிறது. வித்யாசாகரின் பின்னணி
இசை தேவையான இடத்தில் ஒலித்து நமக்கு திருப்தியை தருகிறது.

திவாகரின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாய் நிற்கு, அதற்கு உறுதுணையாய்
இருக்கிறது சுரேஷ் அர்ஸ்ஸின் படத்தொகுப்பு. ராஜீவனின் கலை வண்ணத்தில்
உருவான பத்திரிகை அலுவலகம் கலக்கல்.

கதையை புதுமையான பாதையை நோக்கி கொண்டு செல்கிறார் இயக்குநர்
கரு.பழனியப்பன் என்று பார்த்தால் க்ளைமாக்சில் வழக்கமான முடிவை சொல்லி
ஏமாற்றமே தந்திருக்கிறார்.

2004-ல் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஏகப்பட்ட திருப்பங்கள் இருக்கின்றன
என்றாலும் இந்த காலகட்டத்தில் நிறைய படங்களில் அவைகள் எல்லாம் வந்து
விட்டதால் எதுவும் புதிதாய் தோன்றவில்லே. பருவத்தே பயிர் செய்திருந்தால்
சதுரங்கம் நன்கு விளைந்திருக்கும்.

சதுரங்கம் - செக்மேட்!





நடிகர்கள்
ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, மனோபாலா, மணிவண்ணன், மகாதேவன்
இசை
வித்யா சாகர்
இயக்கம்
கரு. பழனியப்பன்
தயாரிப்பு
எஸ்.எஸ். துரைராஜ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum