சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

தங்கம் வாங்க இயலாத ஏழைகளுக்கு ஆறுதலாக விளங்குவது கவரிங் தாலி செயின்கள்  Khan11

தங்கம் வாங்க இயலாத ஏழைகளுக்கு ஆறுதலாக விளங்குவது கவரிங் தாலி செயின்கள்

2 posters

Go down

தங்கம் வாங்க இயலாத ஏழைகளுக்கு ஆறுதலாக விளங்குவது கவரிங் தாலி செயின்கள்  Empty தங்கம் வாங்க இயலாத ஏழைகளுக்கு ஆறுதலாக விளங்குவது கவரிங் தாலி செயின்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 28 Oct 2011 - 12:58

தங்கத்தில் தாலிக்கொடி என்பது ஏழை பெண்களின் கனவு. அது இயலாதபோது கைகொடுக்கிறது கவரிங் தாலி செயின். இதை தயாரித்து விற்றால் லாபமும் உண்டு.
மன நிறைவாகவும் இருக்கும் என்கிறார் கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த சுவாமிநாதன். அவர் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் ஒர்க்ஷாப்பில் பணிபுரிந்தேன். வருமானம் போதவில்லை. கோவையில் எனது அண்ணன் கவரிங் தாலி செயின் தயாரித்து விற்று வந்தார். அவரிடம் வேலைக்கு சேர்ந்தேன். கவரிங் செய்ய கற்றுக்கொண்டேன். பின்னர் தனியாக தொழில் துவங்கினேன். எனது மனைவி, மகள் என குடும்பமே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோம்.



தாலிக்குகூட தங்கம் வாங்க இயலாத ஏழைகளுக்கு ஆறுதலாக விளங்குவது கவரிங் தாலி செயின்கள். தங்கத்தில் தாலிக்கொடி இருந்தாலும் அவசர செலவுக்காக அடகுவைக்கும்போதும், கவரிங் தாலிக் கொடி நகைகள் கை கொடுக் கின்றன. இவற்றை தயாரிப்பது கோவையில் குடிசை தொழி லாக நடந்து வருகின்றன.

இங்கு 40க்கும் மேற்பட்ட வீடுகளில் இத்தொழில் நடக்கிறது. கவரிங் தாலி செயினில் முறுக்கு மாடலையே அதிகம் அணிகின்றனர். அதை மட்டுமே செய்வதால் நிரந்தர கிராக்கி உள்ளது. இதை தயாரிக்க படிப்படியாக பல்வேறு வேலைகள் உள்ளன. அவற்றை கவனத்துடன் செய்தால் தரமானதாக உருவாக்க முடியும். கவரிங் செயின் தயாரிக்க முதல் நிலையில் இருந்து கடைசி நிலை வரை ஒரே இடத்தில் செய்யலாம் அல்லது ஒவ்வொரு நிலைக்கும் ஜாப்ஒர்க் செய்து கொடுக்க தனித்தனி ஆட்கள் இருக்கிறார்கள். அங்கு கொடுத்து, வாங்கியும் முழுமைப்படுத்தலாம். ஒரே இடத்தில் செய்தால் லாபம் அதிகம் கிடைக்கும். இத்தொழிலை செய்ய 6 மாதமாவது கவரிங் நகை பட்டறைகளில் பணிபுரிய வேண்டும். அப்போது தான் கற்றுக்கொள்ள முடியும். பின்னர் தயாரிப்பில் ஈடுபட்டால் லாபகரமாக இருக்கும்.





தயாரிப்பது எப்படி?


நூல்இழை போல உள்ள காப்பர் கம்பியை புளோயிங் மெஷினில் மாட்டி சுற்ற வேண்டும். காப்பர் கம்பி ஸ்பிரிங் (முறுக்கு) போல வரும். அதை பிரஸ் மெஷினில் பொருத்தி, ஸ்பிரிங்கில் உள்ள ஒவ்வொரு வளையத்தையும் தனித்தனியாக துண்டாக்கி எடுக்க வேண்டும். வளையத்தின் துளை வழியாக ‘சென்ட்ரிங் நூலிழை கம்பி’யை கொடுத்து கயிறு போல முறுக்கினால் செயின் வரும். அதை இரும்பு பலகையில் வைத்து தேய்த்தால் இறுக்கமடையும்.

பின்னர் அதை தொங்கவிட்டு, ஏற்கனவே கலக்கப்பட்ட வெள்ளி ஈயப் பொடி, பித்தளை பொடி, வெங்கார பொடி கலவையை செயினில் உள்ள இடைவெளிகளில் பிரஷ் மூலம் தடவ வேண்டும். கேஸ் வெல்டிங் செய்வது போல் தீயில் பழுக்க வைத்தால் செயின் முழுமையடையும். பின்னர் அதன்மீது தங்கமுலாம் பூசி, கொக்கி மாட்டினால் கவரிங் தாலி செயின் ரெடி.
தேவைப்படும் பொருட்கள் : காப்பர் அல்லது கலாய் கம்பி(ஜிஐ வயரில் உள்ளது), சென்ட்ரிங் கம்பி(சன்னமானது), வெள்ளி ஈய பொடி, பித்தளை மிக்சிங் பொடி , வெங்காரம் பொடி, தங்க முலாம் பூச்சு கலவை. தளவாட பொருட்கள்: வீட்டில் ஒரு சின்ன அறை போதும். புளோயிங் மெஷின் (ரூ.2500), பிரஸ் மெஷின்(ரூ.15 ஆயிரம்.), இரும்பு பலகை (ரூ.1500), கேஸ் சிலிண்டர் இணைப்பு ரூ.5000. டை, டை கத்தி ரூ.2000.


தங்கம் வாங்க இயலாத ஏழைகளுக்கு ஆறுதலாக விளங்குவது கவரிங் தாலி செயின்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தங்கம் வாங்க இயலாத ஏழைகளுக்கு ஆறுதலாக விளங்குவது கவரிங் தாலி செயின்கள்  Empty Re: தங்கம் வாங்க இயலாத ஏழைகளுக்கு ஆறுதலாக விளங்குவது கவரிங் தாலி செயின்கள்

Post by kalainilaa Fri 28 Oct 2011 - 14:45

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum