சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

106 அய்யப்ப பக்தர்கள் பலியாக காரணம் என்ன?முதற்கட்ட விசாரணையில் தகவல்  Khan11

106 அய்யப்ப பக்தர்கள் பலியாக காரணம் என்ன?முதற்கட்ட விசாரணையில் தகவல்

Go down

106 அய்யப்ப பக்தர்கள் பலியாக காரணம் என்ன?முதற்கட்ட விசாரணையில் தகவல்  Empty 106 அய்யப்ப பக்தர்கள் பலியாக காரணம் என்ன?முதற்கட்ட விசாரணையில் தகவல்

Post by *சம்ஸ் Mon 17 Jan 2011 - 6:01

இடுக்கி : மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பிய அய்யப்ப பக்தர்களில், நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஆகியவற்றில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. இவ்விபத்துக்கு ஜீப்பும், ஆட்டோவும் கவிழ்ந்தது தான் காரணம் என, மாவட்ட கலெக்டரின் முதற்கட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனத்திற்காக, நாட்டின் பல பகுதிகளில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். சபரிமலை சன்னிதானப் பகுதியில் நின்று மகரஜோதியை காண இயலாது என்பதை தெரிந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்கள், தரிசனத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.அவர்கள் சபரிமலையில் இருந்து 7 கி.மீ., தொலைவில் புல்மேடு பகுதியில் காத்திருந்து, 14ம் தேதி மாலை மகரஜோதி தரிசனம் செய்தனர். இவ்வாறு அப்பகுதியில் மட்டும் இரண்டரை லட்சம் பக்தர்கள் வனப்பகுதியில் இருந்து தரிசனம் செய்தனர். இது புலிகள் நடமாடும் முழு வனாந்திர பகுதியாகும்.தரிசனத்தை முடித்துக் கொண்டு வண்டிப்பெரியாறு நோக்கி புறப்பட்ட பக்தர்கள், வனப்பகுதியில் ஒற்றையடிப் பாதை வழியாகச் சென்றனர். மிகவும் குறுகலான அப்பகுதியில் திரளான பக்தர்கள் இரவு 8.30 மணியளவில் சென்றனர்.அப்போது, பக்தர்களை ஏற்றிச் செல்ல பல வாகனங்கள் அங்கு காத்திருந்தன. அவற்றில் ஏறிச் செல்ல பலரும் முயன்றனர். அவ்வாறு ஏற முயன்றபோது ஜீப் கவிழ்ந்து, அதன் அடியில் பலரும் சிக்கிக் கொண்டதும், அதை பார்த்து திரளானோர் நெரிசலில் சிக்கி, தள்ளுமுள்ளுவில் மாட்டிக் கொண்டு கீழே விழுந்தனர்.இரவு நேரம் என்பது மட்டுமல்லாமல், கும்மிருட்டு பகுதியில் யார் கீழே கிடக்கின்றனர் என்பதே தெரியாமல் அவர்கள் மீது பலரும் மிதித்துக் கொண்டு ஓடினர். இவ்வாறு பலரும் பலியாகினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர்.

அடர்த்தியான வனப்பகுதியில் இருட்டாக இருந்ததால், சம்பவ இடத்தைக் கண்டுபிடிக்கவே நீண்ட நேரம் தேவைப்பட்டது. பலியானவர்களில் தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் தான் அதிகளவு இருந்தனர். இறந்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் பெயர் தெரிந்திருக்கிறது.பலியானவர்களை மீட்கும் பணி நேற்று முன்தினம் காலையில் முடிந்தது. இச்சம்பவம் குறித்து அறிந்ததும், முதல்வர் அச்சுதானந்தன் உட்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இறுதிச் சடங்கிற்காக தலா 5,000 ரூபாய் வழங்கப்படும் என, மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், மாநிலம் முழுவதும் மூன்று தினங்களுக்கு அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், முதல்வரின் மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன? இச்சம்பவம் குறித்து, இடுக்கி மாவட்ட கலெக்டர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் முதற்கட்ட அறிக்கை, மாநில வருவாய் துறை முதன்மை செயலர் நிவேதிதா சரணிடம் வழங்கப்பட்டுள்ளது. அறிக்கையில், "தரிசனம் முடிந்து திரும்பிய பக்தர்கள், வனப்பகுதியில் காத்திருந்த ஆட்டோ மற்றும் ஜீப்பில் ஏறினர்.அதிகளவு பயணிகள் ஏறியதால் ஆட்டோ ஒரு பக்கமாக சரிந்தது. இதில் பலரும் சிக்கிக் கொண்டனர். அதே நேரத்தில், ஜீப்பும் கவிழ்ந்தது. அதன் அடியிலும் பலர் சிக்கினர். இதனால், அங்கிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.அதில், நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளுவில் சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பலியானவர்களில் ஏழு பேர், கேரளாவைச் சேர்ந்தவர்கள்.தவிரவும், கிரைம் பிராஞ்ச் போலீஸ் விசாரணைக்கு கேரள அரசு தற்போது உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு தலைவராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேந்திரன் இருந்து செயல்படுவார் என்றும், அவர் நான்கு நாட்களில் தன் அறிக்கையை அளிப்பார் என்றும் கூறப்பட்டது. அதேபோல, நீதி விசாரணை மேற்கொள்ளவும் அரசு முடிவு செய்திருக்கிறது. புல்மேடு பகுதி, வனச்சரகப்பகுதி என்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டியது கேரள அரசின் பணி அல்ல என்றும் விளக்கம் கூறப்பட்டிருக்கிறது.

நிவாரண உதவி தலா ரூ.5 லட்சம் : புல்மேடு பகுதியில் சிக்கி பலியான அய்யப்ப பக்தர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசும், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டும் இணைந்து தலா ஐந்து லட்ச ரூபாய், மத்திய அரசு அறிவித்துள்ள ஒரு லட்ச ரூபாய் என மொத்தம் ஆறு லட்ச ரூபாய் வழங்கப்படும்.மேலும், விபத்தில் காயமடைந்தவர்களில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் மாநில அரசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக முதல்வர் கருணாநிதி, ஒரு லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

59 ஆண்டுகளில் மூன்று விபத்துகள் : சபரிமலை பக்தர்கள் 225 பேர் பலி : சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் 106 பேர், புல்மேடு பகுதியில் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதே போன்ற சம்பவம் இதற்கு முன், 1952ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி, சபரிமலையில் வெடிகளை வெடிக்கச் செய்ய நடந்த முயற்சியில் ஏற்பட்ட விபத்தில் 66 பேர் பலியாகினர்.தொடர்ந்து, 1999ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள், பம்பை ஹில்டாப் முகாம் பகுதியில் நெரிசலில் சிக்கி 53 பேர் பலியாயினர். தொடர்ந்து சரியாக 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு சோக சம்பவம், சபரிமலையில் இருந்து 7 கி.மீ., தொலைவில் நடந்து, 106 பேரை பலி வாங்கிவிட்டது.

அந்த ஆறு மணி நேர பயணம் லாரி டிரைவரின் துயர அனுபவம் : கேரளாவைச் சேர்ந்த லாரி டிரைவர் அனீஷ் என்பவர் கூறியதாவது:விபத்து நடந்த இடத்துக்கு சில கி.மீ., தூரத்தில் தான், நானும் வேறு சில லாரி டிரைவர்களும் நின்றிருந்தோம். விபத்து நடந்ததை கேள்விப்பட்டதும், என் லாரியை எடுத்துக் கொண்டு, விபத்து நடந்த இடத்துக்கு வேகமாக விரைந்தேன். காயம் அடைந்த பலரை, லாரியில் ஏற்றிக் கொண்டு வண்டிப்பெரியாறில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்தேன். மலைப் பாதை என்பதால், லாரியை வேகமாக ஓட்ட முடியவில்லை. புல்மேடில் இருந்து, வண்டிப்பெரியாறுக்கு வருவதற்கு ஆறு மணி நேரமாகி விட்டது.காயம் பட்டு, வலியில் துடித்துக் கொண்டிருந்த பலர், தண்ணீர், தண்ணீர் என, அபயக் குரலை எழுப்பினர். பலரும் வலியால் சத்தமாக அழுதனர். அவர்களிடமிருந்த வந்த வேதனைக் குரல், என் இதயத்தை பிசைந்தது.முடிந்த அளவுக்கு வேகமாக லாரியை ஓட்டிச் சென்றேன்.

நேரம் செல்லச் செல்ல, லாரியில் இருந்து வந்த குரல்களில் சத்தம் குறைந்து கொண்டே வந்தது. பெரும்பாலானோரின் உடல்களில் அசைவுகள் இல்லை. அவர்கள் இறந்து விட்டனர் என்பது தெரியவந்ததும், என் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. வண்டிப்பெரியாறு மருத்துவமனையை நெருங்கியபோது, லாரியின் பின்னால் இருந்து வந்து கொண்டிருந்த அபயக் குரல்கள் சுத்தமாக ஓய்ந்து போனது. ஒரு சிலர் மட்டுமே, நினைவுடன் இருந்தனர். மற்றவர்கள் இறந்து விட்டனர்.புல்மேடில் இருந்து, வண்டிப்பெரியாறுக்கு வந்த, இந்த ஆறு மணி நேரப் பயணத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. என் வாழ்நாளில் நான் கண்ட மிகப் பெரிய துயரமான சம்பவம் இது.இவ்வாறு டிரைவர் அனீஸ் கூறினார்.

பாதுகாப்புக்கு பத்து போலீசார் மட்டுமே : மகரஜோதி தரிசனத்திற்காக புல்மேடு பகுதியில் தமிழக, ஆந்திர, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த இரண்டரை லட்சம் பக்தர்கள் திரண்டிருக்க, அங்கு பாதுகாப்புக்கென பத்து போலீசார் மட்டுமே இருந்தனர். மேலும், அய்யப்ப பக்தர்கள் பத்தடி அகலம் கொண்ட வனப்பகுதியில் நடந்து செல்லவும், அவர்களை அடர்த்தியான வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் செல்ல அனுமதித்ததும் தவறு. அப்பகுதி புலிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் போதுமான போலீசாரோ, வனத்துறையினரோ பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை.மொத்தத்தில் பத்து போலீசார் மட்டுமே அங்கு அப்போது பாதுகாப்பு பணியில் இருந்தனர் என, பக்தர்கள் பலரும் சோகத்துடன் தெரிவித்தனர். அடர்ந்த வனப்பகுதியில், வெளிச்சம் இல்லாத பாதையை பக்தர்கள் தேர்வு செய்ததும் தவறாகி விட்டது.

புல்மேடு நெரிசலில் காயமடைந்த பக்தர்களுக்கு தேனியில் சிகிச்சை : புல்மேடு நெரிசலில் காயமடைந்த தமிழகத்தை சேர்ந்த பக்தர்களுக்கு, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி, கலெக்டர் முத்துவீரன், டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி, தி.மு.க., மாவட்ட செயலர் மூக்கையா, எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் வண்டிபெரியாரில் சிகிச்சை பெற்று வந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்கள், தங்களுக்கு தமிழகத்தில் சிகிச்சை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதை தொடர்ந்து வண்டிப்பெரியாரிலும், கோட்டயத்திலும் சிகிச்சை பெற்றவர்கள், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

சபரிமலை ரோடுகளை அகலப்படுத்த போராட்டம் : சபரிமலைக்கு செல்லும் பாதைகளை அகலப்படுத்தக் கோரி போராட்டம் நடத்தப்போவதாக, ஐ.என்.டி.யு.சி., தலைவர் பி.ஏ.ஜோசப் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், "சபரிமலையில் விபத்து நடக்கும் போது மட்டும் அழுவதில் பயனில்லை. விபத்து நடக்கும் வாய்ப்புகளை அறிந்து தடுக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. பல முறை, அய்யப்பன் கோவிலில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கோவிலுக்கு சென்று வரும் பாதைகளை முழுமையாக அகலப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் இதற்கு சட்டத்தில் திருத்தம் கூட செய்யலாம். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் சங்கத்தினரையும் சேர்த்துக் கொண்டு தொடர் போராட்டம் நடத்துவோம்' என்றார்.

விபத்துக்கு தேவஸ்வம் போர்டும், கேரள அரசு மெத்தனமும் காரணம் : சபரிமலையில் கடந்த 14ம் தேதி இரவு மகரஜோதியை தரிசித்து விட்டு பக்தர்கள், மலையில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தனர். புல்மேடு பகுதியில் திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தில் திடீர் நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, பெரும் விபத்து ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் நெரிசலில் சிக்கி, பரிதாபமாக பலியாகினர்.இந்த விபத்தை அடுத்து, கேரள அரசுக்கு எதிராகவும், கேரளாவில் கோவில் நிர்வாகங்களை கவனித்து வரும் தேவஸ்வம் போர்டுக்கு எதிராகவும், எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறப்படுவதாவது:கடந்த 1999ல் சபரிமலையில் இதேபோல் ஒரு விபத்து ஏற்பட்டது. இதில் 52 பக்தர்கள் பலியாயினர். இதுபோன்ற விபத்துகள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக நீதிபதி சந்திரசேகர மேனன் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி தனது அறிக்கையில் பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்திருந்தது.குறிப்பாக, பம்பை வழியாக வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், இதற்கு மாற்றாக, மற்றொரு வழித் தடத்தை உருவாக்கும்படி அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. புல்மேடு வழித்தடத்தில் அதிக அளவு பக்தர்கள் வந்து செல்வதற்கான அடிப்படை வசதியை ஏற்படுத்தும்படியும் கமிட்டி தெரிவித்திருந்தது. அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படாமல், புல்மேடு வழியாக பக்தர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், ஓய்வெடுக்கும் இடம், வாகன நிறுத்தம், கழிப்பறை, விளக்கு வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கமிட்டி தெரிவித்தது.புல்மேடு வழித்தடத்தை குறைந்தது நான்கு மீட்டர் அகலத்துக்கு விரிவு படுத்தும்படி கமிட்டி தெரிவித்தது. சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக "மாஸ்டர் பிளான்' ஒன்றை செயல்படுத்தும்படியும் தெரிவித்தது.ஆனால், நீதிபதி சந்திரசேகர மேனன் கமிட்டி தெரிவித்திருந்த பரிந்துரைகளை மாநில அரசும், தேவஸ்வம் போர்டும் புறக்கணித்து விட்டன. பக்தர்களின் வசதிகளை அலட்சியப்படுத்தியதால் தான், இதுபோன்ற துயரம் நிகழ்ந்து விட்டது.இவ்வாறு பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி கூறுகையில், "சபரிமலைக்கு செல்வதற்கு மாற்று வழித் தடத்தை உருவாக்குவதற்கான இடத்தை, சில ஆண்டுகளுக்கு முன்பே, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு அடையாளம் காட்டியது. ஆனால், இடதுசாரி கூட்டணி அரசு, அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை' என்றார்.

வி.எச்.பி.,யின் கேரள மாநில பொதுச் செயலர் கும்மனம் ராஜசேகரன் கூறியதாவது: ராஜசேகர மேனன் கமிட்டி தெரிவித்த பரிந்துரைகளை, மாநில அரசு நிறைவேற்றவில்லை. தற்போது ஏற்பட்ட விபத்து குறித்து நீதி விசாரணைக்கு, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது வெறும் சம்பிரதாய நடவடிக்கை. அதிகமான கூட்டம் வருவதை உளவுத் துறையும் கணிக்காதது ஆச்சர்யம் அளிக்கிறது. புல்மேடு வழித் தடத்தில் கூடுதல் போலீசாரை பாதுகாப்புக்கு அமர்த்தவில்லை. காங்கிரஸ் தலைமையில் செயல்படும் அரசும் சரி, இடதுசாரி கூட்டணி அரசும் சரி, இந்த விஷயத்தில் சரியாக செயல்படுவது இல்லை.
இவ்வாறு ராஜசேகரன் கூறினார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,"புல்மேடு பகுதி, அடர்ந்த வனப் பகுதி. பக்தர்கள் வசதிக்காக அதை மேம்படுத்துவது என்பது மிகவும் சிக்கலானது. இந்த பகுதியை, பக்தர்கள் வசதிக்காக மேம்படுத்தினால், வாகனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும். இது சுற்றுச் சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படும்' என்றனர்.

விமானத்தில் உடல்கள்: நெரிசலில் சிக்கி உயிரிழந்த பக்தர்களில், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்தவர்களும் அடக்கம். இவர்களில் 22 பேரின் உடல்கள், நேற்று கொச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. மூன்று பேரின் உடல்கள், ஒரு விமானத்தில் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டது. அடுத்ததாக, மற்றொரு விமானத்தில் நான்கு பேரின் உடல்கள், மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதேபோல், பெங்களூரு மற்றும் ஐதராபாத்துக்கும், விமானங்கள் மூலம் உடல்கள் கொண்டு செல்லப்பட்டன.

ராமரை இழந்த லட்சுமணன்: நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் தமிழகத்தை சேர்ந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற பக்தர், தனது சகோதரர் ராமனுடன் (இரட்டையர்), கடந்த சில ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வந்தார். அதுபோல் இந்தாண்டும் மகரஜோதியை தரிசித்து விட்டு, சகோதரர்கள் இருவரும் புல்மேடு வழியாக திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, ராமன் இறந்து விட்டார்.

இதுகுறித்து லட்சுமணன் கூறுகையில், "என்கண் எதிரிலேயே, என் சகோதரர் மிதிபட்டு இறந்தார். ஆனால், அவரை காப்பாற்ற என்னால் முடியவில்லை. அந்த அளவுக்கு கூட்டம் முண்டியடித்தது' என, சோகத்துடன் கூறினார்.

நன்றி தினமலர் :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum