சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

பிள்ளைகள் Khan11

பிள்ளைகள்

2 posters

Go down

பிள்ளைகள் Empty பிள்ளைகள்

Post by gud boy Tue 1 Nov 2011 - 18:55

பெற்றவர்களே உஷார். உஷார் என்று அடிக்கடி நமது சகோதரர்கள் இணையத்தளங்களில் எச்சரிக்கை விடுத்துக் கொண்டியிருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
சிலர் பொழுதுபோக்காக எங்கையோ பிரசுரம் செய்ததை இங்கே விளையாட்டுத்தனமாக செய்கிறார்கள் என்று என்னி பார்த்துவிட்டு மறந்துவிடுகிறார்கள். நாம் சற்று நேரம் சிந்திக்க மறந்து விடுகிறோம். இந்த நிகழ்வு உண்மையாக இருக்கலாம் அல்லது இந்த கட்டுரை, விமர்சனம் நமக்கு எச்சரிக்கையாக இருக்கலாம் என்று என்னி யாவரும் தன்னை தவறான வழியிலிருந்து திருத்திக்கொள்ள முயல்வதில்லை என்பது உண்மை. தனது அலட்சியப்போக்குத்தான் இதற்கு காரணம். நண்பர்களே! கண் கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம் செய்து எவ்வித பிரயோஜனமில்லை என்பதை புரிந்து வாழுங்கள்.

இது நமக்கல்ல எங்கேயோ நடந்திருக்கிறது அதனால் நாம் ஏன் இதைப்பற்றி யோசிக்கணும் என்று நினைத்து கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறீர்கள், நாளை நமக்கோ அல்லது நமது உறவினருக்கோ நடக்கலாம் என்பதை உணர்ந்து யாரும் இதற்கு என்ன வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என்பதை பற்றி யோசிப்பதில்லை.

பெரும்பாலும் நாம் இம்மைவாழ்வை மட்டும் பெரிதாக என்னி பொருள் சேர்ப்பதிலும், செல்வம் சேர்ப்பதிலும், ஆடம்பரமாக வாழ்வதிலும்தான் இருக்கிறோம் தவிர மார்க்கப்படி சரியாக வாழ்கிறோமா என்று நாம் நேரான வழியில் தான் வாழ்ந்தோமா என்பதை கணக்கிட்டுப் பார்த்தால் மிஞ்சுவது பூஜ்யம்தான். நமக்குள் எத்தனை எத்தனை போட்டிகள், பொறாமைகள், பொச்சரிப்புகள், சண்டைகள், இதனால் நாம் என்னத்த பெற்றோம் அல்லது இப்படி எல்லாம் செய்து நாம் எதை கொண்டுப் போகப்போகிறோம் என்பதை நினைத்து பார்த்தீங்களா? இல்லையே. அதற்கு எங்கே நேரம் இருக்கிறது, நாம் ரொம்ப பிசியாக இருக்கிறேன் என்று அலட்சியமாக சொல்லிவிடுகிறார்கள். நாம் உலக ஆசையில் மட்டும் தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம் என்பதை தவிர பிள்ளைகள் மற்றும் குடும்ப உறவில் அதிக அக்கறை செலுத்துவதில்லை என்பது நிஜம் மற்றும் மறுமையின் மீது கொஞ்சம் கூட அக்கறையில்லை.

நாம் சம்பாதிப்பது யாருக்கு? நம் மனைவி, பிள்ளைகள் நலமுடன் வாழவேண்டும் என்று என்னியே! பிள்ளைகள் எவ்வாறு நடக்கிறார்கள் என்று நினைத்து ஒருநாளாவது யோசித்தீர்களா? நாளை நம் பிள்ளைகள் சீரழிந்துப் போனப்பிறகு நாம் எப்படியெல்லாம் சேர்த்த செல்வம் எதற்கு. நாமும் அனுபவிக்க முடியவில்லை நம்பிள்ளைகளும் நல்வழி நடக்கவில்லை. கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் என்னவென்றால் " நல்லவன் சம்பாதித்து நாரா வாயான் தின்கிறான்" என்று அதாவது நாம் நேர்மையான வழியில் சம்பாதித்தும், நம் பிள்ளைகள் வீணாகிப்போய் அதை மற்ற யாரவது அனுபவிக்க நேரிட்டால் அப்போது இந்த செல்வத்திற்கு என்ன பிரயோஜனம். நாம் காவல்காரனாக இருந்தாலும் கண்ணும் கருத்துமாக இருக்கணும், அதாவது அன்றாட வாழ்விற்கு பொருள். குடும்பம், மனைவி, குழந்தைகள், மறுமை வாழ்க்கை மற்றும் இன்னும் பிற. நாம் ஒன்றில் மட்டும் கவனம் செலுத்தி மற்றவற்றில் கண்டுகொள்ளாமல் போனால் நாம் வாழ்ந்ததற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். நாம் பார்க்கிறோம் எத்தனையோ பெற்றோர்கள் வலித்தவறிப் போன பிள்ளைகளை நினைத்து மடிந்தார்கள். அனுதினமும் செத்துகொன்ன்டு இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது நாம் ஏன் சிந்திக்க மறந்துவிடுகிறோம்.

நம் பிள்ளைகள் சீரழிந்துவிட்டால் யாருடைய கண் கலங்கும்? யாருக்கு அவமானம், நஷ்டம். யோசித்தீர்களா? நீங்கள் கோடீஸ்வரராக இருந்து என்ன பிரயோஜனம். குடுசையில் இருந்து கால்வயிறு கஞ்சி குடிச்சாலும், கடன் இல்லாமல், கண்ணியமாக, நல்ல பிள்ளைகளுடன் வாழ்வதே பலகோடிக்கு நீங்கள் அதிபதி. ஆனால் நாம் இன்னும் அற்ப உலக ஆசையின் போதையில் மயங்கிக்கிடக்கிறோம். நமக்கு வையிற்று வலி வருவதற்கு முன் எப்படியெல்லாம் சாப்பிடனுமோ அப்படி எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு சாப்பிடுகிறோம் ஆனால் வயிற்றில் வலி வந்தவுடன் எவ்வாறெல்லாம் துடிக்கிறோம், நாம் செய்த தவறுகளை நினைத்து அழுகிறோம், உணர்கிறோம். அதை வலி வருவதற்குமுன் நாம் சரியாக கடைப்பிடித்திருந்தால் இதுபோன்ற வலியில் நாம் அவதிப்படுவோமா? அதற்குப்பிறகு அல்லாஹ்வின் நாட்டம். சற்று சிந்தியுங்கள்.

அதுபோல நமது தவறான போக்கால் பிள்ளைகளின் அக்கறையின்மையின் மூலம் பல பிரச்னைகளை சந்திப்போம். பிள்ளைகளின் அக்கறை என்று நினைத்து பலவிசயங்களை தவறாகவே செய்துவருகிறோம். பிள்ளைகள் வளர்ப்பு என்பதைப் பற்றி இறைவேதமும், நபி மொழியும் கூறுகிறதே அதை சற்று படித்து உணர்ந்து அதன்படி வளர்த்தீர்களா? நாம் அதைப்பற்றி யோசிப்பதில்லை. நாளை எதாவது ஒரு அசம்பாவிதம் நம் குடும்பத்தில் நடந்துவிட்டால் மட்டுமே யோசிக்கிறீங்க. இம்மையில் நாம் அன்றாட வாழ்விற்கு செல்வம் அவசியம் தான் ஆனால் அதைவிட மறுமையில் வாழ்வதற்கு நன்மை என்கிற செல்வம் அவசியம். இன்ஷா அல்லாஹ்.

ஒவ்வொருத்தரும் தம்பிள்ளைகளை நல்லபடியாக வளர்க்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள், கனவு காண்பார்கள் என்பது உண்மை. இது இருக்கிறவர்களை விட பிள்ளைகள் இல்லாதவர்கள் தமக்கு பிறக்கப் போகும் குழந்தைகளை நினைத்து அளவில்லாத ஆசையில் அல்லாஹ்வின் உதவியால் கனவு கண்டுகொண்டு இருப்பார்கள். அதேமாதிரி பிள்ளைகள் கல்வியில் உயரவேண்டும், அழகான ஆடைகள் உடுத்தி அழகுப்படுத்திப் பார்க்கவேண்டும், எல்லாவற்றிலும் முதலிடம் வகிக்கவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களின் என்னம் நியாயமானதே. மனிதன் தவறு செய்யக்கூடியவன் என்று வல்ல இறைவன் தனது திருமறையில் கூறியிருக்கிறான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் பிள்ளைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்றும் இறைவசனும், நபி மொழி ஹதீசும் கூறுகிறது, வலியுறுத்துகிறது. நாம் அதைப் பின்பற்றுகிறோமா என்றால் இல்லை என்றுதான் பதில்வருகிறது. சிலபேர் நாங்கள் அதன்படித்தான் வாழ்கிறோம் என்று கூறுவார்கள் ஆனால் நேரான வழியென்று தவறுகள் செய்துக்கொண்டியிருக்கிரார்கள் என்பது உண்மை.

ஆனால் தன் பிள்ளைகளை அழகுப்படுத்திப்பார்க்க வேண்டும் என்று நினைத்து மார்க்கத்திற்கு புறம்பான விசயத்தில் ஈடுபடுத்துவது, கண்ணியமில்லாத ஆடைகளை உடுத்துவது, அனாச்சாரமான விசயங்களில் திணிப்பதுபோன்ற இழிசெயல்களைதான் நன்மையென கருதி இன்றைய பெற்றோர்கள் செய்துவருகிறார்கள். பார்க்கும்போது வேதனையளிக்கிறது. நம் எண்ணங்களுக்கு ஏற்ப பிள்ளைகளை புகைப்படம் எடுத்து மற்றவர்கள் ரசிக்கவேண்டும் என்று என்னி விளையாட்டுத்தனமாக இணையத்தளங்களில் பிரசுரிப்பது போன்ற இழிசெயல்களை நாம் அன்றாட இணையத்தளங்கள் பார்த்துக்கொண்டியிருக்கிறோம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

ஏதோ ஒரு அல்ப ஆசையில் நன்மை என்று என்னி தவறானதை செய்துவிடுகிறோம் ஆனால் நாளை இதுமாதிரியான செயல்கள் கேள்விப்பட்டு பிள்ளைகளின் மனதில் ஆழபதிந்துவிடும். நேற்று நமது பெற்றோர்கள் செய்தது சரிதான் என்று நினைத்து அதைவிட அருமையாக செய்வோம் என்று நினைத்து வழித்தவறி போவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இன்று எத்தனையோ பிள்ளைகள் வீனாகிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம், கேள்விப்படுகிறோம்.

பிள்ளைகள் அறியாமல் பார்த்த பொருள், காட்சி, மற்றும் இன்னும் பலவற்றில் மீது ஆசைப்படுவார்கள். நம் பிள்ளைகளின் மீது கொண்டுள்ள அக்கறையினால் ஆர்வத்துடன் வாங்கிக் கொடுக்கிறோம் அல்லது செய்துவிடுகிறோம். இது தவறல்ல ஆனால் அது நல்லதா? கேட்டதா? என்பதை யோசிப்பதில்லை. ஏனென்றால் அந்தநேரத்தில் பிள்ளைகளின் சந்தோசம் மட்டுமே நம் கண்ணுக்குத்தெரியும். நாம் வேறெதையும் யோசிக்கமாட்டோம். நாம் பிள்ளைகளின் சந்தோசத்தில் முழு பங்கு எடுக்கவேண்டியதுதான் ஆனால் எதில் என்பதை மட்டும் சரியாக முடிவு செய்து செயல்படவேண்டும்.

சிலர் தவறு என்று தெரிந்தும் அதை பிள்ளைகளின் ஆசைக்கு வளைந்து கொடுக்கிறார்கள், சிலர் பிள்ளைகள் எப்படியாவது நல்ல இருந்தால்போதும் என்று நினைத்து எதையும் கண்டுகொள்வதில்லை. சிலர் அப்படியும், இப்படியும் இருக்கிறார்கள். நாம் செய்த தவறானசெயலே எதிர்காலத்தில் பிள்ளைகள் கெடுவதற்கும், வழித் தவறிப்போவதற்கும் அறிய வாய்ப்பாக மற்றும் இதானால் அவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

நம் கண்முன்னே எத்தனை எத்தனை காட்சிகள் நடக்கிறது என்பதை அனுதினமும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இதனை கண்டுமா நாம் திருந்தவில்லை. இவைகள் அனைத்தும் அல்லாஹ்வின் சோதனை என்றும், நமக்கு ஒரு படிப்பினை என்றும் ஏன் புரிந்து கொள்ளவில்லை. இதனால் பல நன்மைகள் நமக்கு இருக்கிறது என்று சிந்தித்து செயல்பட சிரத்தை எடுத்துக்கொள்ள முயற்சி மேற்கொள்ளாமல், கேட்டால் நாங்கள் வேளைகளில் பிசியாக இருப்பதால் இதை கண்டுகொள்ளமுடியவில்லை என்று கூறி மலுப்பிவிடுகிறார்கள். பிரச்னை என்று வந்தவுடன் வயிற்றில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைப்பதில் எவ்வித பயனுமில்லை. இன்று விஞ்ஞானம் வளர்ச்சி என்கிற பெயரில் இளைய தலைமுறையினர் தவறுகள் அதிகம் அதிகம் செய்துக்கொண்டியிருக்கிரார்கள். காரணம் தந்தையின் கண்டிப்பைவிட்டு விலகி தாயின் கவனிப்பு அதிக இருப்பதால் தான் இந்த நிலை. தாயின் என்பவள் இளகிய மனதுக்காரி அதனால் அப்பாவித்தனமாக பிள்ளைகளின் மனம் நோகக்கூடாது என்று நினைத்து கேட்பதை செய்துவிடுகிறாள். இதுவே இவர்களுக்கு அறிய வாய்ப்பாக போய்விடுகிறது.

நாம் உலககல்வி மீதும், மார்க்கம் கூறிய உலக இன்பத்திலும் நன்மையான விசயத்திலும் ஆசைப்படவேண்டியதுதான் யாரும் குறைக்கூறவில்லை ஆனால் நம் மார்க்கம் அதை அனுமதிக்கிறதா? என்பதை நன்குஅறிந்து அதன்படி பிள்ளைகளை வழிநடத்தவேண்டும். நாம் வேலியில் நடும் மரங்களின் கிளைகளை அவ்வப்போது தரித்து அது ஓங்கி வளராமல் சீரமைக்கிற மாதிரி பிள்ளைகளை அவ்வபோது கண்டித்து தக்கமுறையில் வழிநடத்தினால் நாளை பிள்ளைகள் வாழ்வில் உயரப்பெற்று பெரும்புகழுடன் வாழும்போது நாம் தான் உலகிற்கு தெரிவோம் என்பதை மனதில் எண்ணிக்கொள்ளுங்கள். நாம் விதைக்கும் விதையே நாளை மரமாக வளரும் என்பதை உணரவேண்டும்.

பெற்றோர்களே! பிள்ளைகளுக்கு மார்க்க கல்வியும், நன்மையான வகையில் உலக கல்வியும் கற்றுக்கொடுங்கள். நீங்க பிள்ளைகளின் மீது உண்மையாக பாசமும், அன்பும், அக்கறையும் வைத்திருந்தால் நன்மையானதை மட்டும் கற்றுக்கொடுங்கள். இம்மை வாழ்க்கை என்பது அற்பத்தனமானது. நாம் செய்த அனைத்துக் காரியங்களுக்கும் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை மறந்துவிடவேண்டாம்.

தயவுசெய்து தம் பிள்ளைகளின் புகைப்படத்தை இணையத்தளங்களில் பிரசுரிக்காதீர்கள். இப்படி செய்வதினால் உங்களுக்கும், உங்களின் பிள்ளைகளுக்கும் கேடு உண்டுசெய்கிறீர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். பிள்ளைகள் அனைவருக்கும் பொதுவானவர்கள் ஆனால் அதை இதுமாதிரியான வலைத்தளங்களில் தவறுதாலாக பயன்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது. உங்கள் பிள்ளைகள் மீது அன்பு இருந்தால் கண்ணியமாக வளர்த்துக்கொள்ளுங்கள். அந்த குழந்தைகள் அல்லாஹ்வின் பாதையில் நேரான வழியில் வாழ வாழ உங்களுக்கு அல்லாஹ் பல நன்மைகளையும், பரக்கத்தையும் வாரிவழங்குவான். ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையாது என்கிற பழமொழியை உணர்ந்துப்பருங்கள். இன்ஷா அல்லாஹ்..!

இன்ஷா அல்லாஹ்! ஒவ்வொருத்தரும் செய்த செயலுக்கு மகத்தான கூலி நாளை அல்லாஹிவிடத்தில் கிடக்கும். யாரும் யாருடைய சுமைகளை சுமக்க முடியாது. இருந்தாலும் நாளை நீங்களும், உங்களும் பிள்ளைகளும் மறுமையில் அல்லாஹ்வின் உதவியால் நேரில் சந்திக்கும்போது பிள்ளைகள் நரகத்திற்கும், நீங்கள் சொர்க்கத்திற்கும் செல்லநேரிட்டால் உங்கள் மனம் என்னாவாகும் என்பதை சற்று உணர்ந்துபாருங்கள். ஆகவே நம் பிள்ளைகளுக்கு வழிகாட்ட கலங்கரை விளக்காக இருப்பது முயற்சிசெய்யுங்கள். இன்ஷா அல்லாஹ்.

நாம் பிள்ளைகளின் மீது அளவுக்கு அதிகமாக வைக்கும் பாசத்தினால் நாம் நினைத்ததை விளையாட்டுத் தனமாக செய்து முட்டாள் தனமாக ரசிக்கிறோம் என்பது உண்மை. வேண்டாம் நண்பர்களே...!
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பிள்ளைகள் Empty Re: பிள்ளைகள்

Post by நண்பன் Tue 1 Nov 2011 - 19:20

உடல் நடுங்குகிறது இவைகளைப் படிக்கும் போது உண்மையான விசயங்களை இங்கு பகிர்நது கொண்ட உறவுக்கு இறைவன் நல் கூலி தருவானாக பயனுள்ள பதிவு உறவே நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum