சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

குர்பான் கொடுப்போம் Khan11

குர்பான் கொடுப்போம்

Go down

குர்பான் கொடுப்போம் Empty குர்பான் கொடுப்போம்

Post by *சம்ஸ் Fri 4 Nov 2011 - 8:00

குர்பான் கொடுப்போம்
முழுஉலக மக்களாலும் கொண்டாடப் படுவது ‘ஈதுல் அழ்ஹா’ எனப்படும் தியாகத் திருநாள். உண்மையில் இதனை பெருமைக்குரிய திருநாள் என்றழைப் பதும் பொருத்தமாகும். ஏனெனில், அத்தகைய பெருமைக்குரிய ஒரு வரலாற்றை அல்லாஹ்வின் தோழர் ஹஸ்ரத் இப்றாஹீம் (அலை) அவர்கள் உருவாக்கிச் சென்றார்கள்.

ஆடு, மாடு, ஒட்டகங்களைப் பலியிட்டு ஆண்டு தோறும் செய்யப்படும் ‘குர்பானி’ ஹஸ்ரத் இப்றாஹீம் (அலை) அவர்களின் அந்த மகத்தான தியாகத்தை நமக்கு நினைவூட்டுகிறது.

குர்பானி’ அல்லாஹ்வின் சந்நிதானத்தில் அடியார்கள் செலுத்தும் சிறந்த ஒரு வணக்கமாக எல்லா நபி மார்களுடைய கூட்டத்தார் மீதும் கடமையாக்கப்பட்டு வந்துள்ளதை கீழ்வரும் அல்குர்ஆன் வசனம் குறிப்பிட்டும் காட்டுகின்றது. அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்திருந்த ஆடு, மாடு, ஒட்டகைகள் மீது அவன் பெயரைக் கூறும் படி செய்வதற்காகவே ஒவ்வொரு வகுப்பாருக்கும் நாம் ‘குர்பானி’ செய்வதை கடமையாக ஏற்படுத்தி இருந்தோம் (அல்-குர்ஆன் 22:34)

இறைவனின் சந்நிதானத்தில் தன் பணியையும் நன்றியுணர்வையும் மனிதன் ஒளிபெறச் செய்யும் மேலான வணக்க முறை இது என்பது ஒர் உண்மையாகும். அல்லாஹ்வின் அருளைப் பெறுவதற்கு தனது செல்வத்தை அர்ப்பணிப்பதாலேயே இந்த வணக்க முறை ‘குர்பானி’ என்று கூறிச் சிறப்பிக்கின்றது.

உண்மையில் குர்பானியின் அந்தரங்க தாத்பரியம் என்னவெனில், மனிதன் இதன் மூலம் தியாக உணர்ச்சியைப் பெற்று தன் இதயத்தையும், சிந்தனையையும் ஒளிபெறச் செய்ய வேண்டும். தனக்குள்ளே ஈமானின் உறுதியையும், இறையச்சத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான். இதனையே அல்லாஹ் கீழ் வருமாறு கூறுகிறான்.

(‘இவ்வாறு குர்பான் செய்த போதிலும்) அதன் மாமிசமோ அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை அடைந்து விடுவதில்லை. உங்களுடைய (பரிசுத்ததன்மையும்) பக்தியும் தான் அவனை அடையும். “(அல்குர்ஆன் 22:37) “எண்ணங்களைக் கொண்டே எல்லா அம்சங்களும் கணிக்கப்படும், மனிதன் அவன் எண்ணியதே கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்களின் கூற்றுக் கேற்ப குர்பானியிலும் உள்ளத்தின் பரிசுத்தம் முக்கியமானதாகும்.

புகழைத் தேடித் தீர்த்துக் கொள்ளும் ‘குர்பானி’ இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாட்டாது. ‘அல்லாஹ் அங்கீகரிப்பதெல்லாம் பயபக்தியுடையவர்களில் உள்ளவர்களுடைய குர்பானி’ களைத் தான் (அல்குர்ஆன் 5:27)

குர்பானிக்கு ஏற்ற மிருகங்கள் நன்கு கொழுத்ததாகவும் ஆரோக்கியமுடையதாகவும் இருத்தல் வேண்டும். இதைத் தான் பின்வரும் நபி மொழி எடுத்துக் காட்டுகின்றது. கொழுத்த மிருகங்களையே குர்பான் செய்யுங்கள். ஏனெனில் அவை ஸிராதுல் முஸ்தகிம் பாலத்தில் உங்களுடைய வாகனமாக உதவு பவை. (அல்-ஹதீஸ்)

எம்.யூ.எம். வாலிஹ் (அஸ்ஹரி)
வெலிகம


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum