சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

அகீகா - குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய சில காரியங்கள் பற்றிய விளக்கம் Khan11

அகீகா - குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய சில காரியங்கள் பற்றிய விளக்கம்

5 posters

Go down

அகீகா - குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய சில காரியங்கள் பற்றிய விளக்கம் Empty அகீகா - குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய சில காரியங்கள் பற்றிய விளக்கம்

Post by abuwasmee Fri 4 Nov 2011 - 12:49

குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய சில காரியங்கள் (அகீகா பற்றிய விளக்கம்)


தஹ்னீக்


குழந்தை பிறந்த உடன் பேரித்தம்பழத்தை மெண்டு அதன் வாயில் தடவும் வழமை நபி (ஸல்)அவர்களின் காலத்தில் இருந்தது. இதற்கு தஹ்னீக் என்று அரபு மொழியில் சொல்லப்படுகிறது.

(முஹாஜிர்களிலேயே) இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தை அப்துல்லாஹ் பின் ஸ‏þபைர் ஆவார். (அவர் பிறந்தவுடன்) அவரை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தனர். நபி (ஸல்) அவர்கள் ஓரு பேரிச்சம் பழத்தை எடுத்து அதை மென்று அவரது வாய்க்குள் நுழைத்தார்கள். அவரது வயிற்றினுள் முதலாவதாக நுழைந்தது நபி (ஸல்) அவர்களது உமிழ் நீரே ஆகும்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (3910)
எனக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தவுடன் அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தேன். நபி (ஸல்) அவர்கள் அதற்கு இப்ராஹீம் என்று பெயர் வைத்துவிட்டு பேரித்தம்பழத்தை மெண்டு அதன்வாயில் தடவினார்கள். அதற்காக பிரார்த்தனை செய்துவிட்டு என்னிடம் ஒப்படைத்தார்கள். (இப்ராஹீம்) அபூமூஸாவின் மக்களில் மூத்தவராக இருந்தார்.

அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), நூல் : புகாரி (5467)
அகீகா


குழந்தை பிறந்த ஏழாம் நாளில் ஆண்குழந்தையாக இருந்தால் அதற்காக இரண்டு ஆடுகளையும் பெண்குழந்தையாக இருந்தால் அதற்காக ஓருஆட்டையும் அறுத்து ஏழை எளியவர்கள் உறவினர்களுக்கு உணவளிப்பதற்கு அகீகா என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு செய்வதை நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்துள்ளார்கள். ஆனால் கடமையாக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பையன் (பிறந்த) உடன் அகீகா (கொடுக்கப்படல்) உண்டு. ஆகவே அவனுக்காக (ஆடு அறுத்து) குர்பானி கொடுங்கள். அவன் (தலை முடி களைந்து) பாரத்தை இறக்கிவிடுங்கள் என்று அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்.

அறிவிப்பவர் : சல்மான் பின் ஆமிர் (ரலி), நூல் : புகாரி (5472)
எத்தனை ஆடுகள் அறுக்க வேண்டும்?

நபி (ஸல்) அவர்களிடம் அகீகாவைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் மாறுசெய்வதை நான் விரும்பமாட்டேன். யாருக்கேனும் குழந்தை பிறந்து அதற்காக அவர் (ஆட்டை) அறுத்து வணக்கம்புரிய விரும்பினால் அவர் ஒரே மாதிரியான இரண்டு ஆட்டை ஆண்குழந்தைக்கும் ஒரு ஆட்டை பெண்குழந்தைக்கும் கொடுக்கட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல் : அஹ்மத் (6530)
விரும்புபவர் அகீகா கொடுக்கட்டும் என்று மேலுள்ள ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அகீகா கொடுப்பது கடமையில்லை. கொடுப்பது சிறந்தது என்பது அறிந்துகொள்ளலாம்.


ஆண்குழந்தைக்கு ஓரு ஆட்டை அறுத்துப் பலியிடுவதற்கும் ஆதாரம் உள்ளது. இதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஹசனுக்கும் ஹ‚ஸைனுக்கும் ஒரு ஆட்டை அகீகாவாக தந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் (2458)
பெயர் வைத்தலும் முடியயை களைதலும்.


அகீகாக்கொடுக்கும் போதே குழந்தைக்கு பெயர் வைத்து அதன் முடியை களைவது நபிவழியாகும்.

ஒவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : சமுரா பின் ஜ‚ன்துப் (ரலி), நூல் : அபூதாவூத் (2455)
கத்னா செய்தல்.


ஆண்களின் பாலுறுப்பில் இருக்கும் தேவையற்ற தோல்பகுதியை அகற்றுவதற்குப் பெயர் தான் கத்னா என்பது. இவ்வாறு செய்வதால் பாலுறுப்பினுள் விந்தோ சிறுநீரோ தங்கும் நிலை ஏற்படாது. இதன் மூலம் பாலுறுப்பு சுத்தமாக வைத்துக்கொள்ளப்படுவதால் ஏராளமான நோய்கள் அண்டுவதில்லை.


இல்லறவாழ்வின் போது கணவன் தன் மனைவியை திருப்தியடையச் செய்வதற்கு கத்னா காரணமாக உள்ளது. அறிவுப்பூர்வமான இந்த வழிமுறை கடைபிடிக்குமாறு இஸ்லாம் ஆண்களுக்குக் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக்கொள்வது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்

அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி), நூல் : புகாரி (5889)

நன்றி: ரஸ்மின் MISc
abuwasmee
abuwasmee
புதுமுகம்

பதிவுகள்:- : 155
மதிப்பீடுகள் : 3

http://www.abuwasmeeonline.blogspot.com

Back to top Go down

அகீகா - குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய சில காரியங்கள் பற்றிய விளக்கம் Empty Re: அகீகா - குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய சில காரியங்கள் பற்றிய விளக்கம்

Post by முனாஸ் சுலைமான் Fri 4 Nov 2011 - 12:54

மிகவும் முக்கிய தேவையான அறிந்திருக்க வேண்டிய விடையத்தினைக்கூறி இருக்கும் அன்புத்தோழருக்கு நன்றி
கத்னா செய்தல்.


ஆண்களின் பாலுறுப்பில் இருக்கும் தேவையற்ற தோல்பகுதியை அகற்றுவதற்குப் பெயர் தான் கத்னா என்பது. இவ்வாறு செய்வதால் பாலுறுப்பினுள் விந்தோ சிறுநீரோ தங்கும் நிலை ஏற்படாது. இதன் மூலம் பாலுறுப்பு சுத்தமாக வைத்துக்கொள்ளப்படுவதால் ஏராளமான நோய்கள் அண்டுவதில்லை.


இல்லறவாழ்வின் போது கணவன் தன் மனைவியை திருப்தியடையச் செய்வதற்கு கத்னா காரணமாக உள்ளது. அறிவுப்பூர்வமான இந்த வழிமுறை கடைபிடிக்குமாறு இஸ்லாம் ஆண்களுக்குக் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக்கொள்வது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்

அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி), நூல் : புகாரி (5889)
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அகீகா - குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய சில காரியங்கள் பற்றிய விளக்கம் Empty Re: அகீகா - குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய சில காரியங்கள் பற்றிய விளக்கம்

Post by *சம்ஸ் Fri 4 Nov 2011 - 13:08

அறிந்திருக்க வேண்டிய விடையத்தினைக்கூறி இருக்கும் அன்புத்தோழருக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அகீகா - குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய சில காரியங்கள் பற்றிய விளக்கம் Empty Re: அகீகா - குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய சில காரியங்கள் பற்றிய விளக்கம்

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 17:39

மிகமிக முக்கியமான விடையத்தினை பகிர்ந்தளித்தமைக்கு நன்றி தோழரே....
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

அகீகா - குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய சில காரியங்கள் பற்றிய விளக்கம் Empty Re: அகீகா - குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய சில காரியங்கள் பற்றிய விளக்கம்

Post by நண்பன் Fri 4 Nov 2011 - 19:55

இறைவன் உங்களுக்கும் நற்கூலி தருவானாக ஐயம் தீர்ந்தது நன்றி உறவே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அகீகா - குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய சில காரியங்கள் பற்றிய விளக்கம் Empty Re: அகீகா - குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய சில காரியங்கள் பற்றிய விளக்கம்

Post by abuwasmee Sat 5 Nov 2011 - 6:30

நபிவழி நடப்போம்! நன்மையைப் பெறுவோம்!
abuwasmee
abuwasmee
புதுமுகம்

பதிவுகள்:- : 155
மதிப்பீடுகள் : 3

http://www.abuwasmeeonline.blogspot.com

Back to top Go down

அகீகா - குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய சில காரியங்கள் பற்றிய விளக்கம் Empty Re: அகீகா - குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய சில காரியங்கள் பற்றிய விளக்கம்

Post by *சம்ஸ் Sat 5 Nov 2011 - 6:43

abuwasmee wrote:நபிவழி நடப்போம்! நன்மையைப் பெறுவோம்!
இறைவன் அனைவருக்கும் நல் வழி நடக்க அருள் புரிவானாக @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அகீகா - குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய சில காரியங்கள் பற்றிய விளக்கம் Empty Re: அகீகா - குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய சில காரியங்கள் பற்றிய விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum