சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

இயற்கையோடு இணைந்து. Khan11

இயற்கையோடு இணைந்து.

3 posters

Go down

இயற்கையோடு இணைந்து. Empty இயற்கையோடு இணைந்து.

Post by *சம்ஸ் Thu 10 Nov 2011 - 20:22

பரிணாம ஏணியின் மேல் படியில் இருக்கும் மனிதகுலம் மூட நம்பிக்கைகளிலும் அறியாமையிலும் மூழ்கி, குழந்தை வளர்க்கத் திணறுவது மிகவும் ஆச்சரியப்படத்தக்கது.

இயற்கையோடு இணைந்து இயல்பாகக் குழந்தை வளர்ப்பதே சரியான செயல். எல்லா விலங்குகளும் குட்டிகளுக்குத் தாய்ப்பால்தான் தருகின்றன. மனிதர்களும் அதைத்தான் செய்ய வேண்டும். அப்படியின்றி முதலில் சர்க்கரை கலந்த தண்ணீர் புதிதாய்ப் பிறந்த குழந்தைக்குக் கொடுப்பது இயற்கைக்கு மாறானது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் குழந்தை பிறந்தவுடன் கழுதைப்பால் கொடுத்தால் குழந்தைகள் கழுதையைப் போல் குரல் வளத்துடன் வளரும் என்ற தவறான நம்பிக்கை நிலவுகிறது. இது மிகவும் ஆபத்தான செயல். சுகாதாரமின்மை காரணமாக மிகமோசமான வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

அடுத்ததாக, குழந்தைகள் குளிப்பதாலும் தலையில் தண்ணீர் படுவதாலும் சளி பிடிக்கும் என்று பரவலான கருத்து இருக்கிறது. இது அறிவியல் அடிப்படையற்ற மூடநம்பிக்கையாகும். மனிதகுலம் திமிங்கலம், டால்பின், யானை வால்ரஸ் போன்று நீரில் வாழ்ந்து பரிணாம வளர்ச்சியடைந்ததாக அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தினம் தலையுடன் சேர்த்துக் குளிப்பதால் உடல் தூய்மையடையும். தலையில் படும் தண்ணீர் எவ்வகையிலும் தோல், மண்டை ஓடு போன்றவற்றைத் தாண்டி உள்ளே செல்ல முடியாது. ஆகவே குளித்ததனால் தலையில் நீர் இறங்கி விட்டது என்று சொல்வது ஓர் அபத்தமான கருத்தன்றி வேறல்ல. ஆகவே, குழந்தைகள் பிறந்த அடுத்தநாளிலிருந்து தூய்மையான நீரில் தினம் குளிக்க வேண்டும். குளித்தபின் காது, மூக்கு போன்றவற்றில் பெரியவர்கள் வாயினால் ஊதுவது நோய்க்கிருமிகள் தொற்றுவதற்கு வாய்ப்பை உருவாக்குகிறது. இந்தத் தவறான செயலால் தான் குழந்தைகளுக்குக் குளித்தவுடன் சளியும் காதுவலியும் ஏற்படுகிறது. இது போலவே குளித்தவுடன் சாம்பிராணி புகை போடுவதும் தவறு. சாம்பிராணியில் இருக்கும் ரசாயனங்கள் பலவித ஒவ்வாமையை ஏற்படுத்தி ஆஸ்துமா நோய் ஏற்பட வழிவகுக்கிறது.

மேலும் பலர் ஜாதிக்காய், மாசிக்காய், கோரோசனை போன்ற பொருட்களை உரசி சில சொட்டுகள் வாயில் கொடுக்கிறார்கள். இதனால் ஆபத்தான வயிற்றுப்போக்கு ஏற்படும். மாசிக்காய் நீர் புரை ஏறுவதால் நிமோனியா ஏற்பட வாய்ப்பு அதிகம்.

குழந்தைகளுக்குப் பெரியவர்களைவிட உணவு செரிமான சக்தி அதிகம். இதை உணராத பலர் கிரைப் வாட்டர், போனிசான் நூபான் என்று பலவகையான ரசாயனக் கலவைகளை குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்களின் மென்மையான வயிற்றைக் கெடுக்கிறார்கள்.

சளி பிடிப்பதைத் தடுக்கும் என்ற தவறான நம்பிக்கையால் பலர் வேப்ப எண்ணெய்யை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கிறார்கள். இதனால் கட்டுப்படுத்த இயலாத வலிப்பு நோய் ஏற்பட்டு பல குழந்தைகள் மரணத்தைத் தழுவியுள்ளன.

சளி பிடித்தவுடன் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் மெந்தால் மற்றும் கற்பூரத்தைலம் கலந்த வேபோரப் பொருட்களை மூக்கு மற்றும் முதுகில் தடவுவது மிகவும் தவறு. கற்பூரம் மூளையைத் தூண்டி வலிப்பு நோயை ஏற்படுத்தவல்லது.

குழந்தைகளுக்குச் சளி பிடிக்காமலிருக்க நிறைய பழங்கள் கொடுக்க வேண்டும். பழங்கள் சாப்பிடுவதால் சளி பிடிக்கும் என்பது அறிவியல் அடிப்படையற்றது. மாம்பழம், பப்பாளிப்பழம் போன்றவை சூடு என்றும் ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் குளிர்ச்சி என்றும் அறிவியல் ஆதாரமின்றி பயப்படுகிறார்கள். எல்லா காலநிலைகளிலும் எல்லாவித பழங்களும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

இயற்கையான உணவுகளையும் எளிய வாழ்க்கையையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாகரிக மனிதர்கள் பேபி பவுடர்(Baby Powder) என்றும் பேபி ஆயில்(Baby Oil), பேபி லோஷன்(Baby Lotion) என்றும் பலவித வாசனைப் பொருட்களை போலியான விளம்பரங்களைப் பார்த்து வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இதனால் குழந்தைகளின் தோலின் ஆரோக்கியம் பாதிப்படைவதுடன் தாய்ப்பால் சுரப்பதும் குறைந்து விடும்.

குழந்தையும், குழந்தையின் தாயும் குறைந்தது ஒரு வருட காலமாவது எவ்வித வாசனைப் பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது.

புதிதாகப் பிறந்த குழந்தைக்குச் சில மணி நேரத்திலேயே தனது மோப்ப சக்தியால் தாயை அடையாளம் காணும் திறமையை எலி, பூனை, நாய், மனிதன் உட்பட அனைத்து விலங்குகளுக்கும் இயற்கை அளித்துள்ளது. குழந்தை அல்லது தாய் பவுடர், லோஷன் போடுவதால் குழந்தையின் மோப்ப சக்தி குழப்பமடைந்து அது சரியாகப் பால் குடிப்பதில்லை. இதனால் தாய்ப்பால் சுரப்பது குறைந்து, விரைவில் அதுவும் நின்று விடும். இதனால்தான் விவரமறிந்த நமது முன்னோர்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தலையில் வாசமுள்ள பூ எதுவும் வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்கள்.

மேலும் பேபி ஆயில், பேபி லோஷன் என்பவை உண்மையில் என்ன என்பதை ஆங்கிலம் படிக்கத் தெரிந்த பெற்றோர்கள் பூதக்கண்ணாடி உதவியுடன் அந்தப் பாட்டில்களில் எழுதியிருப்பதைப் படித்து அறிந்து கொள்ள வேண்டும். மிகச் சிறிய எழுத்தில் "மினரல் ஆயில்" என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். மினரல் ஆயில் என்றால் தமிழில் "மண் எண்ணெய்" என்று பொருள்படும். அதாவது குரூட் ஆயிலிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒருவித ரசாயன எண்ணெய். இதனைப் பயன்படுத்துவதால் ஒவ்வாமை ஏற்பட்டு தோலின் மிருதுத் தன்மை பாதிக்கப்படும். ஆகவே, பரம்பரை பரம்பரையாக நமது முன்னோர்கள் பயன்படுத்திய தேங்காய் எண்ணெயே போதுமானது.

மேலும் தற்போது வெயில் காலம் என்பதால் பலருக்கும் வேர்க்குருவும் கட்டிகளும் ஏற்படும். இதற்கும் பலவித விளம்பரங்களைப் பார்த்து வேர்க்குரு பவுடர்களை குழந்தைகளின் உடல் முழுவதும் பூசிவிடுகிறார்கள். உடலின் வெப்பம் அதிகமாகும்போது வியர்வைச் சுரப்பிகள் அதிகமாக வேலை செய்து நம் உடலின் வெம்மையைக் குறைக்க உதவுகிறது. வியர்வைச் சுரப்பிகளின் வாய் தூசி படிந்து அடைத்துக் கொள்வதால் வேர்க்குரு தோன்றுகிறது. வேர்க்குரு சீழ் பிடிப்பதால் கட்டிகள் வருகின்றன. இதைத் தடுப்பதற்குக் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை முகம் கழுவ வேண்டும். இதற்கு மாறாகப் பலவித வேர்க்குரு பவுடர்களையும், கிரீம்களையும் பயன்படுத்துவதால் வியர்வை நாளங்களின் வாய் அடைபட்டு அதிகப்படியான வேர்க்குருவும், வேனல் கட்டிகளும் உருவாகும். ஆகவே, வெயில் காலத்தில் எவ்வித பவுடர்களும் குழந்தைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளை இயற்கையோடு இணைந்து வளர்ப்பதே மிகச்சிறந்தது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இயற்கையோடு இணைந்து. Empty Re: இயற்கையோடு இணைந்து.

Post by முனாஸ் சுலைமான் Thu 10 Nov 2011 - 20:45

சளி பிடித்தவுடன் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் மெந்தால் மற்றும் கற்பூரத்தைலம் கலந்த வேபோரப் பொருட்களை மூக்கு மற்றும் முதுகில் தடவுவது மிகவும் தவறு. கற்பூரம் மூளையைத் தூண்டி வலிப்பு நோயை ஏற்படுத்தவல்லது.
://:-: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இயற்கையோடு இணைந்து. Empty Re: இயற்கையோடு இணைந்து.

Post by *சம்ஸ் Thu 10 Nov 2011 - 20:54

முனாஸ் சுலைமான் wrote:சளி பிடித்தவுடன் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் மெந்தால் மற்றும் கற்பூரத்தைலம் கலந்த வேபோரப் பொருட்களை மூக்கு மற்றும் முதுகில் தடவுவது மிகவும் தவறு. கற்பூரம் மூளையைத் தூண்டி வலிப்பு நோயை ஏற்படுத்தவல்லது.
://:-: :!@!:

நன்றி சார் மறுமொழிக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இயற்கையோடு இணைந்து. Empty Re: இயற்கையோடு இணைந்து.

Post by அ.இராஜ்திலக் Fri 11 Nov 2011 - 8:33

("மினரல் ஆயில்" என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். மினரல் ஆயில் என்றால் தமிழில் "மண் எண்ணெய்" என்று பொருள்படும். அதாவது குரூட் ஆயிலிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒருவித ரசாயன எண்ணெய்- புதியதாக அறிந்து கொண்டேன் .) - நல்ல பகிர்வு பாராட்டுகள்

அ.இராஜ்திலக்
புதுமுகம்

பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

இயற்கையோடு இணைந்து. Empty Re: இயற்கையோடு இணைந்து.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum