சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Khan11

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

+6
puthuvaipraba
நேசமுடன் ஹாசிம்
அப்புகுட்டி
jasmin
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
10 posters

Go down

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Empty சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

Post by *சம்ஸ் Sat 10 Dec 2011 - 14:11

01 நட்பு
தொப்புள்கொடி உறவால் நமக்கு தாய்வந்தாள்

தொட்டில்கொடி உறவால் சோதர சோதரிகால் -தாயை

தொட்டுவிட்ட உறவாள் அவர் தந்தையானார் ..இதில்

தொடர்பில்லா உறவு வந்தால் அது நட்பாகும்

கழுத்தில் கட்டும் தாலி அவரை கண்வன் எனறது

கருவறையில் சுமந்த சிசு பிள்ளையானது -கண்வருக்கு

கட்டில் சுகம் தந்ததனால் நான் தாரமானேன் -வெறும்

கருத்தில் மட்டும் கலந்த உறவு நட்பானதே

தாய் தந்தை இல்லையெனில் பெற்ற பாசம் போகும்

தமக்கை தங்கை இல்லையெனில் தாய்மாமன் பாசம் போகும்

தாலிகட்ட வில்லயெனில் இல்வாழ்க்கை சுகம் போகும் - நமக்கு

தரமில்லா நட்பு இல்லையினில் வாழ்க்கையின் தரமே போகும்

நல்வாழ்க்கை வாழ்வதற்கு நான்குவகை வேதம் வேண்டும்

நல்லகாதல் வெற்றிகாண நங்கையிடம் நல்லொழுக்கம்வேண்டும்

நல்லுறக்கம் வேண்டுமெனில் உள்ளத்தில் அமைதி வேண்டும்

நானிலம் செழிப்பதற்கு நாடெங்கும் நட்பு வேண்டும் .

விண்ணும் மண்ணும் வியக்கும் உறவு

விதியில் மதியால் விளைந்த உறவு

வினைகள் தீர்க்கும் விந்தை உறவு

விரசமில்லா நட்பு ஒன்றே ..விரசமில்லா நட்பு ஒன்றே

02காதல்

காலையின் கதிரவன் ஒளிரட்டுமே

அதில் காலத்தின் விடியல்கள் உதிக்கட்டுமே

கருத்தினில் கவிஞர்கள் குளிக்கட்டுமே

அதில் காவியம் கவிதையாய் உளரட்டுமே

காமத்தின் காரியம் நடக்கட்டுமே

அதில் நாடகம் குழவியாய் பிறக்கட்டுமே

கண்களும் கண்களும் கலக்கட்டுமே

அதில் கலக்கமும் காதலாய் மலரட்டுமே

உயரத்தில் மேகங்கள் உரசட்டுமே

அதில் ஒளிகளில் மின்னல்கள் மிதக்கட்டுமே

உயிர்களில் உறவுகள் உலவட்டுமே

அதில் உதிரத்தின் உணர்வுகள் வடியட்டுமே

உண்மையை ஊமைகள் பேசட்டுமே

அதில் மறைத்திடும் மடமைகள் மறையட்டுமே

உள்ளத்தை உள்ளங்கள் உணரட்டுமே

அதில் உண்மையின் காதல் உதிரட்டுமே

வஞ்சகர் நெஞ்சங்கள் வதங்கட்டுமே

அதில் வன்மமும் வாதமும் வடியட்டுமே

பஞ்சுகள் இழைகலாய் திரியட்டுமே

அதில் பின்னிய ஆடைகள் அணியட்டுமே

கொஞ்சிடும் குழந்தைகள் அழுகட்டுமே

அதில் தாய்மையின் முத்தங்கள் முளைக்கட்டுமே

வஞ்சியர் கன்னங்கள் சிவக்கட்டுமே

அதில் வண்ணத்தின் காதல் மிளிரட்டுமே

பதவிகள் பட்டங்கள் கிடைக்கட்டுமே

அதில் பரிவுகள் பணிவுடன் இருக்கட்டுமே

பாலுடன் பழங்களைப் பருகட்டுமே

அதில் பல்சுவை இனிமைகள் கிடைக்கட்டுமே

பருவத்தின் பார்வைகள் படரட்டுமே

அதில் பாவையின் நளினங்கள் தெரியட்டுமே

பாசத்தின் அன்புகள் அழைக்கட்டுமே

அதில் காதலின் வெற்றி கனியட்டுமே

03காதல்

இயற்கையின் அசைவுகளில்
காதல் உரசப்படுவதால்தான்
இயற்கையும் உயிரோடு வாழ்கிறது

ஆழ்மனத்தின் ஆயுட்கைதி
உயிரும் உள்ளமும் சுகமாய் வாழ்ந்திட
அதுவேதான் வெகுமதி

தின்மும் திரவமுமாக
கோர்க்கப்பாட்வொரு கலவை
மென்று பின் பருகிடும் அமிர்தமது

காமத்தின் ஒத்திகை - அது
இல்லையென்றிருந்தால்
இப்பிரபஞ்சத்தில் நீயேது..? நானேது..?

பல சாம்ராஜியங்களை
சரித்திரமாக மாற்றிய சாண்றுகள்
சமாதிகளாக பரம்சாற்றுகிறது

ஏன்..!
இராமாயணம் கூட
இரு இதயத்தின் இணைப்பினால்தான்
ஒரு நீண்ட காவியமாக
இன்று எம் கைகளில் தவழ்கிறது

காதலெனும் தண்டவாளத்தில்
வனவாசமெனும் நீண்டபயணம்
காதலுடனேயே பயணித்துப்போனது

நான் படித்த காலத்தில்
வேதங்கள் நான்கென்றார்கள்
ஏன் சொல்லாமல் விட்டார்கள்
ஐந்தாவது வேதம் காதலென்று

ஆகவே இறக்கும்போது
நான் வாழ்ந்த இடத்தில்
என் காதல் வாழட்டும்
நானிறந்து போகிறேன்.....!
காதல் தந்த நினைவுகளோடு

04சமாதானம்

பெற்ற தாய் போல்
பெருவாழ்வழித்த என் மாதா
பேதங்கள் மறந்து
பேரின்பமாய் வாழ்ந்த வீடு

என்றும் குதூகலத்துடன்
எத்திசையும் சென்றுவிட
எப்பொழுதும் நோகாமல்
என்னாளும் வாழ்ந்திருந்தோம்

மதி கெட்ட ஜென்மங்களின்
மழுங்கிய செயல்களினால்
மங்கிய பொழுதுகளாய்
மகிழ்ச்சி அற்ற நாட்களாக..

காணும் காட்சிகள்
கதிகலங்கும் கொடூரங்களாய்
கண்கலங்கி நின்ற நாட்கள்
கண்ணெதிரே நிழலாடுகிறது

மலருமா சமாதானமென்று
மனங்களெல்லாம் ஏங்கிநிற்க
மகிந்த என்ற அரசால்
மலர்ந்திருக்கிறது இனிதாய்

ஒரு நாட்டின் குடிமக்களாய்
எதிரொலிக்கும் கேள்விகளுடன்
ஏந்தி நிற்கும் சமாதானத்தை
ஏற்றிடுவோம் என்னாளும்

மாற்றான் நிலை உணர்ந்து
மாற்றங்கள் கொண்டுவந்து
மாறாத மகிழ்ச்சிதந்து
மாந்தராய் திகழ்ந்திடுவோம்

சுபீட்சமான எதிர்காலத்திற்காய்
சுதந்திரமான வாழ்வுக்காய்
சுந்தரப்புரிசர்களாய்
சூட்டுவோம் சமாதானத்தை

05ஏங்கும் மனங்கள் அதிகமின்று.

கிடைத்ததோடு வாழ்ந்து
பிறருக்கும் நற்கொடையளித்து
மகிழ்ந்தானன்று மனிதன்
இல்லாதவற்றுக்குக்கெல்லாம்
ஆசைகொண்டு இல்லாதவனிடமே
கொள்ளையடிக்கிறானின்று

பணந்தான் வாழ்வென்று
பணத்துக்காக எதையும்
இழக்கத்துணிந்து இழிவுறும்
இயல்புகொண்ட மானிடர்கள்

ஆட்சிசெய்யும் பேராசையுடன்
யார் எக்கேடு கெட்டாலும்
என்னலம் என்னோக்கமென்று
கொன்று குவிக்கும் அசுரர்கள்

வாழ்வளிக்கப்படாத அனாதைகள்
வாழ்விழந்த விதவைகளென
அடிப்படைத் தேவைகளுக்காய் - இன்று
கண்ணீர்வடிக்கிறது உயிர்கள்

ஆயிரமாயிரம் சமகாலத்து
நிகள்வுகளைக் கண்டு கலங்கிநின்று
சுபீட்சமான எதிர்காலத்திற்காய்
இன்று ஏங்கிநிற்கிறது மனங்கள்

06காதல்

உலகறிவை அறிந்திருந்த நான்
என் உள்ளத்தின் இடைவெளியை
அறிந்திடவில்லை

கிணற்றுத் தவளைபோல்
முடிங்கிக்கிடந்த உணர்வுகள்
மின்னல் போன்ற உன் பார்வையினால்
கொஞ்சம் கொஞ்சமாக
திறக்க ஆரம்பித்தது

காதல் என்பது வெறும்
காமமென்று இருந்த நான்
எட்டாக் கனியான காதலை
தொட்டுப்பார்க்க எட்டினேன்

காலம் காலமாய்
சரித்திரம் படைத்த
காதலர்கள் மத்தியில்
நானும் காதலித்தேனுனை

எதிர்காலத்தில்
நினைவுச் சின்னம்
இல்லையென்றாலும்
நிம்மதியாக வாழ எனக்கென்றொரு
மனங்கவர்ந்த மகாராசனானாய்

உயிர் மூச்சுள்ளவரை
ஊனமின்றி வாழும் என்காதல்.

07நட்பு நதி

வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கிறது
நட்பு நதி
கரை இரண்டான நம்மை தொட்டபடி

வெள்ளிவிழாவைத் தாண்டி
வெற்றி நடைப்போட்டுக்கொண்டிருக்கும்
நமது நட்புக்கு
நரைக்கத் தொடங்கியிருக்கிறது.
ஆனால். . .
இதுவரை-
மனக்கசப்பேதுமில்லை.
காரணம்-
நாம் சண்டையிட்டுக்கொள்வதே
யார் முதலில் விட்டுக்கொடுப்பது
என்பதற்காகத்தானே!

பெருங்கால இடைவெளிக்கு பின்
நம்மை பார்ப்பவர்கள்
ஆச்சரியமாய் கேட்கிறார்கள்
"இன்னுமா நீங்க
ஒன்னா இருக்கீங்க?" என்று.
நமக்கு மட்டும் தெரியும்
நம் நட்பின் ஆயுளை
கூட்டுவதற்காக
நாம் எந்த சிரத்தையும்
எடுத்துக்கொள்வதில்லையே
உண்மையாய் இருத்தலைத்தவிர.

08கலியுகத்தில் காதல்.. .

காதலிக்க ஆட்கள் தேவை
என்ற விளம்பர பலகையோடே
திரிகிறார்கள் சிலர்

அவர்களுக்கு -
அறிவு அற்றம் காக்கும் கருவியோ
இல்லையோ
காதல் பொழுதுபோக்கும் கருவி

செல்பேசியில் -
"நான் உங்க காதலி பேசறேன்"
என்றால்-
"காதலி சரிதான். பேரு?"
என்கிறான் ஒருவன்.
"நான் உன் லவ்வர் செந்தில் பேசறேன்"
என்றால் -
"சி"யா "வி"யா
என்கிறாள் ஒருவள்.

பொய்யும் பகட்டும்
சூதும் வாதும்
கோலோச்சுகின்ற
இயந்திர உலகில்
கற்பிழந்து நிற்கிறது
காதல்.

ம்ம்ச்ச்.
உண்மையான காதலுக்கு
குரல்கொடுக்க யாருளரோ?

சற்று பொறுங்கள்!
வெளியில் யாரோ
குரல்கொடுக்கிறார்கள். . .

"ஓ. . .காதல் வாங்கலியோ. . .காதல்"

09எட்டும்வரை. . .

உலகில்-
தமிழர்களின் எண்ணிக்கை
மிக மிகக் குறைவு.

வாக்கியம் தாக்கி
அதிர்ச்சியின் மடியில்
ஆச்சரியமாய் விழாதீர்!
தமிழர்தொகை
கணக்கெடுப்பு பட்டியிலை
சரி பார்க்க எழாதீர்!

என் கூற்றுபடி
உயிரோடு இருப்பவர்கள் எல்லாம்
தமிழர்கள் இல்லை.
உணர்வோடு இருப்பவர்கள் மட்டுமே
தமிழர்கள்.

ஆம்.
உலகில்-
தமிழர்களின் எண்ணிக்கை
மிக மிகக் குறைவு.

தமிழா..
தூங்கிக்கிடந்ததுபோதும்
எழு!
உன்னை புதுக்கிக்கொள்ள
உணர்வு குளத்தில்போய்
விழு!

"தமிழர்கள் இளிச்சவாயர்கள்"
என்று பேசுவதை
நீ முதலில் நிறுத்து.
"தமிழர்கள் ஒற்றுமையற்றவர்கள்"
என்று நிலவும் கருத்தை
உன் நடத்தையால் திருத்து.

உலகமொழிகள்
உன்னிடம்
கையேந்துமளவு
உயர் இலக்கியம் செதுக்கு
நம் இனமொழி வரலாற்றை
ஆர்வத்தோடு அறிந்துகொள்ள
உன் ஆயுளின்
ஒரு பங்கு ஒதுக்கு

மூடப்பழங்கதைகளை மற!
தினம்-
புத்தம் புதியதாய் பிற!

எழு!
உயர எழு!
நீ எழவேண்டியது
உலகப்பந்து
உன் கைக்கு
கிட்டும்வரையல்ல. . .
பிரபஞ்சத்தின்
பின்முதுகு
உன் கைக்கு
எட்டும்வரை.

10ஆக்ரா அனாதையாகிறது

ஒரு சமாதியே இங்கு சமாதியாகக் காத்திருக்கிறது!
விருட்சம் ஒன்று விரகாகக் காத்திருக்கிறது!
சரித்திரம் ஒன்று சரியக் காத்திருக்கிறது!
அதிசயம் ஒன்று அஸ்தமிக்கக் காத்திருக்கிறது!

கல்லறையாய் நின்று காதல் சொன்ன மாளிகை
சில்லரைய்யை விழுந்து சிதறப் போகிறது!

கல்லறையில் எழுதப்படும் தோற்றம்-மறைவு - முதன்முறையாக
ஒரு கல்லறைக்காக எழுதப்படப் போகிறது!

காதலின் தூய்மையை இக்கல்லறை விளக்கும்!
காதலற்கெல்லாம் இது கலங்கரை விளக்கம்!
ஈடில்லாப் பெருமையை இனி ஆக்ரா இழக்கும்!
இந்தியர்க்கெல்லாம் இனி இதயம் வலிக்கும்!

யமுனை கேடிழைத்ததால்
காதல் தேவதை தன் வீடிழக்கிறாள்!

நதிக்கரை நகரம் - இனி
நாதியற்ற நரகம்!
தாஜ்மஹால் இல்லாத ஆக்ரா - இனி
இந்தியாவின் சஹாரா!

பொறியியல் சிற்பிகளுக்கோர் பொதுவான வேண்டுகோள்!
அந்த அற்புத மாளிகையை
அன்னாந்து பார்க்க மட்டுமே எங்களுக்கு சம்மதம்!
அதைக் குனிந்து பார்க்கும் கொடூரத்தை
குருதி சிந்தியேனும் தவிர்த்திடுங்கள்!

வில்விடுத்த அம்பாகச் செயல்படுங்கள் விறைந்து!
எங்கள் விசும்பலுக்கெல்லாம் உங்கள் விஞ்ஞானமே மருந்து!

11காதல்

தடைகள் உடைக்கப்பட்டு
மறுப்புகள் ஒதுக்கப்பட்டு
உதித்திடும் சூரியன் போல்
உதயமாகின்றது காதல்......

உரயாடலுக்கு சொந்தமான
இதழ்களுக்கு.............
மௌனத்தை அழித்து
மௌனத்தின் சொந்தமான
இரு வழிகள் பேசிக்கொளளும்
சாம்ராஜ்யம் காதல்....................
ஜாதி,மதம்,நிறம்,பேதம்
பார்ப்பதில் இல்லை காதல்
அழகான(பெண்னை,ஆணை)
அன்பாக பார்ப்பதில் இல்லை
காதல்........................................
அன்பான (பெண்னை,ஆணை)
அழகாக பார்ப்பதே காதல்

வெற்றி, தோல்வி இரண்டிலும்
சுகம் கான முடிவதும் காதலில் மடடுமே.
மேலும் பொருளடக்கம் வேணும் எனில்
நீயும் காதலித்துப்பார்.

12நட்பு

என்னுடன் பிறந்திடாத
தன்னுயிர் பிறப்பு நட்பு
தன்னுயிர் ஈர்த்து
நட்புயிர் காத்திடும் நட்பு

நகமும் சதயுமாய் ஒன்றாய்க்கலந்து
நமக்குள் ஏது நீ, நானென்ற
எண்ணங்கள் கழைந்து
நாளெல்லாம் கூடி வாழ்நதிடுமே..

நட்பு நாம் எழுதும் நாட்குறிப்பு
நாட்களும் தேவையில்லை
நேரங்களும் தேவையில்லை
எப்போது வேண்டுமானாலும்
நாம் படித்துக் கொள்ளும்
வெள்ளக்காகிதங்களே நட்பு

நட்பெனும் ஆயுத முனையில்
சிறைப்படாதவர்கள் உண்டோ
நட்பெனும் ஆயுதத்தால் சில
சிறைகளும் நசுக்கப்பட்டதுண்டு

ஏன்.....
உயிருக்குயிரான காதலையும்
உதறித்தள்ளிடும் வலுவான
சக்தியும் இந்நட்புக்கே நட்புக்கே..

உறவுகளில் உன்னதமானது
உரசிப்பார்க்க அவசியமற்றது
உயிரிலும் மேலானது நட்பு

விட்டுக்கொடுத்தலின் விலாசம்
நட்பின் பாதச்சுவடுகளில்
பதிந்து கிடக்கிறது எடுத்துக்கொள்ளுங்கள்....

13காதல்

அன்பாய் எனக்குள் நுளைந்து
நிலவாய் ஒளி வீசும் தேவதையே...
காதல் என்றால் வெகுதூரம் சென்ற என்னை
உன் ஒருவழிப் பார்வையில்
ஈர்த்த மாயமென்ன

உன் முகப் பிரதி பூக்களில் பார்த்தேன்...
நிலவுக்குள் நீ இருப்பதை பார்த்தேன்...
உனக்குள் நான் இருப்பதை எப்போது
பார்ப்பேன்...

ரகசிங்கள் பெண்களிடம் தங்காதாமே!
இன்னும் இந்த ரகசியம் மட்டும்
சிதம்பர ரகசியமாய் இருப்பது ஏனோ?

சின்னச் சிரிப்பு உளி ஒன்றெடுத்து
என் இதயத்தில் நம் காதலை
செதிக்கிவிடு...

இந்த விடுமுறைக்குள்
விடையை சொல்லிவிடு.

14இன்றய நிலை சமகாலம்.-

பூமியில் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள்?
ஒவ்வொரு நாட்டினதும்
குடிசன மதிப்பீடுகளை விரித்தால்
வந்து சேரும் விடை

வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன
என்று தெரியுமா யாருக்காவது,?
தெரிந்தால் தயவு செய்து
வெளியே சொல்லிவிடாதீர்கள்
ஏன் தெரியுமா.?
நெல் விளையும் பூமிக்கு
வரம்பு வைத்தது போல
நட்சத்திரம் விளையும் வானத்துக்கும்
வரம்பு வைத்து விடுவார்கள்
மனிதர்கள்

பூமியில்தான் எத்தனை துண்டு துண்டுகள்?
கண்டம்....கண்டங்கள்
தேசங்கள்... நாடுகள்
நகரங்கள்....கிராமங்கள்

நாடுகளுக்குள்ளேயும்
நாலாயிரம் கோடுகள்
இருக்கின்றன இந்தபூமிக்கு
வானத்தை ஆள்பவன்
இறைவன்
ஆதனால்தான்
வானத்தில்
கோடுகளும் இல்லை
கூறுகளும் இல்லை

பூமியை ஆள்பவன் மனிதன்
அதனால்தான்
பூமியில்
கோடுகளும் இருக்கின்றன
கூருகளும் இருக்கின்றன

வானம் சொந்தம் எல்லோருக்கும்
பூமி சொந்தம் எல்லோருக்குமா.?
பூமி எல்லோருக்கும்
சொந்தம் இல்லாததால்தான்
பூமியை ஆளுக்காள்
சொந்தம் கொண்டாடுவதில்
இத்தனை கோடுகள்....
இத்தனை கூறுகள்...

15சமகாலம்;

ஆண்டாண்டாக அரவணைத் தாளும்
அந்த வளிகள்
அனைத்தும் காத்து
இந்த உலகில் புதுவழி செய்வோம்..

இப்படிச் சொன்னவர்
எங்களின் தாத்தா..!
அந்த வழிகள் அப்படி இருக்க
அந்த வழிகள்
அனைத்தும் தாண்டி
இந்த உலகில் புதுவழி செய்வோம்”
இப்படிச்சொன்னவர்
எங்களின் தந்தையார்..!

16விடியாமலே இன்னும்.

“அந்த வழிகள் அனைத்தும் அறுத்து
அந்த வழிகள்
அனைத்தும் திருத்தி
இந்த உலகில் புதுவழி செய்வோம்
இன்றைய இளைஞர்

’இரத்தக் களரி’ ஒன்று நிகழும்
இருள்கள் யாவும் இறந்து மறையும்
வருத்தப் பட்ட மக்கள் வாழ்வு
வளங்கள் பெற்று மகிழ்சி காணும்
இப்படி அந்த
இளைஞர் இரைந்து
விரைந்து நடந்தனர்.!
சமகாலம் என்று..

17காதலின் ஏக்கம்

காதலை விதைத்துச் சென்றவனே...
உனது திமிரின் பார்வை
என்னை கடக்கும் போதெல்லாம்
எரிந்தே போகிறேன்டா...

நீ என்னைக் கடக்கும் போது
மனதுக்குள் ஒரு சுனாமியாய்
இதயத் தூடிபபுட...

துடிக்க வைப்பதில்
காக்க வைப்பதில்
ஆணின் குணம்
பிறவிக் குணமாம்
நீயும்அந்த ரகமா ?
அந்த இனமா ?

இன்னும் ஏன்டா மௌனம்...
சொல்லித்தான் தொலைத்தால் என்ன
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
நான் இன்னும் வாழ்வேன்...

என்னை காதலிப்பதாய்
ஒரு சொல் சொல்லடா
இது வரை இல்லாமல் போனால்
இனியாவது காதல் கொள்ளடா.

என்னை கொல்லாமல்
சொல்லடா
நான் வாழ்வதின் அர்த்தம்
உன் ஒரு
சொலில் தானடா...

18நீ இல்லாத வாழக்கை

உனக்குள் பாதி நானாய்
எனக்கு பாதி நீயாய்...
உலகமே நமக்குள் மீதியாய்
நீ என் அருகில் இருந்தால்

என் சுவாசத்தில் உன் வாசமே
வாசிக்கப் படுகிறது
உன் நேசிப்புக்கு
எனது தோட்டத்து
பூக்களும் அலைகிறது
அந்த நிலவை போல ...

இயற்கையே இறக்கை கட்டி
உன்னுடன் அலையும் போது
எனக்கே என் மீது கர்வம்
இந்த அழகியின்
காதலுக்கு உரியவன்
என்பதால்...

காதலை நான் நேசிக்கிறேன்
உன்னை எனக்கு தந்ததால்....
உன்னையே சுவாசிக்கிறேன்
நீ என் உயிர் என்பதால்...

மரணம் கூட நம் காதல் முன்
தோற்றுப் போகணும்...
பிரியும் உயிரும் ஒன்றாய்
போகணும்
நீ இல்லாத வாழக்கை எனக்கு
ஏது?

19நட்பு

கள்ள நகை தனை
உதட்டினில் கொண்டு
உள்ளத்தில் நட்பு எனும்
கள்ளமில்லா நட்பினை
நெஞ்சினில் சுமந்து
உறவுப் பாலம்
அனுமன் கூட்டம்
கட்டிய
பாலத்தினை விட எந்தன்
நட்புப் பாலம்
உறுதியானது.

சோர்விலும், அயர்ச்சியிலும்
இன்பத்திலும், துன்பத்திலும்
இரவிலும் பகலிலும்
எந்த வேளையிலும்
நட்பிற்கு முன்னுரிமை
கொண்டு
ஆபத்பாந்தவனாக
அனாதைரட்சகனாக
உதவிக்கரம் கொண்டு
நேசத்தினை
நெஞ்சத்தினிலே வைத்து
தேடியும் தேடாமலும்
ஓடிவருவது நட்பெனும்
அன்பினை

இதயத்தினிலே
சுமந்து
செயலில் புனிதத்தினை
சிலுவையாய்
சுமந்து
நெருப்பிலிட்ட தங்கமாய்
புடம் போட்டாலும்
நட்பினை விலை பேச முடியுமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Empty Re: சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

Post by முனாஸ் சுலைமான் Sat 10 Dec 2011 - 14:20

14இன்றய நிலை சமகாலம்.-

பூமியில் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள்?
ஒவ்வொரு நாட்டினதும்
குடிசன மதிப்பீடுகளை விரித்தால்
வந்து சேரும் விடை

வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன
என்று தெரியுமா யாருக்காவது,?
தெரிந்தால் தயவு செய்து
வெளியே சொல்லிவிடாதீர்கள்
ஏன் தெரியுமா.?
நெல் விளையும் பூமிக்கு
வரம்பு வைத்தது போல
நட்சத்திரம் விளையும் வானத்துக்கும்
வரம்பு வைத்து விடுவார்கள்
மனிதர்கள்

பூமியில்தான் எத்தனை துண்டு துண்டுகள்?
கண்டம்....கண்டங்கள்
தேசங்கள்... நாடுகள்
நகரங்கள்....கிராமங்கள்

நாடுகளுக்குள்ளேயும்
நாலாயிரம் கோடுகள்
இருக்கின்றன இந்தபூமிக்கு
வானத்தை ஆள்பவன்
இறைவன்
ஆதனால்தான்
வானத்தில்
கோடுகளும் இல்லை
கூறுகளும் இல்லை

பூமியை ஆள்பவன் மனிதன்
அதனால்தான்
பூமியில்
கோடுகளும் இருக்கின்றன
கூருகளும் இருக்கின்றன

வானம் சொந்தம் எல்லோருக்கும்
பூமி சொந்தம் எல்லோருக்குமா.?
பூமி எல்லோருக்கும்
சொந்தம் இல்லாததால்தான்
பூமியை ஆளுக்காள்
சொந்தம் கொண்டாடுவதில்
இத்தனை கோடுகள்....
இத்தனை கூறுகள்...

அனைத்தும் சூப்பராக இருக்குது சார் இதில் எது வெற்றிக்குரியது எடுத்து விட்டீர்களா சார்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Empty Re: சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

Post by jasmin Sat 10 Dec 2011 - 14:26

தேர்ந்தெடுத்து விட்டார்கள் ஆனால் முடிவுகள் அறிவிக்கத்தான் இந்திய தேர்தல் ஆணையம் மாதிரி கொஞ்சம் நாளாகுது ....பொருத்தது பொருத்து விட்டோம் பார்க்கலாம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Empty Re: சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

Post by அப்புகுட்டி Sat 10 Dec 2011 - 14:41

அனைத்துக்கவிதைகளும் அருமையாக உள்ளது வெற்றி பெற வாழ்த்துக்கள் யார் பாக்கிய சாலியோ என்னையும் கொஞ்சம் கவனித்துக்கொள்ளுங்கள் வெற்றியாளரே :!+:
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Empty Re: சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Dec 2011 - 16:06

அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும் முடிவுகள் விரைவில் அறியத்தரப்படும் காத்திருங்கள் பொறுத்திருங்கள்

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Empty Re: சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

Post by puthuvaipraba Sat 10 Dec 2011 - 16:17

அச்சச்சோ . .பதட்டமா இருக்குதே. . . "விரைவில்"ன்னா. . . இன்னிக்கா ? நாளைக்கா. .? நாளைமறுநாளா. . .?

puthuvaipraba
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Empty Re: சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

Post by நண்பன் Sat 10 Dec 2011 - 16:20

puthuvaipraba wrote:அச்சச்சோ . .பதட்டமா இருக்குதே. . . "விரைவில்"ன்னா. . . இன்னிக்கா ? நாளைக்கா. .? நாளைமறுநாளா. . .?
உங்கள் வரவைக் காண வில்லை தொடர்ந்து இணைந்திருங்கள் உறவே நீங்கள் கூட வெற்றியாழராக இருக்காலம் வாழ்த்துக்கள் நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். 331844 சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். 331844

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Empty Re: சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

Post by puthuvaipraba Sat 10 Dec 2011 - 16:37

நிச்சயமா இணைந்திருப்பேன். உறவினரின் திருமண வேலையால். . .இடைவெளி.

puthuvaipraba
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Empty Re: சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Dec 2011 - 16:38

puthuvaipraba wrote:நிச்சயமா இணைந்திருப்பேன். உறவினரின் திருமண வேலையால். . .இடைவெளி.

நிச்சயமாக எமது பயணம் சிறக்கட்டும் சேனையுடன் கலந்து மகிழலாம்

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Empty Re: சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

Post by நண்பன் Sat 10 Dec 2011 - 16:47

puthuvaipraba wrote:நிச்சயமா இணைந்திருப்பேன். உறவினரின் திருமண வேலையால். . .இடைவெளி.
சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். 517195 சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். 517195

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Empty Re: சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

Post by நண்பன் Wed 21 Dec 2011 - 8:44

போட்டிக்கு வந்து சேர்ந்த கவிதைகள் சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். 2650110983

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Empty Re: சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

Post by பார்த்திபன் Wed 21 Dec 2011 - 8:52

நண்பனுக்கு நன்றிகள்! :”@:
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Empty Re: சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

Post by நண்பன் Wed 21 Dec 2011 - 8:54

Parthi wrote:நண்பனுக்கு நன்றிகள்! சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். 517195
சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். 517195 சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். 517195 சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். 741156

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Empty Re: சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

Post by jasmin Wed 21 Dec 2011 - 10:44

கவிதகள் நன்றாகத்தான் இருக்கின்றன ஆனால் இதில் தலைப்பு மட்டும் போட்டால் போதாது யார் எழுதியது என்றும் போட்டால் நல்லது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Empty Re: சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

Post by நண்பன் Wed 21 Dec 2011 - 10:46

jasmin wrote:கவிதகள் நன்றாகத்தான் இருக்கின்றன ஆனால் இதில் தலைப்பு மட்டும் போட்டால் போதாது யார் எழுதியது என்றும் போட்டால் நல்லது
அது சரியாகப்பட வில்லை காரணம் அவர்கள் வருத்தப்படுவார்கள் இது எனது கருத்து நிறுவனர்தான் உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Empty Re: சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

Post by *சம்ஸ் Wed 21 Dec 2011 - 13:27

jasmin wrote:கவிதகள் நன்றாகத்தான் இருக்கின்றன ஆனால் இதில் தலைப்பு மட்டும் போட்டால் போதாது யார் எழுதியது என்றும் போட்டால் நல்லது
கவிதைகள் படிப்போம் யார் என்பது வேண்டாம் என்று நினைக்கிறேன்.சாரி ஜாஸ்மின் )(( )((

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Empty Re: சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

Post by ராகவா Wed 13 Feb 2013 - 9:55

அப்ப..ஒவ்வொரு கவியும் மிக அருமை...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Empty Re: சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

Post by மீனு Wed 13 Feb 2013 - 10:04

சந்தோசமான தினங்கள் அது..........
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Empty Re: சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

Post by ராகவா Wed 13 Feb 2013 - 10:09

மீனு wrote:சந்தோசமான தினங்கள் அது..........
இப்ப கிடையாதா,,மீனு...
நானும் அந்த மகிழ்ச்சி இன்னும் மேலும் வளர வேண்டும் ஆசைப்படுகிறேன்... :+=+:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Empty Re: சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

Post by மீனு Wed 13 Feb 2013 - 10:11

அச்சலா wrote:
மீனு wrote:சந்தோசமான தினங்கள் அது..........
இப்ப கிடையாதா,,மீனு...
நானும் அந்த மகிழ்ச்சி இன்னும் மேலும் வளர வேண்டும் ஆசைப்படுகிறேன்... :+=+:
சம்ஸ் அண்ணனிடம் கேட்கணும் :!#:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Empty Re: சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

Post by ராகவா Wed 13 Feb 2013 - 10:15

மீனு wrote:
அச்சலா wrote:
மீனு wrote:சந்தோசமான தினங்கள் அது..........
இப்ப கிடையாதா,,மீனு...
நானும் அந்த மகிழ்ச்சி இன்னும் மேலும் வளர வேண்டும் ஆசைப்படுகிறேன்... :+=+:
சம்ஸ் அண்ணனிடம் கேட்கணும் :!#:
நான் கேட்டேன்...
அவர் பிறகு பார்க்கலாம் என்றார்; ஆனால் அனுமதில் இருந்தால் நானே நடத்துவேன் ;மாதம் ஒரு போட்டி,பரிசு...
அவரிடம் இப்ப பதில இல்ல..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Empty Re: சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

Post by மீனு Wed 13 Feb 2013 - 13:33

அச்சலா wrote:
மீனு wrote:
அச்சலா wrote:
மீனு wrote:சந்தோசமான தினங்கள் அது..........
இப்ப கிடையாதா,,மீனு...
நானும் அந்த மகிழ்ச்சி இன்னும் மேலும் வளர வேண்டும் ஆசைப்படுகிறேன்... :+=+:
சம்ஸ் அண்ணனிடம் கேட்கணும் :!#:
நான் கேட்டேன்...
அவர் பிறகு பார்க்கலாம் என்றார்; ஆனால் அனுமதில் இருந்தால் நானே நடத்துவேன் ;மாதம் ஒரு போட்டி,பரிசு...
அவரிடம் இப்ப பதில இல்ல..
பரிசி கொடுப்பதற்கு சேனையில் ஆட்கள் நிறைய உள்ளார்கள் அக்கா கொடை வள்ளல் முனாஸ் சுலைமான் ஹாசிம் அப்புகுட்டி நண்பன் கலைநிலா எல்லாரும் பெரிய ஆட்கள் பரிசு கொடுப்பாங்க. நீங்க போட்டி நடத்துங்க ஒரு கை பார்த்திடலாம் :joint:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய  கவிதைப் போட்டிக்கான கவிதைகள். Empty Re: சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum