சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Khan11

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது.

2 posters

Go down

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Empty செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது.

Post by *சம்ஸ் Wed 19 Jan 2011 - 13:34

அடிப்படையில், உலகின் சகல பாகங்களையும் சென்றடையும் வகையில் காணப்படும் ஊடக வளர்ச்சி இதில் பெரும் பங்கு வகிக்கிறது.
ஆரம்பித்து வைத்த எதிர்பார்ப்புகளை நம்பிக்கையுடன் நிறைவு செய்து வைத்த பெருமை நாசா வின் MARS EXPLORATION ROVER MISSION பெற்றுக்கொள்கிறது.


செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீருக்கான ஆராய்ச்சியை விரிவு படுத்தும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட நாசாவின் முயற்சி குறிப்பிட்ட காலத்திற்கும் மேலதிகமாக வெற்றிகரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

Spirit,Opportunity என்று பெயரிடப்பட்ட இரண்டு தானியங்கி இயந்திரங்கள் வெற்றிகரமாக தகவல்களை பூமிக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றன.

இந்த வெற்றியின் நிமித்தம் செவ்வாய்க் கிரகம் பற்றிய புதிய ஆய்வு ஒன்றுக்கு அடித்தளமிடப்பட்டிருப்பதாக ஆய்வாளர்களும்,விஞ்ஞானிகளும் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

இதில் பரவலாக எதிர்பார்க்கப்படும் விடயமாகக் காணப்பட்ட செவ்வாயில் தண்ணீர் என்று தலைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி செவ்வாயில் உயிர்கள் என்ற அளவுக்கு வேகமாக முன்னேறி வருகிறது.

இவற்றிற்கு அடிப்படைக் காரணமாக தற்போது வெற்றியளித்திருக்கும் நாசாவின் முயற்சி காணப்படுகிறது.

செவ்வாய்க் கிரக ஆராய்ச்சி என்பது ஒரு நீண்ட கால செயற்பாடாகும்.

தொழிநுட்ப வளர்ச்சியோடு இணைந்து வேற்றுக் கிரகங்கள் பற்றிய ஆராய்வுகளை விஞ்ஞானிகள் சிரத்தையுடன் மேற்கொண்டு வருகிறார்கள்.

பிரபஞ்சத்தில் மனிதர்கள் தனியாக வாழ்கிறோமா ? உயிரினங்கள் வேற்றுக் கிரகங்களில் வாழ்ந்தனவா ? அவை அழிந்து போயிருந்தால் அவற்றுக்கான காரணங்கள் என்ன ? போன்ற ஆச்சரியமூட்டும் விடயங்களை அறிந்து கொள்ளும் நோக்கங்களின் அடிப்படையில் இதுவரை விண்வெளியில் மனிதர்கள் பல சாதனைகளை செய்து வருகின்றனர்.

எனினும், செவ்வாய்க் கிரகம் மனித உயிர்கள் அல்லது பூமியைப் போன்ற உயிரின வாழ்க்கைக்கு சாதகமான ஒரு இடமாக பண்டைய காலத்தில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாகக் காணப்படுகிறது.



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Empty Re: செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது.

Post by *சம்ஸ் Wed 19 Jan 2011 - 13:35

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Inset-mars

செம்மை நிறத்தில் காணப்படும் கிரகத்தினுள் தற்போது ஊடறுத்துள்ள தானியங்கி இயந்திரங்கள் பல பயன்தரும் படங்களை அனுப்பிக்கொண்டிருக்கின்றன.

தமது பணியை அவை நிறைவேற்றுவதற்காக செயற்கையான அறிவு அவற்றிற்கு வழங்கப்பட்டிருக்கிறது [ Artifial Intelligence (AI) ].

சூரியனிலிருந்து 227,936,640 கி.மீ தூரத்தில் காணப்படும் செவ்வாயின் பாறைகள்,நிலம் மற்றும் அமைப்பு போன்ற புவியியல் விடயங்கள் ஆழமாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இவ்வேளையில் பூமியை வந்து அடையும் செவ்வாய்க் கிரகத்தின் படங்கள் அவை பற்றிய எதிர்பார்ப்பினையும் ஆவலையும் அதிகரித்து வருகிறது.
செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Merb_ncam_site38_pos97_anaglyph-B305R1_th418
மேற்காணும் படம் கடந்த மாதம் (நவ -29) Opportunityயிடமிருந்து பெறப்பட்டு, இறுதியாக இதுவரை நாசாவினால் வெளியிடப்பட்ட படமாகும்.

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. _40591221_merid3_nasa_416

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆழமான ஆராய்வுகள் மூலம் மனித இனத்தின் தோற்றம்,வளர்ச்சி பிரபஞ்சத்தின் மறைமுகமான பல விடயங்களுக்கு விடை கிடைக்கும் என்று நம்பும் விஞ்ஞான உலகம் இத்துடன் வரையறுக்கப்படவில்லை.

சமகாலத்தில் பல சாதனைகளை நோக்கி அவர்களது பயணம் தொடர்கிறது.

சனிக்கிரகத்தையும் விஞ்ஞானம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. Cassini ஓடம் பற்றிய ஆரம்பத்தகவல்கள் நிலாமுற்றத்தில் - அழுத்துக [by: றெனிநிமல்]

Cassini யின் பயணம் எதிர்பார்த்த அளவில்,திட்டமிட்ட படி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

எனவே, Cassini ஓடம் தாங்கிச் செல்லும் Huygens தானியங்கி இயந்திரம் விரைவில் சனிக்கிரகத்தின் சந்திரன்களில் பெரியதான Titan ஐ சென்றடையத் தயாராக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, விஞ்ஞானத்தின் வளர்ச்சி விடை தெரியாத பல புதிர்களுக்கு விடை காண எல்லையில்லாமல் பயணிக்கிறது.

இதன் சாதக பாதகங்களை தொடரும் காலங்களில் உலகம் அறிந்துகொள்ளும்.
செவ்வாய்க் கிரக ஆராய்வின் ஆரம்பம் மற்றும் இதுவரையான தகவல்களை தொடர்ந்து இணைத்துக்கொள்கிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Empty Re: செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது.

Post by *சம்ஸ் Wed 19 Jan 2011 - 13:37

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Planets_selectormap

ஏதோ ஒரு காலத்தில் மனித இனத்தின் வாழ்விடமாக செவ்வாய்க் கிரகம் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் விஞ்ஞானிகளிடம் தொடர்ந்து வருகிறது.

எனவே, செவ்வாய்க் கிரக ஆராய்ச்சியினை ஆழமாக மேற்கொள்வதில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் NASA, ஐரோப்பிய ஆய்வு மையம் ESA போன்றனவும் ரஷ்யா,இங்கிலாந்து,இத்தாலி,சீனா ஆகிய நாடுகளும் பெரும் சிரத்தையுடன் ஈடுபட்டு வருகின்றன.

செவ்வாய்க் கிரகத்தின் ஆராய்ச்சிப் பணியில் பல திருப்பங்கள் தற்போது அறியப்பட்டு வருகிறது.

முதன் முதலாக செவ்வாயினை நெருங்கிய பெருமை Mariner 4 என்ற விண்வெளிக் கலத்தைச் சாருகிறது.
செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Mariner3-4
1965 ம் ஆண்டு ஜுலை மாதம் 15ம் திகதி செவ்வாயை நெருங்கிய Mariner 4 (9,846 கி.மீ) பயனுள்ள படங்களைப் பெற்றுத் தந்தது.

1962 ம் ஆண்டிற்கும் 1973ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் Mariner 1 முதல் 10 வரை பெயரிடப்பட்ட பல விண்வெளிக் கலன்களை நாசா உருவாக்கியிருந்தது.

இவற்றில் Mariner 3 மற்றும் Mariner 4 ஆகிய தயாரிப்புக்கள் பெயர் சொல்லும் அளவில் அறியப்பட்டவையாகும்.

Mariner 3 செவ்வாய் நோக்கிய தனது எட்டு மாத பயணத்தினை நிறைவு செய்ய முடியாது செயலிழந்திருந்த தருணத்தில், 1964 - நவம்பர் - 28ம் திகதி Mariner 4 விண்ணுக்கு ஏவப்பட்டது.

குறுகிய காலமே செயற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த Mariner 4 வியக்கத்தக்க வகையில் மூன்று ஆண்டுகள் சூரிய வட்டப் பாதையில் தனது பணியினை செய்து முடித்தது.

Mariner 4 வின் செயற்பாடுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகவும், அங்கிருந்து கிடைக்கப்பெறும் சமிக்ஞை அலைவரிசையைத் தெளிவாகப்பெற்றுக்கொள்ளவும் கட்டுப்பாட்டாளர்கள் பல வழிகளில் அநுபவங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இது பிற்காலத்தில் செவ்வாய்க்கிரகத்துடனான றேடியோ தொடர்புகளுக்கு பெரிதும் உதவியது.
செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Mariner6-7


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Empty Re: செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது.

Post by *சம்ஸ் Wed 19 Jan 2011 - 13:38

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Mariner8-9

செவ்வாய்க்கிரக ஆராய்வில் பல முக்கிய திருப்பங்களைப் பெற்றுத்தந்த நாசாவின் இன்னும் ஒரு பயன்மிக்க திட்டமாக அமைந்திருந்தது Mariner 9 ன் செவ்வாய் நோக்கிய பயணம்.

Mariner 9 இற்கு முந்திய Mariner 8 புறப்படும் போது ஏற்பட்ட கோளாறினால் அத்திட்டம் கைவிடப்பட்டிருந்தது.

தற்காலத்தில் மேற்கொள்ளப்படும் பல ஆய்வுகளுக்கு உறுதியான தகவல்களைத் திரட்டித்தந்த பெருமையும் இதற்கு உண்டு.

இதேவேளை, வேற்றுக்கிரகம் ஒன்றினை சுற்றி வந்து செயற்பட்ட முதலாவது விண்கலமாகவும் Mariner 9 காணப்படுகிறது.

Mariner 9, 1971 ம் ஆண்டு மே மாதம் 30ம் திகதி செவ்வாய் நோக்கி ஏவப்பட்டு அதே வருடம், நவம்பர் மாதம் 11 - 13 ம் திகதியளவில் செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையுடன் இணைந்து கொண்டது.

எனினும், குறிப்பிட்ட காலத்தில் செவ்வாய்க் கிரகத்தில் ஏற்பட்டிருந்த எதிர்பாராத கால நிலை மாற்றத்தினால் செவ்வாய்க்கிரகம் அடர்த்தியான தூசு படிந்த மேற்பரப்புடன் காணப்பட்டிருந்தது.

எனவே, உடனடியாக வேலைகளை ஆரம்பிக்க முடியாதிருந்த Mariner 9 ன் செயற்பாடுகளைக் கட்டுப்பாட்டாளர்கள் 3 மாத கால அளவுக்கு பின்போட்டிருந்தனர்.

எனினும், செவ்வாயின் சுற்று வட்டப்பாதையில் திட்டமிட்ட படி பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கால நிலை சாதகமாக அமைந்த போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட Mariner 9ன் செயற்பாடுகள் மூலம் செவ்வாயின் 80 வீதமான பகுதி தொடர்பான தகவல்கள் பெறப்பட்டிருந்ததாக நாசாவின் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

செவ்வாய்க் கிரகத்தில் காணப்படும் பள்ளத்தாக்குகள்,எரிமலை வாயில்கள்,
நீர் வடிந்த நிலப்பரப்பு என்ற பல வகையான தகவல்களைக் கொண்ட சுமார் 7,329 படங்களை Mariner 9 பூமிக்கு அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mariner 9ன் தகவல்கள் மூலமே செவ்வாய்க் கிரகத்தில் கால நிலை மாற்றங்களை அவதானிக்க முடிந்திருந்தது.

காற்று,மூடுபனி நிலைகள், கடலரிப்பு அல்லது அரிநிலைகள் இப்படி பல பெளதீகவியல் தகவல்களையும் பெற்றுக்கொடுத்திருந்தது Mariner 9.

இதேவேளை செவ்வாயின் சிறிய துணைக்கோள்களான Phobos மற்றும் Deimos இன் படங்களையும் இத்தடவை பெற்றுக்கொள்ள முடிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Empty Re: செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது.

Post by *சம்ஸ் Wed 19 Jan 2011 - 13:40

செவ்வாய்க் கிரகத்தின் இயல்பு நிலையைக் கண்டறியும் நோக்கத்தினை நெருங்கி வந்திருந்த நாசாவின் அடுத்த கட்ட நடவடிக்கையாக அமைந்திருந்தது செவ்வாயில் தரையிறங்குதல்.

பாதுகாப்பாக இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த பாரிய முயற்சிகளை மேற்கோண்ட பின் நாசாவின் Viking திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் மூலம், Viking 1,Viking 2 என்ற இரண்டு முழுமையான விண்கலன்களை நாசா தயாரித்திருந்தது.

செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் பயணிக்கவும், அதேநேரம் தரையிறங்க ஒரு பகுதியாகவும் இணைத்து தயாரிக்கப்பட்டிருந்தது Viking விண்வெளி ஆய்வு கலம்.

செவ்வாயில் இப்போதும் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்ற ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு பத்து நாட்கள் இடைவெளியில் தனித்தனியாக செவ்வாய் நோக்கி ஏவப்பட்டிருந்தன Viking 1 மற்றும் Viking 2.

1975 ம் ஆண்டு ஓகஸ்ட் 20 ம் திகதி தனது பயணத்தை ஆரம்பித்த Viking 1
1976 ம் ஆண்டு ஜுன் மாதம் 19ம் திகதியளவில் செவ்வாயின் சுற்று வட்டப்பாதையை அடைந்திருந்தது.

சுமார் ஒரு மாத கால அளவு பயணத்தின் போது அனுப்பப்பட்ட படங்களிலிருந்து Viking 1 னின் தரையிறங்கும் பகுதி பாதுகாப்பான ஒரு இடத்தினை நோக்கி செலுத்தப்பட்டது.

1976ம் ஆண்டு ஜுலை மாதம் 20ம் திகதி Chryse Planitia என்றழைக்கப்படும் செவ்வாயின் பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கியது Viking 1 தரையிறங்கும் பகுதி.

இதனைத் தொடர்ந்து, 1975ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் திகதி விண்ணுக்கு செலுத்தப்பட்ட Viking 2, 1976ம் ஆண்டு ஓகஸ்ட் 7ம் திகதியளவில் செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையை அடைந்திருந்தது.

Viking 2வின் தரையிறங்கும் பகுதி,Utopia Planitia என்ற இடத்தை 1976ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் திகதி பாதுகாப்பாக சென்றடைந்தது.
செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Vikinglander2

செவ்வாயில் தரையிறங்கி, பல பயனுள்ள படங்களை உலகுக்கு அனுப்பியிருந்த
Viking உபகரணங்கள் செவ்வாயின் வெப்பநிலை,infrared தொழிநுட்பத்தின் மூலம் புவியியல் அலகு மற்றும் முக்கியமான பல விடயங்களை அளவிட்டிருந்தது.

காற்று,காற்றின் அளவுகள் மற்றும் இதர இரசாயன மூலக்கூறுகள்,மண் ஆராய்வு போன்ற பல முக்கியமான விடயங்களில் இவை ஈடுபடுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

செவ்வாயின் மண்ணை ஆராய்ந்திருந்த Viking உபகரணங்கள், அம்மண்ணில் இரும்புப் படிவுகள் அதிகமாக காணப்படுவதாக (அயன்) உறுதி செய்திருந்தாலும், உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் காலியாக இருப்பதாகவே தெரிவித்திருந்தது.

பலதரப்பட்ட படங்களையும் பூமிக்கு அனுப்பிக்கொண்டிருந்த Viking Orbiter கள் (சுற்றுவட்டப்பாதையில் செயற்பட்டவை) Viking Lander கள் (தரையிறக்கப்பட்டவை) அரிய சேவையினை பின்வரும் காலங்களில் நிறைவு செய்திருந்தன.

Viking 1 Orbiter - August 17, 1980 (சுமார் 1400க்கும் அதிகமான சுற்றுகளுக்குப் பின்)
Viking 2 Orbiter - July 25, 1978 (அன்னளவான 760 சுற்றுக்களுக்குப் பின்)

Viking 1 Lander ன் தொடர்புகள் November 13, 1982 இலும், Viking 2 Lander
April 11, 1980 அளவிலும் நின்று போகும் வரை அவற்றின் சேவை தொடர்ந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுவரை இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் விண் கலன்களினால் பெறப்பட்டிருந்த முக்கியமான படங்களுக்கான இணைப்பு வருமாறு :-




உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Empty Re: செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது.

Post by *சம்ஸ் Wed 19 Jan 2011 - 13:41

உயிரினங்களின் தோற்றம், பூமி தவிர்ந்த ஏனைய கிரகங்களிலான வாழ்க்கைச் சாத்தியக் கூறுகள் என்று பல விதமான கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடியதாக நம்பிக்கையுடன் காணப்படும் செவ்வாய்க் கிரகத்தின் உள்ளக விபரங்களை சேகரிப்பதில் விஞ்ஞானிகள் பெரும் அக்கறை செலுத்தி வருகின்றனர்.

Viking திட்டங்களைத் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முயற்சியாக அமைந்தது ரஷ்யர்களினால் மேற்கொள்ளப்பட்ட Phobos திட்டமாகும்.
செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Phobos

செவ்வாயின் தட்ப, வெப்ப நிலை மற்றும் சூழல் சார்ந்த பல விடயங்களை ஆராயக் கூடிய உபகரணங்களை உள்ளடக்கிய Phobos 1 மற்றும் அத்துடன் இணைந்து செயற்படும் Phobos 2 1988ம் வருடம் ஜுலை மாதம் 07ம் திகதி விண்ணுக்கு ஏவப்பட்டது.

நுணுக்கமான விஞ்ஞான உபகரணங்களுடன் செவ்வாயின் சுற்றுப் பாதையை அடைந்திருந்த Phobos 1 ன்னுடனான தொடர்புகள் எதிர்பாராத விதமாக தொடர்புகளை இழந்திருந்தது.

எனவே, தொலைத் தொடர்புகள் அற்ற நிலையில் Phobos 1 செவ்வாயில் தரையிறங்கவோ அல்லது சுற்றுப் பாதையில் செயற்படவோ இல்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இதற்கான காரணங்களை அறிய முற்பட்ட விஞ்ஞானிகள், சூரிய ஒளியைக் கொண்டு இயங்கவேண்டிய மின்கலன்களில் மற்றும் இறுதியாக அனுப்பப்பட்ட கட்டுப்பாட்டு மென்பொருளின் தவறான செயற்பாடு காரணமாக செவ்வாயை யும் தாண்டி தொடர்புகள் அற்ற நிலையில் Phobos 1 தொலைந்து விட்டதாக அறிவித்திருந்தார்கள்.



Viking திட்டத்தின் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தொடர்ந்து சுமார் 17 வருட காலத்திற்குப் பின் பூமியைச் சுற்றிவரும் செய்மதி வடிவங்களை ஒத்த, இதே வேளை நவீன விஞ்ஞான உபகரணங்களுடன் நாசாவின் Mars Observer தயாரானது.

ஏறத்தாழ 720 மில்லியன் கி.மீற்றர்களை 11 மாத காலத்தில் சென்றடையும் இலக்குடன் தயாரானது இத்திட்டம்.
செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. >marsobserver
செவ்வாயின் புவியியல் நிலைகள்,மாற்றங்கள் மற்றும் காலநிலை தொடர்பான ஆழமான ஆராய்வினை மேற்கொள்ளத் தயாராக இருந்த Mars Observer இன் பயணத் திகதி ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 16ம் திகதியிலிருந்து செப்டம்பர் 25 ம் திகதி (1992) க்கு மாற்றப்பட்டது.

Titan III என்று பெயர் சூட்டப்பட்ட ஏவுகணையில் பொருத்தி Mars Observer விண்ணுக்கு செலுத்தப்படவிருந்தது.

இறுதியாக 92ம் ஆண்டு செப்டம்பர் 25ம் திகதி குறிக்கப்பட்டு, அன்றைய தினம் தனது பயணத்தினை ஆரம்பித்திருந்தது Mars Observer.

எனினும் 1993ம் ஆண்டு ஆகஸ்ட் 26 ம் திகதியளவில் Mars Observer உடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாக நாசா அறிவித்தது.



சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து கொள்ளும் தருவாயில் ஏற்பட்ட கோளாறு இதற்கான காரணமாக கூறப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Empty Re: செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது.

Post by *சம்ஸ் Wed 19 Jan 2011 - 13:43

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Miss-marsobserver

செவ்வாயின் புவியியல் நிலைகள்,மாற்றங்கள் மற்றும் காலநிலை தொடர்பான ஆழமான ஆராய்வினை மேற்கொள்ளத் தயாராக இருந்த Mars Observer இன் பயணத் திகதி ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 16ம் திகதியிலிருந்து செப்டம்பர் 25 ம் திகதி (1992) க்கு மாற்றப்பட்டது.

Titan III என்று பெயர் சூட்டப்பட்ட ஏவுகணையில் பொருத்தி Mars Observer விண்ணுக்கு செலுத்தப்படவிருந்தது.

இறுதியாக 92ம் ஆண்டு செப்டம்பர் 25ம் திகதி குறிக்கப்பட்டு, அன்றைய தினம் தனது பயணத்தினை ஆரம்பித்திருந்தது Mars Observer.

எனினும் 1993ம் ஆண்டு ஆகஸ்ட் 26 ம் திகதியளவில் Mars Observer உடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாக நாசா அறிவித்தது.



சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து கொள்ளும் தருவாயில் ஏற்பட்ட கோளாறு இதற்கான காரணமாக கூறப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Empty Re: செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது.

Post by *சம்ஸ் Wed 19 Jan 2011 - 13:44

செவ்வாய்க் கிரகத்தின் அறிவு பற்றி உலகத்தின் அனைத்து பாகங்களுக்கும் எடுத்துச் சொல்லும் இன்னும் ஒரு மைல் கல்லாக அமைந்திருந்தது நாசாவின் Pathfinder அறிமுகம்.

சுமார் 150 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்யப்பட்டும், 3 வருடங்கள் தீவிரமான முயற்சியினாலும் விஞ்ஞானிகளின் பெரும் முயற்சியாக Pathfinder உருவாக்கப்பட்டது.

இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக காணப்பட்டிருந்தது Sojourner Rover என்ற தானியங்கி இயந்திர வாகனமாகும்.

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Sojourner2
கச்சிதமாக வடிவமைக்கப் பட்டிருந்த இந்த சிறிய வாகனம் ஒரு திருப்பு முனையாகவே இருந்தது.

நாசாவினால் முன்னர் உருவாக்கப்பட்டிருந்த அப்பலோ ரோவருடன் ஒப்பிடும் போது, செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட Sojourner Rover என்ற மினி ரோவரினை படத்தில் காணலாம்.
செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Ap15-soj
Microrover களின் தயாரிப்பானது விண்வெளி ஆய்வுகளுக்கு பல வகையில் பலமான ஒரு விடயமாக அமைகிறது.

குறைந்த பாரத்தினை தாங்கிச் செல்லும் அதே வேளை, முன்னைய காலங் களில் போன்று சுற்று வட்டப் பாதையில் சென்று தங்கியிருந்து செயற்பட வேண்டிய தேவையும் குறைகிறது.

செவ்வாயின் புவியியல் நிலை தொடர்பான போதிய ஆதாரங்களும் படங்களும் கைவசம் இருப்பதனால் நேரடியாக தரையிறங்கும் செயற்பாடுகள் நோக்கியே இவை ஏவப்படுகின்றன.

ஒரு கிரகத்தின் மேற்பரப்பு வரை இவற்றை தாங்கிச் செல்லும் விண்கப்பல்கள் கூட இவற்றை பிரித்து விட்டதன் பின் ஒரு தொடர்பு நிலையமாக மாறி செயற்படக் கூடிய வாய்ப்பும் கிடைக்கிறது.

எனவே Microrover கள் விண்வெளி ஆராய்வுப் பணியில் ஒரு முக்கியமான அம்சமாகும்.

இவை பற்றிய படங்கள் மற்றும் வீடியோ (ஒளி) யுடன் பல விளக்கங்களை கீழ் காணும் இணையப் பக்கத்தில் காணலாம்.

அழுத்துக

தனித் தனியாக Microrover உள்ளக அமைப்பு, மற்றும் அவற்றின் தயாரிப்புப் பணி, தயாரிப்புப் படங்கள் என்று பல வகை தகவல்களை மேற் காணும் இணையத்தில் நீங்கள் பார்க்கலாம்.

செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட மினி ரோவர் Sojourner Rover என்று பெயரிடப் பட்டிருந்தது.

Sojourner Rover ஐத் தாங்கிச் சென்று செவ்வாயில் தரையிறங்கும் கலத்துக்கு Pathfinder என்றும் பெயரிடப்பட்டது.

Pathfinder தனது பயணத்தினை 1996ம் ஆண்டு டிசம்பர் மாதம் 04ம் திகதி ஆரம்பித்து Pathfinder இன் தரையிறங்கும் பகுதி Sojourner Rover உடன் 1997ம் வருடம் ஏப்ரல் மாதம் 07ம் திகதி செவ்வாயை சென்றடைந்தது.

இத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க இன்னுமொரு வெற்றியாக அமைந்திருந்த விடயம் Sojourner Rover மற்றும் Pathfinder lander ஆகியவற்றின் வாழ் நாளாகும்.

30 நாட்களே செயற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட Pathfinder lander மும்மடங்காக 90 நாட்கள் வரையிலும், 7 நாட்களே செயற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட Sojourner Rover சுமார் 84 நாட்களும் செயற்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது.

மைல்கல்லாக அமைந்திருந்த இம்முயற்சியின் போது செவ்வாய்க் கிரகத்தின் உண்மையான நிறத்துடன் கூடிய பல High Resolution மற்றும் Stereo படங்கள் (இரண்டு கமராக்கள்) பூமியை வந்து அடைந்திருந்தது.

Sojourner Rover பெற்றுத் தந்த மேலதிக படங்களைக் கீழ்க்காணும் இணையத்தில் காணலாம்.
அழுத்துக

செவ்வாய்க் கிரகம் செம்மையான தோற்றத்தை உடையது என்ற கணிப்பீடு காலப்போக்கில் இவ்வகை True Colour படங்கள் மூலம் அறியக் கிடைப்பது மாத்திரமன்றி நவீன 3 D தொழில்நுட்பம் மூலம் மேலதிக தகவல்களையும் பெற்றுக் கொள்ள உதவுகிறது.



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Empty Re: செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது.

Post by *சம்ஸ் Wed 19 Jan 2011 - 13:44

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. PIA01546

செவ்வாய்க் கிரகத்தின் உண்மையான நிறம்

பயனுள்ள பல நூறு படங்களையும் தகவல்களையும் பெற்றுத்தந்த நாசாவின் Pathfinder திட்டம் செப்டம்பர் மாதம் 27ம் திகதி 97ம் வருடத்துடன் நிறைவுக்கு வந்தது.

97ம் வருடம் மே மாதம் 07ம் திகதி முதல் செப்டம்பர் 27 வரை செவ்வாய்க் கிரகத்தின் கரடு முரடான பாகங்களில் திட்டமிட்டபடி ஊடறுத்து தகவல்களைப் பெற்றுத்தந்திருந்த Sojourner Rover 19ம் நூற்றாண்டில் பெண்கள் உரிமைக் காகப் போரடிய Sojourner Truth என்பவரின் பெயரால் அழைக்கப்பட்டிருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Empty Re: செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது.

Post by *சம்ஸ் Wed 19 Jan 2011 - 13:46

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Mgs-mons

செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் இயங்கும் Mars Global Surveyor தற்காலிகமாக விஞ்ஞான உபகரணங்களின் செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதால பிபிசி இணையச் செய்திக்குறிப்பொன்றைக் காணக்கிடைத்தது.

எனினும், இது தொடர்பான முழுமையான விபரங்களை நாசா நான் இதை எழுதும் வரை வெளியிட்டிருக்கவில்லை.

767 கிலோ கிராம் எடையுடைய Mars Global Surveyor ல் High-resolution camera, thermal emission spectrometer, laser altimeter, magnetometer/electron reflectometer, ultra-stable oscillator, radio relay system போன்ற விஞ்ஞான உபகரணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தானியங்கி இயந்திரத்தில் ஏற்பட்ட சிறு பழுது இதற்கான காரணமாக அமையலாம் என்று அறியமுடிகிறது.

இந்நிலையில் விஞ்ஞான உபகரணங்கள் யாவும் Safe Mode என்று குறிப்பிடப்படும் இயக்கமற்ற நிலையில் காணப்படும்.

எனினும், பெரும்பாலான பகுதிகள் தொடர்ந்தும் இயங்கும்.

இந்த வாரத்திற்குள் Mars Global Surveyor வழமைக்குத் திரும்புவது நாசாவின் செயற்பாடுகளில் முக்கியத்துவம் பெறுகிறது.

1999ம் அளவில் தோல்வியில் முடிந்த நாசாவின் செவ்வாய்க்கான ஆய்வு முயற்சியில், காணாமல் போன உபகரணஙகள் அல்லது அவற்றின் பாகங்கள் சிதறிக் காணப்படலாம் என்று நம்பப்படும் ஒரு பிரதேசத்திற்கு மேலாக Mars Global Surveyor பறக்கவிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தவேளையில் பெறப்படும் படங்கள்,தகவல்கள் 2007ம் ஆண்டு அனுப்பப்படவிருக்கும் ஆய்வு இயந்திரங்களை வடிவமைப்பதிலும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த வாரத்திற்குள் Mars Global Surveyor வழமையான நிலைக்கு திரும்பும் என்று அதன் கட்டுப்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Empty Re: செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது.

Post by *சம்ஸ் Wed 19 Jan 2011 - 13:48


செவ்வாய்க் கிரகத்தில் நீர்,மற்றும் உயிரினத்தின் தோற்றம்,மறைவு அல்லது இருப்பு போன்ற விடயங்களை ஆராய்வதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கைகளில் அதிசயிக்கத்தக்க விதத்திலும்,வெற்றிகரமாகவும் தொடர்ந்து இயங்கி வரும் நடவடிக்கை நாசாவின் Mars Exploration Rover Mission ஆகும்.

நிர்ணயிக்கப்பட்ட கால எல்லையையும் தாண்டி, மிகவும் பயனுள்ள படங்களையும்,தகவல்களையும் பூமிக்குத் தொடர்ந்தும் அனுப்புவது மாத்திரமன்றி தொடர்ந்தும் ரோவர் கலங்கள் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வகையில், ரோவரின் அண்மைய முன்னேற்றகரமான நடவடிக்கை ஒன்று விஞ்ஞான உலகில் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
மேலே படத்தில் காணப்படுவது செவ்வாயில் காணப்படும் Victoria Crater என்று அழைக்கப்படும் பெருங்குழியாகும்.

இந்த இடத்தைப்பற்றிய ஊகங்கள், அல்லது ஏற்கனவே பெறப்பட்ட தகவல்களை உறுதிப்படுத்துவதற்கு மேலதிக ஆய்வுகள் தேவைப்பட்டிருந்த போதும், Victoria பெருங்குழியை அடைவது ஒரு கனவுத்திட்டமாக மாத்திரமே கணிக்கப்பட்டிருந்தது.

எனினும், வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் ரோவர் இயந்திரங்களில் ஒன்றான Opportunity முக்கியத்துவம் வாய்ந்த Victoria பெருங்குழியை அண்மித்துள்ளது.
செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Site_B76_264_navcam_CYL_L-B952R1_th265x228


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Empty Re: செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது.

Post by *சம்ஸ் Wed 19 Jan 2011 - 13:51

Opportunity ன் ஆய்வுப்பாதை ஏற்கனவே செவ்வாயில் நீர் இருப்பதற்கான சாதகமான தகவல்களைப் பெற்றுக்கொடுத்துள்ள நிலையில் Victoria பெருங்குழி தொடர்பான ஆய்வுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படப்போகின்றன என்பது முக்கியத்துவம் வாய்நததாக காணப்படுகிறது.

Victoria பெருங்குழி சுமார் 800 மீற்றர் அகலமானது என்று கணிக்கப்படுகிறது.

அங்கே காணப்படும் கற்களில் ஏற்கனவே ஆழமில்லாத நீர்த்தன்மை கண்டுபிடிக்கப்படடுள்ள நிலையில் Victoria பெருங்குழியில் எதிர்நோக்கக்கூடிய ஆய்வுகள் மூலம் செவ்வாய்க் கிரகத்தின் முன்னைய புவியியல் நிலை தொடர்பான பல அரிய தகவல்களைத் திரட்டிக்கொள்ள முடியும் என்று விஞ்ஞான உலகம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

இதேவேளை Opportunityயின் சகோதர இயந்திரமான Spirit தற்காலிகமாக தனது செயற்பாடுகளை நிறுத்தி ஒரே இடத்தில் இருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

செவ்வாய்ப் பரப்பில் ஏற்பட்டிருக்கும் குளிர்கால நிலையை சமாளிக்கவே இந்த நிலை மேற்கொள்ளப்படுகிறது.

வசந்த கால ஆரம்பத்தோடு கிடைக்கப்பெறும் சூரிய ஒளியை Spirit சேமிக்க ஆரம்பிக்கும். இதன் சேமிப்பு அளவைப் பொறுத்தே அதன் எதிர்கால நகர்வுகள் திட்டமிடப்பட இருக்கின்றன.

இதேவேளை, கடந்த மார்ச் மாதமளவில் ஆய்வுப் பயணத்தின் போது Spirit ரோவரின் வலது பக்க முன் சக்கரம் வலுவான ஒரு நிலப்பரப்பில் வைத்து சேதமடைந்து செயலிழந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. 20060404_2F197028412EFFAQEAP1290L0M1_060331125215_th200
எனினும், பழுதடைந்த சக்கரத்துடனும் இதுவரை 10 மீற்றர் தூரம் வரை Spirit நகர்ந்துள்ளது.

சுமார் இரண்டு வருடங்கள் மூன்று மாத காலத்திற்கும் மேலாக செவ்வாயில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் ரோவர் கலங்கள் சூரிய ஒளியைப் பெறுவதில் சிரமமமான ஒரு காலகட்டத்தில் தற்போது உள்ளன.

எதிர்வரும் மாதமளவில் சூரியனின் பின் பகுதியால் செவ்வாய்க் கிரகம் கடக்கவிருப்பதால் அந்த நேரத்தில் போதிய அளவு ஒளியை சேமித்து அதன் மூலம் ரோவர் இயந்திரங்களை இயக்க முடியுமா என்ற சந்தேகம் நிலவுகிறது.

தற்போதைய நிலையில் சாதாரணமாக ஒரு மணித்தியாலம் அளவிற்கு செலுத்தப்படக்கூடிய ஒளியையே ரோவர் இயந்திரங்கள் பெற்றுக்கொள்ள முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Empty Re: செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது.

Post by *சம்ஸ் Wed 19 Jan 2011 - 13:52

செவ்வாய் கிரகம் பற்றிய இப்பதிவுத் தொடரில் Dec 10 2004, அன்று பதியப்பட்ட தகவலில் இவ்வருடம் (2007) ஓகஸ்ட் மாதம் செவ்வாய் ஆய்வினை மேற்கொள்ள மேலும் ஒரு விண்கலம் தயாராகி வருவதாக தெரிவித்திருந்தேன்.

QUOTE
Phoenix பறவைகளின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் Phoenix Mobile Science Lab, 2007ம் ஆண்டு ஓகஸ்ட் 28 ம் திகதியளவில் விண்ணுக்கு செலுத்தப்பட்டு 2008ம் ஆண்டு மே மாதம் 08 ம் திகதி செவ்வாயில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, இவ்விண்கலம் தயார் நிலையில் இருப்பதாக நாசா தகவல்கள் தெரிவிக்கின்றன.
செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. 147612main_phoenixlander-200

மேலே படத்தில் காணப்படுவது Phoenix Mobile Science Lab மாதிரி உருவமாகும்.

செவ்வாய் பற்றிய ஆய்வில் மேலும் பல படி முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் Phoenix இன் பயணம் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நீர் உறைவு நிலையில் காணப்படும் பிரதேசங்கள் என்று கணிக்கப்பட்ட சில தெரிவு செய்யப்பட்ட இடங்களில் நுண்ணுயிர்களின் பிரசன்னம் அல்லது அவற்றிற்கான தடங்களை பரிசோதிப்பது இவ்விண் ஆய்வு கலத்தின் முக்கிய பணியாக இருக்கப்போகிறது.

ஏற்கனவே சந்தேகிக்கப்பட்டதன் படி, தற்போதைய செவ்வாய் ஆய்வுத் தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்த Gusev வளைவுப் பகுதியில் நீர் உறைவினால் ஏற்படும் சிலிக்கா படிவங்கள் காணப்படுவதற்கான வலுவான சான்றுகளை வெளிக்கொண்டுவந்திருக்கின்றன.
செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. 176734main_pia09403-512

இந்நிலையில் திட்டமிட்டபடி Phoenix ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமிடத்து அது செவ்வாய் ஆய்வு பற்றிய பல அரிய திருப்பங்களை கொண்டுவரலாம்.

எவ்வாறாயினும், செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்தன அல்லது வாழக்கூடிய சூழ்நிலையாவது காணப்பட்டது, காணப்படுகிறது என்கின்ற அடிப்படை நோக்கிய விஞ்ஞானத்தின் ஆய்வுகள் இதுவரை வெற்றிகண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. 176312main_pia09344-516

Phoenix Lander செவ்வாயில் தரையிறங்கி செயற்படும் தருவாயில் எப்படியிருக்கும் என்பதை விளக்கும் வரைபடம் மேலே காணப்படுகிறது.

விண்வெளியில் நமது அறிவுக்கும் அப்பாற்பட்ட பல புதிய நிகழ்வுகளும் அதிசயங்களும் நாளாந்தம் இடம்பெற்று வரும் இவ்வேளையில் இப்பயணங்கள் விஞ்ஞான உலகத்துக்கு மேலும் பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Empty Re: செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது.

Post by *சம்ஸ் Wed 19 Jan 2011 - 14:06

QUOTE
Phoenix பறவைகளின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் Phoenix Mobile Science Lab, 2007ம் ஆண்டு ஓகஸ்ட் 28 ம் திகதியளவில் விண்ணுக்கு செலுத்தப்பட்டு 2008ம் ஆண்டு மே மாதம் 08 ம் திகதி செவ்வாயில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்வெளி ஆய்வாளர்கள்,ஆர்வலர்கள்,விஞ்ஞானிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாசாவின் பீனிக்ஸ் ஆய்வு கலம் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கி அதன் செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கிறது.

பீனிக்ஸ் ஆய்வு கலம் மற்றும் பிற செவ்வாய் ஆய்வுத் திட்டங்கள் தொடர்பான பல தகவல்கள் இப்பகுதியில் ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கின்றன, குறிப்பிட்ட திட்டம் தொடர்பான விளக்கங்களை இப்பகுதியின் 2ம் பக்கத்தில் பார்வையிடலாம்.

செவ்வாய் சென்றடைந்த பீனிக்ஸ் கலத்தின் பயணம் மற்றும் தரையிறங்கல் தொடர்பான அனிமேஷன் விளக்கத்தைக் கீழே காணலாம் (ஒளி).




உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Empty Re: செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது.

Post by *சம்ஸ் Wed 19 Jan 2011 - 14:09

விண்வெளி ஆராய்வுகள் தொடர்பாக காலத்துக்குக் காலம் அதிசயமான தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.

பூமியிலிருந்து 24 மணிநேரமும் விண்வெளியில் இடம் பெறும் மாற்றங்கள்,நிகழ்வுகள்,சத்தங்களைக் கூட கண்காணித்துக்கொண்டிருக்கின்றனர்,விஞ்ஞானிகளும்,ஆய்வாளர்களும்.

இவ்வாறான செயற்பாடுகளுக்காக பாரிய தொலை நோக்குக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்ததே,இப்படியான தொலை நோக்கிக் கருவிகளால் அவ்வப்போது சில முக்கியமான செயற்பாடுகள் அவதானிக்கப்படுகின்றன.

இப்படியான கண்டுபிடிப்புக்கள் விண்வெளி ஆராய்வுகளில், எதிர்கால ஆராய்ச்சிகளில் முக்கிய பங்கினை வகிக்கின்றன.
செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. 1

அந்த வகையில் உலகில் செயற்படும் முக்கியமான ஒரு தொலைநோக்கியான நாசாவின் Spitzer (telescope) விண்வெளி ஆராய்வுகளில் முக்கிய பங்கினை வகித்து வருகிறது.

விண்வெளியில் பூமி தவிர்ந்த, வேற்று கிரகத்தில் அல்லது கிரகங்களிலும் உயிரினங்கள் வாழக்கூடும் என்ற வலுவான சந்தேகத்துடன் விஞ்ஞானம் விண்ணியல் பற்றிய ஆராய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வேளைகளில் பால்வெளியில் காணப்படும் நமக்குத் தெரிந்த கோள்கள்,துணைக்கோள்கள் தவிர வேறு கிரக மண்டலங்களும் இருக்கின்றன,செயற்படுகின்றன அல்லது செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன போன்ற சந்தேகமும் நிலவி வருகிறது.

Spitzer ஊடாக தற்போது விண்ணியல் ஆய்வாளர்கள் புதிய விடயம் ஒன்றைப்பற்றி ஆராய ஆரம்பித்திருக்கிறார்கள்.

நாம் வாழும் பூமியிலிருந்து சுமார் 41 ஒளியாண்டுகள் தூரத்தில் நமது சூரிய குடும்பத்தினைப் போன்றே அதே வயதளவில் காணக்கூடிய இன்னொரு நட்சத்திரக் குடும்பம் காணப்படுகிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இங்கே இனங்காணப்பட்டிருக்கும் நட்சத்திரம் நமது சூரியனைப்போன்ற, அதே அளவில் காணப்படுவதாகவும் நம்பப்படுகிறது.

இப்பகுதியில் ஏற்பட்ட பாரிய மோதல் ஒன்றினால் ஏற்பட்ட மிகப்பிரகாசமான வெளிச்சம், அதனைத் தொடர்ந்து அங்கிருந்து விலகிச்சென்ற தூசு,மற்றும் பாறைச் சிதைவுகள்,உடைவுகள் இவ்வாறான சந்தேகத்தை உண்டு பண்ணியிருக்கிறது.

இவ்விடயம் நிரூபிக்கப்படுமானால், இவ்வாறான நிகழ்வு வரலாற்றில் இதுவே முதற் தடவையாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

HD69830 என்று அறியப்பட்டிருந்த நட்சத்திரத்திற்கு அண்மிய பிரதேசத்திலேயே இவ்வாறான நிகழ்வு இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்நட்சத்திரம், மற்றும் அண்மையில் வேறு கிரகங்களில் காணப்படுகின்றனவா போன்ற விபரங்களை நாசாவின் 2011ம் ஆண்டிற்கான SIM PlanetQuest விண்வெளி ஆய்வுத் திட்டம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

எனினும், விண்வெளியில் காணப்படும் வேறு கிரகங்களை நம்மால் நேரடியாகப் பார்க்க முடியாத போதும், அங்கே ஏற்படும் இவ்வாறான மோதல்கள் மூலம் வெளியாகும் தூசுகள்,சிதைவுகளைக் கொண்டு முன்னேற்றகரமான ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

விண்வெளியில் காணப்படும் பாறைகளின் இவ்வாறான கடுமையான மோதல்கள் ஒவ்வொரு ஆயிரம் ஆண்டுகளுக்கொரு முறை இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், தற்போதைய நிகழ்வானது இப்படிப்பட்ட ஒரு பாரிய மோதலாகவே இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கக்படும் அதே வேளை, இது தூரத்தே காணப்பெற்ற பாரிய வால் நட்சத்திரமாகவும் இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் விஞ்ஞானம் முன்வைத்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Empty Re: செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது.

Post by *சம்ஸ் Wed 19 Jan 2011 - 14:12

விண்வெளியில் வலம் வரும் பல்வேறு விண்கலங்கள் வலம் வருகின்றன, அவற்றின் உதவியுடன் நாள்தோறும் பல்வேறு வகையான படங்கள்,தகவல்களை பூமியிலிருக்கும் கட்டுப்பாட்டாளர்கள் பெற்று வருகின்றனர்.

விணிவெளியில் வலம் வரும் ஒரு விண்கலம், இன்னொரு விண்கலத்தினை இதுவரை படம் பிடித்ததில்லை.

எனினும், தற்போது நாசாவின் Mars Global Surveyor வேறு இரண்டு விண்கலங்களை படம் பிடித்துள்ளது.

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. >516
இப்படத்தில் காணப்படுவது நாசாவின் இன்னொரு விண்கலமான Mars Odyssey ஆகும் (இரு வேறு தூரங்களில்).
செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. 115463main_mex-255
மேற்காணும் படத்தில் இருப்பது ஐரோப்பிய விண்வெளி மையத்தின் Mars Express ஆகும்.

நன்றி நிலாமுற்றம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Empty Re: செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது.

Post by *சம்ஸ் Wed 19 Jan 2011 - 14:20

Voyager விண்கலங்கள் பற்றி அறிந்திருப்பீர்கள், 1977ம் ஆண்டு இரு வார இடைவெளிகளில் வெவ்வேறாக இரண்டு ( Voyager1,Voyager2 ) விண்ணுக்கு ஏவப்பட்டன.

பால்வெளியின் பயணத்தின் போது ஒவ்வொரு கிரகத்தையும் அண்மித்து அவை தொடர்பான தகவல்களை பூமிக்கு அனுப்புவதோடு மிக நீண்ட கால சேவையை கருத்திற்கொண்டு இவை வடிவமைக்கப்பட்டிருந்தன.

கடந்த ஜனவரி மாதம் Voyager கலங்கள் வெற்றிகரமான 10,000 நாட்களைத் தாண்டியிருந்தது.

சுமார் 27 வருடங்களாக விண்வெளி ஆராய்வில் இடம்பிடித்து வரும் Voyager கலங்களே மனிதனால் வடிவமைக்கப்பட்டு விண்வெளியில் வெகு தூரத்தில் இன்று காணப்படும் விண்கலங்களாகும். (சூரியனிலிருந்து சுமார் 8.7 பில்லியன் மைல்கள்)

வெகு தூரத்தில் காணப்படும் நெப்டியுன் (Voyager2) கிரகம் தொடர்பான தகவல்களையும் பூமியில் பெற்றுக்கொள்ள Voyager உதவியிருந்தது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில், தற்போதைய Voyager1 ன் இருப்பிடம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு இக்கலத்திலிருந்து கிடைக்கப்பெற்றிருந்த ஒலி சமிக்ஞைகள் மற்றும் தகவல்களைக்கொண்டு, சூரியனிலிருந்து நெடுந்தூரத்தில் அறியப்படாத பிரதேசத்திற்குள் Voyager1 சென்றிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தது.

எனினும், அதன் பின்னர் செய்யப்பட்ட தீவிர விசாரணைகள்,ஆய்வுகள் மூலம் Voyager1 நமது பால்வெளியில் சூரியனின் ஆதிக்கம் காணப்படும் ஓரத்திற்கு சென்று விட்டதை அறிய முடிந்துள்ளது.

எனினும், சூரியனின் முழுமையான ஆதிக்கம், விண்நிலைகளை அப்போது அது தாண்டியிருக்கவில்லை.

ஆயினும், இப்போது அதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது, இனிவரும் காலங்களில் எந்த வேளையில் வேண்டுமானாலும்,நமது சூரியனின் ஆதிக்கம் காணப்படும் பிரதேசங்களை விட்டு விலகி விண்வெளியின் வெகு தூரத்திற்குள் Voyager1 பிரவேசிக்கப்போகின்றது.



தொடர்ந்தும் அதனுடனான தொடர்புகள் காணப்படலாம் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.

எனினும், Voyager1 எதிநோக்கக்கூடிய சவால்கள் பெரிய அளவில் காணப்படுகின்றது.

solar blast wave என்று சித்தரிக்கப்படும் மிகவும் கடுமையான வாயு வெளியேற்றம் ஏற்படும் பிரதேசத்தினை அண்மியிருக்கும் Voyager1 எந்த நேரத்திலும் இந்த ஆபத்தில் சிக்கிக்கொள்ளலாம்.

2003 நவம்பர் மாதமளவில் இவ்வாறு ஏற்பட்ட வெடிப்பிலிருந்து பரவத்தொடங்கிய பாரிய தீப்பந்தத்திலிருந்து பில்லியன் டொன்கள் அளவிலான்
புகை மண்டலங்கள் உருவாகி, அண்டவெளியில் வேகமாக பரவியிருந்தது.

இந்த நிகழ்வின் போது விண்வெளி ஆராய்வில் இயங்கிக்கொண்டிருக்கும் Mars Odyssey போன்ற கலங்களையும் தாண்டியிருந்தது.

எனினும், இவற்றினால் இக்கலங்கள் எதுவும் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும், தற்போது சூரியனின் வளி மண்டல, விண் சூழல் ஆதிக்கங்கள் யாவும் நிறைவு பெறும் நமது விண்வெளிப்பரப்பின் எல்லையை Voyager1 அடைந்திருக்கின்றது.

எல்லையையும் தாண்டி வெளிச்சென்று, மேலும் தொடர்புகள் நீடிக்குமானால் ஆழமான விண்வெளி தொடர்பான மேலும் பல புதிய தகவல்களும் கிடைக்கப்பெறலாம்.
செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Heliosphere

கீழ் காணப்படும் இணைப்பில் சென்று Click here for Flash feature
என்ற லிங்கினை தெரிவு செய்வதன் மூலம் Voyager கலங்கள் தொடர்பான Flash Animation விளக்கப்படத்தினை பார்க்கலாம்.
அழுத்துக


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Empty Re: செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது.

Post by ஹம்னா Wed 19 Jan 2011 - 19:11

தகவலுக்கு நன்றி சம்ஸ்


செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது. Empty Re: செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum