சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!  Khan11

பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!

2 posters

Go down

பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!  Empty பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!

Post by ஹம்னா Thu 20 Jan 2011 - 19:34

அலங்கார உடை, அச்சுப் பிசகாத அபிநயம், பாவங்களை பிரதிபலிக்கும் முகம் மற்றும் உடல் பாகங்கள், இசைக்கு தக்கபடி உடல் மொழி அசைவில் ஒரு கருத்தை வலி யுறுத்தும் அசைவு என்று ஆடும் நடனத்தால், ஆடுபவரின் உடல் ஆரோக்கியமும், வலி மையும் அடைகிறது என்பதால்தான் பழங்காலத்தில் பல்வகை நடனங்களை தோற்று வித்தார்கள், பெரியோர்கள்.

நடனத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முதலில் கட்டுடல் அவசியம். ரிதம், மிகச் சிறந்த அபிநயமும் அத்தியாவசியம். புத்திக் கூர்மை மற்றும் உடலை ஒழுங்குபடுத்துகிறது நடனம்.

நடனம் இரண்டு வழிகளில் நமக்கு சிறப்பு களை வழங்குகிறது. முதலாவதாக, இந்திய நடனங்கள் அனைத்தும் ஒருவித கட்டமைப் பில் அசைவுகளை கொண்டுள்ளன. இரண் டாவதாக, பாடல் மற்றும் ரிதம் அடிப்படையில் ஆடும்போது உடலும், மனமும் ஒருங்கி ணைந்து பாவங்களை வெளிப்படுத்துவதால் உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியம் கிடைக்கிறது.

யோகா கலையில் உடலும், மனதும் இணைந்து ஆரோக்கியம் அதிகரிக்கிறது. அதனால் தான் நடனத்தை `நாட்டிய யோகா’ என்று அழைக்கி றார்கள். இதில் யாமம், நியாமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்யஹாரம், தாரணம், தியானம் மற்றும் சமதி ஆகிய எட்டு அடிப்படை கூறுகள் உள்ளன. யோகாவை எந்த வயதிலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் பரதநாட்டியம் மற்றும் பிற வகை நடனங்களை இளமையி லேயே கற்பது தான் சிறந்தது என்று கூறுகின்றனர், நாட்டிய நிபுணர்கள்.

ஏரோபிக் என்ற நடனத்தில் உடல் அசைவுகள் அதிகமாக இருக்கும் என்றாலும், உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமாக கருதப் படுகிறது. கதகளி நடனம் தெரிந்தவர்களுக்கு இந்த வகை நடனம் எளிதாக இருக்கும்.

பெரும்பாலும் நடனக் கலைஞர்கள் யோகா, உடற்பயிற்சி, நடைப் பயிற்சி ஆகியவற்றையும் மேற்கொள்கின்றனர். நிறைய கலோரி உள்ள உணவுகளை தவிர்த்து பழங்கள், காய்கறி கள் உட்கொள்வதும் நல்லது. ஆனால் ஒவ்வொரு நடனத்தில் ஒவ்வொரு விதமான ஸ்டைல் உள்ளது. நடனப் பயிற்சியின் போது அந்த வகை நடனத்திற்கு தகுந்தாற்போல் நம் உடலும், மனமும் மாறிக் கொள்ளும்.


ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!  Empty Re: பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!

Post by ஹம்னா Thu 20 Jan 2011 - 19:38

நிறைய வளைவுகளும், முறுக்குவது போன்ற அசைவுகளும் உடையது `சாவ்’ என்ற நடனம். கிட்டத்தட்ட இந்த நடனம் ஆடும்போது அலையே ஆடிவருவது போல் தோன்றும். சின்ன வயது முதல் முறையான பயிற்சி இருந்தால் மட்டுமே இவ்வகை நடனத்தை ஆட முடியும். சாவ் என்ற கிழக்கிந்திய பகுதிகளில் அதிகமாக ஆடப்படு கிறது. உடல் வலிமையாக இருந்தால் மட்டுமே இவ்வகை நடனத்தை ஆடமுடியும். `சாவ்’ நடனப் பயிற்சி பெற்றால் தொப்பை என்பதே எட்டிப் பார்க்காது!


பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!  4438upasana
ஒடிசி:
கைவிரல்கள், மூட்டு, கணுக்கால், கழுத்து, பாதங் கள், முக பாவனை இவை அனைத்தும் இணைந் தது தான் ஒடிசி நடனம். ஆனாலும் இந்த நடனப் பயிற்சியில் உடலில் அனைத்து உறுப்புகளும் இயங்குவதால் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டு மின்றி உறுதியாக மாறவும் வாய்ப்பு அதிகம் என்கிறார் ஒடிசி நடனக் கலைஞர் சுரூபா சென். மேலும் கூறுகையில், “மற்றவர்கள் ஒரு மணி நேரம் செய்யும் உடல் பயிற்சியில் கிடைக்கும் பலன்களை, ஒடிசி நடனத்தில் பத்து நிமிடம் செய்தாலே போதும், அதே பலனை உடல் பெறும்!” என்கிறார். மேலும் உடலை வளைத்து ஆடுவதால் கடினமாக மாறாமல் நெகிழ்ச்சித் தன்மையுடன் இருக்கும். இது ஒடிசி நடனத்துக்குரிய சிறப்பு என்றும் குறிப்பிடுகிறார்.



பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!  250px-Kuchipudi_Dance_Uma_Muralikrishna


இவ்வகை நடனத்தில் கால் மற்றும் பாதங்கள் மிக முக்கியப்பங்கு வகிக்கின்றன. ஜதிக்கு தகுந்தாற்போல் ஆடும் ஆட்டம் இது. குச்சிப்புடி நடனப் பயிற்சியின்போது தசை நார்கள் வலிமை அடைகின்றன. இதனால் தேவையில்லாத கொழுப்புகள் கரைந்து, உடம்பு சீராகிறது. கனகச்சிதமான உடலைப் பெற குச்சிப்புடி நடனம் அவசியம் என்கின்றனர் குச்சிப்புடி நடனக் கலைஞர்கள். அதுமட்டுமின்றி உடலுடன், மனதும் கூர்மை பெறுவதால் ஆரோக்கியம் சீராகும் என்றும் கூறுகின்றனர். குச்சிப்புடி நடனம் பயின்றால், உடல் எல்லாவற்றுக்கும் பொருந்திக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.


பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!  Empty Re: பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!

Post by ஹம்னா Thu 20 Jan 2011 - 19:42

பரத நாட்டியம்.
பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!  2438962250_c20d4f91c1


அடவு என்பது ஜதிக்கு தகுந்தபடி அடி எடுத்து வைப்பது. இதில் அபிநயங்களும், உணர்ச்சிகளும் வெளிப்படும். 108 கரணங்கள் உண்டு. பரதநாட்டியத்தில் மெதுவான அசைவுகள் மூலம் தொடங்கி பின்னர் விரைவாக ஆடுவர். கண்கள் அசைவு, விரல், கை அசைவு மற்றும் கால், பாதங்கள் அசைவு மூலம் ஆடப்படுகிறது. குறிப்பாக கழுத்தசைவு என்பது பரதநாட்டியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

உடல் மொழி அசைவுடன், பாவனையும் மிகச் சரியாக பொருந்தும்போது ஆடுவோரின் நடனம் மட்டுமின்றி, உட லும் கச்சிதமாக மாறிக்கொள்கிறது. பரதநாட்டியத்தில் கணுக்கால், தோள், முதுகு, கை என அனைத்து உறுப்புக ளுக்கும் அசைவு மூலம் பயிற்சி ஏற்படுகிறது. மேலும் ஏரோபிக் பயிற்சியும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத் துவம் வாய்ந்ததாக இந்த நடனத்தில் அமைந்துள்ளது. குறிப்பாக கை, கால் மற்றும் அடிவயிறு ஆகியவை பரத நாட்டியக் கலைஞர்களுக்கு உறுதியாகவும், ஆரோக்கிய மாகவும் அமையும் என்று கூறுகின்றனர் பரதநாட்டிய நிபுணர்கள்.

பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!  Mohiniyattam-(41)

மோகினியாட்டம்.

அடவு, சாரி மற்றும் நிர்த முத்திரைகள் அடங்கியது மோகினியாட்டம். ஆட்டத்தின் போக்கு மெதுவாக இருந் தாலும், உறுதியான தன்மை உடையதாக மோகினியாட்டம் அமைந்திருக்கும். இந்திய பாரம்பரிய நடனங்களில் முக்கிய மானது மோகினியாட்டம்.

இதுவொரு தியானம் சார்ந்த நடனம் என்பதால் யோகா மற்றும் பிற பாணிகளும் உள்ளன. இதில் உடல் மற்றும் மனத்தை கூர்மையாக்கும் தன்மை உடையது. மனத்தை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் உடைய மோகினியாட்டத்தை கற்றுக் கொண்டவர்களுக்கு வயிற்றுப்பகுதி நெகிழ்வுத் தன்மை உடையதாக மாறும்.




பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!  Empty Re: பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!

Post by ஹம்னா Thu 20 Jan 2011 - 19:48

கதக்.
பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!  Kathak_dance_-_2007-10-12_-_23
சுழன்று ஆடுவது, குதிப்பது, கைகளை சுழற்றுவது, உடலின் மையப்பகுதி மட்டும் அசைவது என அனைத்து உறுப்புகளும் `கதக்’ நடனத்தில் இயங்கும். இதில் தோள்களின் இயக்கம் முக்கியமானது. பிரணாயாமத்தின் நான்கு நிலைகள் `கதக்’ நடனத்தில் உள்ளன. இவ்வகை நடனப்பயிற்சியின் போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும், மனரீதியாக ஆற்றல் அதிகரிக்கும். உடல் உறுப்புகள் பலப்படும். ஞான முத்திரை, ஹஸ்தா முத்திரை என்பது கதக் நடனத்தில் முக்கியமானவை. இந்த முத்திரைகளை பண்ணும் போது கழுத்து மற்றும் கை, கால் உறுப்புகள் பலப்படும். கழுத்து அசைவுகளினால் தலைவலி ஏற்படாது. மூளை நரம்புகளின் இயக்கம் சீராக இருக்கும்.


பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!  SuperStock_1606-98217

கதகளி.


கேரளாவில் புகழ் பெற்ற நடனம். இது பல வகை முத்திரைகளை உள்ளடக்கியது. அபிநயமும், கண் மற்றும் முக பாவனைகளும் மிக முக்கியம். கால் அசைவுகளும், முக அசைவும் அதிகம் என்பதால் கதகளி நடனம் பயின்றவர்களுக்கு முகத் தசை மற்றும் கால்கள் மிகவும் பலமாக இருக்கும். நாடக நடிகர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் நடனம் கதகளி. முத்திரைகள், கை, கால் அசைவுகள் மற்றும் முக பாவனை யால் ஒரு கதையை எளிதாக விளக்கிவிடும் ஆற்றல் பெற்றது கதகளி நடனம்! இவர் களுக்கு உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியும் அவசியம் என்று கூறுகின்றனர் கதகளி நிபுணர்கள். குறிப்பாக கண் அசைவு பயிற்சி அதிகாலையில் செய்வது நல்லது. சின்ன வயதிலேயே கதகளி நடனத்தை கற்றுக் கொண்டால் உடல் எடை குறைந்து, உறுதியாக இருப்பது நிச்சயம்.


பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!  Empty Re: பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!

Post by நண்பன் Thu 20 Jan 2011 - 20:01

:cheers: :cheers:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!  Empty Re: பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum