Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
அமெரிக்க இராணுவம் குறைப்பு; பாதுகாப்பு உபாயத்திலும் மாற்றம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1

பென்டகனில் வைத்து ஜனாதிபதி ஒபாமா அறிவிப்பு
அமெரிக்க இராணுவம் குறைக்கப்பட்டு, அதன் உபாயத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். எனினும் அமெரிக்க இராணுவத்தின் பலம் தொடர்ந்தும் நிலை நிறுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு செலவீனங்களில் அடுத்த தசாப்தத்திற்குள் 450 பில்லியன் டொலர் அளவில் குறைக்கப்படவுள்ளது. அத்துடன் அமெரிக்கப் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆண்டு இறுதியில் மேலும் 500 பில்லியன் டொலர்கள் குறைக்கப்படவுள்ளது. இதற்கமைய அமெரிக்க இராணுவம் குறைக்கப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பென்டகனில் வைத்து நேற்று முன் தினம் அறிவித்தார்.
எமது இராணுவம் குறைக்கப்படும் என்று கூறிய ஒபாமா, ஆனால் அமெரிக்கா தனது இராணுவ பலத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ளும் என்பதை உலகுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். எந்தவகை எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்கவும் நாம் தயாராகவே இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
எனினும் இராணுவக் குறைப்பு மற்றும் ஆயுத குறைப்புகள் குறித்த எந்த மேலதிக தகவலும் இதன் போது தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பில் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள மத்திய பட்ஜெட்டின் போது அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் அடுத்த தசாப்தத்திற்குள் 10 முதல் 15 வீதமளவிலான அமெரிக்க இராணுவப் பலம் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இதனிடையே அமெரிக்க பொருளாதார பலத்தை வலுச்சேர்க்கத் திட்டமிட்டிருப்பதாக ஒபாமா குறிப்பிட்டார். உள்நாட்டில் எமது பொருளாதார பலத்தை வலுச் சேர்க்க திட்டமிட்டிருக்கிறோம். அதன் மூலம்தான் எமது சர்வதேச பலத்தை கட்டமைக்க முடியும் என்றார்.
இந்நிலையில் அமெரிக்கா தனது பாதுகாப்பு உபாயத்திலும் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் அது ஆசிய - பசுபிக் பிராந்தியத்தில் தனது இராணுவ பலத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட பராக் ஒபாமா அந்தப் பிராந்தியத்தில் தனது இராணுவ பலத்தை அதிகரிப்பது குறித்து ஆஸி. அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கமைய எதிர்காலத்தில் ஆசிய- பசுபிக் பகுதியில் அமெரிக்க இராணுவ பலம் அதிகரிக்கப்படும் என ஒபாமா குறிப்பிட்டார்.
“ஆசிய - பசுபிக் பிராந்தியத்தில் நாம் வலுவாக நிலைகொள்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் செலவு குறைப்பு விவகாரம் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது” என்று ஒபாமா குறிப்பிட்டார்.
சீனா, அமெரிக்காவுக்கு சவால்விடும் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில் ஆசிய பசுபிக் பகுதியில் அமெரிக்கா தனது இராணுவ பலத்தை அதிகரிப்பது சீனாவுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|