சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

சர்வதேச நாடுகள் சிரியாவின் ஸ்திரத்தன்மையை நிலைகுலைக்க முயற்சி  Khan11

சர்வதேச நாடுகள் சிரியாவின் ஸ்திரத்தன்மையை நிலைகுலைக்க முயற்சி

Go down

சர்வதேச நாடுகள் சிரியாவின் ஸ்திரத்தன்மையை நிலைகுலைக்க முயற்சி  Empty சர்வதேச நாடுகள் சிரியாவின் ஸ்திரத்தன்மையை நிலைகுலைக்க முயற்சி

Post by *சம்ஸ் Wed 11 Jan 2012 - 6:27

ஜனாதிபதி பஷர் அல் அசாத் குற்றச்சாட்டு
வெளிநாட்டு சக்திகள் சிரியாவின் ஸ்திரத்தன்மையை நிலை குலைக்க முயற்சிப்பதாக சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் தீவிரவாதம் இரும்புக் கரம்கொண்டு ஒடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சிரியாவில் வன்முறைகள் தொடரும் நிலையில் ஒருமாத இடைவேளைக்கு பின்னர் அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அசாத் பொதுமக்கள் முன் உரையாற்றியுள்ளார். அதில் பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகள் சிரியாவின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவரை நடந்த வன்முறைகளில் 5000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ. நா. கூறியுள்ளது. இந்த வன்முறைக்கு எதிராக சர்வதேச கண்டனங்கள் மற்றும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கடந்த மாதம் தொடக்கம் சிரியா வன்முறைகள் குறித்து அரபு லீக்கின் 165 கண்காணிப்பாளர்கள் சிரியாவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிரிய நகரங்களில் இருந்து பாதுகாப்புப்படைகள் வெளியேறவும், அரசியல் கைதிகளை விடுவிக்கவும், வன்முறைகளை நிறுத்தவும் அரபு லீக் அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் டமஸ்கஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ஜனாதிபதி பஷர் அல் அஸாத் உரையாற்றினார். அதில் அவர் தாம் பாதுகாப்பு படையினருக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிடவில்லை எனக் குறிப்பிட்டார்.

“எந்தக் குடிமகன் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்த எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அவ்வாறு தாக்குதல் நடந்திருந்தால் அது தற்பாதுகாப்பிற்காகவும், ஆயுதக் குழுக்களுடனான மோதலின் போதும்தான் இடம்பெற்றிருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

ஏற்கனவே ஆயுதக் குழுக்களுடன் இராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டு வருவதாக சிரிய அரச தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோதல்களில் 2000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் அண்மைக்காலமாக சிரிய இராணுவத்தில் இருந்து பிரிந்த அதிருப்தியாளர்கள், இராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் ஏற்பட்டுள்ள வன்முறைகளைக் கண்டித்து அரபு லீக் சிரியாவை அந்த அமைப்பில் இருந்து இடை நீக்கியுள்ளது. இது தொடர்பிலும் அஸாத் தனது உரையில் குறிப்பிட்டார். அரபு நாடுகள் எமக்கு ஆதரவாக செயற்படாமை அதிர்ச்சி அளிக்கின்றது என அவர் கூறினார்.

சிரியாவின் இறையாண்மையை மதிக்காமல் அரபு நாடுகள் சிரியாவுக்கு எதிராக செயற்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். எனினும் சிரியா அரபு நாடுகளுக்கு தனது கதவை பூட்டிவிடாது. ஆனால் சிரியாவின் இறையாண்மையை மதிக்கும் வரைதான் இந்த நிலை நீடிக்கும் என பஷர் அல் அஸாத் குறிப்பிட்டார். இதில் கடந்த 10 மாத கால நிகழ்வுகளுக்கு தாம் வருத்தப்படுவதாக கூறிய அசாத் இது சிரியாவுக்கான சோதனைக் காலம் எனவும் கூறினார்.

அதேபோன்று சிரியாவுக்கு எதிராக செயற்படும் தீவிரவாதிகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் எனவும் அவர் எச்சரித்தார்.

ஐ. நா. பாதுகாப்புச் சபையின் இந்த ஆண்டுக்கான முதலாவது கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையிலே பஷர் அல் அஸாத் உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum