சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

ஹெயிட்டி கற்றுத் தரும் பாடம் Khan11

ஹெயிட்டி கற்றுத் தரும் பாடம்

Go down

ஹெயிட்டி கற்றுத் தரும் பாடம் Empty ஹெயிட்டி கற்றுத் தரும் பாடம்

Post by *சம்ஸ் Sun 15 Jan 2012 - 6:29

இது சமூக வலைத்தளத்திலே நண்பரொருவர் பகிர்ந்திருந்த புகைப்படம். அந்த சுவரிலே எழுதப்பட்டிருக்கும் வாசகத்தின் உண்மையைச் சிந்தித்தபடியே மன அலைகள் பயணித்தன. கணப்பொழுதிலே கடல் கடந்து தேசங்கள் கடந்து சென்று ஒரு இடத்திலே போய் முட்டி மோதி நின்றன.
ஹெயிட்டி கற்றுத் தரும் பாடம் World-5ஒரு காலத்திலே ஸ்பானிய, பிரெஞ்சு காலனித்துவத்திற்குட்பட்ட நாடுகளிலேயே முதன்மையாய் புகழுடன் திகழ்ந்த செல்வச் செழிப்பு மிக்க தேசம் அது. ஆனால் இன்றோ, மேற்கரைக் கோளத்தின் வறுமையான நாடுகளுள் முதன்மையாய் நிற்கிறது. அது வேறெந்த தேசமுமில்லை. பூகம்ப அழிவுகளையும் வறுமையையும் உள் நாட்டு முரண்பாடுகளையும் அடையாளமாகக் கொண்ட ஹெயிட்டி தான் அந்த செல்வச் செழிப்பான தேசம் ஹெயிட்டிக்கு அத்தகைய பிரகாசமான வரலாறு ஒன்று இருந்தது என்பது இன்றைய இளஞ்சந்ததியினருக் குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கரீபிய நாடுகளுள் ஒன்றான ஹெயிட்டியின் சனத் தொகையிலே 80 சதவீதமானோர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களாவர். இந்த வறுமை ஹெயிட்டியுடன் கூடவே இருந்ததல்ல. அதன் இயற்கைச் சூழல் பாழ்பட்டமையாலும் நாட்டில் உருவாகிய ஸ்திரமற்ற நிலைமையினாலுமே ஹெயிட்டியை இந்த வறுமை நிலை ஆட்கொண்டது எனலாம். ஹெயிட்டியின் இயற்கைச் சூழல் பாழ்ப்பட்டமைக்குக் காரணம் என்ன தெரியுமா?

செல்வச் செழிப்பு மிகுந்த அந்த தேசத்தில் தூர நோக்கின்றி பல்வேறுபட்ட காரணங்களுக்காக, காடுகள் அழிக்கப்பட்டமையே இன்று மிடிமை மிகுந்த தேசமாக ஹெயிட்டி மாறுவதற்குக் காரணமாகியது. ஹெயிட்டியின் பெரும்பான்மை நிலப்பகுதி மலைப்பாங்கானது. விவசாயத்துக்கு ஏற்ற சமதரைப் பகுதி மிகவும் குறைவு. அதே வேளை சுண்ணாம்புக் கல்லின் ஆதிக்கம் நிலப்பகுதிகளில் மிக அதிகமாகும். அத்துடன் சம தரைப் பகுதியில் மேல் மண்ணும் வளமும் குறைந்தது.
ஹெயிட்டி கற்றுத் தரும் பாடம் World-7
ஆனாலும் இயற்கை குறை வைக்கவில்லை மலைப்பாங்கான பகுதிகள் அடர் காடுகளாகக் காணப்பட்டன. வானளாவிய மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. ஆனால் இயற்கை தந்த செல்வத்தை மிகையாகப் பாவித்து அதிக வருமானத்தை ஈட்ட முயன்ற ஹெயிட்டிக்கு இயற்கையே பாடம் புகட்ட முயன்றதோ என்றும் சில வேலைகளில் எண்ணத்தோன்றும்.

ஹெயிட்டியில் வகைதொகையின்றி மேற்கொள்ளப்பட்ட காடழிப்பு தான் அதன் இன்றைய மிடிமைக்கான பிரதான காரணமாகும். காடுகள் அழிக்கப்பட நாட்டின் பிரதான தேவைகளான சக்தியும் விவசாயமும் கேள்விக்குறியாகின. மலைப்பாங்கான நிலத்தில் காடுகள் அழிக்கப்பட மண்சரிவுகளும் மண்ணரிப்பும் தொடர்ந்து ஏற்பட்டன. இருந்த கொஞ்ச நஞ்ச விவசாய நிலமும் பாழ்படத் தொடங்கியது. மக்கள் தமது எரிபொருள் தேவைக்காக நம்பியிருந்த விறகும் நிலக்கரியும் கூடக் கிடைப்பது அரிதானது.

பெருந்தோட்டத் தேவைகளுக்காக ஹெயிட்டிக்குள் கொண்டுவரப்பட்ட தொழிலாளர் சமுதாயத்தால் சனத்தொகைப் பெருக்கம் ஏற்பட்டது. நெருக்கம் அதிகரித்தது. வளங்கள் அருகின. வறுமை தலைவிரித்தாடியது. மக்கள் அகதிகளாக புலம்பெயரத் தலைப்பட்டார்கள். சூழல் அகதிகள் என்ற புதிய தரப்பினர் உருவாகினர்.

ஆனால் அகதிகள் உருவாக சுற்றுச் சூழல் மட்டும் காரணமாக அமைந்து விடவில்லை. ஹெயிட்டி கொண்டிருக்கும் ஊழல் கறை படிந்த வரலாறும் கொடிய ஆட்சியும் கூட மக்களின் புலம்பெயர்வுக்குக் காரணமாகியிருந்தன.
ஹெயிட்டி கற்றுத் தரும் பாடம் World-6
1957 தொடக்கம் 1986 வரையான காலப் பகுதியிலே அடிமைகளுக்கு நடந்த கொடூரங்கள் அந்தக் கறை படிந்த வரலாற்றைத் தோற்றுவித்திருந்தன. அதே கொடூரங்கள் தாம் ஹெயிட்டியில் இன்று காணப்படும் வன்முறைக் கலாசாரத்துக்கு வித்திட்டவை எனலாம். சுற்றுச்சூழல் சீர்கெட்டபடியே சென்று கொண்டிருந்த நிலையில், ஆட்சி செய்த அரசு அதைக் கவனத்தில் எடுக்கவில்லை. அதே நேரம் வறுமை தலை விரித்தாடியது. அரசின் அலட்சியப்போக்கு காரணமாக ஹெயிட்டிக்கு நிதி உதவிகள் கிடைக்கவில்லை. ஒரு வேளை அத்தகைய உதவிகள் கிடைத்திருந்தால் சுற்றுச் சூழலை சீர் கெடாமல் பேணும் அதே வேளை மரங்களை வளர்த்து வர்த்தகம் செய்வதன் மூலம் வருமானம் ஈட்டும் வழிமுறைகளும் கூட ஹெயிட்டியில் உருவாகியிருக்கும்.

கிராமிய மட்டத்திலே மக்கள் வேறு விதமாக யோசித்தனர். உடனடித் தேவையைப் பூர்த்தி செய்யும் விவசாயப் பயிர்களா? அல்லது நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் மரங்களா என்ற போது விவசாயப் பயிர்களே அம்மக்களின் தெரிவாக இருந்தது. மரங்களை நாட்டுவதில் அவர்கள் அதிக அக்கறை காட்டவில்லை. பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்தது.

2006 ஆம் ஆண்டுக்கான தரவுப்படி, ஹெயிட்டியில் 10 சதவீதமான மக்களுக்கே மின்சாரம் கிடைத்தது. இன்றும் கூட ஹெயிட்டியின் பிரதான சக்தித் தேவையை விறகுகள் தான் பூர்த்தி செய்கின்றன என்பது தூரதிஷ்டமான தோர் விடயமாகும். காடழிப்பு பெற்றுவிடவில்லை. உலக வங்கித் திட்டமொன்றின் கீழ் முதல் போகிறது. மலைப்பாங்கான பகுதிகளிலே காடுகள் அழிக்கப்பட பெய்யும் மழை நீரின் அளவு, வேகம் காரணமாக பாரிய நிலச்சரிப்புகள் ஏற்படத்தொடங்கின அவற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆயிரக்கணக்கானவை.

புயல் நிலச்சரிவு தொட்டு பூகம்பம் வரை இயற்கை அனர்த்தங்களின் அச்சுறுத்தல் ஹெயிட்டியில் அதிகமாகவே இருக்கிறது. காடுகள் அழிக்கப்பட்டதன் பின்விளைவுகள் தான் அந்த அச்சுறுத்தலுக்குக் காரணம் என்றால் எவரும் மறுக்க மாட்டார்கள். இன்றும் கூட மக்கள் டொமினிக்கன் குடியரசு ஐக்கிய அமெரிக்கா, கியூபா போன்ற நாடுகளுக்கு மக்கள் படகுகளிலே பயணித்து அந்த நாடுகளில் அகதி அந்தஸ்து கோரி நிற்கின்றனர்.
ஹெயிட்டி கற்றுத் தரும் பாடம் World-4
சூழல் அகதிகளை உருவாக்கிய முதல் நாடு என்ற பெயரை மட்டும் பெற்று விடவில்லை. உலக வங்கித் திட்டமொன்றின் கீழ் முதன் முதலாக சுற்றுச்சூழல் கடன் பெற்ற நாடும் ஹெயிட்டி தான் சுற்றுச் சூழல் பிரச்சினைகளால் சீரழிந்த நாடுகளை மீளக்கட்டி யெழுப்பும் சுற்றுச்சூழல் கடன் திட்டத்தின் கீழ் 2001 ஆம் ஆண்டு 22.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஹெயிடடிக்குக் கிடைத்தது. ஆனால் அந்த நிதியைச் சரியான முறையிலே பயன்படுத்துவதற்கான திட்டங்களை அரசு ஏற்படுத்தியிருக்கவில்லையாதலால் உலக வங்கிப்பணத்தை வழங்கவில்லை.

அக்கடனுதவியின் மூலம் சுற்றுச் சூழல் மேம்படுவதற்குச் சாதகமான போக்கு அங்கு காணப்படவில்லை என்பதுடன் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இல்லை. என்பதும் தான் உலக வங்கியின் குற்றச்சாட்டுகளாகும். நவீன செய்மதிப்படங்களின் படி ஹெயிட்டியின் நிலப்பரப்பில் ஒரு சதவீத காடுகள் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளன. இது தான் ஹெயிட்டியின் தற்போதைய நிலை. உலகிலேயே சுற்றுச் சூழல் மிக மோசமாகப் பபாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்றாக ஹெயிட்டியை ஐ. நா. வரையறுக்கிறது. இங்கு ஹெயிட்டியைப் பற்றிக் குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது. ஒரு காலத்தில் செல்வச் செழிப்பில் மிதந்த நாடு தன் தூர நோக்கற்ற போக்கால் எப்படி மாறியிருக்கிறது என்று சந்திக்க முடிகிறதல்லவா?

எம் போன்ற வளர்முக நாடுகளுக்கு ஹெயிட்டி ஒரு நடைமுறை உதாரணம். ஹெயிட்டி விட்ட தவறை நாம் ஒருபோதும் விடலாகாது. சுற்றுச் சூழலுக்கு அநீதி நேரும் போது அதைத் தட்டிக் கேட்கும் நிலையில் ஹெயிட்டி மக்கள் இல்லை. அவர்கள் அடிமைப் படுத்தப்பட்ட நிலையிலே உள்ளவர்கள் ஆனால் எமது நிலை வேறானது இங்கு நாம் சகல சுதந்திரங்களும் வழங்கப்பட்டவர்கள் ஆனால் போதிய விழிப்புணர்வில்லாததால் கண்ணிருந்தும் குருடராக வாயிருந்தும் ஊமைகளாக காதிருந்தும் செவிடராக காலத்தைக் கழிக்கிறோம்.

அண்மைக்காலங்களில் எமது மலை நாட்டில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவுகளுக்கான அடிப்படைக் காரணம் என்ன தெரியுமா? மரங்கள், காடுகள் பல்வேறு அபிவிருத்தித் தேவைகளுக்காகவும் சட்ட விரோதமாகவும், அழிக்கப்பட்டமையேயாகும் இதை உணர்ந்தவர்கள் எத்தனை பேர்?

அந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது என்பதற்காகவே பிதுறுதலாகாலை, போன்ற சில குறிப்பிட்ட மலைப்பாங்கான பகுதியிலுள்ள காடுகள் தற்போது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலே காடழிப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமானால் அது வன்னிப் பகுதியில் மட்டும் தான் சாத்தியமாகும். ஏனெனில் அங்கு தான் காடுகளின் சதவீதம் அதிகம் என் பேராசிரியர் ஒருவர் தன் விரிவுரையிலே குறிப்பிட்டிருந்தார்.

அந்தப் பகுதியில் தான் இன்று சட்டவிரோத காடழிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. வைர மரங்கள் வெட்டப்படுகின்றன. இவை தொடர்பிலே நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இயற்கையின் சகிப்புத்தன்மை ஒரு எல்லை வரை மட்டுமே சாத்தியம் என்பதை நாம் உணர வேண்டும். இயற்கை தனது எல்லையை மீறினால், விளைவுகள் கொடூரமாக இருக்கும். அதைத் தான் ஹெயிட்டியும் நமக்கு உணர்த்த்தியது. 2004 இன் சுனாமி அனர்த்தம் கூட அதைத் தானே உணர்த்தி இருக்கிறது. பூமியின் வளங்களை எப்படி அழித்தாலும் பூமி சாதுவாக நிலைத்திருக்கும் என நாம் மூடத்தனமாக எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் எப்போதுமே மனிதனை கட்டுப்படுத்துவது இயற்கை என்பதையும் வெற்றி பெறுவது பூமி தான் என்பதையும் நாம் என்று மனதால் உணர்ந்து செயலில் காட்டுகிறோமோ, அன்று தான் எம் வாழ்வில் சுபீட்சம் நிலைக்கும்.

குழலி...


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum