சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Khan11

குழந்தைகளுக்கான பாடல்கள்

3 posters

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 17:56

First topic message reminder :

சின்ன சின்ன வயசிலே
செல்லமான வயசிலே
சொன்ன பேச்சை கேட்க வேண்டும்
அம்மா அப்பா, சொன்ன பேச்சை கேட்க வேண்டும். (2)


காலையிலே எழுந்திருக்க பழக வேண்டும்
கடவுளையே என்னாலும் வணங்க வேண்டும்.
கல்வி கற்க பள்ளி கூடம் போக வேண்டும் (2)
நல்ல கருத்துடனே பாடங்களை படிக்க வேண்டுக் (2) - (சின்ன)


எறும்பு போலே துறுதுறுப்பாய் இருக்க வேண்டும்.
எதிலையுமே பரபரப்பாய் நடக்க வேண்டும்
துரும்பு போல சமயத்திலே உதவ வேண்டும்.(2)
சூது வாது பொய்களங்கள் மறக்க வேண்டும் (2) - (சின்ன)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:06

பசுமை காப்போம்!

வீட்டுக்கு வீடு தோட்டம் அமைப்போம்!
நாட்டுக்கு நாளும் நலம் பயப்போம்!
வீடும் - நாடும் சிறந்திடவே-
வீதி தோறும் - மரம் நடுவோம்!
வேம்பு, பூவரசு, மாவெனவே,
வேண்டிய மரங்களை நட்டுவித்தால்-
தேடி எங்கெனும் செல்ல வேண்டாம்!
தேவைக்கு நமக்கு உதவிடுமே!
மல்லிகை, ரோஜா, முல்லைப் பூவினங்கள்-
மலர்கின்ற பொழுது - இனிதே - நம் -
மனங்களும் மலர்ந்து மணம் தருமே!
மகிழ்வான வாழ்வு கிட்டிடுமே!
செழுமை ததும்பும் செடிகொடிகள்-
பசுமை நிறைந்த வயல்வெளிகள்-
வளமை சேர்க்க வாழ்க்கைக்கு
வாய்த்திட தோட்டங்கள் அமைத்திடுவோம்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:06

மாய மலர்கள்

கொடிகள் இல்லாக் காட்டில் என்றும்
குலுங்கிச் சிரிக்கும் மலர்கள்!
செடிகள் இல்லாத் தோட்டம் ஒன்றில்
சிதறிக் கிடக்கும் மலர்கள்!
வேலி இல்லாப் பாத்தி தன்னில்
வெளிச்சம் சிந்தும் மலர்கள்!
கூலி தந்தே கூட்டி அள்ளிக்
குவிக்க வொண்ணா மலர்கள்!
காம்பு இல்லாத் தோற்றம் தந்து
கண்ணைச் சிமிட்டும் மலர்கள்!
கூம்பல் இல்லா நேர்த்தி கொஞ்சும்
கொள்ளை வனப்பு மலர்கள்!
மாலை சென்றால் சூட்டி அந்தி
மகிழும் தூய மலர்கள்!
காலை வந்தால் கூச்சம் கொண்டு
கலையும் மாய மலர்கள்!
நீரும் இல்லாத் தாக்கும் இன்றி
நித்தம் மலரும் மலர்கள்!
நாரில் ஒன்றாய்க் கோக்க வொண்ணா
நட்சத்திர மலர்கள்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:07

குயிலே குயிலே

கூவும் குயிலே வாவாவா
கூகூ குயிலே வாவாவா
குரலின் இனிமை கேட்கவே
குன்றின் பக்கம் வந்தேன் நான்.

உந்தன் குரலின் இனிமைக்கு
எந்தன் உள்ளம் அடிமையே
கொஞ்சும் குரலை எனக்குத்தான்
கொஞ்சம் சொல்லித் தந்திடுவாய்.

கொத்திக் கொத்தித் தின்றிடவே
கொத்துச் சோளம் தருகின்றேன்
கொஞ்சும் குரலை எனக்குத்தான்
கொஞ்சம் சொல்லித் தந்திடுவாய்.

கொய்யாப் பழம் நான் தருகின்றேன்
கொவ்வைப் பழமும் தருகின்றேன்
கொஞ்சும் குரலை எனக்குத்தான்
கொஞ்சம் சொல்லித் தந்திடுவாய்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:07

சூரியன்

தண்ணிக ரில்லாத தலைமகனே
தரணியைக் காக்க வல்லவனே
ஒன்பது கோள்கள் உனைச்சுற்
ஒளியும் வெப்பமும் தருபவனே!

பயிர்கள் செழிப்பதும் உன்னாலே
பாரில் விளைவே உன்னாலே
உயிர்கள் வளர்வதும் உன்னாலே
உலகம் உண்பதே உண்ணாலே!

பொன்னென ஒளியைத் தருபவனே
பொங்கும் கடலில் எழுபவனே
தன்னிகர் இல்லாது உழைப்பதற்கே
தன்னந் தனியே செல்பவனே!

உப்புக் கடலிலும் நீர்மொண்டு
உயரே கொண்டு செல்கின்றாய்
செப்பும் இடியுடன் மின்னலுமாய்
சிறந்த மழைத்துளி தருபவனே!

காற்று வீசுது உன்னாலே
கால மாற்றம் உன்னாலே
நேற்று இன்று நாளையென்று
நித்தமும் விடிவது உன்னாலே!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:08

மழை

சில்லென்று உடல் சிலிர்க்க
குளிர்ந்த காற்று வீசுது!
மரக் கிளைகள் படபடவென
இலைகள் தனை உதிர்க்குது!
குளத்து தவளை வெளியில் வந்து
கரகரவென கத்துது!
கரிய மேகம் வான் வெளியில்
அணி அணியாய் திரளுது!
பளிச்சென்று வடக்கோடியில்
மின்னல் பல அடிக்குது!
வரப்போகுது மழை என்று
மக்கள் மனம் மகிழுது!
பலத்த இடி ஓசையுடன்
சட சடவென மழை பெய்யுது!
காய்ந்து கிடந்த பூமித்தாயின்
மேனி எங்கும் நனையுது!
மனதிற்கினிய மண்ணின் மணம்
வீதியெங்கும் கமிழுது!
மழையை கண்ட மயிலினங்கள்
தோகை விரித்து ஆடுது!
மழையில் தன்னை நனைத்து கொண்ட
மரங்கள் மெல்ல துளிர்க்குது!
வண்ண மலர்கள் பூத்து கொண்டு
வாசம் எங்கும் வீசுது!
வறட்சி போக்கி வாழ்வளித்த
மழையின் சிறப்பை போற்றுவோம்!
வான் மழை நன்கு பெய்திடவே
வீட்டிற்கொரு மரம் நடுவோம்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:08

எறும்பைப்போல

எறும்பைப் போல
இருசுறு சுறுப்பாய்!
எறும்பைப் போல
இராப்பகல் உழைப்பாய்!
எறும்பைப் போலச்
சேமிக் கின்ற
எண்ணம் யார்க்கும்
இருக்க வேண்டும்!
ஒற்று மையாய்க்
கூடி வாழும்!
பிரிந்து வாழும்
பேதம் இல்லை!
சண்டை இல்லை!
சச்சர வில்லை!
போட்டி போடும்
பொறாமை இல்லை!
எறும்பைப் பார்த்து
வாழ்க்கை நடத்து!
எல்லா நலமும்
நாட்டில் சேர்த்து!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:09

காட்டுக்கேது எல்லை?

வானுயர்ந்த மரங்கள் உள்ள காடு - என்றும்
வற்றாமல் பாயுதொரு ஆறு
மானினங்கள் காற்றில் நீந்திச் செல்லும் - அந்த
மகிழ்வுதரும் காட்சி நெஞ்சை அள்ளும்
மயிலினங்கள் தமைமறந்து ஆடும் - குறும்பு
மந்திக்கூட்டம் கிளைகள்தோறும் தாவும்
குயிலினங்கள் இனிமைïட்ட கூவும் - அந்த
குளுமையாலே மனதில் இன்பம் மேவும்
விதவிதமாய் பூக்கள் மலரும் அங்கும் - வாழை
மா, பலாவும் காய்த்து மரத்தில் தொங்கும்
கதவு, வேலி கட்டுகளும் இல்லை - அந்த
கவினழகு காட்டுக்கேது எல்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:09

பொங்கலோ! பொங்கல்!

``தை'' பிறந்தால் வழி பிறக்கும் -உழவன்
கை உயர்ந்தால் நாடு வளம் கொழிக்கும் -அவன்
சிந்தை மகிழ சீர் பெறுக - கொண்டாடுவது-
தைப் பொங்கல் திருநாளன்றோ!
தமிழ் இன எழுச்சி பொங்க!
தமிழாய்ந்த குடிமகன் மகிழ்ச்சி பொங்க!
தன்னிகரில்லா தமிழன்னை புகழ்பாடுவது-
தைப் பொங்கல் திருநாளன்றோ!
பொழுது புலரும் நல்வேளையிலே
பொங்கலோ - பொங்கலென்று குரல் எழுப்பி,
புதுப் பொலிவு பெற - நல் இல்லத்தை-
புதுப்பிக்கும் திருநாள் போகியன்றோ!
கதிரவனை வணங்கி துதித்து-
கன்னித் தமிழ் அன்னை வழி நடந்து-
கட்டிக் கரும்பின் இன்சுவை அறிந்து-
களிப்புடனே கொண்டாடும் திருநாளன்றோ!
காட்டை மேட்டை கழனியாக்கி,
காலமும் ஏர்முனையில் உழல்வோர்க்கு -அவன்
காட்டிய வழி நின்று நன்றியுரைப்பது-
``உழவர் திரு நாள்'' எனும் பெருநாளன்றோ!
காண்போரின் நெஞ்சம் -பொங்கிடவே-
மாண்போடு தமிழினம் வாழ்ந்திடவே-
தேன்மொழி போல் வாழ்வும் - இனித்திடவே - நாம்
காணும் பொங்கலன்று -கண்டு மகிழ்வதன்றோ!
பொங்கலோ! பொங்கல் என்று முழங்கிடுவோம்!
பொங்கட்டும்! தமிழர் வாழ்வு -வளம் பெறவே!
தங்கட்டும்! செல்வங்கள்! செழிப்புறவே.
தமிழினம் காக்க நாம் உறுதி ஏற்போம்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:10

நல்லவராக வாழ்ந்திடுவோம்

கண்கள் இரண்டு நமக்கெதற்கு?
உலகில் நல்லதைப் பார்க்கத்தான்!
காதுகள் இரண்டு நமக்கெதற்கு?
நல்லதை என்றும் கேட்கத்தான்!
இதழ்கள் இரண்டு நமக்கெதற்கு?
இனிய சொற்களைப் பேசத்தான்!
கைகள் இரண்டு நமக்கெதற்கு?
உழைத்து உழைத்து உயரத்தான்!
கால்கள் இரண்டு நமக்கெதற்கு?
சுயநலம் இன்றி நடக்கத்தான்!
இதயம் ஒன்று நமக்கெதற்கு?
அனைவரும் ஒன்றாய் வாழத்தான்!
இவைதான் நல்ல ஒழுக்கங்கள்
இமையாய் நாமும் காத்திடுவோம்!
நல்லவ ராக செயல்படுவோம்!
நாட்டின் புகழைக் காத்திடுவோம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:10

கூடி வாழ்வோம்

காகா என்றே கத்திப்பார்
காகம் நூறு சேருதுபார்
கீகீ என்றே கத்திப்பார்
கிளிகள் ஒன்றாய் சேருதாபார்
கூகூ என்றே கூவிப்பார்
குயில்கள் ஒன்றாய் சேருதாபார்
லொள் லொள் என்றே கத்திப்பார்
நாய்கள் ஒன்றாய் சேருதாபார்
மேமே என்றே கத்திப்பார்
ஆடுகள் ஒன்றாய் சேருதாபார்
காக்கைக் கூட்டம் போன்றே நாம்
கூடிவாழ் வோம் நாட்டினிலே
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
நாட்டில் நடக்கும் எண்ணிப்பார்
பாடி விட்டால் போதுமா?
வாழ்ந்து காட்டி உயர்ந்திடுவோம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:10

சிறந்திட வேணும்!

சூரியனும் உதிக்கும் முன்னே
எழுந்து பழகனும்!
சுத்தமாகப் பல்லும் உடலும்
தேய்த்துக் குளிக்கனும்!
நித்தியமாய் கடவுளையே
நினைத்து வணங்கனும்!
நேரம் தவறாமல் வேலை
செய்து பழகனும்!
பள்ளிப்பாடம் படித்து எழுதி
முடித்திட வேணும்!
பரபரப்பாய் உண்ணாமல்
மென்று அருந்தணும்!
வணக்கம் வருகிறேன் என்று புறப்பட வேணும்!
நம் வாழ்வெல்லாம் கற்பதிலே
சிறந்திட வேணும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:11

தீண்டாமை

காக்கையின் நிறம் கருப்பாயினும்
காக்கும் ஒற்றுமையில் குறையுண்டோ!
குயிலின் நிறம் மாறிடினும்
குரலின் இனிமையில் மாற்றமுண்டோ!

நிறங்கள் எதுவாக இருந்திடினும்
மனங்களில் தூய்மை அவசியமே!
நிறங்களால் வேற்றுமை வேண்டாமே!
மனித இனங்களில் ஒற்றுமை அவசியமே!

தீண்டாமை எனும் கொடிய நோயே
வேண்டா விளைவுதனை ஏற்படுத்தும்!
தீண்டும் நோய்க்கு மருந்துண்டு
தீண்டாமை நோய் மிகக் கொடியதன்றோ!

மதங்கள் பலவாக இருந்திடினும்
மனிதநேயம் மனதில் அவசியமே!
மதம் கொண்டு அலையும் யானையைப் போல்
மனிதர்கள் இருப்பது கேடன்றோ!

சிந்தனைகள் பலவாக இருந்திடினும்
சிந்தும் வேர்வையில் மாற்றமுண்டோ!
சிகரத்தை நாம் தொடுவதற்கு
சிந்தனையைச் சிதறவிடல் முறையாமோ!

குணங்கள் பலவாக இருந்திடினும்
குருதியின் நிறத்தில் மாற்றமுண்டோ!
குலங்கள் சிறக்க வாழ்வதற்கு சிறந்த
குணநலன்கள் பெரிதும் அவசியமன்றோ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:11

இந்தியா

இந்திய நாடு என்னாடு
இளமை பொங்கும் பொன்னாடு
பங்கம் சிறிதும் இல்லாத
பாரத நாடு நம்நாடு!

மொழிகள் பலவும் பேசிடுவாள்
மோன விழியால் பார்த்திடுவாள்
கலைகள் யாவும் கற்றிடுவாள்
காலம் முழுதும் நின்றிடுவாள்!

மலைகள் நதிகள் வளமுடையாள்
மக்கட் செல்வம் பலவுடையாள்
சமயம் பலவும் சகித்திடுவாள்
சத்தியப் பயிரை வளர்த்திடுவாள்!

உலகை நடத்திச் சென்றிடுவாள்
உண்மை வழியில் நின்றிடுவாள்
எளிமை நெறியில் நடைபயில்வாள்
என்றும் அன்பைப் பொழிந்திடுவாள்!

கதைகள் பலவும் கூறிடுவாள்
கருத்தாய் மக்களை வளர்த்திடுவாள்
எதையும் எண்ணிச் செய்திடுவாள்
ஏற்றம் பெறவே உழைத்திடுவாள்!

ஏவு கணைகள் ஏவிடுவாள்
எந்தச் சவாலையும் எதிர்கொள்வாள்
பூவுடல் புண்ணியப் பாரதத்தாய்
போற்றி வணங்குவோம் வாருங்களே!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:12

என் தங்கை

எங்கள் தங்கை நல்லவள் -அவள்
எதையும் கீழே தள்ளுவாள்!
அங்கும் இங்கும் துள்ளுவாள் -நான்
அருகில் போனால் கிள்ளுவாள்!

வெண்டைப் பிஞ்சைப் போல -சின்ன
விரலை நீட்டி மடக்குவாள்!
எண்ணி எண்ணிப் பார்ப்பாள் -நான்
என்ன என்று கேட்டால்

கண்ணின் முன்னே நீட்டி -விரல்
கணக்குச் சொல்வாள் அழகு!
ஒண்ணு மூணு ஏழு -அப்புறம்
ஒன்பது என்பாள் சிரிப்பேன்!
தப்பு என்று சொன்னால் -என்
தாடை வீங்கிப் போகும்
அப்படி அறைவாள் ஓங்கி -அந்த
அழகுச் சின்னக் கையால்!

குப்புற விழுவாள் பார்த்தால் -அவள்
குரலெழுப் பாமல் சிரிப்பாள்
எப்படிச் சமர்த்தாய் விழுந்தாய் -என்றால்
என்னை அடிப்பாள் அழுவேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:12

உறுதிமொழி

பள்ளி நாளும் சென்றிடுவேன்
பாடம் எல்லாம் படித்திடுவேன்
துள்ளி ஆடியே மகிழ்ந்திடுவேன்
தோளில் வலிமை சேர்த்திடுவேன்!

ஒற்றுமை யாகவே வாழ்ந்திடுவேன்
ஒன்றே குலம் என்றிடுவேன்
நற்றமிழ் என்றும் ஓதிடுவேன்
நற் பெயருடனே திகழ்ந்திடுவேன்!

நல்ல நல்ல நண்பரிடம்
நாளும் இனிதே பழகிடுவேன்
நல்ல நல்ல நூல் தேடி
நூலகம் நாடிச் சென்றிடுவேன்!

தோல்வி கண்டு எப்பொழுதும்
துளியும் துவண்டிட மாட்டேன்
தோல்வியே வெற்றிக்கு அடிப்படையாம்
வாழ்வில் எப்பொழுதும் உயர்ந்திடுவேன்!

கற்றுக் கொண்டே இருந்திடுவேன்
கற்ற வழியில் நின்றிடுவேன்
கற்றக் கல்வியை நாட்டுக்குக்
கனிவாய் வழங்கிச் சிறந்திடுவேன்!

பேணி வளர்த்த பெற்றோரைப்
பெரிதும் போற்றி வாழ்ந்திடுவேன்
ஏணியாய் இருந்த எவரையும்
இதயத்தில் வைத்துப் பூஜித்திடுவேன்!

அறிவைப் புகட்டிய ஆசானை
அன்றாடம் நினைந்து வணங்கிடுவேன்
உறுதிமொதி இவை என்பேன்
உயிருள்ளவரைக் காத்திடுவேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:13

எங்கள் பாட்டி

பாட்டி எங்கள் பாட்டி

பாசம் காட்டும் பாட்டி

மடியில் வைத்துக் கொஞ்சி

மசியல் சோறு தருவாங்க!


காலையில் எங்களை எழுப்பி

குளிக்கச் சொல்லி இழுப்பாங்க

குளித்து முடித்து வந்ததும்

பாடங்கள் படிக்க வைப்பாங்க!


மாலையில் வீட்டுக்கு வந்ததுமே

பலகாரம் தின்னத் தருவாங்க

தோட்டத்தில் பறித்த பூக்களை

பூஜை செய்ய பயன்படுத்துவாங்க!


பாட்டி வைத்தியம் பலசொல்லி

கனிவாய் சிகிச்சை செய்வாங்க

பொக்கை வாயாய் இருந்தாலும்

சக்கையாய் கதைகள் சொல்வாங்க!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:14

கற்றுக்கொள்

நாயிடம் நன்றியைக் கற்றுக்கொள்

நட்டம் உனக்கில்லை ஒத்துக்கொள்

நரியிடம் தந்திரம் கற்றுக்கொள்

நன்மை தானே புரிந்துகொள்!


கிளியிடம் இனிமையைக் கற்றுக்கொள்

கீழ்மை உனக்கில்லை ஒத்துக்கொள்

புலியிடம் திட்டமிட கற்றுக்கொள்

திட்டமிட்ட வாழ்வு தெவிட்டாதெனக் கொள்!


தேனியிடம் சுறுசுறுப்பைக் கற்றுக்கொள்

தோல்வி உனக்கில்லை ஒத்துக்கொள்

மானிடம் வேகம் கற்றுக்கொள்

மகிழ்ச்சி பொங்கும் புரிந்துகொள்!


காகத்திடம் ஒற்றுமை கற்றுக்கொள்

கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

மேகத்திடம் கொடையைக் கற்றுக்கொள்

மேன்மை தானே உணர்ந்துகொள்!


உம்மிடமிருந்து பிறர் கற்க

உருப்படியாக நல்ல பழக்கங்கள்

உயர்ந்த சிந்தனை நோக்கங்கள்

உலகுக்கு அளிப்பீர் பிள்ளைகளே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:15

மழை

கொட்டும் இடியுடனே மழை பொழியுது

கொர் கொர் என்றே தவளை கத்துது

சட்டி பானையெல்லாம் சடசடங்குது

சத்தத்தைக் கேட்ட மனம் கிடுகிடுங்குது


மின்னல் கொடியுடனே மழை பொழியுது

மேனியில் வெளிச்சம்தான் வந்து பாயுது

சன்னல் கம்பியெல்லாம் பளபளக்குது

சாரல் துளிவொலியும் சலசலக்குது


பயங்கர காற்றுடனே மழை பொழியுது

படிகக் கல்போல அவை விழுகுது

வயலில் நெற்பயிர்கள் துடிதுடிக்குது

வாயில் என் பற்கள் கடகடக்குது


வெள்ளப் பெருக்குடனே மழை பொழியுது

வறட்சி தீயினையும் அவை அழிக்குது

உள்ளம் மகிழ்வாக பொங்கி வழியுது

ஊற்றும் மழை நீரில் தேன் பொழியுது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:15

படிப்பே வலிமை

நீருக் குள்ளே முதலைக்கு

நிகரில்லாத வலுவுண்டு!

நீரைவிட்டே நீங்கித்தான்

நிலத்தின் மீது வந்து விட்டால்

சார மற்ற சக்கைப்போல்

தனது வலிமை இழந்து விடும்!

படிப்பால் பெருகும் அறிவொன்றே

பாரில் வலுவாம் மானிடர்க்கு!

படிப்பறி வில்லா மானிடர்கள்

நிலத்தில் வாழும் முதலைகளே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:16

மணிப்புறா

எங்கள் வீட்டு மணிப்புறா

எழில் மிகுந்த மணிப்புறா

சொந்தம் கொண்டு வானினைச்

சுற்றிப் பார்க்கும் மணிப்புறா!


தானியங்கள் தின்றிடும்

தண்ணீர் வைத்தால் குடித்திடும்

மேனி எல்லாம் மின்னிடும்

மென்மையான மணிப்புறா!


அயர்வு சிறிதும் இன்றியே

அழகாய்ப் பறக்கும் மணிப்புறா

தயக்கமின்றி கூட்டினில்

தங்கி வாழும் மணிப்புறா!



எங்கள் வீட்டு மணிப்புறா

என்றும் உயரும் மணிப்புறா

தம்பி தங்கை விரும்பிடும்

தங்கமான மணிப்புறா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:17

வாழ்க்கைப்பாடம்

எந்தப் பூதான் சிறந்ததென

இனிய போட்டி வைத்தார்கள்;

வந்து பூக்கள் வரிசையாய்

வாழ்வின் சிறப்பைப் பேசினவாம்!


மல்லிகைப் பூ சொன்னதாம்

மணத்தில் சிறந்தது தானென்று;

அல்லிப் பூவும் சிரித்ததாம்

அழகில் அதுவே சிறந்ததாம்!


பூக்களில் ராஜா நானென

பொலிவாய் ரோஜா சொன்னதுவாம்

பூக்களில் பெரியவன் நானென

பூத்த தாமரையும் வந்ததுவாம்!


ஓரமாய் தக்காளிப் பூவொன்று

ஓசைப் படாமல் நின்றதுவாம்

ஆரவாரம் இல்லாமல்

அதனைப் பற்றிச் சொன்னதாம்!


ஐயா எனக்கு மணமில்லை

அழகுக் கூட இல்லையே

காயாய் மாறி கனியாவேன்

கருகி விழுவேன் என்றதுவே!


பூக்கள் எல்லாம் பேசியதை

பொறுமையாகக் கேட்டதன் பின்

பூக்களில் சிறந்தது எதுவென

போற்றித் தீர்ப்புச் சொன்னார்கள்!


அழகும் மணமும் கொண்டவை

அன்று மலர்ந்து அன்றழியும்

அளவில் பெரிதாய் இருப்பவை

அவையும் நிலைத்து வாழ்வதில்லை!


சின்னத் தக்காளி மலர்தானே

சிறப்பாய் காயாய் பழமாகி

தின்பார் பசியைப் போக்கிவிடும்

திரும்ப முளைக்க வழியுண்டாம்!


அதனால் அதுவே சிறந்ததுவாம்

அதற்கே பரிசு என்றிட்டார்

இதுதான் வாழ்க்கைப் பாடமம்மா

இனிதாய் பயனுடன் வாழ்ந்திடுவோம்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:18

கிளியக்கா
========

எங்கள் வீட்டுக் கிளியக்கா

எனக்குப் பிடித்த கிளியக்கா

தங்கக் காலால் தினந்தோறும்

தத்தி நடக்கும் கிளியக்கா!


பச்சை மேனிக் கிளியக்கா

பவளச் செவ்வாய்க் கிளியக்கா

இச்சை மொழிகள் தினம் பேசி

இதயம் கவரும் கிளியக்கா!


கொத்தித் தின்னும் கிளியக்கா

கொஞ்சிப் பேசும் கிளியக்கா

தத்தித் தத்தி நடை நடந்து

தலைமேல் தாவும் கிளியக்கா!


சிறகைக் கோதும் கிளியக்கா

சிநேகப் பார்வைக் கிளியக்கா

விறகில் கொம்பில் நடந்தபடி

வித்தை காட்டும் கிளியக்கா!


மெல்லக் கிள்ளும் கிளியக்கா

மெத்தை உடம்புக் கிளியக்கா

சொல்லச் சொல்ல தமிழ் வார்த்தை

சொல்லிப் பழகும் கிளியக்கா!


எனக்குப் பிடித்த கிளியக்கா

என்னைப் பிடித்த கிளியக்கா

எனக்கு ஏதும் சொல்லாமல்

எங்கே பறந்தாய் கிளியக்கா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:18

நூல்நிலையம்
===========

நூல்கள் தேடிக் கால்கள் போகும்

நூல்கள் வாழும் இல்லமே!

நாளும் ஒன்று வாசிப்பவர்க்கு

நூறு தகவல் சொல்லுமே!


கடவுள் பற்றி நூல் படித்தால்

நெஞ்சில் பக்தி வழியுமே!

விடுதலைப் போர் நூல் படித்தால்

நாட்டின் தியாகம் புரியுமே!

அறிவியல் நூல் படித்தால்

அறிவு பரந்து வளருமே!

நிறைய நிறைய விஞ்ஞானத்தில்

விந்தைப் புரிய மிளிருமே!


கற்பனைத் தேர் ஊர்வலத்தில்

கதைகள் இன்பம் நல்குமே!

அற்புதங்கள் செய்த அறிஞர்

வாழ்க்கைச் சரிதம் சொல்லுமே!


சின்ன நூல்கள் பெரிய நூல்கள்

சிந்தனையைத் தூண்டுமே!

எண்ணம் வளர ஊர்கள் தோறும்

நூல் நிலையம் வேண்டுமே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:19

கல்வியே அழகு

உழவுக்கு விளைச்சல் அழகு!

ஊருக்கு கோவில் அழகு!


குழந்தைக்கு மழலை அழகு!

குளத்துக்குத் தண்ணீர் அழகு!


மலைகளுக்கு உயரம் அழகு!

மனிதனுக்கு ஒழுக்கம் அழகு!


கலைகளுக்குத் திறமை அழகு!

கண்களுக்கு ஒளியே அழகு!


நிலவுக்கு முழுமை அழகு!

நினைவுக்கு தூய்மை அழகு!


பழத்திற்குச் சுவையே அழகு!

படிப்புதான் வாழ்க்கைக்கு அழகு!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 19:19

உண்மை சொல்லவேண்டும்

உண்மை சொல்ல வேண்டும் என்றும்

உவந்து சொல்ல வேண்டும்!

எண்ணம் உயர்வு வேண்டும்! நன்றாய்

ஏற்றம் பெற்று வாழ்வீர்!


கொடிய துன்பம் தனிலும் கொண்ட

கொள்கை தன்னில் நிற்பீர்!

நெடிய பயணம் போதும் கொண்ட

நேர்மை போற்றி வாழ்வீர்!


கள்ளம் கபடந் தானும் ஈனக்

கயவர் தனக்கே வேண்டும்

உள்ளம் நிறைந்த உண்மை மண்ணில்

உயர்வை அளிக்கும் என்றும்


சத்தியவான் சாவித்திரி வாழ்வு உலகில்

சத்தியமாய் என்றும் நிலைக்கும்!

எத்தர் வாழ்வை தன்னை எண்ணில்

எளிதாய் அழியும் பொழுதிர்!


உலகம் போற்றும் காந்தி! என்றும்

உண்மை வழியில் நின்றார்!

காலம் கடந்த போதும் இன்றும்

கனவாய் நிற்பார் நெஞ்சில்!


நல்லதோர் வாழ்க்கை கொள்வீர்!

நனியில் உயர்ந்து வாழ்வீர்

பொல்லா வாழ்க்கை வேண்டாம்

பொடியாய்ப் போவிர் நொடியில்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 6 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum