சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

அலை அலையாய் அழகான கூந்தல் பெற….. Khan11

அலை அலையாய் அழகான கூந்தல் பெற…..

Go down

அலை அலையாய் அழகான கூந்தல் பெற….. Empty அலை அலையாய் அழகான கூந்தல் பெற…..

Post by ahmad78 Sun 12 Feb 2012 - 15:21

அலை அலையாய் அழகான கூந்தல் பெற…..


ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12, 2012



அலை அலையாய் அழகான கூந்தல் பெற….. 12-home-remedies-for-hair-care

















நீண்ட கருமையான கூந்தல்
பெண்களின் சாமுத்ரிகா லட்சணங்களில் ஒன்று. முக பொலிவுக்கு அழகை கூட்டுவது
கூந்தல். அடர்த்தியான, சுருட்டையான, கூந்தலை அடைவதில் எல்லா பெண்களுக்கும்
ஆசை. தலைமுடி நமது தோற்றத்திற்கு பொலிவு தருவதோடு மட்டுமல்லாது, கருகருவென
மிளிரும் தலைமுடி ஆரோக்கியத்தின் அறிகுறி. தலைமுடி, வெய்யில், வெப்பம்,
இவைகள் மூளையை தாக்காமல் காக்கிறது.









மூன்று வகை கூந்தல்

முகத்தை
போலவே கூந்தல்களுக்கும் தனித்தன்மை உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
வகையான முடி அமைப்பு இருக்கும். கூந்தலை எண்ணைப்பசை மிகுந்த கூந்தல், வறண்ட
கூந்தல், சாதாரண கூந்தல் என இயற்கையிலேயே மூன்று வகை உண்டு.

எண்ணை
சுரப்பியான செபாசியஸ் சுரப்பி, சேபம் எண்ணையை அதிகம் சுரப்பதால் கூந்தலின்
எண்ணை அதிகமாகும். எண்ணைப்பசை அதிகமானால் மயிர்க்கால்கள் அடைத்துக்
கொள்ளும். தலையில் அழுக்கு சேரும். ஒரு சிலருக்கு எண்ணை சுரப்பி போதிய அளவு
சுரக்காததால், கூந்தல் வறண்டு விடும். எண்ணை போஷாக்கில்லாததால் முடி
பலவீனம் அடைந்து, உலர்ந்து உடையும். எண்ணை சுரப்பி சரியான அளவில்
சுரந்தால், கூந்தல் ஆரோக்கியமாக வளரும். முடிப்பிரச்சனைகள் தோன்றாது.

கருமையான கூந்தல் அழகு

பச்சைபயறு,பூலாங்கிழங்கு
இரண்டையும் கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.அதில் சிறிது எடுத்து தயிர்
கலந்து தலையில் தடவி ஊறவைத்து குளிக்க தலையில் பொடுகுத் தொல்லை ஏற்படாது.
முடி உதிராது. இதே கலவையில் சிறிது எடுத்துதேங்காய் எண்ணெய்,ரோஸ் வாட்டர்,
எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து சோப்புக்கு பதிலாக உடலில் பூசி
குளித்தால் சருமம் அழகாக தோன்றும். முட்டையின் வெள்ளை கருவை தனியே பிரித்து
எடுத்து அதனை தலையில் பூசி ஊறவைத்து 15 நிமிடம் கழித்து தலையை அலச கூந்தல்
பட்டுப்போல் மென்மையாகும்.

ஊறவைத்த வெந்தயம்

உடலுக்கு
குளிர்ச்சி தருவதில் வெந்தயம் சிறந்தது. வெந்தயத்தை நன்றாக ஊறவைத்து அதனை
மைய அரைத்து தலையில் அரைமணிநேரம் ஊறவைத்து அலசினால் உடல் சூடு போகும்.
கூந்தல் உதிர்வது குறையும்.

மருதாணி மகத்துவம்.

முடி செழித்து வளர வாரம் ஒருமுறை தலைக்கு நல்லெண்ணெய் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

மருதாணி,செம்பருத்தி,கருவேப்பிலை,வேப்பிலை,ரோஜா
இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு
காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டுபின்பு தலைக்கு
தேய்க்கவும்.இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும்.

கடுக்காய்,
செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய்
எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவி வர நன்றாக முடி வளரும்.

செம்பருத்தி கருவேப்பிலை

செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் நன்றாக தேய்த்து அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

கருவேப்பிலை
ரெண்டு கொத்து, சின்ன வெங்காயம் நான்கு எடுத்து இரண்டையும் நன்றாக அரைத்து
அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்துகுளித்தால் கூந்தல் நல்ல
கருமையான நிறத்துடன் வளரும்.

அலையான கூந்தல்

ஒரு
லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி,
தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி,
வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து,
எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நான்கு நாள் வெயிலில்
வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின்னர்
அதனை மெல்லிய வெள்ளைத் துணியில் கொட்டி வடிகட்டவும். குளிக்கும் முன் இதை
தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும், அத்துடன் தலை முடி
அடர்த்தியாக வளரும். ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி பூவை அரைத்து
நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி
அடர்த்தியாக வளரும்.

ரசாயன ஷாம்புகள்

எப்பொழுதுமே
ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும்.மாற்றிக் கொண்டே
இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது.ஷாம்புக்கள் பயன்படுத்தும்போதும்
இதே முறையை பின்பற்ற வேண்டும். அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினாலும் முடி
உதிரும். அதே சமயம் சத்தான உணவுகள், பழங்கள், காய்கறிகளை உணவில்
சேர்த்துக்கொண்டாலும் முடி உதிர்வது தடுக்கப்படும்.

thatstamil


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum