சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

வருங்காலத்தைப் பற்றி பயமில்லாமல் வாழ வேண்டும்: அப்துல் கலாம் மாணவ, மாணவியருக்கு அறிவுரை Khan11

வருங்காலத்தைப் பற்றி பயமில்லாமல் வாழ வேண்டும்: அப்துல் கலாம் மாணவ, மாணவியருக்கு அறிவுரை

2 posters

Go down

வருங்காலத்தைப் பற்றி பயமில்லாமல் வாழ வேண்டும்: அப்துல் கலாம் மாணவ, மாணவியருக்கு அறிவுரை Empty வருங்காலத்தைப் பற்றி பயமில்லாமல் வாழ வேண்டும்: அப்துல் கலாம் மாணவ, மாணவியருக்கு அறிவுரை

Post by சிபான் Thu 16 Feb 2012 - 12:25

வருங்காலத்தைப் பற்றிய பயமின்றி வாழ வேண்டும். மாறிவரும் தட்பவெட்ப சூழ்நிலையை சமாளித்து எதிர்கால வாழ்க்கையை வளப்படுத்த அனைவரும் வீட்டுக்கு வீடு மரம் வளர்க்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்பதுல் கலாம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம், இன்று மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். நிகழ்ச்சியில், 40 பள்ளிகளைச் சேர்ந்த 700 மாணவிகள், 400 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர் பேசுகையில், நான் தூத்துக்குடிக்கு வருவது இதுவே முதல்முறை. உங்களை பார்ப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும், பனிமயமாதா திருவிழாவின் போது இங்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆங்கிலேயருக்கு சவால் விட்ட வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த மாவட்டம் இது.

தூத்துக்குடியை பார்த்ததும் எனக்கு ஒரு கனவு வருகிறது. உப்பளங்களை பார்க்கும்போது சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம். கடல்நீரை நன்னீராக ஆக்கலாம். ஏராளமான மரங்களை நட்டு பசுமையான தூத்துக்குடியை உருவாக்கலாம் எனத் தோன்றுகிறது.

இன்றைய இளைய சமுதாயம் வருங்காலத்தைப் பற்றி பயமே இல்லாமல் வாழ வேண்டும். உங்களுக்கு அளிக்கப்பட்ட கல்வியின் பயனால் உங்கள் ஆசிரியர்களுக்கு நல்ல மாணவனாக, பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகளாக, நாட்டிற்கு நல்ல குடிமகனாக திகழ வேண்டும்.

நீ யாராக இருந்தாலும், உன்னுடைய உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய். என்னுடைய கருத்து உன் உள்ளத்தில் லட்சிய ஒளியை பிரகாசிக்க செய்யட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலைப் பெருக்கு. அதை அடைய உழைப்பு முக்கியம். உழை... உழைத்துக் கொண்டே இரு. விடா முயற்சி இருந்தால் வெற்றி வந்து சேரும்.

ஒரு நாடு நல்ல வளமான நாடாக கருதப்பட வேண்டுமானால், நோயின்மை, செல்வ செழிப்பு, நல்ல விளைச்சல், அமைதியும், சுமுகமான சமுதாய சூழ்நிலையும், வலிமையான பாதுகாப்பும் அந்நாட்டில் நிலவ வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். என்ன அருமையாக ஒரு வளமான நாட்டை படம்பிடித்துக் காட்டுகிறார் அவர். நாம் எல்லோரும் உழைத்தால்தான் நம் நாட்டை வளமானதாக, வல்லரசாக மாற்ற முடியும்.

ஒவ்வொரு மனிதனும், ஒரு மரத்தையாவது வளர்க்க வேண்டும். ஒரு மரம், ஒரு வருடத்திற்கு 20கிகி கார்பன்டை ஆக்சைடை உள்வாங்கி அழிக்கிறது. அப்படி என்றால் நாம் ஒவ்வொருவரும் நாம் வாழ்நாளில் 10 மரங்களை நட்டு அதை பாதுகாத்தால், 10 மில்லியன் மரங்களை நடுவோம் என்ற இலக்கை இலகுவாக அடைய முடியும். இதன் மூலம் இந்தியா மாறிவரும் தட்பவெட்ப சூழ்நிலையை சமாளித்து நமது எதிர்கால வாழ்க்கையை வளப்படுத்த இயலும்.

என்னால் முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தால்; எங்களால் முடியும் என மாணவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். அது, இந்தியாவால் முடியும் என மாறும்.நொடியும், மணித்துளியும், நாளும் பறந்து கொண்டே இருக்கும். ஒரு முறை சூரியனை பூமி சுற்ற ஒரு ஆண்டு ஆகிறது; அப்போது நமக்கு ஒரு வயது முடிகிறது என்பதை உணர வேண்டும்.நேரம் பறப்பதை நாம் நினைத்தாலும் நிறுத்த முடியாது;

முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் வரவேற்று பேசுகையில் டாக்டர் அப்துல் கலாம் பன்முகத் திறமை கொண்டவர். விஞ்ஞானியாக, ஜனாதிபதியாக, ஆசிரியராக, மனித நேயமிக்கவராக விளங்கி வருகிறார். அவர் மாணவர்கள் மனதில் புதைந்து கிடக்கும் ஆற்றலை வெளிக்கொனரச் செய்யும் திறமை கொண்டவர். அவர் தூத்துக்குடி மாவட்தத்திற்கு வந்ததில் பெருமிதம் அடைகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் கலந்துரையாடலின்போது, நாட்டில் விவசாயிகள் குறைந்து வருகிறார்கள் நமக்குத் தேவையான 300 மில்லியன் டன் உணவு உற்பத்தியை எப்படி நிறைவேற்ற முடியும் என்று ஒரு மாணவி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய கலாம் நவீன தொழில்நுட்பங்களை விவசாயத்தில் புகுத்துவதன் மூலம் அந்த இலக்கினை அடையலாம் என்றார்.

நீங்கள் மீண்டும் ஜனாதிபதியாக ஆனால் முதல் கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? என்று ஒருமாணவன் கேள்வி கேட்டான். அதற்கு பதிலளித்த அவர் நான் ஆசிரியராகவே இருக்க விரும்புகிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிமளா, காவல்துணை கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர், உதவி கண்காணிப்பாளர் சோனல் சந்திரா, சுப்பைய வித்யாலயம் பள்ளி தாளாளர் கணேசன், முன்னாள் காமராஜ் கல்லூரி முதல்வர் செல்வராஜ், சிஎம் மேல்நிலைப் பள்ளி தாளாளர் திருச்சிற்றம்பளம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சிபான்
சிபான்
புதுமுகம்

பதிவுகள்:- : 164
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

வருங்காலத்தைப் பற்றி பயமில்லாமல் வாழ வேண்டும்: அப்துல் கலாம் மாணவ, மாணவியருக்கு அறிவுரை Empty Re: வருங்காலத்தைப் பற்றி பயமில்லாமல் வாழ வேண்டும்: அப்துல் கலாம் மாணவ, மாணவியருக்கு அறிவுரை

Post by முனாஸ் சுலைமான் Thu 16 Feb 2012 - 19:33

##* :flower: :flower: :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum