சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

நோக்கியா என் 78 புதிய வசதிகள் . Khan11

நோக்கியா என் 78 புதிய வசதிகள் .

2 posters

Go down

நோக்கியா என் 78 புதிய வசதிகள் . Empty நோக்கியா என் 78 புதிய வசதிகள் .

Post by ஹனி Tue 25 Jan 2011 - 20:17

நோக்கியா என் 78 புதிய வசதிகள் . Mobilemalar-1a-30608
நோக்கியா என் 78 புதிய வசதிகள்

நோக்கியா என் 78 மொபைல் போன் குறித்த புதிய தகவல் ஒன்று வெளிவந்துள் ளது. இந்த போன் முதலில் வடிவமைக்கப் பட்ட போது இதில் ஒரு எப்.எம். ட்ரான்ஸ் மீட்டர்.


இருந்தது. இந்த வசதியின் மூலம் இதில் பதிந்து இயக்கப்படும் பாடல்களை ஒரு எப்.எம். ரேடியோவை குறிப்பிட்ட அலை வரிசையில் ட்யூன் செய்து கேட்கலாம். இந்தியாவில் அண்மையில் இந்த போன் விற்பனைக்கு வந்த போது அதில் எப்.எம். ட்ரான்ஸ்மீட்டர் வசதி இல்லை. ஏனென்றால் இந்தியா உட்பட சில நாடுகளில் அரசின் அனுமதி இல்லாமல் எப்.எம். ட்ரான்ஸ் மீட்டர்களை இயக்கக் கூடாது.

எனவே அந்த நாடுகளில் இந்த போன் விற்பனைக்கு செல்கையில் எப்.எம். ட்ரான்ஸ்மிஷன் வசதி இல்லாமல் தயாரிக் கப்பட்டு அனுப்பப்படுகிறது. இதே போல் வேறு சில மொபைல் போன்களிலும் எப்.எம் ட்ரான்ஸ்மீட்டர் வசதி உள்ளது. சோனி எரிக்சன் டபிள்யூ 980 மொபைலில் இந்த வசதி உள்ளது. இந்தியாவில் இந்த வசதியுடன் போன் விற்பனையாகிறதா? அல்லது அது இல்லாமல் விற்பனையா கிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும்.



கன்னட மொழியில் மொபைல் சேவை

கன்னட மொழியில் அமைந்துள்ள மொபைல் போன்களை ஏர்டெல் நிறுவனம் கர்நாடக மாநிலத்தின் கிராமப் புறங்களில் அறிமுகப்படுத் துகிறது. இதற்கென இந்தியன் பெர்டிலைசர் கூட்டுறவு அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. 2009 ஆம் ஆண்டுக்குள் கர்நாடகா மாநிலத்தின் 90 சதவிகித மக்களிடம் மொபைல் போன் பயன்பாட்டினைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஏர்டெல் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இன்னும் கிராமப்புற மக்கள் மொபைல் போனை அவ்வளவாக அங்கு பயன்படுத்தத் தொடங்கவில்லை. கர்நாடகாவில் மொபைல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஒரு கோடியே 70 லட்சமாக இருந் தாலும் இதில் கிராமப் புற மக்களின் எண்ணிக்கை (13%) மிகக் குறைவு தான். எனவே தான் கிராமப் புற மக்களுக்கு புரியும் வகையில் கன்னடத்தில் டிஸ்பிளேயுடன் கூடிய மொபைல் போன்களை ஏர்டெல் அறிமுகப்படுத்துகிறது.

சாம்சங் மோட்டாரோலாவை முந்தியது

இந்த ஆண்டின் முதல் மூன்று மாத மொபைல் போன் விற்பனையில் சாம்சங் நிறுவனம் மோட்டாரோலாவினைப் பின் னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. வழக்கம் போல் முதல் இடத்தை நோக்கியாவும் இரண் டாவது இடத்தை சோனி எரிக்சன் நிறுவனமும் கொண்டுள்ளன. இதுவரை மோட்டாரோலா மூன்றாவது இடத்தில் இருந்தது. ஆனால் ஜனவரி முதல் மார்ச் வரை யிலான காலத்திய விற்பனையில் சாம்சங் இந்த இடத்திற்கு வந்துள்ளது
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

நோக்கியா என் 78 புதிய வசதிகள் . Empty Re: நோக்கியா என் 78 புதிய வசதிகள் .

Post by ஹனி Tue 25 Jan 2011 - 20:21

ஜனவரியில் 5.7% கூடுதலாகவும் மார்ச்சில் 7% கூடுதலாகவும் ஸ்டெடியாக உயர்ந்து இந்த இடத்திற்கு வந்துள்ளது. மோட்டாரோலா இச்சந்தையில் தான் கொண்டிருந்த 6.7% பங்கினை விட்டு 5.9% க்கு வந்துள்ளது. சோனி தொடர்ந்து 8.1% இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சாம்சங் நிறுவனம் வெளியிட்ட குரு 100 மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று சாம்சங் நிறுவனத்தை உயர்த்தியுள்ளது. பன்னாட்டளவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சாம்சங் இந்தியா வில் தன் பங்கினை உயர்த்தும் வகையில் பல புதிய மாடல்களை அனைத்து நிலைகளிலும் இறக்கு கிறது.

மோட்டோ ரோக்கர் இ–8

மோட்டாரோலா நிறுவனம் அண்மையில் வழக்கத்திற்கு மாறான புது வசதிகளுடன் மொபைல் போன் ஒன்றினை மோட்டோரேக்கர் இ8 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அண்மையில் சவுண்ட் பஸ் என்னும் நிறுவனத்தை மோட்டாரோலா நிறுவனம் கையகப்படுத்தியது. அதன் விளைவாக இந்த போனில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.

சவுண்ட் பஸ் நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து மியூசிக் மற்றும் வீடியோ சார்ந்த பல பைல்களை மொபைல் போனில் டவுண்லோட் செய்து இயக்கலாம். இந்த போனில் மோட் ஷிப்ட் தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜஸ்ட் ஒரு பட்டனை அழுத்தி போனை ஒரு மியூசிக் பிளேயராக மாற்றலாம்.

பாஸ்ட் ஸ்குரோல் தொழில் நுட்பம் பாடல்களைத் தேர்ந்தெடுக்க விரைவாகச் செயல்படும் வழி ஒன்றைத் தந்துள்ளது. இதன் கீ பேட் தோற்றத்தில் மட்டுமே தெரியும். போனை அணைத்துவிட்டால் இந்த கீ பேடை பார்க்க முடியாது. அதே போல போனை மியூசிக் பிளேயராகப் பயன்படுத்தத் தொடங்கியவுடன் போன் டயல் கீ பேட் மறைந்து மியூசிக் பிளேயருக்கான கீ பேட் காட்டப்படுகிறது. அதில்பாடல் இயக்க, முன்னோக்கி தள்ள, பின்னோக்கிச் செல்ல, தற்காலிகமாக நிறுத்தவென கீகள் தெரிகின்றன. MIDI, MP3, AAC, AAC+, Enhanced AAC+, WMA, WAV, AMRNB, Real Audio (RA) v10 என்ற பலவகையான பார்மட்களில் உள்ள பாடல்களை இது இயக்குகிறது.


மியூசிக் பிளேயராக இயங்குகையில் முப்பரிமாணத்தில் இரண்டு சேனல் ஆடியோ கிடைக்கிறது. ஸ்பீக்கரும் எப்.எம். ரேடியோவும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்டல் டாக் தொழில் நுட்பம் மூலம் பாடல்கள் தெளிவாகக் கிடைக்கின்றன. 100 கிராம் எடையில் 10.6 மிமீ தடிமனில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 அங்குலத் திரையில் அகலவாக்கிலும் காட்சி கிடைக்கிறது.

இதன் மெமரி 2 ஜிபி. இதனை 4 ஜிபி வரை கூடுதலாக்கலாம். இதனுடன் ஒரு போர்ட்டபிள் ஸ்பீக்கரும் தரப்படுகிறது. இதனை எந்த மியூசிக் பிளேயர், மொபைல் போன் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைத்து இயக்கலாம். இதன் விலை ரூ. 15,455 மற்றும் ரூ.13,999. அண்மையில் இந்த போன்கள் மும்பையில் அபிஷேக் பச்சனால் வெளி யிடப்பட்டன.

எல்.ஜி.– கே.எப் 600

எழுதுவதைப் புரிந்து டெக்ஸ்ட்டாகக் கொள்ளும் வித்தை மற்றும் சிறப்பான கேமரா என அசத்தும் வசதிகளுடன் எல்.ஜி. நிறுவனத்தின் கே.எப்.– 600 மொபைல் வெளிவந்துள்ளது. முதலில் நம்மைக் கவர்வது இதன் தோற்றமே. அருமையான மிக மென்மையான ஸ்லைடராக உள்ளது. எடை 107 கிராம் என்றாலும் அது பெரிய குறையாகத் தெரியவில்லை.

240 து 320 ரெசல் யூசனுடன் கூடிய திரை பளிச் என அழகாகத் தெரிகிறது. இதன் இன்னொரு சிறப்பம்சம் கீழாக உள்ள 1.4 அங்குல திரையும் அதே ரெசல்யூசனில் இருப்பதுதான். அடுத்ததாக வழக்கமான நேவிகேஷன் பேட் இல்லாமல் மெனு மற்றும் பிற வசதிகளைப்பெற இன்டராக்டிவ் பேட் ஆகச் செயல்படும் டச் சென்சிடிவ் திரை தரப்பட்டுள்ளது.

முதன் முதலில் சாம்சங் தன் யு–900 மொபைலில் இந்த வகை திரையைத் தந்தது. ஆனால் அதைக் காட்டிலும் சிறப்பாக இந்த திரை உள்ளது. போனின் பக்கவாட்டில் யு.எஸ்.பி. மற்றும் பேட்டரி சார்ஜிங் போர்ட் உள்ளது. இதற்கும் கீழாக கேமரா தரப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி நேவிகேஷன் பேடினைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர முடியும். சிறிய ஸ்டிரிங் கொண்டு இணைக்கக் கூடிய ஸ்டைலஸ் ஒன்று தரப்படுகிறது. ஆனால் அளவில் இது ஒரு லிப்ஸ்டிக் போல தோற்றமளிக்கிறது. காலண்டர், கன்வெர்டர், அலாரம்,மெமோ மற்றும் ஸ்டாப் வாட்ச் போன்ற வழக்கமான வசதிகள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. சிறப்பான அம்சம் என்றால் முப்பரிமாணத்தில் தரப்படும் உலகக் கடிகாரத்தினைச் சொல்லலாம்.

தொலைந்து போனால் தேடுவதற்கு வசதியாக மொபைல் ட்ரேக்கர் தரப்பட்டுள் ளது. எழுதினால் புரிந்து கொண்டு டெக்ஸ்ட்டாக மாற்றும் வசதியும் பலரால் விரும்பப்படும். விரல்களில் கூட இந்த திரையில் எழுதலாம். ஆடியோ பிளேயரிலும் அதிக வசதிகள் தரப்பட்டுள்ளன. இதில் தரப்பட்டுள்ள எப்.எம். ரேடியோ நாம் நகர்ந்து கொண்டிருக்கும்போதும் தெளிவாக சிக்னல்களை பிக் அப் செய்கிறது.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

நோக்கியா என் 78 புதிய வசதிகள் . Empty Re: நோக்கியா என் 78 புதிய வசதிகள் .

Post by ஹனி Tue 25 Jan 2011 - 20:27

இதில் வீடியோ பிளேயர் இருந்தாலும் அதனை மீடியா போல்டரில் வைக்காமல் மை ஸ்டப் என்ற போல்டரில் வைத்துள்ளனர்.

நோக்கியா என் 78 புதிய வசதிகள் . Mobilemalar-5-30608


ஏ2 டி பி வசதி உள்ளதால் வயர்லெஸ் ஹெட்செட் இணைத்து பாடல்களைக் கேட்கலாம். இதன் கனெக்டிவிடியும் சிறப்பாகச் செயல் படுகிறது.ஆனால் ஒரு சின்ன பிரச்னை. பெர்சனல் கம்ப்யூட்டருடன் இதனை இணைக்கையில் போன் ஆப் ஆகிவிடுகிறது. அந்நேரத்தில் யாரும் நம்மை அழைத்தால் நமக்கு சிக்னல் கிடைக்காது. பல ஆப்ஷன்களுடன் கூடிய 3 மெகா பிக்ஸெல் கேமரா நல்ல பிளாஷுடன் செயல்படுகிறது. செல்ப் டைமர், கை நடுக்கம் நீக்குதல், ஆறு படங்களை அடுத்தடுத்து எடுக்கும் வசதி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். இதன் குறியிட்ட விலை ரூ. 14,990

ஸ்பைஸ் எஸ்–525

ஸ்பைஸ் மொபைல் நிறுவனம் அண்மையில் குறைந்த விலையில் எஸ் 525 என்ற மொபைல் போனை விற்ப னைக்கு அறிமுகப்படுத்தியது. இதில் உள்ள எப்.எம். ரேடியோவின் ஒலி பரப்பினை ஒரு பட்டனை அழுத்தி ரெகார்ட் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. 77 கிராம் எடையில் 17.6 மிமீ தடிமனில் கைக்கு அடக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஷெட்யூல் இயக்கம், சிங்– டோன், 500 முகவரிகள் கொண்ட அட்ரஸ் புக், ஸ்பீக்கர் போன் எனப் பல வசதிகளும் உள்ளன. போன் தொலைந்து போனால் கண்டுபிடிக்க வழி தரும் மொபைல் ட்ரேக்கர் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.

திருடப்பட்ட போனில் வேறு ஒரு சிம் கார்டு பயன்படுத்தப் பட்டால் அதன் எண்ணை போனின் உரிமையாளருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும் வகையில் போனில் செட் செய்திடலாம். அத்துடன் குறிப்பிட்ட சில எண்களிலிருந்து வரும் கால்களையும் வரவிடாமல் தடுக்கலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 4 மணி நேரம் பேச முடியும்; அல்லது 200 மணி நேரம் சார்ஜ் நீடிக்கும். ஓர் ஆண்டு வாரண்டியுடன் இந்த போனின் விலை ரூ. 2,099 என அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்.டி.சியின் பி 3350

இந்தியாவில் உள்ள இசை ரசிகர்களுக்கு இந்த போன் என்ற அறிவிப்புடன் எச்.டி.சி. நிறுவனம் அண்மையில் எச்.டி.சி. பி 3350 என்ற மொபைல் போனை அறிமுகப் படுத் தியுள்ளது. கிராபைட் சில்வர் கூட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போனில் 360 கோணத்தில் சுழலும் வண்ணம் ஸ்குரோல் வீல் தரப்பட்டுள்ளது.

சில சிறப்பு செயல் பாடுகளுக்கென தனியாக 8 கீகள் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் மொபைல் இயக்கத் தொகுப்பில் இது இயங்குகிறது. 2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, 2.8 அங்குல வண்ணத் திரை, எப்.எம். ரேடியோ, அதிவேக லேன் கட்டமைப்பு, ஆடியோ மேனேஜர், பத்து பேண்ட் ஈக்கு வலைசர் எனப் பல்வேறு வசதிகள் இதில் தரப்பட்டுள்ளன.
மைக்ரோசாப்ட் ஆபீஸ் மொபைல் தொகுப்பு இணைத்துத் தரப்படுவதால் வேர்ட், எக்ஸெல் மற்றும் பிரசன்டேஷன் பைல்களை எளிதாக இதில் இயக்கலாம். பி.டி.எப். பைல்களைப் பார்க்க அடோப் ரீடர் தொகுப்பும் தரப்பட்டு உள்ளது. இன்டர்நெட் ஷேரிங், ஆடியோ மேனேஜர், ஆடியோ பூஸ்டர் ஆகிய வசதிகளும் தரப்பட்டுள்ளன. நான்கு பேண்ட் இயக்கம், ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் மற்றும் புளுடூத் மூலம் கனெக்டிவிடி கிடைக்கிறது. இதன் அறிவிக் கப்பட்ட விலை ரூ. 18,490.


ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

நோக்கியா என் 78 புதிய வசதிகள் . Empty Re: நோக்கியா என் 78 புதிய வசதிகள் .

Post by mini Tue 25 Jan 2011 - 21:33

:”@: :”@:
mini
mini
புதுமுகம்

பதிவுகள்:- : 163
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

நோக்கியா என் 78 புதிய வசதிகள் . Empty Re: நோக்கியா என் 78 புதிய வசதிகள் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum