சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Today at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

சித்தர் நெறி Khan11

சித்தர் நெறி

Go down

சித்தர் நெறி Empty சித்தர் நெறி

Post by veel Mon 24 Sep 2012 - 12:57

சித்தர் நெறி

சித்தர் ‍என்றால்
1) சித்துக்களைச் செய்பவர்கள்
2) இரசவாதம் (பித்தளையை தங்கமாக மாற்றும் கலை)
3) கூடுவிட்டு கூடு பாய்பவர்கள்
4) அட்டமாசித்திகளை செய்பவர்கள்
5) அட்டாங்க யோகத்தினை செய்பவர்கள்
6) தேவ இரகசியங்கள் என்னும் இறை உண்மைகளை
பரிபாஷையாக சொல்பவர்கள்
7) மரணமில்லாபெருவாழ்வினை அடைந்தவர்கள்


சித்துக்களைச் செய்பவர்கள்
சித்தர்கள் -பல்வகையான அற்புதங்களை செய்பவர்கள்
சித் என்றால் அறிவு - அறிவை தாமாக்கிக்கொண்டவர்கள்
அறிவு
வடிவமாகத்தன்னை ஆக்கிக்கொண்டவர்கள் சித்தர்கள் என்பதே சரியானதாகும். எனவே
இவர்கள் அறிவர் என்றே தொல்காப்பியம் முதலான இலக்கியங்களில்
குறிப்பிடப்பட்டுள்ளனர். சங்க காலத்திற்கு முற்பட்ட அகத்தியர் பிற்பட்ட
திருமூலர் ஆகியோர் அறிவர் என்றே அழைக்கப்பட்டனர். இறைநிலையை பேரறிவு
பேராற்றல் பேருண்மை எனக்கொண்டவர்கள் சித்தர்கள்.

அறிவு உருவாக ஒளிரும் சிவத்தை
அதுஉறைந்துள்ள சிவலோகத்தை
தம்முன்னே கண்டு சிவமாய் ஆகி
ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலம்
வென்ற வீரர்களே சித்தர்கள்

இரசவாதம்
இரசம் என்பது ஒரு பொருளின் தன்மையைக் குறிப்பது
வாதம் என்பது வேதித்தல் மாற்றுதல் என்ற பொருளல்படும்
பித்தளையின்
தன்மையை மூலிகைக்கொண்டு தங்கமாக மாற்றும் வித்தை அறிந்தவர்கள் - இவர்கள்
இரசவாதிகள் - இரசவாத சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். மூலிகை இரசவாதம்
கொண்டு மருந்துகள் செய்து நோய் குணப்படுத்தும் கலையையும் அறிந்திருந்தனர்
சித்தர்கள். ஆகவே இவர்களின் இந்த மருத்துவம் சித்த மருத்துவம் என்றே
இன்றும் அழைக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டுவருகிறது. இரசவாதம் கொண்டு
செய்யப்படும் தங்கம் மருந்திற்காக மட்டுமே செய்யப்படுவதால் மண்ணிலிருந்து
வெட்டி எடுக்கப்படும் தங்கத்தாது கொண்டு செய்யப்படும் தங்கத்திற்கு ஈடு
ஆகாது. இதனை தவறான முறையில் பயன்படுத்தப்படும் என்பதனால் திருமூலர்
தங்கத்தை ஒரு உயிர்க்கொல்லி என்று கூறுகிறார். அருள்தந்தை
வேதாத்திரிமகரிஷி அவர்களும் மனித வாழ்விற்கு எவ்வித பலனும் தராத அறிவு -
உடல் சக்திகளை பெரும் அளவில் வீனாக்குகிற தங்கம் என்ற உலோகத்திற்கு
இவ்வுலகம் அளிக்கும் மதிப்பை விட்டுவிடுவது மிக மிக அவசியமானது. இரும்பால்
செய்த ஒரு சிறு ஆணிகூட எத்தனையோ காலத்திற்கு மரங்களை இனைத்துப் பிடித்துக்
கொண்டிருக்கிறது, மனித வாழ்விற்கு பயனளிக்கிறது. ஆனால் தங்கத்தினால் மனித
சமுதாயத்திற்கு பல வகையிலும் துன்பமே தவிர எந்த வித நற்பலனும் இல்லை
என்கிறார்.

மற்றொரு வகையில் சித்தர்களின் இரசவாதம் என்பது
குருவானவர் தமது சீடருக்கு தமது திருவாயிலிருந்து மொழியும் மொழியே இரசம்.
இதற்கு பாதோதகம் என்ற பெயரும் உண்டு. தமது குருவின்துனைக்கொண்டு அவர்கள்
தரும் இரசம்என்ற மொழியை அருந்தி சீடர்கள் தமது பிறவிப்பிணியிலிருந்து
விடுபட்டு பித்தளையான சீடர்களின் மனம் தங்கமாக மிளிரும். பின்பு
இத்தங்கத்தின் மீது எத்துனை தூசு படிந்தாலும் தங்கத்திற்கு மாற்று
குறையாது.


கூடுவிட்டு கூடுபாய்தல்
பரகாயபிரவேசம்


ஒருஉடலிருந்து
மற்றொரு உடலுக்கும் மனித உடலிருந்து மிருகத்தின் உடலுக்கும் மாறி மாறி
வருவதை கூடுவிட்டு கூடுபாய்தல் அல்லது பரகாயபிரவேசம் என்பர். திருமூலரும்
மூலன் உடம்பில் புகுந்து மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக சேக்கிழார் முதலான
பலரும் கூறியுள்ளனர். இன்னொரு உடலில் சென்றுதான் தாம் நினைத்ததை
செய்யவேண்டும் என்னும் நிலை சித்தர்களுக்கு இருந்ததில்லை. நினைத்த
மாத்திரத்தில் எதையும் செய்யக்கூடியவர்கள். கூடுவிட்டு கூடுபாய்தல் என்பது
இறந்தவர் உடலில் புகுதல் அன்று. அறிவு வடிவான குரு தன்னை அறிவென்று
அறிவித்து காட்டி நீயும் நானும் ஒன்றுதான் என்று கலந்து களித்தலே
கூடுவிட்டு கூடுபாயும் விந்தையாகும்.
சித்தர் நெறி 2lbz695
அறிவு வடிவென்று அறியாத என்னை
அறிவு வடிவு என்று அருள் செய்தான் நந்தி

என்று திருமந்திரத்தில் திருமூலர் கூறுகிறார்.

பாம்பாட்டிச் சித்தரும்
கூடுவிட்டு கூடுபாயும் கொள்கையுடைய
குருவின் வல்லபம் எவர் கூறவல்லார்?
சித்தர் நெறி 2qco84p
என்று கூறுகிறார்.

அட்டமாசித்திகள்

எட்டுவகையான சித்துக்களை (அற்புதங்களை) செய்யவல்வர்கள் சித்தர்கள். அவையாவன
1) அணிமா - நுண்மை
2) மகிமா - பருமை
3) கரிமா - ஒன்றையொன்றhக்கல்
4) லகிமா - எளிமையாக்குதல்
5) பிராப்தி - விரும்பியதை அடைதல்
6) பரகாமியம் - நிறைவுண்மை
7) ஈசாத்துவம் - ஆட்சியானாதல்
8) வசித்துவம் - அற்புதம் காட்டுதல்

இவ்வெட்டு
சித்திகளையும் குருபிரான் பெருங்கருணையோடு சீடனுக்கு உபதேசிக்க
தீட்சைக்குப்பிறகு குருவின் விஸ்வரூப தரிசனத்தை சீடன் கண்டு அனுபவித்தல்.

அட்டாங்க யோகம்

இயமம் நியமம்
ஆசனம் பிரணாயமம்
பிரத்தியாகாரம் தாரணை
தியானம் சமாதி

பரிபாஷை மறைபொருள் உரைத்தல்.
பக்குவம்
பெறாத ஆன்மாக்களுக்கு உண்மையை உரைப்பதனால் பயன் இல்லை என்று சித்தர்கள்
தாங்கள் அறிந்த தேவ இரகசியங்களை வெளி உலகத்திற்கு மறைபொருளாகவே
தெரிவித்துள்ளனர்.

காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைப்புரிய பார்ப்பதென்றேh
நாட்டார் நமைமறித்து நகைப்புரிய பார்த்தாலும்
காட்டானை மேலேறி கண்ணம்மா கண்குளிறங் காண்பேனோ
அழுகுணிசித்தர்

காட்டானை - அறிவு நாட்டார் - ஐம்புலன்கள்


மரணமில்லாபெருவாழ்வினை அடைந்தவர்கள்

சாகாக்
காலை என்னும் மரணமில்லாப் பெருவாழ்வு என்பது சித்தர்கள் தங்கள்
மெய்யறிவினால் ஐம்புலன்களைக் காத்து தன் கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருப்பர். இதுவே பொறிவாயில் ஐந்து அவித்தல் என்னும் முக்தி நிலை
உணர்வாகும். இந்த நிலையில் உடம்பு புலன்களின் அவாவைக் கட்டுஅறுதுஇருப்பதால்
இந்த உடம்பிற்கு சாவேயில்லை என்று சித்தர்கள் கூறுகின்றனர்.
உடம்பினை
முழுவதும் அழியாமல் காத்துக்கொள்ள முடியும். அதற்கான வழி குண்டலிணியோக
சாதனையாகும். மூலாதாரத்தினின்று எழும்புகின்ற குண்டலிணி சக்தியை
நெற்றிக்கு நேராக ஆக்னா சக்கரத்திலும் துரியம் என்னும் சகஸ்ரார
சக்கரத்திலும் படரவிட்டு அங்கே வியாபித்திருக்கும் ஞானக்கினியை கண்டு
உணர்ந்தபோது இறைநிலைஉணர்வினை பெற்று உடம்பானது என்றைக்கும் அழியாதிருக்கும்
சாகாக் கலை அல்லது மரணமில்லாப்பெருவாழ்வு கிடைக்கப்பெறும் என்று
சித்தர்கள் தங்களின் பாடல்கள் மூலம் தங்களின் அனுபவ்ங்களை
தெரிவித்துஉள்ளனர். இதனையே சிவவாக்கியர் என்னும் சித்தர் தமது பாடலில்
சித்தர் நெறி Fp0ykk
உருதரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்வீரேல் விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும் அருள்தரும் நாதர் பாதம் அம்மைபாதம் உண்மையே

என்று மூலாதார சக்கரத்தில் ஒடுங்கும் வாயுவை சகஸ்ரார
தளத்தில் நிறுத்தி மனதை ஒருநிலைப்படுத்தி தவம் செய்யும் போது என்றும்
இளமையுடன் இருக்கும் மரணமில்லாப் பெருவாழ்வு கிட்டும் மேலும் மேனியும்
சிவன் வடிவமாகும் இது உண்மை என்று தம் அனுபவங்களை எடுத்துரைக்கின்றார்.

வேல்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum