சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

மலைமண்டலப் பெருமாள் ஆலயம் Khan11

மலைமண்டலப் பெருமாள் ஆலயம்

Go down

மலைமண்டலப் பெருமாள் ஆலயம் Empty மலைமண்டலப் பெருமாள் ஆலயம்

Post by veel Mon 5 Nov 2012 - 16:48

மலைமண்டலப் பெருமாள் ஆலயம்


புராதனத்திற்கும்
புனிதத்துக்கும் முக்கிய இடமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. ஆங்காங்குள்ள
பழமையான தலங்களைத் தரிசிக்க வும் புனருத்தாரணம் செய்து நித்யபூஜை நடத்தவும்
பலர் முயற்சி எடுத்து வருவதை நாம் பார்க்கிறோம்.

அவ்வகையில் மிகப்
பழமையான பிரார்த்தனைத் தலமாக விளங்குவது மலைமண்டலப் பெருமாள் ஆலயம். இது
சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் பாதையில், கல்பாக்கம் அருகே
சதுரங்கப்பட்டினத்தில் (நஆஉதஆந) அமைந்துள்ளது.

முன்பு இத்தலம் சற்று
மேடான பகுதியில் அமைந்திருந்ததால், இத்தல எம்பெருமாள் மலைமண்டலப் பெருமாள்
என்றும்; கிரிவரதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

கி.பி. 850-ஆம்
ஆண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இத்தலம் விஜயநகரப் பேரரசுடன் தொடர்பு
கொண்டது. இத்தலத்தில் அருள்பாலிக் கும் பெருமாளின் கோபுர வாசலில் ஒரு
கல்வெட்டைக் காணலாம். அதைக் கொண்டே இத்திருக்கோவிலின் புராதனத்தை உணரலாம்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கதவு இன்று வரை பிரதான வாயிற்கதவாய்
அமைந் துள்ளது. ராஜகோபுரம் இல்லாதது ஒரு குறைதான். சற்று மேடான பகுதியில்
பெருமாள் அமைந்துள்ளார் என்பதை நாம் கோவிலுக்குள் சென்றாலே புரிந்துவிடும்.
பல படிகள் ஏறித் தான் கருவறைக்குச் செல்ல வேண்டும். கருட னின்
திருமுடியும் பெருமாளின் திருவடியும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது
குறிப்பி டத்தக்கது.

இந்த கருட பகவான் மிகவும் விசேஷமானவர். தலையில்
ஒன்று; இரு காதுகளில் ஒவ்வொன்று; மார்பினில் மாலையாக இரண்டு; இரு
தோள்களிலும் ஒவ்வொன்று; இடுப்பில் அரைஞாண் கயிறாக ஒன்று என எட்டு நாகங் களை
ஆபரணமாய்க் கொண்ட இவரை அஷ்டநாக கருடன் என்று அழைக்கிறார்கள். இதனால்
இவரைத் தரிசிப்பவர்களுக்கு சகலவித சர்ப்ப தோஷங்களும் நீங்கும்.

திருமணத்
தடையை நீக்குதல் மட்டுமின்றி, தாம்பத்திய வாழ்வில் நிம்மதியைக் கொடுத்து
புத்திர பாக்கியம் அளித்தல், பல காரணங்களால் பிரிந்த தம்பதிகளை ஒன்று
சேர்த்தல் என்று பலவிதமாக அருள் பாலிக் கிறார். இவர் சந்நிதியில் பலர் நெய்
விளக்கேற்றுதல், அபிஷேக ஆராதனைகள், கருடனுக்குப் பிடித்தமான அமிர்த கலசம்
(ஒரு விதமான கொழுக்கட்டை) நைவேத்தியம் என்று வழிபாடு செய்தவண்ணம் உள்ளனர்.

கருடனைக்
கடந்து முன்மண்டபம் சென்றால் அங்கே ஒரே கல்லில் அமைக்கப்பட்ட பிரபை யுடன்
கூடிய லட்சுமி நாராயணனைத் தரிசிக்க லாம். மேலும் அவரருகில் லட்சுமி
பிராட்டி யையும் தரிசிக்கலாம். இவர்தான் இத்தலத் தின் மூலமூர்த்தியாய்
இருந்தவர். திருப் பணிகள் செய்தபோது பூமியிலிருந்து கிடைக்கப் பெற்ற
ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் கூடிய கிரிவரதராஜரே பிற்காலத்தில் மூலவராகப்
பிரதிஷ்டை செய்யப்பட்டு விட்டார்.

லட்சுமி நாராயணன் அருகே புதிதாய்
பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ ராமர், சீதை, இலக்குவன், ஆஞ்சனேயர் மற்றும்
ஆழ்வார், ஆசார்யர்களின் திருவுருவங்களையும் தரிசிக்கலாம்.

இந்த
சந்நிதியில் அமைந்துள்ள ஒரு விளக்கு மிகவும் மகிமை வாய்ந்ததாகவும் சிற்ப
வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப் பொக்கிஷமாகவும் விளங்குகிறது. விளக்கின்
மேற்பாகத்தில் கருடன்களும் நாகங்களும் தாங்குமாறு ஓர் அமைப்பு உள்ளது. கீழ்
பாகத்திலோ கிளிகள் தாங்குவதுபோன்ற அமைப்பு. இவ்விளக்கில் நெய் ஊற்றிப்
பிரார்த்தனை செய்து கொண்டால் நம் வாழ்வில் ஒளி பிறக்கும். சிதம்பரத்தைச்
சார்ந்த ஒரு அன்பரின் வீட்டில் இருந்த இவ்விளக்கு கிரிவரதராஜன் அருளாணைப்
படி இத்திருக்கோவிலுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டது. புரட்டாசி
சிரவணத்தன்று இவ்விளக்குக்கும் விசேஷ பூஜை உண்டு.

கர்ப்பக் கிரக
நுழைவு வாயிலில் இரு துவார பாலகர்கள் உள்ளனர். மேல் நிலைப்படியில் எங்கும்
காணாத அதிசயமாக யோக நரசிம்மரின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.
(பொதுவாக கஜலட்சுமியைத்தான் காணலாம்.) இவரும் சிறந்த வரப்பிரசாதி.
இவருக்கும் அபிஷேக ஆராதனைகள் உண்டு. பிரதோஷ வழிபாடு விசேஷமாகக்
கொண்டாடப்படுகிறது.

கருவறைக்குள் கருணாமூர்த்தியாம் கிரிவரதராஜப்
பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கி றார்.
பெருமாள் சுமார் ஆறடி உயரம் கொண்டவர். ஒரு காலை முன் வைத்தபடி கஜேந்திர
மோட்சத்திற்குச் செல்லும் நிலையில் காணப்படுகிறார். அதுபோல வலக்கை
சக்கரமும் சற்று சாய்ந்து ஏவிய நிலையில் உள்ளது. முன்னதாக உற்சவ
மூர்த்திகள் உள்ளன. உற்சவத் தாயாரும் இங்கே பெருமாளுடன் தரிசனம் தருகிறார்.

இத்திருத்தலத்தில்
லட்சுமி மூன்று வடிவங்களில் அருட்காட்சியளிப்பது குறிப் பிடப்பட வேண்டிய
அம்சம். லட்சுமி நாராயணனுக்கு இருபுறமும் இரண்டு தாயார்கள். தவிரவும்
தனிக்கோவில் தாயாராக பெருந்தேவி.

மூலஸ்தானத்தில் மற்றுமொரு முக்கிய
மூர்த்தியையும் காணலாம். அவர்தான் புஷ்பாஞ்சலி ஆஞ்சனேயர். கலைநயமும்
காருண்யமும் நிறைந்த விஜயநகர காலத்திய பஞ்சலோக ஆஞ்சனேயர். பொதுவாக அஞ்சலி
ஹஸ்தத்துடன் காட்சியளிக்கும் அனுமன் திருக்கரத்தில் புஷ்பமும் அமைந்
துள்ளது குறிப்பிடத்தக்க அம்சம். கரங்களில் உள்ள புஷ்பத்தை ராமருக்கு
சமர்ப்பிக்கப் போகிறாரா அல்லது நமக்கு தரப் போகிறாரா? அஞ்சலி ராமருக்கு;
அருள் நமக்கு.

இப்படி பல அதிசயங்கள் நிறைந்த இத்திருக்கோவில் ஒரு நந்தவனத்தில் அமைந்திருப்பது போன்ற அமைப்பில் உள்ளது.

விஸ்தாரமான
வெளிப் பிராகாரத்தில் துர்க்கை, தாயார் சந்நிதி, ஆழ்வார்கள் சந்நிதி,
அரங்கனின் சந்நிதிகள் உள்ளன. இங்கு அரங்கன் சிறு பாலகனாகக்
காட்சியளிக்கிறார். உற்சவ விக்ரகங்களும் ஸ்ரீ ரங்கத்தை நினைவூட்டும்படியான
அமைப்பில் உள்ளன.

இத்திருக்கோவிலின் பெருமை இவ்வளவு தானா என்று
சிந்திக்கிறீர்களா? இன்னுமோர் அதிசயமும் உண்டு. மகான் ராகவேந்திரரும்
இத்தலத்தில் தங்கி இப்பெருமாளுக்கு கைங்கரியங்கள் செய்துள்ளார்.
இத்திருக்கோவில் அருகிலேயே மகான் ராகவேந்திரரின் மிருத்திகா பிருந்தாவனம்
அமைந்துள்ளது. பிருந்தாவனத்தில் மகான் ராகவேந்திரர் சிலாமூர்த்தியாய்
கம்பீரமாய் எழுந்தருளியுள்ளார். அவரின் எதிரே பஞ்சமுக அனுமனின் சந்நிதியும்
அமைந்துள்ளது.

இத்தலத்திற்கு ஒருமுறை வந்தாலே இவ்வெம்பெருமாள் பலமுறை உங்களை அழைத்து அருள்புரிவார் என்பது நீங்கள் அனுபவிக்க வேண்டிய அற்புதம்!

நன்றி நக்கீரன்
வேல்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum