Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
தேன் சிட்டு
3 posters
Page 1 of 1
தேன் சிட்டு
-
பறவைகளைக் கூர்ந்து நோக்குதல் (bird watching)
என்பது ஒரு ஆனந்தமான பொழுது போக்கு.
-
காலை ஆறு மணிக்கு “கீ..வூ…கிக்வூ..கிக்வூ..” என்ற
சத்தம் கேட்டு படுக்கை அறையின் ஜன்னல் வழியே
எட்டிப் பார்க்கிறேன்.
இரண்டு சிறிய குருவிகள் ஒன்றை ஒன்று துரத்தியவாறு
பறந்து கொண்டிருக்கின்றன தோட்டத்தில் உள்ள ஒரு
செம்பருத்திச் செடியின் கிளைகளின் ஊடே.
-
சற்று நேரத்துக்குப் பின் அவை தனது நீண்டு வளைந்த
அலகு மற்றும் குழாய் போன்ற நாக்கைக் கொண்டும்
செம்பருத்திப் பூவிலிருந்து தேனை உரிஞ்சுகின்றன.
-
அவை பறந்து மலரை அடையும் போது, சில சமயம் ஒரே
இடத்திலும், சில சமயம் முன்னும், சில சமயம் பின்னுமாகப்
பறக்கின்றன.
-
தேன் சிட்டு ஒரு மலரில் உட்காரும்போது கிளை
வளைந்து குருவி தலைகீழாக திரும்பினாலும் அது தேன்
அருந்துவதை நிறுத்தாது.
-
அமெரிக்காவில் உள்ள ‘ஹும்மிங்க் பேர்ட்’ ரகத்தைச்
சேர்ந்த இப்பறவைகள், உருவத்தில் சிட்டுக்குருவியை
விடச் சிறியவை. ‘ஹம்மிங்க் பேர்ட்’ஐ விடப் பெரியவை.
பெண் குருவி பச்சை கலந்த பழுப்பு நிற இறக்கைகள்
மற்றும் தலை, முதுகையும் வெளிர் நிற அடிப்பாகத்தையும்
கொண்டது.
ஆண் குருவியின் தலை, கழுத்து இவை கரு நீலத்தில்
மயில் கழுத்து போன்று மின்னும். இறக்கையும் முதுகும்
கருமையாகவும் அடி முதுகுகரு நீலத்திலுமாகவும்
அடிப் பாகம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.
ஆங்கிலத்தில் இதன் பெயர் ‘பர்பிள் ரம்ப்ட் சன் பேர்ட்’
என்பதாகும்.
நம் நாட்டில் காணப்படும் சன் பேர்ட் கள் இருவகைப் படும்.
ஓன்று பர்பிள் சன்பேர்ட். மற்றொன்று பர்பிள் ரம்ப்ட்
சன்பேர்ட் என்பதாகும். இரண்டாவது வகையே நம்
தோட்டங்களில் சாதாரணமாகக் காணப்படும்.
முதல் வகையை ஸ்க்ரப் ஜங்கிள் என்று அழைக்கப்படும்
சிறு காடுகளில்தான் அதிகம் பார்க்கமுடியும்.
- -
-
பர்பிள் ரம்ப்ட் சன் பேர்ட் பெண் குருவி
-
பர்பிள் ரம்ப்ட் சன் பேர்ட் ஆண் குருவி
-
பர்பிள் சன் பேர்ட் வகையின் ஆண் குருவி முற்றிலும்
கருநீல நிறத்தில் இருக்கும். அதன் கழுத்தும் தலையும்
மயில் கழுத்துப் போல மின்னும்.
-
பர்பிள் சன் பேர்ட் ஆண் குருவி
–
தேன் சிட்டின் கூடு செடிகளின் கிளைகளில் இருந்து
தொங்கிக் கொண்டிருக்கும். காய்ந்த சரகு, வேர்கள் இவற்றால்
சிலந்தியின் வலைத் துண்டுகள் கொண்டு ஒட்டப் பட்டிருக்கும்.
வெளியே ஆங்காங்கே சிறிய வெள்ளைக் காகிதத் துண்டுகளோ
அல்லது எட்டுக்கால் பூச்சியின் முட்டைகளைப் பாதுகாக்கும்
உறையோ (வெள்ளை நிறத்தில் சுமார் ஒரு சென்டிமீடர்
விட்டத்தில் வட்டமாக இருக்கும்) ஒட்டப் பட்டிருக்கும்.
இவ்வாறு செய்வது அழகுக்காகவா அல்லது கூட்டினை
எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கவா என்பது இப்பறவைகளைப்
படைத்த ஆண்டவனுக்கே வெளிச்சம். கூட்டிற்குள்ளே
செல்ல பக்கவாடில் சுமார் மூன்று அல்லது நன்கு சென்டிமீடர்
அளவிலான துவாரம் இருக்கும். அந்த துவாரத்திற்கு
ஒரு ‘சன் ஷேடும்’ அமைக்கப் பட்டிருக்கும்.
கூட்டின் கீழ் பாகத்திலிருந்து சிறிய காய்ந்த இலைச்
சரகுத் துண்டுகள் தொங்கிக் கொண்டு இருக்கும்.
கூட்டினைக் கட்டுவது பெண் குருவியே. ஆண் குருவியோ
தானும் விழுந்து விழுந்து வேலை செய்யும் பாவனையில்
கூடக் கூட பறந்து கொண்டிருக்கும்.
கூட்டின் உள்ளே பஞ்சு மெல்லிய வேர்த் துண்டுகள்
இவற்றால் மெத்தை அமைக்கப் பட்டிருக்கும்.
குழந்தைகளுக்கு உறுத்தக் கூடாதல்லவா?
-
======================================
--Vasudevan Tirumurti

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: தேன் சிட்டு
கீச்சிடும் குருவி சத்தம்
கேட்கணும் காதில் நித்தம்
பாச்சிடும் உணர்வு எல்லாம்
பாலுடன் தேனாய் முத்தம்
கேட்கணும் காதில் நித்தம்
பாச்சிடும் உணர்வு எல்லாம்
பாலுடன் தேனாய் முத்தம்
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: தேன் சிட்டு
முfதாக் wrote:கீச்சிடும் குருவி சத்தம்
கேட்கணும் காதில் நித்தம்
பாச்சிடும் உணர்வு எல்லாம்
பாலுடன் தேனாய் முத்தம்
வாவ் அசத்தல் வரிகள் வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அசல் தேன் எது? கலப்பட தேன் எது?
» தேன்.. தேன். தித்திக்கும் தேன்..
» சிட்டு
» தேன் துளிகள் சிந்தனைத்துளிகள்!
» தேன் போன்ற சிந்தனைத்துளிகள்!
» தேன்.. தேன். தித்திக்கும் தேன்..
» சிட்டு
» தேன் துளிகள் சிந்தனைத்துளிகள்!
» தேன் போன்ற சிந்தனைத்துளிகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|