சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Khan11

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

2 posters

Page 26 of 26 Previous  1 ... 14 ... 24, 25, 26

Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Empty முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by நண்பன் Fri 28 Jan 2011 - 15:20

First topic message reminder :

ஆசிரியர் : ஸஃபியுர் ரஹ்மான் முபாரக்பூரி
தமிழாக்கம் : முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி

பதிப்புரை
ஆசிரியன் வாழ்க்கைக் குறிப்பு
ஆசிரியர் முன்னுரை


பக்கம் -1-
பதிப்புரை

தொடக்கத்திலும் இறுதியிலும் அகிலத்தாரின் இறைவன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடையாக வந்த இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள், உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் இறையருளும் ஈடேற்றமும் உண்டாகுக!

உங்கள் கைகளில் தவழும் - இந்நூல் பற்றிய சுருக்கமான ஓர் அறிமுகத்தை தங்களுக்கு முன் சமர்ப்பிக்கின்றோம்.

ஹிஜ்ரி 1396 ஆம் ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் (1976 மார்ச்) பாகிஸ்தானில் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து உலகளாவிய மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில், “ராபிததுல் ஆலமில் இஸ்லாமி” (Muslim World League) என்ற பெயரில் மக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இஸ்லாமிய நிறுவனம் கீழ்கண்ட ஓர் அழகிய அறிவிப்பை வெளியிட்டது.

நபி (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கை வரலாற்றை இஸ்லாமிய அறிஞர்கள் ஆய்வு செய்து, கட்டுரைகள் எழுதி ராபிதாவிடம் சமர்பிக்க வேண்டும். அவற்றுள் முதல் தரமாக தேர்வு செய்யப்படும் முதல் ஐந்து ஆய்வுகளுக்கு மொத்தம் 1,50,000 ஸவூதி ரியால்கள் அன்பளிப்பாக வழங்கப்படும். மேலும், எழுதப்படும் ஆய்வுகள் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

1) ஆய்வுகள் முழுமையாக இருக்க வேண்டும். வரலாற்று நிகழ்வுகள், சம்பவங்கள் வரிசை கிரமமாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

2) மிக அழகிய முறையில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். எங்கும் இதற்கு முன் அது பிரசுரமாகி இருக்கக் கூடாது.

3) இந்த ஆய்வுக்குச் சான்றாக, அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்ட சிறிய பெரிய நூல்களின் பெயர்களைக் குறிப்பிட வேண்டும்.

4) ஆய்வாளர் தனது வாழ்க்கைக் குறிப்பையும், கல்வித் திறனையும், வேறு ஏதேனும் அவரது வெளியீடுகள் இருப்பின், அவற்றையும் தெளிவாகவும் விவரமாகவும் குறிப்பிட வேண்டும்.

5) அழகிய கையெழுத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ‘தட்டச்சு’ செய்து அனுப்புவது மிக ஏற்றமானது.

6) அரபி அல்லது அரபியல்லாத வழக்கிலுள்ள மொழிகளில் ஆய்வுகள் இருத்தல் வேண்டும்.

7) கட்டுரைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம் ஹிஜ்ரி 1396 ரபிஉல் அவ்வல் முதல் ஹிஜ்ரி 1397 முஹர்ரம் வரை. (1976 மார்ச் முதல் 1977 ஜனவரி வரை.)

8) மக்காவிலுள்ள ‘ராபிததுல் ஆலமில் இஸ்லாமி“ம்ன் தலைமைச் செயலகத்துக்கு மூடப்பட்ட உறையில் ஆய்வுக் கோர்வைகள் பதிவுத் தபாலில் அனுப்பப்பட வேண்டும்.

9) இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்களின் குழு ஒன்று கோர்வைகளை ஆய்வு செய்து தேர்வு செய்யும்.

இவ்வாறு மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பையும் அதன் நிபந்தனைகளையும் ராபிதா வெளியிட்டவுடன் அறிஞர் பெருமக்கள் பேராவலுடன் பெரும் முயற்சி எடுத்து ஆய்வுகளை கோர்வை செய்து ராபிதாவுக்கு அனுப்பினர்.

பல மொழிகளில் மொத்தம் 1182 ஆய்வுகள் அனுப்பப்பட்டன. அவற்றுள் 183 ஆய்வுகள் மட்டுமே நிபந்தனைக்குட்பட்டு இருந்ததால் அவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அவற்றை பரிசீலனை செய்ததில் ஐந்து ஆய்வுகள் முதல் தரம் வாய்ந்தவை என முடிவு செய்யப்பட்டு பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டன.

1) அறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான் (முபாரக்பூர், உ.பி., இந்தியா) அவர்களின் (அரபி) ஆய்வு முதல் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 50,000 ரியால்கள் வழங்கப்பட்டன.

2) கலாநிதி மாஜித் அலீ கான் (புது டெல்லி, இந்தியா) அவர்களின் (ஆங்கில) ஆய்வு இரண்டாம் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 40,000 ரியால்கள் வழங்கப்பட்டன.

3) கலாநிதி நாஸீர் அஹ்மது நாசிர் (பாகிஸ்தான்) அவர்களின் (உர்து) ஆய்வு மூன்றாம் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 30,000 ரியால்கள் வழங்கப்பட்டன.

4) பேராசியர் ஹாமித் மஹ்மூது (எகிப்து) அவர்களின் (அரபி) ஆய்வு நான்காம் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 20,000 ரியால்கள் வழங்கப்பட்டன.

5) பேராசியர் அப்துஸ்ஸலாம் ஹாஷிம் (ஸவூதி) அவர்களின் (அரபி) ஆய்வு ஐந்தாம் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 10,000 ரியால்கள் வழங்கப்பட்டன.

ஹிஜ்ரி 1398, ஷஃபான் மாதத்தில் (1978-ஜூலை) கராச்சியில் நடைபெற்ற “ஆசிய இஸ்லாமிய மாநாட்டில்” வெற்றி பெற்றவர்களின் பெயர்களை ராபிதா அறிவித்தது. மேலும், அதனை பல பத்திகைகளும் பிரசுத்தன.

பரிசுகளை வழங்குவதற்காக சங்கைக்குரிய இளவரசர் ஸுஊது இப்னு அப்துல் முஹ்ஸின் அவர்கள் தலைமையில் மாபெரும் விழா ஒன்று மக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, வெற்றி பெற்றவர்களுக்கு ஹிஜ்ரி 1399, ரபீஉல் அவ்வல் பிறை 12 சனிக்கிழமை காலையில் பரிசுகளை வழங்கி இளவரசர் சிறப்பித்தார்.

நூலின் இப்பின்னணியை தெரிந்து கொண்டால் இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நூல் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இந்நூலுக்கு ஆசிரியர் வைத்த பெயர் “அர்ரஹீக்குல் மக்தூம்” என்பதாகும். “முத்திரையிடப்பட்ட உயர்ந்த மதுபானம்” என்பது அதன் அர்த்தம். அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைந்த உயர்ந்தோருக்கு இவ்வகை மது சுவர்க்கத்தில் வழங்கப்படும் என்று அல்குர்ஆனில் (83 : 25) கூறப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, படிப்பவருக்கு சுவையாகவும் இனிமையாகவும் இருக்கிறது என்பதால், நபியவர்களைப் பற்றிய தனது நூலுக்கு உவமை அடிப்படையில் இந்தப் பெயரை ஆசிரியர் சூட்டியுள்ளார். அதையே நாம் சுருக்கமாக இந்நூலின் தமிழாக்கத்திற்கு “ரஹீக்” என்று பெயரிட்டுள்ளோம்.

தாருல் ஹுதாவின் ஊழியர்களான நாங்கள் இந்நூலைத் தமிழாக்கம் செய்து வெளியிடுவதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். அத்துடன் வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கே அனைத்து புகழ்ச்சிகளையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறோம்.

இம்மொழியாக்கப் பணியில் பெரிதும் உதவியும் ஒத்துழைப்பும் நல்கிய சகோதரர்களையும் இந்நூல் வெளிவர உதவிய நண்பர்கள் அனைவரையும் உங்கள் துஆக்களில் இணைத்துக் கொள்ளுங்கள்.

அல்லாஹ் இவர்களுக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் என்றென்றும் நல்லருள் புரிவானாக! அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனது பொருத்தத்தை வழங்குவானாக!

இந்நூலில் குறைகள், தவறுகள் ஏதும் இருப்பின் அவற்றை மறுபதிப்பில் சரிசெய்து கொள்ள ஏதுவாக சுட்டிக் காட்டுமாறு வாசக அன்பர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அதற்காக அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி வழங்குவானாக!

தாருல் ஹுதா மேன்மேலும் பல நல்ல நூல்களை மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டும் என அல்லாஹ்விடம் தாங்கள் மறவாமல் இறைஞ்ச வேண்டும் என்ற அன்பான கோரிக்கையை முன் வைக்கிறோம்.

அகிலத்தாரின் ஒரே இறைவன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! இறையருளும் ஈடேற்றமும் நபி முஹம்மது அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார், தோழர்கள், முஸ்லிம்கள் அனைவருக்கும் உண்டாகுக! ஆமீன்!!

குறிப்பு: இந்நூலின் ஆரம்பப் பகுதியில் நபி (ஸல்) பிறப்பதற்கு முந்திய வரலாற்றைப் பற்றி சற்று விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது சில வாசகர்களுக்கு சடைவாகத் தோன்றினால், அவர்கள் நூலின் அடுத்த பகுதிக்குச் சென்று விடவும். அதில் தான் நபி (ஸல்) அவர்களின் பிறப்பிற்குப் பிந்திய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மிக ஆதாரத்துடன் விவரிக்கப்பட்டுள்ளது.

அ. உமர் ஷரீஃப்
(குர்ஆன் மற்றும் நபிமொழி பணியாளன்)
தாருல் ஹுதா
சென்னை - 1.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by நண்பன் Thu 3 Feb 2011 - 14:34

அபூ

தந்தை.

அதான்

ஐங்காலத் தொழுகைக்காக அழைக்கப்படும் அழைப்பு.

இஹ்ராம்

ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்காக தயாராகும் நிலையும் அப்போது அணியப்படும் தைக்கப்படாத ஆடையும்.

இப்னு

மகன்.

இப்லீஸ்

‘இப்லீஸ்’ ஷைத்தான்களின் தலைவன்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம், நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்.

ஈமான்

அல்லாஹ்வையும் அவன் கூறிய அனைத்தையும் நம்பிக்கை கொள்வது.

உம்ரா

உபரியாக கஅபாவை தரிசனம் செய்யும் ஓர் செயல்.

ஊகியா

சுமார் 38.5 கிராம்எடையுள்ள ஓர் அளவு.

கஅபா

அல்லாஹ்வை வணங்குவதற்காக முதன் முதலில் மக்காவில் கட்டப்பட்ட இல்லம்.

கனீமத்

போரில் கிடைக்கும் வெற்றிப் பொருள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by நண்பன் Thu 3 Feb 2011 - 14:36

கபீலா

கோத்திரம்.

கலீஃபா

இஸ்லாமிய ஆட்சித் தலைவர்.

கப்ர்

இறந்தவரை அடக்கம் செய்யப்படும் குழிக்கு ‘கப்ர்’ என்று சொல்லப்படும்.

காஃபிர்

அல்லாஹ்வை மறுப்பவன்.

கிப்லா

கஅபா உள்ள திசை.

குர்பானி

அல்லாஹ்வின் பெயரால் அறுக்கப்படும் பிராணி.

சூரா

சூரா என்பதற்கு அத்தியாயம் என்று பொருள். குர்ஆனின் அத்தியாயங்களை இப்படி குறிப்பிடுவர்.

தக்பீர்

‘அல்லா{ஹ அக்பர்’ அல்லாஹ் மிகப் பெரியவன் என்று கூறுவது.

தவாஃப்

‘கஅபா’வை ஏழுமுறை சுற்றுவது.

தல்பியா

ஹஜ் அல்லது உம்ரா செல்பவர்கள் இஹ்ராம் அணிந்த பின் கூறும் விசேஷமான பிரார்த்தனைக்கு ‘தல்பியா’ என்று கூறப்படும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by நண்பன் Thu 3 Feb 2011 - 14:38

தஸ்பீஹ்

‘சுப்ஹானல்லாஹ்’ அல்லாஹ் மிகத்தூய்மையானவன்.

தஹ்லீல்

‘லாஇலாஹஇல்லல்லாஹ்’ அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.

தஷஹ்ஹுத்

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறுவது.

திர்ஹம்

‘திர்ஹம்’ என்பது 3.62 கிராம் அளவுள்ள தங்க நாணயம்.

தியத்

‘தியத்’ என்றால் கொலை குற்றத்திற்காக கொலை செய்யப்பட்டவரின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் தொகைக்கு சொல்லப்படும்.

துஆ

பிரார்த்தனை.

மஹர்

மணமகன் மணமகளுக்கு கொடுக்க வேண்டிய திருமணக் கொடை.

மிஃராஜ்

‘மிஃராஜ்’ என்பது நபி (ஸல்) அவர்கள் சென்ற வானுலகப் பயணத்தைக் குறிக்கும்.

மின்ஜனீக்

‘மின்ஜனீக்’ என்பது அக்காலத்திய போர் கருவி.

முஸ்லிம்

அல்லாஹ்விற்கும் அவனது மார்க்கத்திற்கு மட்டும் கட்டுப்பட்டவர்.

முஃமின்

அல்லாஹ்வையும் அவன் கூறிய அனைத்தையும் முழுமையாக நம்பிக்கை கொண்டவர்.

முஷ்ரிக்

அல்லாஹ்விற்கு இணை வைப்பவர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by நண்பன் Thu 3 Feb 2011 - 14:40

முனாஃபிக்

உள்ளத்தில் இறைநிராகரிப்பை வைத்துக்கொண்டு இறை நம்பிக்கையை வெளிப்படுத்துபவர்.

முத்

மதீனாவில் வழக்கத்தில் இருந்து வந்தசுமார் 796 கிராம் 68 மில்லி கிராம் எடை கொண்ட ஓர் அளவு.

பனூ

ஒருவரின் குடும்பத்தார்கள், வழி வந்தவர்கள்.

ஃபித்யா

‘ஃபித்யா’ என்றால் கைதியை விடுவிப்பதற்காக வழங்கப்படும் தொகை.

பைத்துல் மஃமூர்

இது ஏழாவது வானத்தில் மலக்குகள் அல்லாஹ்வை வணங்குவதற்காக அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட இறை இல்லமாகும்.

பைஅத்

இஸ்லாமிய உடன்படிக்கையும் ஒப்பந்தமும்.

ரழி

‘ரழியல்லாஹு அன்ஹு’ (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக!.)

ரஹ்

‘ரஹ்மத்துல்லாஹி அலைஹி’ (அல்லாஹ்வின் அருள் அவர்கள்மீது உண்டாகட்டும்!)

ரம்ல்

கஅபாவை தவாஃப் செய்யும்போது முதல் மூன்று சுற்றில் ராணுவ அணிவகுப்பைப் போன்று செல்வது.

ரசூல்

தூதர்.

ரஜ்ம்

திருமணம் செய்த ஆண் அல்லது பெண் விபசாரம் செய்துவிட்டால் அவர்களை கல் எறிந்து கொல்வது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by நண்பன் Thu 3 Feb 2011 - 14:42

நபி

அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்.

நிய்யத்

ஒரு செயலைச் செய்வதற்கு உறுதி வைத்தல்.

நுபுவ்வத்

‘நபித்துவம்’ இறைத்தூதராக்கப்படுத்தல்.

வஹ்யி

‘இறைச்செய்தி’ அல்லாஹ் அவனது தூதர்களுக்கு அறிவிப்பது.

வலிமா

‘வலிமா’ என்பது திருமணமாகி கணவனும் மனைவியும் இணைந்த பிறகு கொடுக்கும் விருந்திற்குப் பெயராகும்.

ஷஹீத்

இஸ்லாமியப் போரில் அல்லாஹ்விற்காக உயிர் நீத்தவர்.

ஸஹாபி

நபியவர்களின் முன்னிலையில் இஸ்லாமை ஏற்று முஸ்லிமான நிலையிலேயே மரணித்தவர்.

ஸல்

‘ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ அல்லாஹ் அவருக்கு விசேஷ அருளையும் ஈடேற்றத்தையும் வழங்குவானாக!

ஸலாம்

‘அஸ்ஸலாமு அலைக்கும்’ உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! என்று முகமன் கூறுவது.

ஸயீ

ஸஃபா, மர்வா இரு மலைகளுக்கு இடையில் ஏழுமுறை ஓடுவதற்கு ‘ஸயீ’ என்று சொல்லப்படும்.

ஸலாத்துல் கவ்ஃப்

அச்சம் மிகுந்த நேரத்தில் சுருக்கித் தொழுவதற்கு ‘ஸலாத்துல் கவ்ஃப்’ என்று சொல்லப்படும்.

ஸுப்ஹ், ளுஹ்ர், அஸ்ர், மஃரிப், இஷா

முஸ்லிம்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய ஐங்காலத் தொழுகைகள்

ஹரம்

புனித கஅபாவை சுற்றியுள்ள குறிப்பிட்ட பகுதி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by நண்பன் Thu 3 Feb 2011 - 21:52

ஹஜ்

கஅபாவை தரிசிப்பதும் மற்றுமுள்ள செயல்களும். (இது உடற்சுகமும் பொருள் வசதியுமுள்ள முஸ்லிம்களுக்கு வாழ்க்கையில் ஒரு முறை கடமையாகும்.)

ஹதீஸ்

நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம்.

ஹலால்

அல்லாஹ் அனுமதித்தவற்றிற்கு ‘ஹலால்’ என்று சொல்லப்படும்.

ஹராம்

அல்லாஹ்வால் தடை செய்யப்பட்டவற்றிற்கு ‘ஹராம்’ என்று சொல்லப்படும்.

ஹர்ரா

‘ஹர்ரா’ என்றால் விவசாயக் களம் அங்குதான் மதீனாவில் வாழும் முஸ்லிம்கள் தங்களது அறுவடைகளைக் காய வைப்பார்கள்.

ஹஜருல் அஸ்வத்

‘ஹஜருல் அஸ்வத்’ என்பது ஒரு கல். இது சொர்க்கத்திலிருந்து வரவழைக்கப்பட்டதாய் நபிமொழிகள் கூறகின்றன.

ஹிஜ்ரா

இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்ற முடியாத ஊரிலிருந்து வெளியேறி அதற்கு ஏற்றமான ஊரில் குடியேறுவது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by நண்பன் Thu 3 Feb 2011 - 21:53

ஜனாஸா

மரணித்தவரின் உடல்.

ஜகாத்

முஸ்லிம் செல்வந்தர்கள் மீது விதிக்கப்பட்ட மார்க்க வரி.

ஜின்

‘ஜின்கள்’ என்பவை மனிதக் கண்களுக்குப் புலப்படாத, இறைவனின் படைப்புகளில் ஒன்று. மனிதனுக்கு இருப்பதைப் போன்றே அவற்றுக்கும் சுய தேர்வுரிமை உள்ளது. அவற்றுள்ளும் முஸ்லிம், காஃபிர் என்ற வாழ்க்கை முறைகள் உள்ளன.

ஜிஸ்யா

இஸ்லாமிய நாட்டில் முஸ்லிமல்லாதவருடைய உயிர், பொருள், கண்ணியம் பாதுகாக்கப்படுவதற்கு அவர் செலுத்தவேண்டிய வரி.

ஜிஹாத்

இறை திருப்தியைப் பெறுகின்ற ஒரே நோக்கத்துடன் சத்தியத்தை நிலைநாட்டி அசத்தியத்தை எதிர்த்து, அல்லாஹ்வின் வரம்புகளுக்கு உட்பட்டுப் போர் புரிதல். சொல்லாலும் செயலாலும் உண்மை முஸ்லிமாக வாழ முயற்சித்தல்.

ஜுமுஆ

வெள்ளிக்கிழமை மதியம் தொழும் தொழுகையை ‘ஜுமுஆ’ என்று சொல்லப்படும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by நண்பன் Thu 3 Feb 2011 - 21:55

ஆதார நூல்கள்

1) அல்குர்ஆன்

2) இத்ஹாஃபுல் வரா - உமர் இப்னு முஹம்மது (இறப்பு 885)

3) அல்இஹ்ஸான் பி தர்தீபீ ஸஹீஹ் அபூ ஹாதம் இப்னு ஹிப்பான் ( 270 - 354) -

இப்னு ஹிப்பான்

4) இக்பாருல் கிராம் பி அக்பால் மஸ்ஜிதில் ஹராம் - அஹ்மது இப்னு முஹம்மது (இறப்பு 1066)

5) அல் அதபுல் முஃப்ரத் - இமாம் புகாரி ( 194 - 256)

6) அல் இஸ்தீஆப் - யூஸுஃப் இப்னு அப்துல் பர் ( 368 - 463)

7) அஸதுல் காபா - இஜ்ஜுத்தீன் இப்னு அல் அஸீர் ( 555 - 630)

8) அல் இஸாபா - இப்னு ஹஜர் ( 773 - 852)

9) அல் அஸ்னாம் -அபுல் முன்திர் ஷாம் (இறப்பு 204)

10) அன்ஸாபுல் அஷ்ராஃப் - அஹ்மது இப்னு யஹ்யா (இறப்பு 279)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by நண்பன் Thu 3 Feb 2011 - 21:56

11) அல்பிதாயா வந்நிஹாயா - இப்னு கஸீர் (இறப்பு 774)

12) தாரீக் அர்ழுல் குர்ஆன் (உருது) - ஸய்ம்த் ஸுலைமான் நத்வி (இறப்பு 1373)

13) தாரீகுல் உமம் வல் முலூக் - முஹம்மது இப்னு ஜரீர் தபரி ( 224 - 310)

14) தாரீக் இப்னு கல்தூன் - அப்துர் ரஹ்மான் இப்னு முஹம்மது (இறப்பு 808)

15) அத்தாரீகுஸ்ஸகீர் - இமாம் புகாரி ( 194 - 256)

16) தாரீக் உமர் இப்னு அல்கத்தாப் - இப்னு அல் ஜவ்ஜி (இறப்பு 597)

17) தாரீக் அல் யஃகூபி - அஹ்மது இப்னு அபூ யஃகூப் (இறப்பு 292)

18) துஹ்ஃபதுல் அஹ்வதி - அப்துர் ரஹ்மான் முபாரக்பூர் (இறப்பு 1353)

19) தஃப்ஸீர் அத்தபரீ - இப்னு ஜரீர் தபரி ( 224 - 310)

20) தஃப்ஸீர் அல்குர்துபி - முஹம்மது இப்னு அஹ்மது (இறப்பு 671)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by நண்பன் Thu 3 Feb 2011 - 21:56

21) தஃப்ஸீர் இப்னு கஸீர் - இஸ்மாயீல் இப்னு உமர் (இறப்பு 774)

22) தல்கீஹ் ஃபுஹூமி அஹ்லில் அஸர் - இப்னுல் ஜவ்ஜீ (இறப்பு 597)

23) தஹ்தீப் - இப்னு அஸாகிர் (மரணம் 571)

24) ஜாமிஃ அத்திர்மிதி - அபூ ஈஸா முஹம்மது ( 209 - 279)

25) ஜம்ஹரது அன்ஸாபில் அரப் - இப்னு ஹஜ்ம் ( 384 - 456)

26) ஜம்ஹரதுந்நஸப் - அபுல் முன்திர் ஷாம் (இறப்பு 204)

27) குலாஸதுஸ் ஸியர் - அஹ்மது தபரி (இறப்பு 674)

28) திராஸாத் ஃபி தாரீகில் அரப் - கலாநிதி அப்துல் அஜீஸ் ஸாலிம்

29) அத்துர்ருல் மன்ஸுர் - ஜலாலுத்தீன் ஸுயூதி (இறப்பு 911)

30) தலாயிலுந் நுபுவ்வஹ் - இஸ்மாயீல் இப்னு முஹம்மது ( 457 - 535)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by நண்பன் Thu 3 Feb 2011 - 21:57

31) தலாயிலுந் நுபுவ்வஹ் - அபூ நயீம் ( 336 - 430)

32) தலாயிலுந் நுபுவ்வஹ் - பைஹகி ( 384 - 458)

33) ரஹ்மதுல் லில்ஆலமீன் - முஹம்மது ஸுலைமான் மன்சூர்பூர் (1930)

34) ரஸூலே அக்ரம் கி ஸயாஸி ஜின்தகி (உருது) - கலாநிதி முஹம்மது ஹமீதுல்லாஹ் பேஸ்

35) அர்ரவ்ழ் - அபுல் காஸிம் அப்துர்ரஹ்மான் ( 508 - 581)

36) ஜாதுல் மஆது - இப்னுல் கய்” ( 691 - 751)

37) ஸபாயிக் அத்தஹப் - முஹம்மது அமீன் (இறப்பு 1346)

38) ஸிஃப்ர் அத்தக்வீன் - (யூத வேதத்தின் ஒரு பகுதி)

39) ஸுனன் அபூதாவூத் ஸுலைமான் ஸிஜஸ்தானி ( 202 - 275)

40) அஸ்ஸுனனுல் - குப்ரா பைஹகி ( 384 - 458)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by நண்பன் Thu 3 Feb 2011 - 21:57

41) ஸுனன் இப்னு மாஜா - முஹம்மது இப்னு யஜீத் கஜ்வீனி ( 209 - 273)

42) ஸுனன் அந்நஸாயீ - அஹ்மது இப்னு ஷுஐப் ( 215 - 303)

43) அஸ்ஸீரா அல்ஹல்பிய்யா - அலீ இப்னு புர்ஹானுத்தீன் ( 975 - 1044)

44) அஸ்ஸீரத்துந் நபவிய்யா - அபூ ஹாதிம் இப்னு ப்பான் (இறப்பு 354)

45) அஸ்ஸீரத்துந் நபவிய்யா - அபூ முஹம்மது அப்துல் மலிக் (இறப்பு 213)

46) ஷர்ஹுஸ்ஸுன்னா - ஹுஸைன் அல்பகவி ( 436 - 516)

47) ஷர்ஹ் ஸஹீஹ் முஸ்லிம் - நவவி (இறப்பு 676)

48) ஷர்ஹுல் மவாஹிப் - முஹம்மது இப்னு அப்துல் பாகி (இறப்பு 1122)

49) அஷ்ஷிஃபா - காழி இயாழ் ( 446 - 546)

50) ஷமாயில் அத்திர்மிதி - அபூ ஈஸா முஹம்மது ( 209 - 279)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by நண்பன் Thu 3 Feb 2011 - 21:58

51) ஸஹீஹுல் புகாரி - இமாம் புகாரி ( 194 - 256)

52) ஸஹீஹ் முஸ்லிம் - முஸ்லிம் இப்னு அல் ஹஜ்ஜாஜ் ( 206 - 261)

53) ஸஹீஃபது ஹப்கூக் - யூத வேதத்தின் ஒரு பகுதி)

54) அத்தபகாத் அல் குப்ரா - முஹம்மது இப்னு ஸஅத் ( 168 - 230)

55) அல்ம்க்துல் ஃபரீத் - அஹ்மது உந்த்லுஸி ( 246 - 328)

56) அவ்னுல் மஃபூத் ஷர்ஹ் ஸுனன் அபூதாவூத் - ஷம்ஸுல் ஹக் ( 1274 - 1329)

57) ஃபத்ஹுல் பாரி - இப்னு ஹஜர் ( 773 - 852)

58) ஃபத்ஹுல் கதீர் - அஷ்ஷவ்கானி (இறப்பு 1250)

59) கலாம்துல் ஜுமான் - அஹ்மது இப்னு அலீ (இறப்பு 821)

60) கல்பு ஜஜீரதில் அரப் - ஃபுஆத் ஹம்ஜா (இறப்பு 1352)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by நண்பன் Thu 3 Feb 2011 - 21:59

61) அல்காமில் ஃபி அத்தாரீக் - இஜ்ஜுத்தீன் இப்னு அல் அஸீர் ( 555 - 630)

62) கன்ஜுல் உம்மால் - அலாவுத்தீன் (இறப்பு 975)

63) அல்லிஸான் - இப்னு மன்ளுர் அல் அன்ஸா ( 630 - 711)

64) மஜ்மஃ அல் ஜவாயித் அல் ஹைஸமி (இறப்பு 807)

65) முஹாழராத் தாரீக் அல் உமமுல் இஸ்லாமிய்யா - முஹம்மது இப்னு ஹஃபீஃபி ( 1289 - 1345)

66) முக்தஸர் ஸீரதிர் ரஸூல் - அப்துல்லாஹ் இப்னு முஹம்மது (இறப்பு 1242)

67) மதாக் அத்தன்ஜீல் - அப்துல்லாஹ் நஸஃபி (இறப்பு 701)

68) முரூஜ் அல் தஹப் - அலி இப்னு ஹுஸைன் மஸ்வூதி (இறப்பு 346)

69) அல் முஸ்தத்ரகுல் - முஹம்மது இப்னு அப்துல்லாஹ் ஹாகிம் ( 321 - 405)

70) முஸ்னத் அஹ்மத் - அஹ்மது இப்னு முஹம்மது இப்னு ஹம்பல் ( 164 - 241)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by நண்பன் Thu 3 Feb 2011 - 21:59

71) முஸ்னத் அல் பஜ்ஜார் - அபூபக்ர் அஹ்மது அல் பஜ்ஜார் (இறப்பு 292)

72) முஸ்னத் கலீஃபா - கலீஃபா இப்னு கய்யாத் (இறப்பு 240)

73) முஸ்னத் அத்தாரமி - அபூ முஹம்மது அப்துல்லாஹ் ( 181 - 255)

74) முஸ்னத் அபூதாவூத் அத்தயாலிஸி - அபூதாவூத் ஸுலைமான் இப்னு தாவூத் (இறப்பு 204)

75) முஸ்னத் அபூ யஃலா - அபூ யஃலா அஹ்மது இப்னு அலீ ( 210 - 307)

76) மிஷ்காதுல் மஸாபீஹ் - வலியுத்தீன் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் ( 700களில்)

77) முஸன்னஃப் இப்னு அபீ ஷய்பா - அபூபக்ர் அப்துல்லாஹ் இப்னு முஹம்மது (இறப்பு 235)

78) முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக் - அபூபக்ர் அப்துர்ரஜ்ஜாக் ( 126 - 211)

79) அல் மஆஃப் - இப்னு குதைபா ( 213 - 276)

80) அல் முஃஜம் அல் அவ்ஸத் - ஸுலைமான் தபரானி ( 260 - 360)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by நண்பன் Thu 3 Feb 2011 - 22:01

81) அல் முஃஜம் அஸ்ஸகீர் - ஸுலைமான் தபரானி ( 260 - 360)

82) முஃஜம் அல் புல்தான் - யாகூத் ஹமவி (இறப்பு 626)

83) மகாஜீ அல் வாகிதி - முஹம்மது இப்னு உமர் இப்னு வாகித் (இறப்பு 207)

84) அல் முனம்மக் ஃபி அக்பாரில் குறைஷ் - முஹம்மது ஹபீப் (இறப்பு 245)

85) அல் மவாப் அல் லதுன்னிய்யா - ஷிஹாபுத்தீன் அஹ்மது கஸ்தலானி (இறப்பு 923)

86) முவத்தா மாலிக் - மாலிக் இப்னு அனஸ் ( 93 - 169)

87) நதாயிஜுல் அஃப்ஹாம் மஹ்மூது பாஷா

88) நஸபு குறைஷ் - அபூ அப்தில்லாஹ் அல் முஸ்அப் ( 156 - 236)

89) நஸபு மஅத் வல் யமன் அல் கபீர் - அபுல் முன்திர் ஷாம் (இறப்பு 204)

90) நிஹாயதுல் அரிப் - அபுல் அப்பாஸ் அஹ்மது (இறப்பு 821)

91) வஃபாவுல் வஃபா - நூருத்தீன் அலீ இப்னு அஹ்மது ( 844 - 911)

92) அல் யமன் இபரத்தாரீக் - அஹ்மது ஹுஸைன் ஷரஃபுத்தீன்

முற்றும்!

நன்றி தமிழில் குர்ஆன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by ramisrajaaa Mon 3 Sep 2012 - 22:18

1) கி.மு. 1300 லிருந்து கி.மு. 620 வரை

இக்காலகட்டத்தில்
அவர்களது நாடு ‘மயீனிய்யா’ என அழைக்கப்பட்டது. நஜ்ரானுக்கும் ஹழர
மவ்த்துக்குமிடையே உள்ள ‘ஜவ்ஃப்’ எனும் பகுதியில் அவர்களது ஆட்சி தோன்றி
வளர்ச்சி பெற்று ஹிஜாஸின் வட பகுதியான ‘மஆன்’ மற்றும் ‘உலா’ வரை
பரவியிருந்தது.

மயீனியா அரசாங்கத்தின் ஆதிக்கம் அரபிய நாடுகளின்
எல்லைகளுக்கு வெளியேயும் விரிவடைந்திருந்ததாக கூறப்படுகிறது. வணிகமே
அவர்களது முக்கிய வாழ்வாதாரமாகத் திகழ்ந்தது. அவர்கள்தான் மஃரப் நகரில்
யமனுடைய வரலாற்றில் புகழ்பெற்ற மிகப்பெரும் அணைக்கட்டைக் கட்டினார்கள்.
அதனால் அவர்களது நிலங்கள் செழிப்படைந்தன. ஆயினும், அவர்கள் அல்லாஹ்வுக்கு
நன்றி செலுத்தாமல் பாவங்கள் புரிந்தனர். இதைப்பற்றி அல்லாஹ் குர்ஆனில்
கூறுகிறான்.

... அவர்கள் (அல்லாஹ்வை) நினைப்பதையே மறந்து (தாங்களாகவே பாவம் செய்து) அழிந்துபோகும் மக்களாகி விட்டார்கள். (அல்குர்ஆன் 25 : 18)

இக்காலக்கட்டத்தில்
அவர்களது அரசர்கள் ‘மக்பு ஸபஃ’ எனும் புனைப்பெயரால் அழைக்கப்பட்டனர்.
அவர்களது தலைநகரம் ஸிர்வாஹ் ஆகும். மஃப் எனும் நகலிருந்து வட மேற்கில் 50
கிலோ மீட்டர் தொலைவிலும் ஸன்ஆவுக்குக் கிழக்கே 142 கிலோ மீட்டர் தொலைவிலும்
அந்நகரத்தின் சிதிலங்கள் காணக்கிடைக்கின்றன. அந்நகரம் இன்று ‘குரைபா’
எனும் பெயரில் அறியப்படுகிறது. இவ்வரசர்களின் எண்ணிக்கை 22 லிருந்து 26 வரை
இருந்தது.

2) கி.மு. 620லிருந்து கி.மு. 115 வரை

யமன்
நாட்டு அரசாட்சி இக்காலக்கட்டத்தில் ‘ஸபா’ என அழைக்கப்பட்டது. இக்காலத்தில்
ஆட்சி செய்தவர்கள் ‘மக்ப்’ என்ற தங்களது புனைப் பெயரைத் தவிர்த்து
விட்டார்கள். அதன் ஆட்சியாளர்களை ஸபா மன்னர்கள் என அழைக்கப்பட்டது.
‘ஸிர்வா’ என்ற நகருக்கு பதிலாக ‘மஃரப்’ என்ற நகரை தங்களது தலைநகராக்கிக்
கொண்டனர். மஃரப் நகரத்தின் சிதைந்த கட்டடங்கள் ‘ஸன்ஆ’ நகரின் கிழக்கே 192
கிலோ மீட்டர் தொலைவில் இன்றும் காணப்படுகின்றன.

3) கி.மு. 115லிருந்து கி.பி. 300 வரை

இக்காலக்கட்டத்தில்
அந்நாடு ‘முதலாம் ஹிம்யரிய்யா அரசு’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
ஏனெனில், ஹிம்யர் குலத்தவர் ஸபாவை வெற்றி கொண்டு தங்களது ஆதிக்கத்தின் கீழ்
கொண்டு வந்தனர். முன்பு அந்நாட்டை ஆட்சி செய்தவர்கள் ‘ஸபா’ அரசர்கள்
மற்றும் ‘தூரைதான்’ அரசர்களென அழைக்கப்பட்டனர். இம்மன்னர்கள் ‘மஃரப்“க்கு
பதிலாக ரைதான் என்பதை தங்களது தலைநகராக அமைத்துக் கொண்டனர். ரைதான்
நகருக்கு ‘ளிஃபார்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. அந்நகரின் சிதைவுகள்
‘யர்யம்“க்கு சமீபமாக மதூர் எனும் மலையின் அருகாமையில் காணப்படுகின்றன.
இக்காலத்தில்தான் ஸபா அரசுக்கு அழிவும் வீழ்ச்சியும் ஆரம்பமாயின. அவர்களின்
வணிகங்களும் நசிந்தன.

அதற்குரிய காரணங்களாவன: 1) ‘நிப்த்’ இனத்தவர்
ஹிஜாஸின் வடபகுதியில் தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்தினர். 2) ரோமர்கள்
மிஸ்ர் (எகிப்து), ஷாம் (சிரியா) மற்றும் ஹிஜாஸின் வடபகுதியை ஒட்டியுள்ள
நகரங்களில் தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்தி யமன் நாட்டு அரசர்களின்
வியாபாரத்திற்கான கடல்மார்க்கத்தையும் அடைத்து விட்டனர். 3) அவர்களது
கோத்திரங்களுக்குள் சண்டை சச்சரவுகள் தோன்றின. ஆக, இம்மூன்று காரணங்களால்
அவர்களது ஆட்சி வீழ்ச்சி கண்டது. மேலும், கஹ்தான் வமிசத்தவர்கள் யமன்
நாட்டை துறந்து தூரமான நாடுகளில் குடிபெயர்ந்தனர்.

4) கி.பி. 300லிருந்து இஸ்லாம் நுழையும்வரை
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 6-4
நண்பன்தலைமை நடத்துனர்
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Senait10

பதிவுகள்:-: 65391
மதிப்பீடு: 3117
சேர்ந்தது:-: 29/10/2010

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Icon_user_profile முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Icon_contact_pm முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 I_up_a10 முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 I_down10



  • முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Icon_p10




முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Default42 Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Empty by நண்பன் on 2011-01-28, 15:37
இக்காலக்கட்டத்தில்
அந்நாடு ‘இரண்டாம் ஹிம்யரிய்யா அரசு’ என அழைக்கப்பட்டது. அப்போது ஆட்சி
செய்தவர்கள் ஸபஃ, தூரைதான், ஹழர மவ்த், யம்னுத் அரசர்கள் என
அழைக்கப்பட்டனர். இக்காலத்தில் உள்நாட்டு குழப்பங்கள், குடும்பச் சண்டைகள்,
புரட்சிகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. அதன் காரணமாக அவர்களது அரசாட்சி
முடிவுக்கு வந்தது. இக்காலத்தில் ரோமர்கள் ‘அத்ன்’ நகரைக் கைப்பற்றினர்.
ஹம்தான் மற்றும் ஹிம்யர் குலத்தவடையே இருந்த போட்டியைப் பயன்படுத்திக்
கொண்டு ரோமர்களின் உதவியுடன் ஹபஷியர்கள் முதன் முதலாக கி.பி. 340ல் யமன்
நாட்டை கைப்பற்றினர். இவர்களின் ஆட்சி கி.பி. 378 வரை நீடித்தது.
அதற்குப்பின் அந்நாடு ஹபஷியர்களின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரமடைந்தது.
கி.பி. 450 அல்லது 451ல் மாபெரும் வெள்ளப் பிரளயம் ஏற்பட்டு அவர்களது
நகரங்கள் பெருத்த சேதம் அடைந்ததால், நகரங்களைத் துறந்து பல இடங்களுக்குச்
சென்று குடியேறினர். இவ்வெள்ளப் பிரளயத்தை ‘சைலுல் அரிம்’ என மேன்மைமிகு
குர்ஆன் கூறுகிறது.

கி.பி. 523ம் ஆண்டில் யமன் நாட்டை ஆட்சி செய்த
‘தூ நுவாஸ்’ என்ற யூதக் கொடுங்கோலன் நஜ்ரான் வாழ் கிருஸ்துவர்கள் மீது
கொடூரமான தாக்குதலைத் தொடுத்தான். அவர்களை பலவந்தமாக கிருஸ்துவ
மதத்திலிருந்து மாற்றிட முனைந்தான். அவர்கள் மறுத்ததன் காரணமாக பெரும்
அகழ்களைத் தோண்டி நெருப்புக் குண்டத்தை வளர்த்து, அதனுள் அவர்களை வீசி
எறிந்தான். இது குறித்து அல்லாஹ் தனது அருள்மறையில் பின்வருமாறு
குறிப்பிடுகிறான்:

விறகுகள் போட்டு எரிக்கும் நெருப்பு அகழ் தோண்டியவர்கள் அழிக்கப் பட்டார்கள்.... (அல்குர்ஆன் 85 : 4-7)

இச்சம்பவத்தால்
கிறிஸ்துவர்கள் மிகவும் கொதிப்படைந்து பழிவாங்கத் துடித்தனர். எனவே,
ரோமானிய அரசர்களின் தலைமைக்கு கீழ் ஒன்றிணைந்து யமன் நாட்டின் மீது போர்
புரிய ஆயத்தமாயினர்.

ரோம் மன்னர்கள் ஹபஷியர்களைத் தூண்டிவிட்டு
அவர்களுக்கென கப்பல் மற்றும் படகுகளைத் தயார்செய்து கொடுத்தார்கள். அதன்
காரணமாக ‘அர்யாத்’ என்பவன் தலைமையில் ஹபஷாவிலிருந்து 70,000 வீரர்கள் யமன்
வந்திறங்கி கி.பி 525ம் ஆண்டு அதனை இரண்டாவது முறையாக கைப்பற்றினர்.
அர்யாத் கி.பி 549 வரை ஹபஷா மன்னன் கவர்னராக இருந்தான். அர்யாத்தின்
தளபதிகளில் ஒருவனான ‘அப்ரஹா இப்னு ஸப்பாஹ் அல் அஷ்ரம்’ என்பவன் அர்யாதை
வஞ்சகமாகக் கொலை செய்துவிட்டு ஹபஷா மன்னன் ஒப்புதலுடன் தன்னை அரசனாக
அறிவித்துக் கொண்டான். இந்த அப்ரஹாதான் இறையில்லமான கஅபாவை இடிக்க படையைத்
திரட்டியவன். அவனும் அவனது யானைப் படையினரும் ‘அஸ்ஹாபுல் ஃபீல்’ என
அறியப்படுகின்றனர். அந்நிகழ்ச்சிக்குப்பின் ஸன்ஆ திரும்பிய அவனை அல்லாஹ்
அழித்தொழித்தான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகன் ‘யக்ஸூம்’ என்பவனும்
அதற்குப் பிறகு இரண்டாவது மகன் ‘மஸ்ரூக்’ என்பவனும் யமனை ஆட்சி செய்தனர்.
இந்த இருவரும் தங்களது தந்தையைவிட குடிமக்களைக் கொடுமை செய்யும் மிகக்
கொடிய கொடுங்கோலர்களாக இருந்தனர்.

யானை சம்பவத்திற்குப்பின் கி.பி.
575ல் யமனியர், மஅதீ கப ஸைஃப் இப்னு தூ யஜின் அல்ஹிம்யரின் தலைமையின் கீழ்
பாரசீகர்களின் உதவியுடன் யமனை ஆக்கிரமித்திருந்த ஹபஷியர்களை எதிர்த்துப்
போரிட்டு அவர்களை யமனிலிருந்து வெளியேற்றி, அதைத் தங்களது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அவரைத் தங்களது அரசராகவும் ஏற்றுக்
கொண்டனர். ‘மஅதீ கப’ தனக்கு ஊழியம் செய்யவும் பயணங்களில் துணையாக
இருப்பதற்காகவும் ஒரு ஹபஷிப் படையைத் தன்னுடன் வைத்திருந்தார். அவரை
அவர்கள் திடீரெனத் தாக்கி வஞ்சகமாகக் கொன்று விட்டனர். அவரது மரணத்துடன்
‘தூ யஜின்’ குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது.

அதன்பிறகு பாரசீக
மன்னர்களின் அதிகாரத்தின் கீழ் யமன் நாடு வந்தது. பாரசீக மன்னர்கள் ஒருவர்
பின் ஒருவராகத் தொடர்ந்து ஆட்சி செய்தனர். அவர்களில் முதலாமவர் வஹ்ருஜ்,
பிறகு மிர்ஜ்பான் இப்னு வஹ்ருஜ், பிறகு அவரது மகன் தீன்ஜான், பிறகு குஸ்ரு
இப்னு தீன்ஜான், பிறகு பாதான். இவரே பாரசீக மன்னர்களில் இறுதியானவர். இவர்
கி.பி. 628ல் இஸ்லாமை ஏற்றார். இத்துடன் யமன் மீதான பாரசீகர்களின் ஆட்சி
முடிவுக்கு வந்தது.

ஆ) ஹீரா நாடு
இராக்கையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ‘கூரூஷுல் கபீர்’ என்பவன்
தலைமையின் கீழ் கி.மு. 557லிருந்து கி.மு. 529 வரை பாரசீகர்கள் ஆட்சி
செய்தனர். அவர்களை எவராலும் வீழ்த்த முடியவில்லை. இறுதியாக, பாரசீகர்களின்
அரசரான ‘தாரா’ என்பவரை ‘இஸ்கந்தருல் மக்தூனி’ என்பவர் கி.மு. 326ல்
தோற்கடித்தார். மேலும் பாரசீகர்களின் ஆதிக்கத்தையும் வலிமையையும்
முறியடித்து அவர்களது நகரங்களை சின்னா பின்னமாக்கினார். பிறகு தவாயிஃப்
என்ற பெயருடைய அரசர்கள் அந்நாட்டை பல பகுதிகளாகக் பிரித்து கி.பி. 230 வரை
ஆட்சி செய்தனர். இவர்களது ஆட்சி காலத்தில் கஹ்தான் கோத்திரத்தினர்
இராக்கின் சில கிராம பகுதிகளைக் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து
அவர்களுக்குப் போட்டியாக அத்னான் கோத்திரத்தார்களும் ஃபுராத் நதிக்கரையின்
சில பகுதிகளில் குடியேறினர்.

அஸ்ஸலாமு அழைக்கும்....
இங்கே குறிப்பிட்டுள்ள
கி.மு 1300
லிருந்து கி.மு.620 வரை. என்ற வார்த்தை .இதுபோல .கி.மு./கி.மு. என்றும்
இருக்கிறது .மற்று ஒரு இடத்தில்.கி.மு.115 லிருந்து கி.பி.300 என்று
இருக்கிறது,
மற்றும் ஒரு இடத்தில ஹீரா நாடு என்ற தலைப்பில்,கி.மு. 557லிருந்து கி.மு. 529 வரை பாரசீகர்கள் ஆட்சி
செய்தனர். அவர்களை எவராலும் வீழ்த்த முடியவில்லை.என்றும் இறுதியாக, பாரசீகர்களின்
அரசரான ‘தாரா’ என்பவரை ‘இஸ்கந்தருல் மக்தூனி’ என்பவர் கி.மு. 326ல்
தோற்கடித்தார்
. என்றும் உள்ளது.இதில் எனக்கு கி.மு.இந்த கணக்கு எனக்கு புரிய வில்லை தயவு செய்து எனக்கு புரிய வைக்கவும்..

ramisrajaaa
புதுமுகம்

பதிவுகள்:- : 1
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 26 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 26 of 26 Previous  1 ... 14 ... 24, 25, 26

Back to top

- Similar topics
» இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு
» முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!
» முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!
» முஹம்மது صلى الله عليه وسلم அவர்களின் மகிமை
» முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் குணங்களும் ஸஃபியுர் ரஹ்மான் முபாரக்பூரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum