சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Today at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Today at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம் Khan11

2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம்

3 posters

Go down

2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம் Empty 2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம்

Post by Muthumohamed Thu 21 Feb 2013 - 21:40

2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம் 4ed26e26-61a4-4f91-943e-50e192fcd9d4_S_secvpf

இட்லி ஒரு ரூபாய்!
தயிர் சாதம் மூன்று ரூபாய்!
சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்!
நம்ப முடியாத விலை!
அதுவும் சென்னை பட்டணத்தில்...!

உழைக்கிற
பணத்தில் மூன்று வேளையும் ஓட்டலில் சாப்பிட்டால் கையில் பத்து ரூபாய் கூட
மிஞ்சாது என்ற தவிப்போடு இரு வேளை சாப்பாடு, ஒரு வேளை பட்டினி என்று
நாட்களை கடத்துபவர்கள் பலர்...

இந்த வரிசையில் கூலித் தொழிலாளர்
மட்டுமல்ல! படித்து விட்டு வேலை தேடி சென்னை வந்தவர்கள்... மிக குறைந்த மாத
சம்பளத்தில் வேலை பார்ப்பவர்கள் எல்லோருமே இடம் பிடித்துள்ளார்கள்.
இவர்களுக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம் தான் மலிவு விலை உணவகங்கள்.

நேற்று
முன்தினம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மலிவு விலை உணவகங்களை திறந்து
வைத்தார். விலையை கேட்டதும் வயிற்றில் பால் வார்த்தது போல் மகிழ்ச்சி
அடைந்தவர்கள் இந்த உணவகங்களுக்கு படையெடுக்கிறார்கள்.

தற்போது
மண்டலத்துக்கு ஒன்று வீதம் 15 உணவகங்கள் மட்டுமே செயல்பட தொடங்கி உள்ளது.
இந்த உணவகங்களை நிர்வகிக்கும் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் அதிகாலை 4
மணிக்கே வந்து விடுகிறார்கள். அவர்களின் கைவண்ணத்தில் பூ போன்ற இட்லி
தயாராகிறது. காலை 6 மணிக்குள் சுமார் 2 ஆயிரம் இட்லியை தயார் செய்து
விடுகிறார்கள்.

ஒவ்வொரு இட்லியும் 100 கிராமுக்கு குறையாமல் இருக்க
வேண்டும் என்பது உத்தரவு. காலை 7 மணிக்கு கடை திறந்ததும் சாப்பிட கூட்டம்
அலைமோதுகிறது. வரிசையில் காத்து நின்று டோக்கன் வாங்கி சாப்பிட்டு
செல்கிறார்கள். 2 மணி நேரத்துக்குள் 2 ஆயிரம் இட்லியும் விற்று
தீர்ந்துவிடுகிறது. இதே நிலைதான் அனைத்து உணவகங்களிலும் நிலவுகிறது.

இதனால்
இன்று முதல் 2500 இட்லி தயார் செய்யும்படி கூறப்பட்டுள்ளது. மாநகராட்சி
சுகாதாரத் துறை சார்பில் உணவு தயாரிக்கும் பெண்களுக்கு பயிற்சி
அளிக்கப்பட்டுள்ளது. உணவு தரமானதாக, சுகாதாரமானதாக இருக்கிறதா? என்பதை
அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அலுவலகங்களுக்கு செல்பவர்களும் இந்த
உணவகங்களுக்கு சென்று சாப்பிட்டு செல்கிறார்கள். வெளியே சாப்பிட்டால்
குறைந்தது 50 ரூபாய் செலவாகும். ஆனால் இங்கு 5 ரூபாயில் காலை டிபனை
முடித்து விட்டேன் என்ற பூரிப்பை அவர்கள் முகத்தில் பார்க்க முடிந்தது.

இப்போது
இட்லிக்கு சாம்பார் மட்டும் வழங்கப்படுகிறது. தேங்காய், மல்லி, புதினா
இவற்றில் ஏதாவது ஒரு சட்னியும் தந்தால் நன்றாக இருக்கும் என்பது பலரது
வேண்டுகோள். அதே போல் மதியம் சாம்பார் சாதத்துடன் அப்பளம், தயிர்
சாதத்துடன் ஊறுகாயும் வழங்கினால் மதிய சாப்பாடும் அமர்க்களமாய் இருக்கும்
என்பது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம் Empty Re: 2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம்

Post by Muthumohamed Thu 21 Feb 2013 - 21:40

சாப்பாடு எப்படி? என்று விசாரிக்க சென்ற அதிகாரிகளிடம் வாடிக்கையாளர்கள்
நேரிலேயே தங்கள் வேண்டுகோளை வைத்தனர். அதிகாரிகளும் இதுபற்றி அரசின்
பார்வைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். விரைவில் சுவையான தகவல்
வரும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். தொடர்ந்து 200 வார்டுகளிலும்
வார்டுக்கு 1 வீதம் 200 உணவகங்களை திறப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து
வருகிறது. இப்போது தொடங்கி இருப்பது டிரையல்தான்.

தேவைக்கேற்ப
தினமும் இட்லி, சாம்பார்சாதம், தயிர் சாதத்தை கூடுதலாக தயாரிக்க சொல்லி
வருகிறோம். யாரும் உணவகத்துக்கு வந்துவிட்டு உணவு கிடைக்காமல் திரும்பி
செல்லக்கூடாது என்ற எண்ணத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக
அதிகாரிகள் தெரிவித்தனர். மலிவு விலை உணவை ருசித்து பசியாற்றிய சிலர்
மகிழ்ச்சியுடன் கூறியது...
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம் Empty Re: 2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம்

Post by Muthumohamed Thu 21 Feb 2013 - 21:40

ராஜா மணி (கூலித் தொழிலாளி):-

நான் தியாகராயநகரில் கூலி வேலை செய்து
வருகிறேன். காலையில் தொழிலுக்காக வீட்டிலிருந்து புறப்படும் நான் மதிய
உணவுக்கு திண்டாடி வந்தேன். மலிவு விலை உணவால் மதிய உணவு 8 ரூபாயில்
முடிந்து விட்டது. (ஒரு சாம்பார் சாதம், ஒரு தயிர் சாதம்). திருப்தியாக
சாப்பிட்டு பசியாற்றிவிட்டேன். இந்த திட்டத்தை என்னைப் போல் ஏராளமான கூலித்
தொழிலாளர் வரவேற்கிறார்கள். இதே போல் கடைகள் பல இடங்களில் திறக்கப்பட
வேண்டும்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம் Empty Re: 2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம்

Post by Muthumohamed Thu 21 Feb 2013 - 21:41

தினகரன் (தனியார் நிறுவன ஊழியர்):-

தனியார் நிறுவனத்தில் வேலை
செய்து வருகிறேன். வேலை விஷயமாக தி.நகர் வந்தேன். பெரிய ஓட்டலுக்கு
சென்றால் மதிய சாப்பாடு ரூ.70க்கு மேல் ஆகும். இங்கு ரூ.10 ரூபாயில்
முடித்து விட்டேன். உணவு தரமாக உள்ளது. சாம்பார் சாதத்துக்கு ஒரு
அப்பளமும், தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள கொஞ்சம் ஊறுகாயும் தந்தால்
பிரமாதமாக இருக்கும்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம் Empty Re: 2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம்

Post by Muthumohamed Thu 21 Feb 2013 - 21:41

இவ்வாறு அவர் கூறினார்.

பிரகாஷ்: மிகவும் பசியோடு வந்தேன். சாம்பார்
சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3க்கு டோக்கன் வாங்கினேன். தட்டு நிறைய உணவு
வழங்கினார்கள். வயிறு நிரம்பி விட்டது. காலையிலும், மதியமும் 15 ரூபாயில்
சாப்பாட்டை முடித்து விடுவதால் இரவிலும் ஏதாவது சாப்பிட்டு மூன்று வேளையும்
பசியில்லாமல் திருப்தியாக சாப்பிட்டு வருவதாக பலர் நெகிழ்ச்சியுடன்
கூறினார்கள்.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை
அழித்திடுவோம் என்ற பாரதியின் கனவுதான் ‘அன்னசத்திரம் ஆயிரம் வேண்டும்’
என்பது. காலங்கள் கடந்தாலும் கனவுகள் மெய்ப்படுகிறது.

நன்றி : தினமலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம் Empty Re: 2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம்

Post by பானுஷபானா Fri 22 Feb 2013 - 13:31

:!+: :!+:

நானும் சாப்பிட்டு பார்க்கணும் டேஸ்ட் எப்படின்னு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம் Empty Re: 2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம்

Post by மீனு Fri 22 Feb 2013 - 13:41

:”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம் Empty Re: 2 ஆயிரம் இட்லி 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது: மலிவு விலை உணவகங்களில் அலைமோதும் கூட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum