சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

சாவெஸ் மரணம் Khan11

சாவெஸ் மரணம்

Go down

சாவெஸ் மரணம் Empty சாவெஸ் மரணம்

Post by நண்பன் Thu 7 Mar 2013 - 6:44

சாவெஸ் மரணம்


வெள்ளியன்று இறுதி கிரியை

பிராந்திய நாடுகளிலும் துக்கம் அனுஷ்டிப்பு
நெருக்கடியில் உதவுவதாக அமெரிக்கா அறிவிப்பு
பிடெல் காஸ்ட்ரோவின் புதல்வன் என்கிறது கியூபா


வெனிசுவெலா ஜனாதிபதி ஹ¥கோ சாவெஸ் தனது 58 ஆவது வயதில் நேற்று காலமானார்.
கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த சாவெஸ் கியூபாவில்
பல தடவைகள் சத்திரசிகிச்சை செய்து கொண்டார்.

வெனிசுவெலாவில் 14 ஆண்டுகள்
ஆட்சியிலிருந்த சாவெஸின் மரணச் செய்தியை அடுத்து தலைநகர் கரகாசில் இருக்கும்
மருத்துவ மனைக்கு முன்னால் ஒன்றுகூடிய அவரது ஆதரவாளர்கள் கண்ணீர் மல்க “நாம் சாவெஸ¤டன்
இருக்கிறோம்” என கோஷமெழுப் பினர்.
சாவெஸ் மரணம் W-1தம்மை புரட்சியாளராக அடையாளப்படுத்திக்கொண்ட சாவெஸ் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும்
சர்ச்சைக்குரிய ஒருவராக இருந்து வந்தார். அமெரிக்காவை கடுமையாக சாடிவந்த அவர்
லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரி கொள்கைக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து வந்தார்.
சாவெஸின் மரணத்தையடுத்து துணை ஜனாதிபதி நிகொலஸ் மடுரோ தற்காலிக ஜனாதிபதியாக தேர்தல்
வரை செயற்படுவார் என்று இன்னும் 30 தினங்க ளுக்குள் தேர்தல் நடத்தப்படும் என்றும்
வெளியுறவு அமைச்சர் எலியஸ் ஜவா குறிப்பிட்டார்.
“ஜனாதிபதி ஹ¥கோ சாவெஸின் கட்டளைக்கு அமையவே நாம் செயற்படு கிறோம்” என்றும் ஜவா அரச
தொலைக் காட்சியினூடே தெரிவித்தார். இதில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆளும்
ஐக்கிய சமவுடைமை கட்சியின் வேட்பாளராக மடுரோ நிற்பார் என்றும் ஜவா தனதுரையில்
தெரிவித்தார். எனினும் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் திகதி இன்னும்
நிர்ணயிக்கப் படவில்லை.
கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஹ¥கோ சாவெஸ் நான்காவது
தடவையாகவும் வெற்றியீட்டினார். எனினும் மோசமான உடல் நிலை காரணமாக அவரால்
ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்ய முடியாமல் போனது.
சாவெஸின் உடல் நிலை குறித்தும் ரகசியம் பேணப்பட்டு வந்தது. அவர் புற்று நோயால்
பாதிக்கப் பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதும் அது குறித்து ஊகங்கள் மாத்திரமே
வெளியாகின. அவரது நோயின் தன்மை குறித்து உத்தியோகபூர்வமாக எந்த தகவலும்
வெளியாகவில்லை. அத்துடன் அவர் கடந்த பல மாதங் களாக பொதுமக்கள் முன் தோன்றவு மில்லை.
இந்நிலையில் சாவெஸின் மரணத்திற்காக ஏழு நாள் துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளதோடு
அவரது உடல் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இறுதிக் கிரியை வெள்ளிக்கிழமை
நடைபெறவுள்ளது.
சாவெஸ் மரணம் W-2கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சாவெஸ¤க்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்த
எதிர்க்கட்சி தலைவர் ஹென்ட்ரிக் கப்ரிலஸ், அரசியலமைப்புக்கு அமைய செயற் படும்படி
அரசை வலியுறுத்தியுள்ளார். அத்துடன் சாவெஸ் குடும்பத்திற்கு தனது கவலையை
வெளியிட்டுள்ள கப்ரிலஸ், “நாம் போட்டியாளர்களே ஒழிய எதிரிகளல்ல” என்று
குறிப்பிட்டுள்ளார்.

ஒரு புரட்சியாளரின் பயணம்
முன்னாள் இராணுவ அதிகாரியாக இருந்த ஹ¥கோ சாவெஸ் 1992 ஆம் ஆண்டு தோல்வியில் முடிந்த
இராணுவ புரட்சி ஒன்றை மேற்கொண்டது தேசத்தின் கவனத்தை ஈர்த்தது. இதனால் இரண்டு ஆண்டு
சிறை அனுபவித்த அவர் ஒரு அரசியல்வாதியாக வெளியே றினார். இதன் மூலம் 1998 தேர்தலில்
ஆட்சியை கைப்பற்றி தம்மை ஒரு புரட்சியாளராகவும் சமவுடைமை வாதியாகவும்
அடையாளப்படுத்திக் கொண்டார்.
வறிய மக்களின் வாக்குகள் மூலம் வெற்றி பெற்ற சாவெஸ், நாட்டின் எண்ணெய் மற்றும்
வளங்களை சமவுடைமை கொள்கைக்கு ஏற்ப பகிர்ந்தளித்தார். இதன் மூலம் அவர் தொடர்ந்து
தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.
எனினும் அவரது எதிர்ப்பாளர்கள், நாட்டின் பொருளாதாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும்
சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை கொண்டு செல்வதாகவும் தொடர்ந்தும் குற்றம்சாட்டி
வந்தனர்.
சர்வதேச அளவில் சாவெஸ் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்து வந்தார். 2002
இல் தம்மை கவிழ்க்க வொஷிங்டன் சதி முயற்சியில் ஈடுபட்டதாகவும் சாவெஸ் குற்றம்சாட்டி
வந்தார்.
வெனிசுவெலா நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை தொலைக்காட்சி முன் தோன்றிய அந்நாட்டு
துணை ஜனாதிபதி மடுரோ, “கடந்த இரண்டு ஆண்டு களாக மோசமான உடல் நிலை காரணமாக போராடி
வந்த ஜனாதிபதி காலமாகிவிட்டார்” என கண்ணீர் மல்க அறிவித்தார். “நாம் கடினமான
மனதுடனும் கவலையுடனும் இந்த தகவலை தெரிவிக்கின்றோம்... ஜனாதிபதி சாவெஸ் இன்று 16.25
க்கு (இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை நான்கு மணியளவில்) மரணமடைந்தார்” என்றும்
மடுரோ குறிப்பிட்டார்.
அத்துடன் நமது தலைமை இல்லாத நிலையில் நாட்டு மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்
எனவும் துணை ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். சாவெஸின் சமவுடைமை மரபு, ஏகாதிபத்திய
எதிர்ப்பு மற்றும் புரட்சிக்கொள்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர்
வாக்குறுதி அளித்தார்.
நாட்டின் அமைதியை உறுதிப்படுத்த பொலிஸார் மற்றும் படைகள் நிலை நிறுத்தப்படும்
என்றும் மடுரோ தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இதில் சாவெஸின் புற்றுநோயும் வெளிநாட்டு சதி முயற்சி என வெனிசுவெலா துணை ஜனாதிபதி
குற்றம் சாட்டினார். சாவெஸின் புற்று நோய் எதிரிகள் நாட்டை துண்டாடச் செய்த சதி
என்றும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும்
அவர் கூறினார். ஏற்கனவே தம் மீதான புற்றுநோய் அமெரிக்கா வின் சதி முயற்சி என்று
ஹ¥கோ சாவெஸ் ஓர் ஆண்டுக்கு முன் குற்றம்சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெனிசுவெலாவில் உளவு பார்த்த அமெரிக்காவின் இரு ராஜதந்திரிகளை வெனிசுவெலா இராணுவம்
நாட்டை விட்டு வெளியேற்றியது என்று மடுரோ குறிப்பிட்டார்.
சாவெஸின் மரணத்தை தொடர்ந்து வெனிசுவெலா இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின்
இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை நிலை நிறுத்துவதாகவும் துணை ஜனாதிபதி
மற்றும் பாராளுமன்றத்திற்கு கட்டுப்படுவதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஹுகோ சாவெஸின் உடல் மக்கள் கெளரவத்திற்காக வெள்ளிக் கிழமை வரை வைக்கப்படவுள்ளது.
வெளிநாட்டு தலைவர்களின் பங்கேற் புடனும் அரச மரியாதையுடனும் இறுதிக் கிரியைகள்
நடைபெறவு ள்ளதாக அரசு அறிவித்துள்ளது. சாவெஸ் ஆதரவாளர்கள் தேசிய கொடியிலுள்ள மூன்று
நிறத்திலான ஆடையோடு இறுதிக் கிரியையில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சாவெஸின் மரணச் செய்தியை கேட்டு கரகாஸ் நகரில் ஆயிரக்கணக் கானோர் திரண்டனர்.
இவ்வாறு ஒன்று திரண்டோரில் ஒருவரான பிரான்சிஸ் இஸ்குயர்டோ என்பவர் ஏ. எப்.பி.
செய்திச் சேவைக்கு கூறும்போது, “அவர் எமது நாட்டின் மீது அன்பு செலுத்த எமக்கு
கற்றுத்தந்தார். அவர் எம்மை விட்டு நீங்கினாலும் என்றும்” அவர் எமது மனதில்
இருக்கிறார் என்றார்.

அடுத்து என்ன?
சாவெஸின் மரணத்தைத் தொடர்ந்து அந்நாட்டு பாராளுமன்ற தலைவரே இடைக்கால ஜனாதிபதியாக
நியமிக்கப்பட வேண்டும் என ஒரு சில எதிர்க் கட்சியினர் வாதிட்டு வருகின்றனர்.
எனினும் அரசியல் மற்றும் இராணுவத் தலைமைகள் புடைசூழ துணை ஜனாதிபதி, சாவெஸின்
மரணத்தை அறிவித்த போது பாராளுமன்ற தலைவர் அங்கு தோன்றியிருக்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க் கட்சி சார்பில் யார்
போட்டியிடப்போவது என்பது இன்னும் உறுதியாகவில்லை. எனினும் கப்ரிலஸ் மீண்டும்
ஒருமுறை போட்டியில் இறங்குவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும்
இடைக்கால ஜனாதிபதி மடுரோ எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாக
கரகாசிலிருந்து பி.பி.சி. செய்தியாளர் குறிப்பிட் டுள்ளார். நாட்டின் பெரும் தலைவர்
இழந்த நிலையில் அவர் எவ்வாறு நாட்டை முன்னெடுக்கப்போகிறார் என்பது சர்வதேச அளவில்
அவதானிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச அனுதாபங்கள்
சாவெஸின் மரணத்தை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியிட்ட அனுதாப
செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஜனாதிபதி ஹ¥கோ சாவெஸின் மரணத்தினால் சவாலான நேரத்தை எதிர்நோக்கியிருக்கும்
வெனிசுவெலா மக்களுக்கு அமெரிக்கா முழு ஆதரவையும் கொடுக்கும். மேலும் அந்நாட்டுடன்
ஆக்கபூர்வமான உறவை மேம்படுத்திக் கொள்ள அமெரிக்கா விரும்புகிறது.
வெனிசுவெலா புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கும் இந்நிலையில், வெனிசுவெலாவில்
ஜனநாயக கொள்கைகளை ஊக்குவிக்கும் கட்டத்தின் வரை முறைகளை நிலைநிறுத்தும், மனித
உரிமைகளை மதிக்கும் புதிய கொள்கைகளை உருவாக்குவதில் அமெரிக்கா உறுதி ஏற்கும்
இவ்வாறு ஒபாமா கூறியுள்ளார்.
மறுபுறத்தில் கியூப அரசு சாவெஸின் மரணத்திற்கு நாட்டில் மூன்று தின துக்க தினத்தை
அறிவித்துள்ளது. கியூப அரச தொலைக்காட்சி வெளியிட்ட அறிவிப்பில் “சாவெஸ், பிடெலின்
(காஸ்ட்ரோ) உண்மையான மகன் போன்று செயற்பட்டார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிராந்திய நாடான ஆர்ஜன்டீனா, சாவெஸின் மரணச் செய்தியை அடுத்து அரச நிகழ்வுகள்
அனைத்தையும் ஒத்திவைப்பதாக அறிவித்தது. அதேபோன்று பெரு நாட்டு பாராளுமன்றத்தில்
சாவெஸ¤க்கு ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பொலிவிய ஜனாதிபதி எவொ மொரலஸ்
மரணச் செய்தியை அடுத்து உடனடியாக கரகாஸ் செல்வதாக அறிவித்தார். அதேபோன்று தமது
சொந்தத்தில் ஒருவரை இழந்ததாக உணருவதாக கூறியிருக்கும் இக்வடோர் அரசு தமது அயல்
நாடுகள் சாவெஸின் புரட்சியை தொடர்ந்து முன்னெடுப் பார்கள் என நம்பிக்கை வெளியிட்
டது.
சாவெஸின் மரணத்தைத் தொடர்ந்து லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசியல் சூழலில் ஒரு
சமநிலைப் போக்கு உருவாகி இருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். இடது சாரிகளின்
ஆதிக்கத்தில் இருந்து மைய கொள்கை கொண்டவர்களுக்கு கூடுதலான வாய்ப்பு ஏற்பட்டிருப்
பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோன்று பிராந்திய நாடுகளின் பொருளாதார நிலையிலும் மாற்றம்
ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வெனிசு வெலா இதுவரை காலமும் தமது எண்ணெய்யை ஒரு சில
பிராந்திய நாடுகளுக்கு சந்தை விலையை விடவும் குறைவான விலைக்கே வழங்கி வந்தமை
குறிப்பிடத்தக்கது.
சாவெஸ் அரசு நாட்டின் சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வாக பல நிமிடங்களை முன்னெடுத்து
வந்தது. குறிப்பாக கல்வி மற்றும் சுகாதார சேவையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது.
எனினும் எண்ணெய் வளம் கொண்ட வெனிசுவெலாவில் வறுமை, வேலையின்மை தொடர்ந்தும்
பிரச்சினையாக உள்ளது.


தினகரன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum