சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

புதிய பாப்பரசர் தேர்வுக்கான கர்தினால்களின் இரகசிய அமர்வு ஆரம்பம் Khan11

புதிய பாப்பரசர் தேர்வுக்கான கர்தினால்களின் இரகசிய அமர்வு ஆரம்பம்

Go down

புதிய பாப்பரசர் தேர்வுக்கான கர்தினால்களின் இரகசிய அமர்வு ஆரம்பம் Empty புதிய பாப்பரசர் தேர்வுக்கான கர்தினால்களின் இரகசிய அமர்வு ஆரம்பம்

Post by நண்பன் Wed 13 Mar 2013 - 9:20

புதிய பாப்பரசர் தேர்வுக்கான கர்தினால்களின் இரகசிய அமர்வு ஆரம்பம் W1303131
புதிய பாப்பரசர் தேர்வுக்கான கர்தினால்களின் இரகசிய அமர்வு ஆரம்பம்
வத்திக்கான் வெளியுலக தொடர்பிலிருந்து துண்டிப்பு
முன்னணி போட்டியாளர் யார் என்பது தெரியாத நிலையில் புதிய பாப்பரசரை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் இரகசிய கூட்டம் நேற்று வத்திக்கானில் ஆரம்பமானது.

சென்பீட்டர்ஸ் பஸ்லிக்காவில் இடம்பெற்ற விசேட ஆராதனையைத் தொடர்ந்து புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் 115 கர்தினால்களும் இரகசிய கூட்டத்தை ஆரம்பித்தனர். வத்திக்கான் நேரப்படி நேற்று மதியம் பாப்பரசர் தேர்வுக்கான முதலாவது வாக்கெடுப்பு இடம்பெறவிருந்தது.

மைக்கல் ஆஞ்சலோவின் வரலாற்று பிரசித்தி பெற்ற ஓவியம் அமைந்திருக்கும் சிஸ்டின் செப்பல் மண்டபத்திலேயே கர்தினால்களின் இரகசிய கூட்டம் இடம்பெற்று வருகிறது. இதில் கர்தினால்கள் பாப்பரசர் தேர்வுக்கு தேவையான மூன்றில் இரண்டு வாக்குகளும் கிடைக்கப்பெறும் வரை நாளாந்தம் தளா நான்கு தடவைகள் வாக்குப் பதிவில் ஈடுபடவுள்ளனர்.

பரிசுத்த பாப்பரசர் 16 ஆம் ஆசிர்வாதப்பர் திடீரென இராஜினாமா செய்ததையடுத்தே புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் செயற்பாட்டில் வத்திக்கான் ஈடுபட்டுள்ளது. 85 வயதான 16 ஆம் ஆசிர்வாதப்பர் தனது வயதை காரணமாக கூறியே கடந்த மாதம் இராஜினாமா செய்தார்.

இந்நிலையில் நேற்றுக் காலை புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் கர்தினால்கள் சென்பீட்டர்ஸ் பஸ்லிக்காவில் ஒன்று கூடி விசேட ஆராதனையில் ஈடுபட்டனர். கர்தினால்களின் கல்லூரி பீடாதிபதியான அன்ஜலோ சொடனொ இந்த விசேட ஆராதனையை நடத்தினார். அதில் இரகசிய கூட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் திருச் சபையின் ஒற்றுமையை கட்டியெழுப்ப பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.

சென்பீட்டர்ஸ் பஸ்லிக்காவில் இடம்பெற்ற ஆராதனையை அங்கு கூடிய ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் சென் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நான்கு பிரமாண்ட திரைகளூடாக பார்வையிட்டனர். விசேட ஆராதனையைத் தொடர்ந்து வத்திக்கான் வளாகம் வெளியுலக தொடர்புகளை துண்டித்துக் கொண்டது. குறிப்பாக கர்தினால்களின் இரகசியக் கூட்டம் இடம்பெறும் சிஸ்டின் செப்பல் மண்டபத்தில் இலத்திரனியல் தொடர்பு கருவிகள் அனைத்தும் செயலிழக்கப்பட்டன.

இதில் இலங்கை நேரப்படி இரவு 10 மணி அளவில் ஆரம்பமான கர்தினால்களின் இரகசிய கூட்டத்தின் முதல் நாளில் மதிய வேளையில் முதல் வாக்கெடுப்பு நடைபெறவிருந்தது. முதல் வாக்கெடுப்பில் உறுதியான முடிவு கிடைக்காது என கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இன்றைய தினத்தில் வத்திக்கான் நேரப்படி காலையில் இரு வாக்குகளும் மதியத்தில் இரு வாக்குகளும் பதியப்படவுள்ளன. வாக்கெடுப்புகளுக்கு பின்னர் வாக்குச் சீட்டுகள் எரிக்கப்பட்டு விசேடமாக அமைக்கப்பட்ட புகைக் குழாய் ஊடாக வெளியிடப்படவுள்ளது. இதில் கறுப்புப் புகை வெளியானால் பாப்பரசர் தேர்வில் இழுபறி நீடிப்பது என அறிவிக்கப்படு வதோடு வெள்ளை புகை வெளியானால் புதிய பாப்பரசர் தேர்வாகிவிட்டதாகவும் அறிவிக்கப்படும். எவ்வாறாயினும் ஒருசில தினங்களுக்குள் புதிய பாப்பரசர் தேர்வாவதற்கான மூன்றில் இரண்டு வாக்குகளும் கிடைக்கும் என வத்திக்கான் நம்பிக்கை தெரிவித்துள்ளது. புதிய பாப்பரசர் தேர்வில் பங்கேற்கும் 115 கர்தினால்களில் இருந்தே பாப்பரசர் தேர்வாகவுள்ளார். இதில் ஒவ்வொரு கர்தினால்களும் வாக்குப் பதிவின் போது தமக்கு வாக்களிக்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் புதிய பாப்பரசர் போட்டிக்கு முன்னணியில் இருப்பவர் குறித்து தெளிவு இல்லை என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

தினகரன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய பாப்பரசர் போட்டியில் இரு கறுப்பினத்தவர் முன்னணியில்
» ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் மையம் புதிய இடத்தில் ஆரம்பம்
» சவூதியில் மன்னர் ஆட்சிக்கு மத்தியில் புதிய கட்சி ஆரம்பம்.
» இலங்கையில் ஜம்மியத்துல் உலமாவுக்குள் பிளவு: புதிய அமைப்பு நடவடிக்கை ஆரம்பம்
» ஐ.நா. அரச தலைவர்கள் அமர்வு இன்றிரவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum