சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:10

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - Khan11

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -

2 posters

Go down

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - Empty மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -

Post by *சம்ஸ் Thu 14 Mar 2013 - 11:03

பெண்களுக்கு என்று ஏற்படும் சிலவகை நோய்களில், இந்த மார்பக புற்று நோயும் தற்போது அதிகரித்து வருகிறது. இவை நான் படித்தது. நல்ல விசயம் உங்கள் எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பி இங்கே இடுகிறேன்...

இவை சிங்கப்பூர் சாங்கி மருத்துவமனையின் தளத்தில் இடப்பட்ட பதிவு.

அது உங்களுக்காக.....

மார்பகம் என்றால் என்ன?


மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - Breast%2520anatomyLab

ஒவ்வொரு மார்பகமும் லோப்ஸ் (lobes) எனப்படும் 6 முதல் 9 அடுக்கடுக்கான மடிப்புத் தொங்கு சதைகளானது. ஒவ்வொரு தொங்கு சதையும் லோப்யூல்ஸ் (lobules) எனப்படும் பல சிறு இதழ்களைக் கொண்டு பாலைச் சுரக்கும் சில டஜன் சிறு முனைப் பகுதி குமிழ்களாக முடியும். இத்தகைய மடிப்புத்தொங்கு சதைகள், சிறு இதழ்கள், முனைப் பகுதி குமிழ்கள் அனைத்தையும் மெல்லிய இழை நாளங்கள் ஒன்றிணைக்கின்றன.

இந்த இழை நாளங்கள் மார்பகத்தின் நடுவிலுள்ள ஆரியோல் (areole) எனப்படும் கரும் வட்டத்தின் நடுவிலுள்ள முலைக்காம்பில் ஒன்றிணைகின்றன. சிறு இதழ்களுக்கும் நாளங்களுக்கும் இடையேயுள்ள இடைப்பகுதியைக் கொழுப்புப் பொருட்கள் நிறைக்கின்றன. மார்பகத்தில் சதைப்பற்று ஏதும் இருக்காது. ஆனால் மார்பகத்தின் அடிப்பகுதியில் சதைப்பற்று இருந்து விலா எலும்புகளை மறைக்கின்றது.
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - LymphaticsLab
ஒவ்வொரு மார்பகமும் இரத்த நாளங்களையும் லிம்ப் (lymph) எனப்படும் வர்ணமற்ற திரவத்தை எடுத்துச் செல்லும் நாளங்களையும் கொண்டுள்ளது. இந்த லிம்ப் நாளங்கள் அவரை விதை வடிவிலுள்ள லிம்ப் நோட்ஸ் (Nodes) எனப்படும் முடிச்சுகளில் செல்லுகின்றன.

இத்தகைய லிம்ப் நோட்ஸ்கள் கூட்டங் கூட்டமாக அக்குளின் மேலேயும் தோட்பட்டை எலும்புகளின் மேலும் மார்பகங்களிலும் உள்ளன. இத்தகைய லிம்ப் நோட்ஸ் உடலின் மற்ற பல பாகங்களிலும் உள்ளன.


மார்பகப் புற்று நோய் என்றால் என்ன?

மார்பகப் புற்று நோய் என்றால், மார்பகத்தில் உள்ள சில அணுக்கள் அளவுக்கதிகமாக வளர்வதாகும். புற்று அணுக்கள் மற்ற அணுக்களைக் காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருக்கும். அவை வேகமாகப் பிரிந்து வளர்ந்து சுற்றிலுமுள்ள இழைமங்களை (tissues) ஆக்கிரமிக்கும் .


மார்பகப் புற்று நோயின் அறிகுறிகள் என்ன?

துவக்க நிலை மார்பகப் புற்றுநோய் சாதாரணமாக வலியை உண்டாக்காது. மார்பகப் புற்றுநோய் வளரத் தொடங்கும் போது எந்தவித அடையாளமும் அறிகுறியும் இருக்காது.


புற்றுநோய் வளர வளர கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்படும்.

1, வீக்கம் அல்லது மார்பகம் அல்லது அக்குள் பகுதி தடிக்கும்.

2. மார்பகத்தின் அளவும் வடிவும் மாறுபடும்.

3. முலைக் காம்பிலிருந்து இரத்தமோ வேறு திரவமோ கசியும்.

4. மார்பகத்தின் தோல், கருப்பு வளையம், முலைக்காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறும். (குழிவிழுதல், மடிப்பு விழுதல், சொரசொரத்தல்)

5. முலைக்காம்பு உள்ளிழுத்துக் கொள்ளும்.

மேற்கண்ட மாறுதல்களில் ஏதேனும் தென்பட்டால் உடனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.


மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - Retraction

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - Changeshape

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - Nipple%2520dischargeLab

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - Colourfeel

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - Lump

எவ்வாறு மார்பகப் புற்றுநோய் கண்டறியப் படுகிறது?

மார்பகப் புற்றுநோயைக் கீழ்க்கண்ட முறைகளில் கண்டறியலாம்.
மருத்துவ வரலாறு:-
உங்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவ வரலாறு உதவும். உங்கள் மருத்துவர் குடும்பத்தில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்ததா, இருக்கிறதா என்று கேட்டறிவார். உங்களுடைய மாத விலக்கு விவரங்கள், உங்கள் மார்பகக் கட்டியின் புறத் தன்மைகள் குறித்து உங்களிடம் கேட்பார்.
மார்பகக் கட்டியைத் தொட்டுப் பார்த்தல்:-
உங்கள் மருத்துவர் உங்கள் மார்பகத்தைத் தொட்டுப் பரிசீலனை செய்து மார்பகக் கட்டியின் இருப்பிடம், அளவு, மார்பக லிம்ப் மற்றும் லிம்ப் நோட்ஸ்களின் பொதுத்தன்மையைக் கண்டறிவார்.

மம்மோ கிராம் (mammo gram)
உங்கள் மருத்துவர் மம்மோகிராம் சோதனையைச் செய்து கொள்ளுமாறு உங்களிடம் கூறலாம். மார்பகக் கட்டிகளை, அதிலும் மிகச் சிறியவற்றைக் கண்டு பிடிக்க உதவும் ஒருவகை பயன்மிக்க மார்பகத்தை எக்ஸ்ரே பிடிக்கும் தொழில் நுட்பமாகும் இது. ஒரு தட்டு போன்ற கருவியால் உங்கள் மார்பகத்தைத் தட்டையாக அழுத்தி மார்பகத்தின் தெள்ளிய வடிவத்தை அறிய முயலப்படும்.
உங்கள் மார்பகக் கட்டியின் முக்கிய விவரங்களை மம்மோகிராம் உங்கள் மருத்துவருக்கு அளிக்கும். மம்மோகிராமில் ஏதேனும் ஒரு பகுதி ஐயம் உண்டாக்கினாலும், தெளிவாக இல்லாவிட்டாலும் மற்றொரு எக்ஸ்-ரே எடுக்க வேண்டியிருக்கும்.
அதிரொலி (Ultra sound)
அதிரொலி என்பது அதிக அதிர்வுடன் கூடிய ஒலியலைகளை மார்பகத்தின் மீது செலுத்தி மார்பகத்தின் கட்டி கெட்டியாக (திடமாக) உள்ளதா அல்லது திரவம் நிறைந்துள்ளதா என்று கண்டறியலாம். மம்மோ கிராபியுடனும் இந்தப் பரிசீலனையைச் செய்யலாம்.
நீடில் பயோப்சி (Needle Biopsy)
உங்கள் மருத்துவர் ஒரு மெல்லிய ஊசியால் உங்கள் மார்பகக் கட்டியிலிருந்து ஒரு சில அணுக்களை எடுத்து நுண்ணோக்கியில் பரிசீலித்து மார்பக புற்றுநோய் உள்ளதா இல்லையா என்று கண்டறிவார். சில சமயங்களில் ஒரு பெரிய ஊசியை கெட்டியான கட்டியின் மைய இயைமத்தை எடுக்கப் பயன்படுத்துவார்.

மார்பகப் புற்று நோயின் வகைகள்:-
மார்பகப் புற்று நோயில் பல வகைகளுண்டு. மிகச் சாதாரண வகைகள் கீழே தரப்பட்டுள்ளன.
1. நாளப்புற்று நோய் (Ductoal carcinome)
இது மிகச் சாதாரணமாக வரும் மார்பகப் புற்றுநோய் வகையாகும். நாளங்கள் தடிப்பதின் வழி இது துவங்கும்.
2. மடிப்பு சதை புற்றுநோய் (lobuler carcinome)
இது மார்பகத்தின் மடிப்புச் சதைகளில் உண்டாகும்.
3. முற்றிலும் பரவிய புற்றுநோய் (metastatic)
மார்பகத்தின் வெளிப்பகுதியில் புற்றுநோய் முற்றிலும் பரவிய பின்னர் புற்றுநோய் அணுக்கள் அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களில் அதிகமாகப் பரவும். எப்போது இத்தகைய முடிச்சுகளில் புற்று நோய் பரவுகிறதோ, புற்றுநோய் அணுக்கள் உடலின் மற்ற எல்லா பாகங்களிலும், மற்ற எல்லா லிம்ப் நோட்களிலும், எலும்பு, ஈரல், நுரையீரல் முதலிய அங்கங்களிலும் ஏற்கனவே பரவி விட்டது என்பதை தெறியலாம். அவ்வாறு மார்பகப் புற்றுநோய் எங்கும் பரவுகிறதோ என முற்றிலும் பரவிய புற்றுநோய் எனலாம்.

நன்றி இருவர் உள்ளம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - Empty Re: மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -

Post by ansar hayath Thu 14 Mar 2013 - 15:30

:!+: :!+: :];:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum