சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

ஒரு முறை தான் பூக்கும் Khan11

ஒரு முறை தான் பூக்கும்

2 posters

Go down

ஒரு முறை தான் பூக்கும் Empty ஒரு முறை தான் பூக்கும்

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 19:03

பெருந்துறை பேருந்து நிறுத்தத்தில் வசந்தாமணிக்காக காத்திருந்தான் சுதாகரன். இது இன்று நேற்றல்ல... மூன்று வருடங்களாக நடப்பது தான். மூன்று வருடத்தில் இவனுக்காய் எந்த நாளும் வசந்தா மணி எந்த இடத்திலும் காத்திருந்ததே இல்லை. அவளுக்காக இப்படிக்காத்திருப்பது இந்த மூன்று வருடங்களில் ஒரு முறை கூட சுதாகரனுக்கு சலிப்பான விசயமாகத் தோன்றியதே இல்லை.

வசந்தாமணி ஈங்கூர் பெண் ஹையர்செகண்டரி முடித்தவள். வீட்டு நிலைமையை மனத்தில் கொண்டு பனியன் கம்பெனியில் சேர்ந்து கொண்டாள். வீட்டில் அப்பாவும், அக்காவும் தோட்ட வேலைகளை பார்த்துக்கொள்கிறார்கள். தோட்டத்தில் இருபது ஆடுகள் பட்டியிலும், எருமைகள் ஐந்தும் நின்று கொண்டிருக்கின்றன. அம்மா மேல் உலகத்துக்கு டிக்கெட் எடுத்து போய் வருடம் நான்கு போய்விட்டது.

ஊதாரி அண்ணன் ஒருவன் ஸ்டீல் கம்பெனிக்கு வேலைக்கு போவதும் டாஸ்மாக்கில் குடியிருப்பதையுமே வழக்கமாய் கொண்டிருந்தான். மனியன் எங்கேப்பா? என்றால் கோயிலில் இருந்தானே என்பார்கள். டாஸ்மாக் கடையை கோயில் என்கிறார்கள். மணியனுக்கு தனக்கு மூத்தவள் ஒருத்தி திருமணத்துக்கு நிற்கிறாள் என்ற எண்ணம் துளி அளவேனும் இல்லாதவன். மணியனின் அக்கா தேவிகாவுக்கு வயது இருபத்தாறு நடக்கிறது. ஈங்கூர் பள்ளியில் மேல் படிப்பான ஐந்தாவது பாஸ் செய்தவள். வீட்டு வேலைகளிலும், காட்டு வேலைகளிலும் கெட்டிக்காரி. வசந்தாமணிக்கு வீட்டில் வேலை செய்வதோ தோட்டத்தில் வேலை செய்வதோ அலர்ஜியான விஷயம். எருமை சாணத்தை தேவிகா கூடையில் அள்ளி எடுத்து போய் குப்பையில் கொட்டுவதை முகம் சுளித்தபடி பார்ப்பாள். அக்காவுக்கு சமையலில் கூட உதவ மாட்டாள் வசந்தாமணி. போதாதற்கு இவளின் துணிமணிகளைக்கூட தேவிகா தான் சர்ப் எக்ஸல் போட்டுத் துவைத்துக் காய வைப்பாள். சம்பளமில்லாத வேலைக்காரியாக தேவிகா மாறிப்போயிருந்தாள்.

வசந்தாமணியின் அப்பா பிள்ளைப்பூச்சி. தான் உண்டு தன் வேலை உண்டு என்றே இருப்பார். அவரது வருத்தமெல்லாம் மணியன் இப்படி மொடாக்குடிகாரணாக போய்விட்டானே என்று தான். ஈங்கூரில் ஊருக்குள் இருக்கும் வீட்டுக்கும் அவர் அதிகம் வருவதில்லை. தோட்டத்திலேயே மோட்டார் ரூமில் படுத்து கொள்வார். தேவிகா வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு போவாள்.

சுதாகரன் சிகரெட்டின் கடைசி இழுப்பை இழுத்து கீழே போட்டு செருப்பால் அதன் தீக்கங்கை அழுத்தி அணைத்தான். புகைபிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது. சுதாகரன் கொங்கு கல்லூரியில் ஆபீஸ் பியூனாக இருக்கிறான். இதோ இப்போது தான் வேலையில் சேர்ந்தது போல் இருக்கிறது. ஆனால் வருடங்கள் ஐந்து ஓடிவிட்டது. ஆசைத் தங்கையை சேலத்துல கட்டிக்கொடுத்து வருடம் இரண்டு போய் விட்டது. அவளைக் கட்டி கொடுத்து தாட்டி விட்ட நாளில் இருந்து வீட்டில் அப்பாவும் அம்மாவும் இவன் ஜாதகத்தைத் தூக்கி கொண்டு பெண் பார்த்துடலாம். பெண் பார்த்துடலாம் என்று கீழல் விழுந்த டிவிடி தட்டு போல கத்திக்கொண்டே இருந்தார்கள். அவர்களாகவே சோதிடரை தேடிப்போய் ஜாதகத்தை கொடுத்து ரிசல்ட் பார்த்தார்கள்.

இந்த ஜாதகக்காரனுக்கு குரு பலன் வர இன்னும் ஒரு வருஷம் இருக்கே வயது என்ன இருபத்தி ஒன்பதா? முப்பது பிறந்ததும் குரு பார்க்கிறான். அப்புறம் நீங்க நினைச்சால கூட பையன் திருமணத்தை நிறுத்த முடியாது என்ற தகவலை சோதிடர் சொன்னதும் நிம்மதியாக வீடு வந்தவர்கள் ஒரு வருடம் இவன் திருமணம் பற்றி இவனிடம் வாயைத் திறக்கவில்லை.

இதோ சுதாகரனிடம் குரு வந்து விட்டான். வந்ததும் அவசரப்படாமல் முப்பது நாள் தங்க வைத்து சுதாகரனின் பெற்றோர் அதே டிவிடி தட்டை போட்டார்கள். சுதாகரன் இந்த முறை பெற்றோரிடம் கோபிக்கவில்லை. ஒரு வாரத்தில் சொல்றேன்ப்பா என்று அப்பாவிடம் சொல்லிவிட்டான். அதோ வசந்தாமணி காலையிலிருந்து கால் கடுக்க நின்று வேலை செய்த களைப்பில் துவண்டு போய் வந்து கொண்டிருந்தாள். சுதாகரனை பார்த்ததும் வழக்கமாக வீசும் புன்னகையை வீசினாள். அருகே வந்தவள், ஐயா இன்னிக்கு கோபமோ முகம் ஏனோ உம்முன்னு இருக்கே என்றாள். மூன்று வருட பழக்கத்தில் சரளமாக பேசும் குண்ம் மட்டுமே அவளிடம் மிஞ்சியிருந்தது.

ரொம்ப பசிக்குதுப்பா, அக்கா டிபன்ல நாலு இட்லி வச்சி அனுப்பி விட்டுட்டா கம்பெனில இன்னிக்கு அக்கட்ட இக்கட்ட துளி நகர முடியாத அளவுக்கு வேலை. சூப்பர்வைசர் வேற கழுகு மாதிரி பார்த்துட்டே இருந்தான். அவள் பேசிக்கொண்டே யிருக்க சுதாகர் ஹோட்டலை நோக்கி நடந்தான். பின்னால் வந்தவள் இன்று ஏனோ புதிதாய் ஒரு பேச்சு பேசாமல் நகர்கிறானே என்று யோசித்தபடி சுதாகரின் பின்னால் செல்லாமல் நின்று கொண்டாள்.

ஹோட்டலின் அருகாமை சென்ற சுதாகர் திரும்பி பார்த்து வா என்று கையசைத்து கூப்பிட்டான். மக்கள் கூட்டம் பேருந்தை பிடிக்க அலைமோதிக்கொண்டிருந்தது. மாலை நேரத்தில் எப்போதும் இப்படித்தான். கோபித்து கொண்டு நிற்பவளை சமாதானப்படுத்த சுதாகரன் திரும்பவும் அவளிடம் வந்தான். இவர்களின் நாடகத்தை கவனிப்பாரின்றி எல்லோரும் அவரவர் அவசரத்தில் இருந்தார்கள். என்னம்மா சின்னப்பிள்ளையாட்டம் பிடிவாதம்...

பின்ன நான் என்ன கிழவியா? பசிக்குதுன்னு சொன்னேன். சரி வா போகலாம்னுஒரு வார்த்தை பேசாமல் முன்னாடி போனல் என்ன அர்த்தம்? என் கிட்ட காசு இல்லாமல் தான் உங்ககிட்ட பசிக்குதுன்னு சொன்னேனா? நீங்க உம்முன்னு முகத்தை வெச்சுட்டு முன்னாடி போனால் நான் பின்னாடி வரணுமா?

சாரி வசந்தாமணி மேடம். எனக்கும் கூட பசிக்குது. நீங்களும் பெரிய மனசு பண்ணி இந்த ஏழையோட அழைப்பை நிராகரிக்காம வாங்க என்றான்.

கொஞ்சம் நக்கல் தான். இருந்தாலும் எனக்கு பசி என்றவள் சுதாகரனுடன் இணைந்து ஹோட்டலுக்குள் வந்தாள். இருவரும் பூரி இரண்டு செட் ஆர்டர் செய்து விட்டு டேபிளில் அமர்ந்தார்கள். சாப்பிட்டு முடித்து விட்டு வெளியே வரும்வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வெளியில் வுந்ததும் சுதாகரன் ஆரம்பித்து கொண்டான்.

நான் பலமுறை உன்கிட்ட கேட்டுட்டேன் வசந்தா. இனியும் என்னால பொறுத்திருக்க முடியாது. குருபலன் வேற பிறந்துடுச்சாம். அப்பா அம்மா ஆரம்பிச்சுட்டாங்க...

என்னை என்ன பண்ணச் சொல்றீங்க? உங்க கூட ஓடிவரச் சொல்றீங்களா? அது முடியாது. என் அக்கா பாவம் சுதாகர். அப்புறம் அவளுக்கு காலம் பூராவும் கல்யாணமே நடக்காம போயிடும். இப்பவே அவளை நாங்க வீட்டுல வேலைக்காரி மாதிரி வச்சுட்டு இருக்கோம். உங்க கூட இப்பவே நான் ஓடி வந்துடலாம். ஓடிப்போன பெண் குடும்பத்துல பெண் எடுக்க யாரும் வரமாட்டார்கள். அக்காவுக்கு வயசு இருபத்தி ஆறு பிறந்தாச்சு. அவள் சாதகத்துலயும் குருபலன் வந்தாச்சு. இருபத்தி ஆறுல நிச்சயம் மேரேஷ் முடிஞ்சிடும்னு சோதிடர் சொல்லிட்டாரு. அதும் இனி பார்க்கிற முதல் ஜாதகமே அக்காவுக்கு பொருத்தமா ஆயிடுமாம். இத்தனை நாள் பொறுத்தவரு எனக்காக கொஞ்சம் நாள் ப்ளீஸ்ப்பா... என்றாள்.

இல்ல வசந்தா... உன்னை கட்டிக்க நான் எப்பவும் தயார் தான். வீட்டுல அம்மாவுக்கு முன்னை போல முடியறதில்லை. அப்பாவுக்கும் சர்க்கரை பிரஷர்னு வியாதிகள். எனக்கும் முப்பது ஆயிடிச்சு. எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு வசந்தா. நானும் மனுசன் தான். எப்போ நான் இந்த விசயத்தை கேட்டாலும் அக்கா அக்கான்னு அக்கா பாட்டே பாடுறே. அப்பா வாய்விட்டே கேட்டுட்டாருமம்மா... இந்த வாரத்துல நல்ல பதிலா சொல்றேன்னு சொல்லிட்டேன் என்றான்.

நீங்க பேசறதை பார்த்தால் உங்க அப்பாவுக்காக ஒரே வாரத்தில் ஒரு பெண்ணோட போய் நிற்கணும்ங்ற மாதிரி இருக்கே. நீங்க கேட்குறப்பா எல்லாம் நான் ஒரே மாதிரி சொல்றேன்னா எனக்கு என் அக்கா பெருசுதான். அவளோட திருமணத்தை கெடுத்துட்டு நான் நிம்மதியா இருக்கவோ, வாழவோ முடியாதுங்கறதுனாலதான். ஒரே பதிலை நீங்க கேட்குறப்ப எல்லாம் சொல்றேன். என்க்கு நீங்க வேணும் சுதாகர். அது என் மனசுல ஆழமா இருக்கு... என்று வசந்தாமணி பேசத் தொடங்கி விட்ட சமயம் சுதாகரன் திருப்பூர் பேருந்து வர ஓடிப்போய் ஏறிக்கொண்டான். வசந்தாமணிக்கு கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்து விட்டது.

ö சன்னிமலை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டவளுக்கு சுதாகரன் ஓடிப்போய் பேருந்து ஏறிகொண்ட காட்சியே திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தது. இனிமேல் தன்னிடம் பேசுவானோ? மாட்டானோ என்று பயமாய் இருந்தது. அவுன் இல்லாத வாழ்வை நினைக்கையில் அது வெறுமையாய் கண்களுக்கு முன் தெரிந்தது. இரவு உணவு தொண்டைக்கும் கீழ் இழங்க மறுத்தது. நடு இரவு வரை உறக்கம் வராமல் பாயில் கிடந்தாள். தூக்கம் வந்த போது வந்த கனவில் சுதாகரன் வெள்ளை வேட்டி சட்டையில் மாலையும் கழுத்துமாய் நின்றான். அருகில் நின்றிருந்த மணப்பெண்ணின் முகத்தை இவள் எவ்வளவோ உற்று பார்த்தும் அடையாளம் தெரியவில்லை.

அடுத்த நாள் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த வசந்தாமணிக்கு மதியம் போல தலைவலி ஆரம்பித்து விட்டது. மாலை நேரம் வரவர உடல் சூடாய் இருப்பதை உணர்ந்தாள். கண்களில் எரிச்சல் கூடி போயிருந்தது. பேருந்து நிறுத்தத்தில் சுதாகரனை காணாமல் டைபாய்டு ஜுரம் வந்தவள் போல, தான் பேருந்து ஏறி வீடு வந்து சேர்ந்தாள். வீட்டில் மாற்றம் தெரிந்தது. சித்தியும், சித்தப்பனும், அப்பாவும், அண்ணனும் இருந்தார்கள். அக்கா தீபாவளிக்கு புதிதாய் எடுத்திருந்த பிங்க் கலர் சேலை கட்டியிருந்தாள். அவள் முகம் பிரகாசமாய் இருந்தது. அக்காவை பெண் பார்த்துவிட்டு போயிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டாள். இவர்களின் முகப்பூரிப்பை வைத்து பார்த்தால் பெண் பார்க்க வந்தவர்கள் சம்மதம் சொல்லி விட்டு சென்று விட்டதை யூகித்து விட்டாள்.

சுதாகரனின் செல்போனுக்கு இந்த தகவலை உடனே சொல்லி விட வேண்டும் என்று மனது சந்தோஷ பாட்டு பாடியது. சமையல் கட்டு சென்று பஜ்ஜி கடித்துக்கொண்டே காபி குடித்தாள். அக்காவை பார்த்து கண் சிமிட்டினாள். அக்கா, போடி என்று செல்லமாக சிணுங்கினாள். வெட்கப்பட்டால் அக்கா அழகு தான் என்று நினைத்தாள் வசந்தா மணி.

மாப்பிள்ளை எந்த ஊர்? என்ன வேலையில இருக்காராம்? என்றாள். மாப்பிள்ளை ஊர் விசயமங்கலமாம். தங்கச்சியை சேலத்துல கட்டிகொடுத்து ரெண்டு வருஷம் ஆயிடிச்சாம்.

பேர் என்ன? என்ன வேலையின்னு கேட்டால் ஊர் உலகம் சுத்தறியேக்கா.

பேர் சுதாகரனாம். கொங்குகாலேஜில பியூனா இருக்காராம். சம்பளம் மாசம் எட்டாயிரமாம். சாதகத்துல எட்டு பொருத்தமும் கூடி வந்தது. சென்னிமலை ஈஸ்வரன் கோயில்ல சிம்பிளா கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க. என்று தேவிகா சொல்ல, காபிடம்ளரை தவற விட்டாள் வசந்தாமணி.

கோமு
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஒரு முறை தான் பூக்கும் Empty Re: ஒரு முறை தான் பூக்கும்

Post by பானுஷபானா Sat 16 Mar 2013 - 19:55

://:-: :”@:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum