சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை 5
by rammalar Today at 17:16

» பல்சுவை - 4
by rammalar Today at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர் Khan11

வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர்

3 posters

Go down

வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர் Empty வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர்

Post by *சம்ஸ் Thu 4 Apr 2013 - 8:13

வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர் 74d39c58-1fb6-4d5b-9e38-0f497cc5c194_S_secvpf
பூந்தமல்லி, ஏப். 4-

மாங்காடு அருகே உள்ள பரணிபுத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி கற்பகம் (63). வேலு (36), சங்கர் (34) என்ற 2 மகன்கள் உள்ளனர். கணவர் இறந்த பின்னர், கற்பகம் வீட்டு வேலைகளை பார்த்து குடும்பத்தை கவனித்து வந்தார்.

பரணிபுத்தூரில் அரை கிரவுண்டில் இவர்களுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை விற்று பணம் தருமாறு இளைய மகன் சங்கர், கற்பகத்திடம் கேட்டு வந்தார். ஆனால் அவர் இதற்கு சம்மதிக்கவில்லை.

கடந்த சில மாதங்களாக இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 2 நாட்களுக்கு முன்னர் சங்கர், தாய் கற்பகத்திடம், நான் சொல்கிறபடி கேட்காவிட்டால் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று எச்சரித்துள்ளார். பின்னர், கத்தியால் அவரை குத்துவதற்கும் முயற்சித்துள்ளார். அப்போது அதில் இருந்து கற்பகம் தப்பித்து விட்டார்.

வளசரவாக்கம் காந்தி நகர் 2-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீட்டு வேலைகளை செய்து வந்த கற்பகம் இதற்காக தினமும் அதிகாலை 5 மணிக்கே அங்கு சென்று விடுவார். வேலைகளை முடித்து விட்டு 6 மணிக்கு பின்னர் வீட்டுக்கு திரும்புவார்.

இன்று காலை வழக்கம் போல, கற்பகம் வளசரவாக்கம் குடியிருப்பில் வேலைகளை முடித்து விட்டு காந்தி நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சங்கர், கற்பகத்திடம் எப்போது வீட்டை விற்று பணம் தரப்போகிறாய் என்று கேட்டுள்ளார். இதற்கு அவர் சரியாக பதில் கூறாமல் சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரத்துடன் கற்பகத்தை பின் தொடர்ந்து சென்ற சங்கர் அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பெற்ற தாய் என்றும் பாராமல் கற்பகத்தை சரமாரியாக குத்தினார்.

இதில் வயிறு மற்றும் நெஞ்சு பகுதியில் கத்தி குத்து பட்டு ரத்தம் கொட்டியது. வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பலியானார்.

திட்டம் போட்டு துரத்தி வந்து இக்கொடூர கொலையை செய்த சங்கர் அப்பகுதியில் வீட்டு வாழைத்தோட்டம் ஒன்றில் கத்தியை வீசிவிட்டு தப்பினார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் வளசரவாக்கம் போலீசார் விரைந்து சென்று கற்பகத்தின் உடலை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளி சங்கர் வீசிச்சென்ற கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அதே பகுதியில் மறைவான இடத்தில் பதுங்கி இருந்த சங்கர் போலீசில் சிக்கினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர் Empty Re: வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர்

Post by தம்பி Thu 4 Apr 2013 - 8:23

அட சனியனே சொத்து பெருசா பெத்த தாய் பெருசா. நாடு கெட்டுப்போச்சி. இதற்கெல்லாம் சிதம்பரம் தான் காரணம்
தம்பி
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர் Empty Re: வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர்

Post by நண்பன் Thu 4 Apr 2013 - 8:46

பணத்திற்காக பெத்த தாயைக்கொலை செய்த பேயே நீயெல்லாம் ஒரு மனிதன்தானா (* (*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர் Empty Re: வளசரவாக்கத்தில் தாயை கொலை செய்த வாலிபர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum