சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

புதிய ஜாதி! Khan11

புதிய ஜாதி!

4 posters

Go down

புதிய ஜாதி! Empty புதிய ஜாதி!

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 11:59

வாழ்க்கையின் முக்கிய லட்சியத்தை நிறைவேற்றிவிட்ட மகிழ்ச்சியில், தன் இருக்கையில் போய் உட்கார்ந்தான் சேது.

""ஐயா வணக்கமுங்க... எம்பேர் குருசாமி. நான் தான் தலையாரி,'' என்றார், 55 வயது மதிக்கத்தக்க நபர்.

""அண்ணே... என்னய ஐயான்னெல்லாம் கூப்பிடாதீங்க. ஆபீஸ்ல இருக்கும் போது சார்ன்னு கூப்பிடுங்க, மற்ற நேரங்கள்ல, தம்பின்னே கூப்பிடுங்க, என்னய வயசானவனாக்கிடாதீங்க,'' என்றான் சேது.

குருசாமியின் முகத்தில், ஒரு அதிர்ச்சி பரவி மறைந்ததையும் பார்த்தான். வி.ஏ.ஓ.,தேர்வு எழுதி, அதில், நல்ல மதிப்பெண் பெற்று, தேர்வாகி, இன்று வி.ஏ.ஓ., இருக்கையிலும் அமர்ந்து விட்ட சந்தோஷம், மனம் முழுவதும் நிறைந்திருந்தது.

""அண்ணே... டீ சாப்பிடுவோமா; நல்ல டீயா கிடைக்குமா,'' என்றான் தலையாரியை பார்த்து.

""இந்தா வாங்கிட்டு வர்றேன்,'' என்று, வேகமாக புறப்பட்டார் குருசாமி. ""அண்ணே... இந்தாங்க காசு, ரெண்டு பேருக்கும் டீ வாங்கிட்டு வாங்க,'' என்றான்.

""வேணாம் ஐயா... தம்பி சார், கடையில சொல்லி வாங்கிட்டு வர்றேன். நமக்கு அங்க ப்ரீ தான்,'' என்றார் குருசாமி.

""அண்ணே... இந்த வேலையே வேணாம். காசு குடுத்து வாங்குறதுன்னா வாங்குங்க, இல்லாட்டி டீயே வேண்டாம்,'' என்றான் சேது சற்று கடுமையாக.

காசை வாங்கிக் கொண்டு டீ வாங்கி வந்தார் குருசாமி. அடுத்தடுத்து, பலர் வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் என்று, வரிசையாக வர, ஆவணங்களை பார்த்து, கையெழுத்து போட்டு கொடுத்தான்.

ஒரு சிலர் பணம் கொடுக்க, ""அரசாங்கம் இதுக்குத்தான் எங்களுக்கு சம்பளம் கொடுக்குது, பணம் கொடுத்து எங்களை கெடுத்துடாதீங்க,'' என்று சொல்லி மறுத்தான். குருசாமிக்கு என்னவோ போல் இருந்தது. இவ்வளவு நாள் இருந்த வி.ஏ.ஓ., சளைக்காமல் பணம் வாங்குவார். இருப்பவர், இல்லாதவர் என்ற பேதம் எல்லாம் கிடையாது, பணம் கொடுத்தால் தான் கையெழுத்து கிடைக்கும். ஆனால் சேதுவோ, எதற்கும் பணம் வாங்கவில்லை.

தன் பிழைப்பு கெட்டு விடுமோ, இன்று மாலை குவார்ட்டருக்கு கூட தேறாது போல் இருக்கே என்று கவலைப்பட்டார் குருசாமி.

சற்று நேரத்தில், பார்ச்சூனர் கார் வேகமாக வந்து நின்றது. உடனே குருசாமி எழுந்து, ""சார்... ஒன்றியம் வர்றாரு,'' என்றார்.

கரைவேட்டி, கையாட்கள் சகிதம், சினிமா பாணியில், ஐந்து அடி உயரத்தில் ஒருவர் வேகமாக உள்ளே வந்தார்.

""வணக்கம் தம்பி, குருசாமி சொல்லியிருக்குமே... நான் தான், இந்த ஒன்றிய செயலர், நீங்க புதுசா வந்திருக்கீங்கன்னு சொன்னாங்க, அப்படியே பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன்,'' என்றார்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

புதிய ஜாதி! Empty Re: புதிய ஜாதி!

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 11:59

""வாங்க சார்... டீ சாப்பிடுங்க,'' என்றான் சேது.

""இல்ல தம்பி... வேணாம். இந்த மாச கடைசில தலைவர் பிறந்த நாள் வருது, அது விஷயமா உங்களை பார்த்துட்டு போகத்தான் வந்தேன். மாரணி வி.ஏ.ஓ., கிட்ட, பத்தாயிரம் ரூபாய் வாங்கிட்டோம். நீங்க புதுசு, இன்னும் சம்பாதிக்க ஆரம்பிச்சுருக்க மாட்டீங்க, அதனால, ஐயாயிரம் ரூபா கொடுங்க போதும்,'' என்றார்.

அதிர்ந்து போன சேது, ""இல்லங்க, நான் காசு வாங்கறதா இல்ல. உங்களுக்கும் என்னால பணம் தர முடியாது,'' என்றான் நிர்தாட்சண்யமாக. இந்த பதிலை ஒன்றியமும் எதிர்பார்க்கவில்லை, குருசாமியும் எதிர்பார்க்கவில்லை. இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் உருவாகும் நிலை ஏற்பட்டது. படக்கென்று குறுக்கே புகுந்தார் குருசாமி.

""அண்ணே... நீங்க போயிட்டு வாங்க... சார் கிட்ட நான் பேசி சரி செய்றேன்,'' என்றார்.

""சொல்லிவய்யி குருசாமி... இல்லாட்டா, தண்ணியில்லா காட்டுக்குத்தான் போகணும்,'' என்று, மிரட்டலாய் கூறிவிட்டு கோபத்தோடு சென்றான், ஒன்றியம்.

""என்ன சார்... இவங்க கிட்ட போய் மோதிட்டு, கேட்ட காச குடுத்துட்டு, அதுக்கு மேல சேத்து நாம சம்பாதிக்கிறத விட்டுட்டு, கெட்ட பேர் வாங்கிக்கறீங்களே சார்? இப்பெல்லாம் காசு வாங்காதவன் யாரு சார்,'' என்றார் குருசாமி.

ஒன்றியம் உடனே தாசில்தாரிடம் பேசியிருப்பார் போல, தாசில்தார் போனில் வந்தார்...

""என்ன தம்பி... ஒன்றியத்துகிட்ட சண்டை போட்டீங்களா? கேட்ட காச கொடுத்துட்டு, கூடுதலா சம்பாதிச்சுட்டு போங்க தம்பி. உத்தமனா இருந்தா, உங்களுக்கு சிலையா வைக்க போறாங்க. வற்புறுத்தி வாங்க வேணாம். தானா குடுக்கறத ஏன் வேண்டாம்ங்கறீங்க; யோசிங்க...

""அடுத்த வாரம் அமைச்சர் குழு வர்றாங்க. அவங்களுக்கு சாப்பாட்டுல இருந்து, தங்கும் இடம் வரைக்கும் நான்தான் பார்க்கணும், என் சம்பளத்துல இருந்தா செலவழிக்க முடியும். உங்கள மாதிரி, வி.ஏ.ஓ.,க்கள் கிட்ட வாங்கித்தான் செலவழிப்பேன். அதுக்கும் நீங்க ஒரு, ஐயாயிரம் தரணும். ரெடி செய்துக்கங்க,'' என்றார்.

அடுத்தடுத்து இதே போன்ற பல தொந்தரவுகள் வர, வேலைக்குசேர்ந்த ஒரு வாரத்திலேயே வெறுத்துப் போனது சேதுவுக்கு.

கிராம முன்சீப் ஆக இருந்த அவனது தாத்தாதான், அந்த காலத்தில், எல்லாருக்கும் சான்றிதழ் தருவார். கிராமத்திலிருந்து வரும் ஒவ்வொருவரையும் பேர் சொல்லி அழைத்து, அவர்கள் குடும்பம் முழுவதையும் அறிந்து வைத்திருப்பார். கையெழுத்தையும் போட்டுக் கொடுத்து, செலவுக்கும் காசு கொடுத்து அனுப்புவார். அப்போது முதலே, அந்த கையெழுத்து போடும் பதவி மீது சேதுவுக்கு மோகம். அதையே லட்சியமாக கொண்டு படித்தான். உடன் படித்தவர்கள் எல்லாம், ஐ.டி., செக்டார் போய் விட, இவன் மட்டும், இந்த பதவியே கதி என்று படித்து, இன்று வேலையிலும் சேர்ந்து விட்டான்.

ஆனால், எதிர்பாராத தொல்லைகள் வர தொடங்கியதும், வெறுத்துப் போனது. "தவறு செய்து விட்டோமோ, பேசாமல் நாமும் ஐ.டி., செக்டாரில் படித்திருக்கலாமோ...' என்று தோன்றியது. தன் மீதே கோபம் வந்தது.

அடுத்து, ஆர்.ஐ.,யிடம் போனில், "சார் எனக்கு உடம்பு சரியில்ல, ஒருவாரம் லீவு...' என்று சொல்லிவிட்டு, சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றான். காலையில், வயலில் இருந்த லட்சுமணனிடம் வந்து, ""ஐயா, சேது தம்பி வந்துருக்கு போல,'' என்றான் பேச்சிமுத்து.

""நாந்தான் காலைல, 6:00 மணிக்கே வயக்காட்டுக்கு வந்துட்டனே... சரி வீட்டுக்குப் போறேன்,'' என்று கூறிவிட்டு, வீட்டுக்கு புறப்பட்டார் லட்சுமணன்.

வீட்டு வாசலில் சேது உட்கார்ந்திருந்தான். ""என்ன தம்பி... டல்லா இருக்க... உடம்பு சரியில்லயா?'' என்று வாஞ்சையுடன் கேட்டார்.

""ஆமாப்பா...'' என்றான் சேது. ஆனால், அது உண்மை இல்லை என்று புரிந்து கொண்டார் லட்சுமணன்.

""சரி குளிச்சிட்டு சாப்பிடு, நான் வயலுக்கு போயிட்டு வர்றேன்,'' என்று சொல்லி லட்சுமணன் புறப்பட்டார். நேராக அவர் சென்ற இடம் சுந்தரம் வீடு.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

புதிய ஜாதி! Empty Re: புதிய ஜாதி!

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 11:59

அந்த கிராமத்தை பொறுத்தவரை, சுந்தரம் தான் கல்விக்கடவுள். 25 ஆண்டுகளுக்கு முன், சாதாரண ஆசிரியராக கிராமத்திற்கு வேலைக்கு வந்தவர், இங்கேயே செட்டிலாகி விட்டார். கிராமத்திலுள்ள, ஒவ்வொரு குடும்பமும் அத்துபடி, டில்லி செகரெட்டேரியட் தொடங்கி, உள்ளூர் ரேஷன் கடை வரை, சுந்தரத்தின் உதவியால் தான், இந்த கிராமத்து இளைஞர்கள் கோலோச்சி வருகின்றனர். எந்த தேர்வு எப்போது நடக்கிறது, யாரால் இந்த தேர்வை வெற்றிகரமாக எழுத முடியும். எப்படி கேள்வி இருக்கும் என, அனைத்தும் சுந்தரத்துக்கு அத்துபடி. கிராமத்திலுள்ள இளைஞர்களில், யாருக்கு எது ஏற்றது என்று, அவரே முடிவு செய்து விண்ணப்பித்து, படிக்க வைத்து வேலைக்கு அனுப்பி வைப்பார். கிராமத்து இளைஞர்களுக்கு எல்லாம், சுந்தரம் கடவுள் மாதிரி. அப்பா - அம்மா சொல்வதை கேட்காதவர்கள் கூட, சுந்தரம் சொன்னால் கேட்பர். அந்த அளவுக்கு சுந்தரத்தின் சொல்லுக்கு மதிப்பு அதிகம். மகனும், மகளும், வேலை, திருமணம் என்று சென்னைக்கும், டில்லிக்கும் சென்ற பின்னரும், கிராமத்தை விட்டு போகாமல், இங்கேயே இருக்கிறார் சுந்தரம்.

சிறுவயது முதல், சுந்தரத்துடன் நெருங்கி பழகியவர் லட்சுமணன். வாடா, போடா என்று பேசும் அளவிற்கு நட்பு. வாசலில் பேப்பரும், காபியுமாக இருந்த சுந்தரம், லட்சுமணனை பார்த்து...

""வாய்யா... வி.ஏ.ஓ., அப்பா... என்னய்யா காலைலயே எங்க வீட்டுப்பக்கம்,'' என்று கேட்டு, ""கோதை... லட்சுமணன் வந்திருக்கான். அவனுக்கும் சேர்த்து காபி கொண்டு வா,'' என்றார்.

சற்று நேரத்தில், காபியுடன் வந்த கோதை, ""வாங்கண்ணே... சேது எப்படி இருக்கான்?'' என்றாள்.

""அது சம்பந்தம்மா தான், உங்கிட்ட பேச வந்தேன் சுந்தா. என்னன்னு தெரியல, திடீர்ன்னு சேது வந்து நிக்கிறான். வேலைல என்னமோ பிரச்னைன்னு நினைக்கிறேன். நீ தான் அவனுக்கு புத்தி சொல்லணும். வேலை பிடிக்கலைன்னா, ராஜினாமா செய்திட்டு வரச் சொல்லு. வேற வேலை பார்த்துக்கலாம். எனக்கு இருக்கற சொத்துக்கள பராமரிச்சாலே போதும். ஆனா, அவன் தான் வேலைக்கி போவேன்னு ஒத்தக் கால்ல நின்னு போனான். இப்ப பார்த்தா, வருத்தமா வந்து நிக்கறான்,'' என்றார்.

""சரி நீ போ... நான் பார்த்துக்கறேன்,'' என்றார் சுந்தரம்.

அதே போன்று, சற்று நேரத்தில், தொங்கிய முகத்துடன் வந்தான் சேது.

""வாப்பா சேது, எப்படி இருக்க... கோதை, சேது வந்திருக்கான், காபி கொண்டு வா.''

""சார்... நான் இந்த வேலைக்கு லாயக்கு இல்லையோன்னு தோணுது சார்,'' என்றான் சேது.

""ஏண்டா... என்ன பிரச்னை?''

""நான் லஞ்சம் வாங்காம வேலை பார்க்கணும்ன்னு நினைக்கிறேன், ஆனா, முடியாது போலருக்கு.

""அரசியல்வாதி, அதிகாரின்னு, ஆளாளுக்கு காசு கேக்கறாங்க; பயமா இருக்கு, நானும் கை நீட்ட ஆரம்பிச்சுடுவேனோன்னு,'' என்றான். உண்மையான பயத்துடன். மோவாய்க்கட்டையை தேய்த்து, சில நிமிடம் யோசித்தார் சுந்தரம். அடுத்து சேதுவிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

""ஆமா... சேது, இப்ப எவ்வளவு சம்பளம் வாங்குற?''

""எல்லா பிடித்தமும் போக, 14 ஆயிரம் வாங்கறேன் சார்.''

""இதுல உனக்கு எவ்வளவு செலவு வரும்.''

""அறை வாடகை, சாப்பாடு சேத்து, ஆறாயிரம் கிட்ட வரும்.

""எல்லாம் சேத்து, ஒன்பது ஆயிரம்ன்னு கூட வச்சுக்கோ, ஐயாயிரம் ரூபா மீதி தானே.''

""ஆமாம் சார்.''

""இதை வீட்டுக்கு அனுப்ப போறயா?''

""ஆமாம் சார்.''

""இப்ப நான் சொல்றத கேளு. நீ வீட்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம். நானும், லட்சுமணனும், நீ பணம் அனுப்பணும்ன்னு எதிர்பார்க்கலங்கறது உனக்கும் தெரியும்.''

"சார் என்ன சொல்ல வருகிறார்?' என்று புரியாமல், அவரை பார்த்தான், சேது.

""சேது, இன்னிக்கு எத்தன ஜாதி இருக்குன்னு உனக்கு நல்லா தெரியும். ஆனா, இந்த ஜாதிகள் எப்படி உருவாச்சுன்னு எத்தனை பேருக்கு தெரியும். அவரவர் பார்க்குற தொழில் அடிப்படைல தான் ஜாதிகள் உருவாச்சு. அரசர்கள் சத்ரியர்கள், படைவீரர்கள் சேனையர், கோவிலில் பூஜை செய்பவர் அந்தணர், படைக்கலன்களை உருவாக்குபவர் ஆசாரி, உழவடை செய்பவர், உழவன் என்று, நாலைந்து வர்ணங்கள் தான் இருந்தன.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

புதிய ஜாதி! Empty Re: புதிய ஜாதி!

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 12:00

""படிப்படியா அவற்றிலும் பிரிவுகள் உருவாகி, இன்னிக்கி ஜாதி அரக்கன், நம்ப எல்லாரையும் பாடா படுத்திட்டு இருக்கான்.

""அத விடு... இந்த ஜாதி உருவாக்கம் எல்லாத்துக்கும் அடிப்படை, நாம் செய்ற தொழிலும், செயல்பாடுகளும் தான். அதுக்காகத்தான் இத சொன்னேன்.

""இப்ப நீ இருக்கறது, ஒரு சிக்கலான சூழ்நிலை. இத சமாளிச்சுடலாம். காசு தர முடியாதுன்னு நீ சொன்னதுல, லேசா அசைஞ்சு குடு. ஐயாயிரம் கேட்ட இடத்துல, இரண்டாயிரம் கொடு. ஆனா, லஞ்சம் வாங்கி கொடுக்க வேண்டாம். சம்பள பணத்துல இருந்து குடு. கொடுக்கும் போது, இது, நான் லஞ்ச காசுல இருந்து கொடுக்கல. என் சம்பளத்தில இருந்து கொடுக்கறேன். என்ன நடந்தாலும், நான் காசு வாங்கறதா இல்லன்னு சொல்லு. ஒன்றியமாகட்டும், தாசில்தாராகட்டும், இதே போல குடு.

""அவங்களால என்ன செய்ய முடியும்... வேணா, ஒன்னய டிரான்ஸ்பர் செய்வாங்க; செய்யட்டுமே.

""எங்கயானா என்ன? நீ பேச்சுலர்... உனக்கு கல்யாணம் செய்றதுக்கு இன்னும், ஒரு வருடமாவது ஆகும்.

""அதுக்கப்புறம் குழந்தை பிறக்க ஒரு வருடம். அந்த குழந்தை பள்ளிக்கூடத்துல சேரும் வயது வரதுக்கு மேற்கொண்டு மூன்று ஆண்டு. ஆக மொத்தம், ஐந்து ஆண்டு உன்னய எங்க வேணாலும் மாத்தட்டும்.

""அதுக்கப்புறம், அவங்களால மாத்த முடியாது. ஏன்னா, எங்க மாத்தினாலும், இவன் இப்படித்தான்னு முடிவு செய்து, ஏதாச்சும் ஒரு இடத்துல உன்னய இருக்க விட்டுடுவாங்க.

""நீ இப்படி செய்யுறத, உன்னய மாதிரியே வேலைல சேர்ந்த இன்னும் ரெண்டு மூன்று பேரு பாப்பாங்க... ஏன், நாமளும் இப்படி செஞ்சா என்னன்னு தோணும். இரண்டு நாலாகும், நான்கு எட்டாகும், இப்படி, இந்த எண்ணிக்கை கூடிக்கிட்டே போகும். ஏன்னா, உங்கள்ல பலரும் படிப்பு மூலம் தான் வேலைக்கு வந்திருக்கீங்க. அதனால, யாருமே பணம் சம்பாதிக்கறத நோக்கமா வச்சிருக்க வாய்ப்பில்லை. பதினைந்து சதவீதம் பேர் நேர்மையா இருந்தா போதும், இதுவே, ஒரு பெரிய இயக்கமா மாறும்.

""லஞ்சம் வாங்காதவங்கங்கற புதிய ஜாதிக்கான தொடக்கம் உன்கிட்ட இருந்து ஆரம்பிக்கட்டும். நாளைக்கு நீங்க தான், ஆர்.ஐ.,யா, தாசில்தாரா, ஆர்.டி.ஓ., - டி.ஆர்.ஓ., கலெக்டர்ன்னு முன்னேற போறீங்க. அதுக்கான திறமையும் உங்க கிட்ட இருக்கு.

""பயப்படாத, சைக்கிள் கத்துக்கும்போது, காயம் படாமலயா கத்துக்கறோம். அது போலத்தான் இதுவும். தைரியமா வேலைக்கு போ... என்ன நடந்தாலும் லஞ்சம் வாங்கறதில்லங்கறதுல உறுதியா இரு. உன்னப்போல பலர் உருவாகுவாங்க. உன் மூலமா, லஞ்சம் வாங்காதவங்கங்கற, ஒரு புதிய ஜாதி உருவாகும்,'' என்று முடித்தார்.

புத்துணர்வுடன் வீட்டுக்குசென்ற சேது, உடனே ஆர்.ஐ.,க்கு போன் செய்தான்... ""சார்... எனக்கு உடம்பு சரியாகிடுச்சு, நான் நாளைக்கு வந்துடுவேன்,'' என்றான்.

ஒன்றியத்தின் நம்பரை வாங்கி பேசினான், ""அண்ணே நீங்க கேட்டபடி, ஐயாயிரம் முடியாது. என் சம்பளக் காசுல இருந்து, இரண்டாயிரம் கொடுத்துடறேன். நாளைக்கு காலைல குருசாமிகிட்ட பணம் இருக்கும். வாங்கிக்கங்க,'' என்றான்.

எதிர்முனையில் ஒன்றியத்தின் முகம் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தான். சிரிப்பு வந்தது.

அடுத்து தாசில்தார், ""சார்... நீங்க கேட்டபடி, ஐயாயிரத்துக்கு பதில், என் சம்பள காசில் இருந்து பணம் தர்றேன். இரண்டாயிம் ரூபாய் வாங்கிக்கங்க,'' என்று சொல்லி, இணைப்பை துண்டித்தான்.

நாளைய சமுதாயம் நல்லபடியாக மாறும் என்ற நம்பிக்கையுடன், நடக்க தொடங்கினான் சேது.

கே. ஸ்ரீவித்யா

Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

புதிய ஜாதி! Empty Re: புதிய ஜாதி!

Post by பானுஷபானா Sat 6 Apr 2013 - 13:37

அங்கே படித்து விட்டேன் பகிர்வுக்கு நன்றி முஹம்மத்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

புதிய ஜாதி! Empty Re: புதிய ஜாதி!

Post by நண்பன் Sat 6 Apr 2013 - 14:13

பானுகமால் wrote:அங்கே படித்து விட்டேன் பகிர்வுக்கு நன்றி முஹம்மத்
(*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புதிய ஜாதி! Empty Re: புதிய ஜாதி!

Post by பானுஷபானா Sat 6 Apr 2013 - 14:18

நண்பன் wrote:
பானுகமால் wrote:அங்கே படித்து விட்டேன் பகிர்வுக்கு நன்றி முஹம்மத்
(*

ஏன் :!#:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

புதிய ஜாதி! Empty Re: புதிய ஜாதி!

Post by rammalar Sat 6 Apr 2013 - 14:32

நல்ல படிப்பினை கதை...!
-
புதிய ஜாதி! 800522
-
நடந்த கதை ஒன்று (பகிர்தலுக்காக)
-
ஒரு மாவட்ட அளவிலான அதிகாரி..
லஞ்சம் வாங்காதவர்..
அவர் முகாம் வரும்போது தங்கும் விடுதி வாடகையை
கூட அவரேதான் கொடுப்பார்...
-
அப்போது 'பாரின் கிளாத்' மோகம் இருந்த காலம்...
ஒரு செட் பேண்ட், ஷர்ட் துணிகளை வாங்கி
கொடுக்க சொன்னார் அந்த அதிகாரி...
-
தாசில்தாரின் பணியாளர்கள் வாங்கி வந்தனர். அப்போதைய
அதன் விலை ஐநூறு ரூபாய்...
-
அதிகாரி அதற்கான பணத்தை கொடுத்து விடுவார்
என்பதால், அவருக்கு நல்லது செய்யும் ஆசையில்,
அவரிடம் அதன் விலை ரூ 200 என்று
சொல்லுங்கள் எனப் பணித்தார் தாசில்தார்.
-
அதிகாரி குறைந்த விலையில் நிறைந்த தரமான
துணியாக இருக்கிறதே என்று எண்ணி, சொந்த
பந்தங்களை மனதிற்குள் எண்ணிக்கை செய்து
எனக்கு மேலும் 10 செட் வாங்கி கொடுங்கள்...ஊருக்கு
போகும்போது உறவினர்ளுக்கு கொடுக்கிறேன் என்று
சொல்லி ரூபாய் இரண்டாயிரதை அப்போதே
கொடுத்து விட்டார்...அந்த அப்பாவியான அதிகாரி.
-
பொய் சொன்னதற்கு தண்டம் அழுதார் தாசில்தார்...!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

புதிய ஜாதி! Empty Re: புதிய ஜாதி!

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 14:44

rammalar wrote:நல்ல படிப்பினை கதை...!
-
புதிய ஜாதி! 800522
-
நடந்த கதை ஒன்று (பகிர்தலுக்காக)
-
ஒரு மாவட்ட அளவிலான அதிகாரி..
லஞ்சம் வாங்காதவர்..
அவர் முகாம் வரும்போது தங்கும் விடுதி வாடகையை
கூட அவரேதான் கொடுப்பார்...
-
அப்போது 'பாரின் கிளாத்' மோகம் இருந்த காலம்...
ஒரு செட் பேண்ட், ஷர்ட் துணிகளை வாங்கி
கொடுக்க சொன்னார் அந்த அதிகாரி...
-
தாசில்தாரின் பணியாளர்கள் வாங்கி வந்தனர். அப்போதைய
அதன் விலை ஐநூறு ரூபாய்...
-
அதிகாரி அதற்கான பணத்தை கொடுத்து விடுவார்
என்பதால், அவருக்கு நல்லது செய்யும் ஆசையில்,
அவரிடம் அதன் விலை ரூ 200 என்று
சொல்லுங்கள் எனப் பணித்தார் தாசில்தார்.
-
அதிகாரி குறைந்த விலையில் நிறைந்த தரமான
துணியாக இருக்கிறதே என்று எண்ணி, சொந்த
பந்தங்களை மனதிற்குள் எண்ணிக்கை செய்து
எனக்கு மேலும் 10 செட் வாங்கி கொடுங்கள்...ஊருக்கு
போகும்போது உறவினர்ளுக்கு கொடுக்கிறேன் என்று
சொல்லி ரூபாய் இரண்டாயிரதை அப்போதே
கொடுத்து விட்டார்...அந்த அப்பாவியான அதிகாரி.
-
பொய் சொன்னதற்கு தண்டம் அழுதார் தாசில்தார்...!

புரியல ராம் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

புதிய ஜாதி! Empty Re: புதிய ஜாதி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum