சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

குடல் புண்  Khan11

குடல் புண்

3 posters

Go down

குடல் புண்  Empty குடல் புண்

Post by *சம்ஸ் Thu 18 Apr 2013 - 18:47

குடல் புண்  Images?q=tbn:ANd9GcRkNIdhnhfRHeqJSIzAvxhF6O9PwnsvPs8OkEnjv6fKxqcQUxrh
குடல் புண் பற்றி தெரிந்து கொள்வோம். (அல்சர்)
வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடி க்க வேண்டும் என்ற உணர்வும் தோன்று கிறதா? நெஞ்செரிச்சல் உள் ளதா? வயிற் றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக் களிக்கிறதா? இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களு க்கு குடல் புண் இருக்கலாம்.
குடல் புண் என்றால் என்ன?
இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரி மான பகுதியின் உட்புறத்தில் மேற் பகுதி யில் ஏற்படும் புண்ணை குடல் புண் என் கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாம லும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டு. இதை அமில குடல் புண்நோய் என்றும் அழைக்கிறோம்.
புண் எதனால் ஏற்படுகிறது?
குடல் புண் தோன்றுவதற்கரிய காரணங்கள் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை இரு ப்பினும் புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மரு ந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன. சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காய ங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் போன்ற மருந்துகளி ன் காரணமாகவும் குடல் புண் வருகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குடல் புண்  Empty Re: குடல் புண்

Post by *சம்ஸ் Thu 18 Apr 2013 - 18:51

குடல் புண்  Images?q=tbn:ANd9GcSP2lSj2pyx12d_pdXXJX2HY6B5hy4ubqJzN9KoxN2fsfy7hvWhnw

குடல் புண் வகைகள்

குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்க லாம்.
1) வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண் .
2) சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.
குடற்புண் இருப்பதை அறிவது எப்படி?
காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல் லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற் றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்ப தாகக் கொள்ளலாம்.
இந்தப் பகுதியில் ஏற்படும் அசெளகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்ற ன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மரு ந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவ ர்த்தி செய்யலாம். சில நேரங்களில் வாந்தியி னால் வலி குறை கிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்கமாக வலி ஏற்படும். இவ் வலியானது காலை சிற்று ண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிக மாகக் காணப் படுகிறது.

குடல் புண்  Images?q=tbn:ANd9GcQR3lh3vc-2u74o6_meJHTcMjsup-s2N9CsnW7GYtksmCF3hUUsDA
சில நேரங்களில் அமில நீரானது வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதை யே நெஞ்செரிச்சல் என்கிறோம், வலி அதிகம் ஏற்படு வதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு, அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும். இந்த மாதிரி யான அசெளகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம்.
ஒருநபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார். என்பதைப் பொறு த்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும். சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலு ம் இருக்கலாம்.
சிலருக்கு இவ்வலி, குறிப்பிட்ட இடைவெளிவிட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள் பட்ட குடல் புண் இருப்பதாகக் கருத லாம். அடிக்கடி வரக்கூடிய பசி உணர் வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது . ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம்.
குடல் புண்  Images?q=tbn:ANd9GcRTUOuGmrkXTBAroMELQqayAAsUv2cNKK-VL-xbdIx67US6dTju
குடல் புண்  Images?q=tbn:ANd9GcQsRHFlI96D0jLZ_w7g2cRrJB7x4vwVJQ3w1qKLvwaGFiWeNSNRHA


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குடல் புண்  Empty Re: குடல் புண்

Post by *சம்ஸ் Thu 18 Apr 2013 - 18:53

குடல் புண்  Images?q=tbn:ANd9GcRzIIQiEtqd7Bkr3WswgrdVXATB0HbEycC46WL5Egd3tentyR7V
மருத்துவம் செய்யாவிட்டால்…
குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யாவிட்டல், ரத்தக் கசிவும் சமய த்தில் உதரப் போக்கும் ஏற்படும். ரத்தக் கசிவின் காரணமாக, அரை த்த காபிக் கொட்டை போன்று கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார், வலி நிவாரணியான ஆஸ்பரின் போன்றவற்றை சாப்பிட் டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும். அதிகமான ரத்தப் போக்கோ அல்லது ரத்தக் கசிவோ மிகவும் அபாயகரமானதாகும்.
இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக் கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடி வயி ற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்க ளால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புக்கள் அனைத்தும் நனைந்து விடு கின்றன.ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக் கப்படுகிறது. அதனால், வயிற்று அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதை உடனடி அறுவைச் சிகிச்சை மூலமே குணப் படு த்த முடியும்.
சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற் படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. இதுவும் அறுவைச் சிகிச்சையால்தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற் புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்..
குடல் புண்  Images?q=tbn:ANd9GcQQHo3fjuWPCfuwaoOvEBG5WucQRJa1Oe0hj6bU71g8lLCVgtCegw
செய்யக்கூடாதவை
1. புகைபிடிக்கக் கூடாது.
2. மது, காபி பானங்களை குடிக்கக் கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது.
3. அதிகமாகச் சாப்பிடக்கூடாது.
4. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.
5. சாப்பிட வேண்டிய உணவுகளைத் தவிர்க்கக் கூடாது.
6. சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
7. இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது.
8. மனநிலையை தடுமாற விடக் கூடாது.
9. அவசரப்படக் கூடாது.
10. கவலைப்படக் கூடாது.
11. மருத்துவ ஆலோசனைகளை அலட்சி யப் படுத்தக் கூடாது.
குடல் புண்  Images?q=tbn:ANd9GcSecuzcCLB1QOB8YX8aA6oBUl8sxuZV8Ez-A0EoTl-JAfkG1urM
செய்ய வேண்டியவை
1. குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும்
2. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
3. அதிக வாழைப் பழங்களைச் சாப்பிட வேண்டும்.
4. தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவை யூட்டிய லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
5. மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச் சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.
6. இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும்.
7. இருக்கமாக உடை அணியக் கூடாது.

8. மருத்துவரின் ஆலோசனைப்படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்திக் கொள்ளலாம்.
9. யோகாசனம், தியானம் முதலிய வற்றைப் பயில வேண்டும்.
10. எப்போதும் ஜாலியா இருக்க வேண்டும்
11. அலுவலக வேலைகளை அங்கே யே விட்டுவிட வேண்டும்.
12. முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும்.
13. சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதைத் தவிர்க்க வேண் டும்.
குடல் புண்ணுக்கு மருத்துவம் என்ன?
அனேக மருத்துவர்கள் பூரண ஓய்வையும் அதிகமான தூக்கத்தை யும்சிபரிசு செய்கிறார்கள். தீவிரமான வேலைகளில் இரு ந்து இர ண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது. எதிர்பார்ப்புக ளை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், கவ லைகள் குடல் புண்ணை அதிக ப்படுத்தும், புகை பிடித்தல், புகை யிலையைச் சுவைத்தல், மது முதலியவற்றை விட வேண்டும். அமிலத்தை நடுநிலையாக்கும் மருந்துகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். தூக்க மருந்துகளையும் தேவைப் பட்டால் மன அமைதி தரும் மருந்துகளையும் சாப்பிட வேண்டும். இவை தவிர, தற்காலத்தில் புரோபான்தளின், சிமிடிடின், ராணிடிடின், •பாமாடிடின், சுரால் பேட், முதலியவும் பயன்படுகிறது, சிமிடிடின்தான் அதிகம் சிபரிசு செய்யப்படுகிறது. எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சாப்பிட வேண்டும்.
குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்ன?பொரித்த அல் லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண் களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகை களைக் கீழே காண லாம்.
சத்தான சரிவிகித உணவு.
1. குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.

2. காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண் டும்.
3. டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. இருப்பினும் பால் கலக்காத டீயைச் சாப்பிடக் கூடாது. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்தக் கொள்ள வேண்டும்.
4. வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.
5. மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.

6. பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.
7. பச்சைத் தண்ணீரை அதிகம் குடி க்க வேண்டும். வலியோ அல்லது அசெளக ரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமில மானது நீர்த்துப் போய் விடுகிறது.
8. பால் சாப்பிடுவதை யாரும் சிபரிசு செய்வதில்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குடல் புண்  Empty Re: குடல் புண்

Post by ஜனநாயகன் Fri 19 Apr 2013 - 17:04

நொம்ப நல்ல பதிவுண்ணே.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

குடல் புண்  Empty Re: குடல் புண்

Post by *சம்ஸ் Sat 20 Apr 2013 - 8:13

ஜனநாயகன் wrote:நொம்ப நல்ல பதிவுண்ணே.
நன்றி தம்பி :]


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குடல் புண்  Empty Re: குடல் புண்

Post by விஜய் Sat 20 Apr 2013 - 16:27

பயனுள்ள தகவல் அண்ணா பதிவுக்கு நன்றி
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

குடல் புண்  Empty Re: குடல் புண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum