சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 20:30

» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

பங்களாதேசில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்;  22 பேர் பலி Khan11

பங்களாதேசில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்; 22 பேர் பலி

2 posters

Go down

பங்களாதேசில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்;  22 பேர் பலி Empty பங்களாதேசில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்; 22 பேர் பலி

Post by நண்பன் Tue 7 May 2013 - 9:34

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும்பொலிஸாருக்கும் இடையில் மோதல்;: 22 பேர் பலி
இஸ்லாமிய கொள்கையை கடைபிடிக்க அரசுக்கு அழுத்தம்
பங்களாதேஷில் இஸ்லாமிய ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தலைநகர் டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலவரத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டதோடு ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தினர். ஹபாஸத் இ இஸ்லாம் அமைப்பி னாலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை கலவரமாக மாறிய ஆர்ப்பாட்டம் நேற்று திங்கட்கிழமையும் நகரின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நீடித்தது.

இஸ்லாமிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்லாமிய ஆதரவாளர்கள் தலைநகரில் கூடினர். இதன் போது பல கடைகள் மற்றும் வாகனங்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீமூட்டினர்.

டாக்கா நகரின் வர்த்தக பகுதியான மொதிஸ்ஹிலாலை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கிரமித்தனர். எனினும் இந்த பகுதி முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக பொலிஸார் திங்கட்கிழமை காலை அறிவித்தனர். அங்கு மறைந்திருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை தேடி கட்டடங்களில் சோதனைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

டாக்கா மத்தியில் இருக்கும் மிகப்பெரிய பள்ளிவாசலை ஒட்டி இடம்பெற்ற கலவரத்தால் அந்த பகுதியே யுத்த களமாக மாறியிருந்தது. ஆர்ப்பாட்டக் காரர்கள் பொலிஸாரை நோக்கி கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக் காரர்களை கலைக்க பொலிஸார் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டதோடு கண்ணீர் புகைக் குண்டுகள், ரப்பர் குண்டுகளை பிரயோகித்தனர்.

“மொதிஸ்ஹிலால் பகுதியில் சட்டவிரோதமான முறையில் அவர்கள் ஒன்று கூடி இருந்ததால் நாம் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்பட்டது” என குறிப்பிட்ட பொலிஸ் பேச்சாளர் மசுதுர் ரஹ்மான், “அவர்கள் எம்மீது கற்கள், மூங்கில் கம்புகள், செங்கட்களால் தாக்கினர்” என்றார்.

டாக்காவின் புறநகர் பகுதியான கன்ச்பூரிலும் மோதல் வெடித்தது. இங்கு நடந்த வன்முறையில் இரு பொலிஸார், பாதுகாப்பு வீரர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

அதேபோன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் டாக்காவுக்கான பிரதான பாதையை மூடி தலைநகரின் செயற்பாடுகளையும் முடக்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க பஸ், லொறி, மினி பஸ் என குறைந்தது 3000 வாகனங்கள் மூலம் தலைநகருக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைத்து வரப்பட்டதாகவும் ஏனையோர் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மூலம் தலைநகரை வந்தடைந்திருந்ததாகவும் டாக்காவின் டெய்லி ஸ்பீடார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தலைநகரில் உள்ள ஆறு பாதைகளூடாக “அல்லாஹு அக்பர்”, “ஒரு குறிக்கோள்! ஒரு இலக்கு! நாத்திகர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்” என கோஷமெழுப்பி ஊர்வலமாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மொதிஸ்ஹிலால் பகுதியில் ஒன்று திரண்டனர்.

ஹபாஸத் இஸ்லாம் அமைப்பு இஸ்லாமிய வழிகாட்டலை தீவிரமாக கடைப்பிடிக்க அழுத்தம் கொடுத்து வருகிறது. நாட்டிலுள்ள மத்ரசாக்கள் அல்லது மதப் பாடசாலைகளில் இந்த அமைப்புக்கு பெரும் ஆதரவு உள்ளது.

நாட்டில் இருக்கும் பெண்கள் அமைப்புகள் தொடர்பில் எதிர்ப்பை வெளியிட்டு வரும் ஷபாஸத் இ இஸ்லாம், தேசிய அபிவிருத்தி கொள்கையில் பெண்களின் நிலை குறித்தும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

பங்களாதேஷ் அரசு, பங்களாதேஷை ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக குறிப்பிட்ட போதும் அதனை நிராகரிக்கும் ஹபாஸ்த் இ இஸ்லாம், மத நிந்தனைக்கு எதிராக சட்டம் கொண்டுவர அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் தற்போதைய சட்டமே, போதுமானது என பிரதமர் ஷெய்க் ஹஸினா குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 90 வீதம் முஸ்லிம்களைக் கொண்ட பங்களாதேஷில் அதற்கு அடுத்ததாக ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பங்களாதேசில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்;  22 பேர் பலி Empty Re: பங்களாதேசில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்; 22 பேர் பலி

Post by Muthumohamed Tue 7 May 2013 - 9:41

அங்கு என்ன தான் நடக்கிறது ஒன்றுமே புரிவதில்லையே

நம்மிடம் உள்ள ஒற்றுமை எல்லாம் எங்கே போயிற்று
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பங்களாதேசில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்;  22 பேர் பலி Empty Re: பங்களாதேசில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்; 22 பேர் பலி

Post by நண்பன் Tue 7 May 2013 - 11:55

Muthumohamed wrote:அங்கு என்ன தான் நடக்கிறது ஒன்றுமே புரிவதில்லையே

நம்மிடம் உள்ள ஒற்றுமை எல்லாம் எங்கே போயிற்று
உலகில் எங்கும் ஒற்றுமை இல்லை அழிவின் விளிம்பில்தான் இப்போது நாம் உள்ளோம் #.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பங்களாதேசில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்;  22 பேர் பலி Empty Re: பங்களாதேசில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்; 22 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum