Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
அரிசி
4 posters
Page 1 of 1
அரிசி
கிச்சடி, ஆர்க்காடு, வாடன் சம்பா, பூவன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, புழுதிபெரட்டி, தூயமல்லி, குள்ளக்கால் என்று பல வகை நெல் வகைகள் 1950-60-ம் ஆண்டுகளில் இருந்தன. அதன்பின் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்டுபிடிப்புகளில் பல்வேறு புதுவகையான நெல் வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஐ.ஆர்.8, ஐ.ஆர்.10 என்று பல வகைகள். மானாவாரி நிலத்தில் விளையும் நெல் விதைகள் ஒரிசா மாநில கட்டாக் ஆராய்ச்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அப்படிப்பட்ட பாரம்பரிய வகை பழைய நெல் விதைகள் இன்றைக்குக் காணாமல் போய்விட்டன. அரிசி என்ற சொல்லே "ரைஸ்' என ஆங்கிலத்தில் மருவி உள்ளது. மாவீரர் அலெக்ஸôண்டர் மூலமாக அரிசி பயிரிடும் முறை மேலை நாடுகளுக்குச் சென்றது. உணவுத் தொழிலைத் திட்டமிட்டு முதன்முதலில் உலகில் நடத்தியது தமிழர்கள்தான் என்று மேல்நாட்டு அறிஞர் ஒருவர் கூறியிருக்கிறார். பெரும்பாணாற்றுப் படையில், 2-ம் நூற்றாண்டில் ஏர் மற்றும் பயிர்த் தொழில் பற்றிப் பாடப்பட்டுள்ளது. ஒற்றை நாற்று நடவு முறை மிகவும் பழமையானது. அது தமிழர்களின் அடையாளமாகும். மட்கும் எருவைப் பயன்படுத்தியதை அகநானூறு குறிப்பிடுகின்றது. பீகாரில் பயிர் செய்யப்படும் பெளியா நெல், வெள்ளம் பாய்ந்தாலும் தாக்குப்பிடித்து வளரக் கூடியது. ஜார்க்கண்டில் மேட்டு நிலங்களில் கோடா நெல் வகை வறட்சிக் காலங்களிலும் விளையும். உத்தரப் பிரதேசத்தின் ஆற்றுப் படுகைகளில் போரா வகை நெல் பயிரிடப்படுகிறது. ஒரிசாவில் விளையும் கோரா பூட், காளி மூரி போன்றவை விலங்குகளிடமிருந்து தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் வகையாகும். இது போன்றே துல்லபூடியா வகை நெல், வெள்ளத்தில் பல நாட்கள் மூழ்கிக் கிடந்தாலும் பின்னர் தழைத்து வளரக்கூடிய தன்மை கொண்டதாகும். கர்ஹைனி, துன்சி மாசா, மைனா பாங்கி, காளிமோரி போன்ற பாரம்பரியமிக்க நெல் வகைகள் இந்தியாவில் பல மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகின்றன. வறட்சிக்கும் வெள்ளத்துக்கும் ஈடுகொடுக்கும் நெல் விதைகள் ஒரு காலத்தில் நம் நாட்டில் இருந்தன. ஒரு பக்கத்தில் அதிக உற்பத்தி கிடைக்கின்றது என்பதற்காகக் கலப்பு வகை நெல்லை விவசாயிகள் பயிரிட்டாலும், சில இடங்களில் விவசாயிகள் பண்டைய கால அபரிமிதமான நெல் வகைகளைப் பாதுகாத்து வருகின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த நெல் வகைகள் இன்றைக்கும் பாதுகாக்கப்படுகின்றன. பாரம்பரிய விதைகள் நிலத்தின் தன்மையையும் நீராதாரத்தையும் கொண்டு பயிர் செய்யப்படுகின்றன. பாரம்பரிய விதைகளைப் பயன்படுத்தும்பொழுது விவசாயிகள் விதைக்காக அலைய வேண்டியது இல்லை. இந்த வகை விதைகள் தட்பவெப்ப நிலையையும் பாதுகாத்துக் கொள்ளும். இரசாயன பூச்சிக் கொல்லிகள் இதற்குத் தேவையில்லை. இந்த நெல் வகைகளில் உள்ள கார்போ ஹைட்ரேட் எளிதில் கரையும். இதனால் எளிதில் ஜீரணமடையும். ஆனால் கலப்பு ரக, புதுரக விதைகளால் நிலத்தின் வளம் பாதிக்கப்படுகின்றது. இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் போன்றவற்றைக் கொண்டே கலப்பு ரக விதைப் பயிர்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. உற்பத்திதான் அதிகமாக இருக்குமே தவிர, இந்த நெல்லிலிருந்து வரும் அரிசியில் சுவை இருப்பதில்லை. மேலும் கலப்பு ரக விதைகளைப் பயிரிடுவதற்கு அதிக உழைப்பைக் கொடுக்க வேண்டியுள்ளது. கலப்பு ரக நெல் விதைகளுக்கு ஆர்வம் காட்டுவது போன்று, பாரம்பரிய நெல் விதைகளின் உற்பத்தியிலும் ஆர்வம் காட்ட வேண்டிய முனைப்பும், அவசியமும் எதிர்காலத்தில் நிச்சயம் வரும்.
Re: அரிசி
நடைமுறையில், மளிகை சாமான் வாங்கும்போது,
அவரவர் தேவைக்கேற்ப கர்நாடகா பொன்னி
அரிசி பை ஒன்றை, வாங்கிச் செல்கின்றனர்...!!
-
அவரவர் தேவைக்கேற்ப கர்நாடகா பொன்னி
அரிசி பை ஒன்றை, வாங்கிச் செல்கின்றனர்...!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» அரிசி சேவை வடை.
» அரிசி மாவு முறுக்கு
» பாசுமதி அரிசி ஆணா, பெண்ணா..?
» அரிசி உடைசல் உப்புமா
» அரிசி தரும் பயன்கள்
» அரிசி மாவு முறுக்கு
» பாசுமதி அரிசி ஆணா, பெண்ணா..?
» அரிசி உடைசல் உப்புமா
» அரிசி தரும் பயன்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|