சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

பிலிப்பைன்ஸ் Khan11

பிலிப்பைன்ஸ்

Go down

பிலிப்பைன்ஸ் Empty பிலிப்பைன்ஸ்

Post by Muthumohamed Mon 20 May 2013 - 18:01

தீவுக்கூட்டங்கள்தான் பிலிப்பைன்ஸ். 7,100-க்கும் மேற்பட்ட தீவுகளைத் தன்னகத்தே கொண்ட நாடு. தென்கிழக்கு ஆசியாவில், தென்சீனக் கடலுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் மத்தியில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் தீவுகளில் லூசான் மற்றும் மிண்டாநாவே ஆகியவைதான் அளவில் பெரியவை. நாட்டின் பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்கு இந்த இரு தீவுகளில் அடங்கும். 7,100 தீவுகளில் மூன்றில் ஒரு பகுதியில்தான் மக்கள் வசிக்கின்றனர். மற்றவை மக்களையே பார்த்திராத மிகவும் குட்டியான தீவுகள். விதவிதமான பூச்செடிகள், நூற்றுக்கணக்கான வகைகளில் இங்கு வளர்கின்றன. அத்தனையும் பார்ப்பதற்கு கொள்ளை அழகாக இருக்கும். வசிப்பிடங்களுக்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டதால் காடுகளில் மரங்களுக்குப் பதிலாக உயரமான புற்கள் வளர்ந்து எங்கும் நிறைந்துள்ளன. 200-க்கும் மேற்பட் உயிரினங்கள் இங்குள்ளன. குரங்குகள், அணில்கள், லெமூர்கள், எலிகள், கீரிகள், காட்டுப் பூனைகள், மான்கள் என்று விதவிதமான விலங்கு வகைகளை இங்கு காணலாம். "பின்டூராங்' என்று அழைக்கப்படும் ஆசிய கரடிப் பூனைகள் ஒருகாலத்தில் இங்கு ஏராளமாக இருந்தன. இப்போதோ இந்த விலங்குகள் அரிதாகி வருகின்றன. இதே போல "தமராவ்' என்றழைக்கப்படும் நீர் எருமையும் அரிய வகை விலங்கினங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. மயில், புறா, கிளி, மீன்கொத்தி, சூரியப் பறவை, வால் பறவை, தூக்கணாங்குருவி மற்றும் ஹார்ன் பில் என்ற அரிய வகைப் பறவைகளும் இங்கும் அதிகம். பிலிப்பைன் பருந்து - இது குரங்குகளை உணவாக உட்கொள்ளும் - இதுவும் இப்போது அரிதாகி வருகின்றது. 1521-ம் ஆண்டு பெர்டினாண்ட் மெக்கல்லன் இத்தீவுகளில் முதன்முதலாகக் காலடி பதித்தார். அவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவராதலால், அப்போதிருந்த ஸ்பெயின் அரசர் இரண்டாம் பிலிப் பெயரை இந்தத் தீவுகளுக்குச் சூட்டி பிலிப்பைன்ஸ் என்று அழைக்கப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் காலனி ஆதிக்க நாடாக பிலிப்பைன்ஸ் இருந்தது. அமெரிக்காவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையே ஏற்பட்ட யுத்தத்தின் முடிவில், 1898-ல் பிலிப்பைன்ஸ் அமெரிக்காவின் பிடியில் வந்தது. 1935-ம் ஆண்டு சுயாட்சி பெற்றது. இருந்த போதும், இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜப்பானியர்கள் நாட்டை ஆக்கிரமித்ததால், நாட்டின் சுதந்திரம் தள்ளிப் போனது. 1944-45-ல், அமெரிக்கா, ஜப்பானின் பிடியிலிருந்து பிலிப்பைன்ûஸ விடுவித்தது. 1946-ல் முழு சுதந்திரம் பெற்று, அமெரிக்க வழி ஆட்சி முறை ஏற்படுத்தப்பட்டது. 1965-ல் பெர்டினான்ட் மார்கோஸ் குடியரசுத் தலைவர் பதவியேற்றார். 1972-ல் அவர், ராணுவ அடக்குமுறைச் சட்டத்தைப் பிரகடனம் செய்தார். 1981-வரை இந்த அடக்குமுறை நீடித்தது. 20 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு 1986-ல் மார்கோஸ் நாட்டைவிட்டு விரட்டப்பட்டார். கோரசான் அகினோ குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியரசு ஆட்சி முறை மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் தலைவர், அமைச்சரவைக்கும் ராணுவத்துக்கும் தலைவர். ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய தலைவர் தேர்ந்தெடுக்கபடுகிறார். "பிலிப்பினேஸ்' என்றழைக்கப்படும் இந்நாட்டு மக்கள், மலேசிய பாரம்பரிய வழி வந்தவர்கள். சீனர்கள், அமெரிக்கர்கள், ஸ்பெயின் நாட்டவர் என்று கலப்பு இன மக்களும் உள்ளனர். ஏராளமான மக்கள் ஸ்பெயின் நாட்டில் வழங்கப்படும் பெயர்களையே இன்று வரை தங்களுக்குச் சூட்டிக் கொள்கிறார்கள். இங்கு குழந்தைகளின் ஏழாவது வயதில்தான் ஆரம்பக் கல்வி ஆரம்பமாகின்றது. ஆறு ஆண்டுகள் ஆரம்பக் கல்வி; 13-வது வயதில் ஆரம்பிக்கும் உயர்கல்வி 4 ஆண்டுகள் நீடிக்கும்; அதன் பிறகு 4 ஆண்டுகள் கல்லூரிப் படிப்பு. விவசாயம் மற்றும் சிறு தொழில்கள்தான் பிலிப்பைன்ஸின் பொருளாதார ஆதாரங்கள். வாழைப்பழம், அரிசி, தேங்காய், சோளம், மீன், மாம்பழம், அன்னாசிப்பழம், கரும்பு, பன்றி மற்றும் மாட்டிறைச்சி நாட்டின் உற்பத்தியில் பெரும்பகுதியை வகிக்கின்றன.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum