Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
பகுதி-19 டாக்டரிடம் கேளுங்கள் -[விடாது துரத்தும் சைனஸ்... தப்பிக்க என்ன வழி ?]
2 posters
Page 1 of 1

”நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தின் சீதோஷ்ணம், வருடா வருடம் என்னை படுத்தி எடுத்து விடுகிறது.
38 வயதாகும் எனக்கு சைனஸால் தலைவலி, தலைபாரம், சளி, தும்மல் என இந்த
மாதங்களில் தொந்தரவுகள் நீள்கின்றன. நிரந்தரத் தீர்வுக்கு வழி ஏதும்
இருக்கிறதா?”
டாக்டர் ந.கிருபானந்த், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், செங்கல்பட்டு:
”மூளையின்
எடையை பேலன்ஸ் செய்ய, தகவமைப்பாக முகத்தில் காற்று அறைகள் இருக்கின்றன.
இவை, சைனஸ் அறைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சைனஸ் காற்றறைகள் ஒவ்வாமையினால் தொற்றுக்கு உள்ளாகும்போது அழற்சிஅடைவதுதான் ‘சைனஸைடிஸ்’ நோயாக அறியப்படுகிறது.
சுற்றுச்சூழல் காரணத்தினாலோ, தனிப்பட்ட மனித உடல் இயல்பினாலோ உடலுக்கு ஒவ்வாமை
ஏற்படும்போது, காற்றறைகள் வீக்கம்அடைகின்றன. இந்த வீக்கத்தால்
காற்றறையின் உள்சுவர் பாதிப்படைந்து எதிர்வினையாக ஒரு வகை நீரை சுரக்க
ஆரம்பிக்கின்றன. எதிர்ப்புச் சக்தி குறைவால் நாளடைவில் அந்த நீர் சளியாக
மாறத் துவங்கும். உப உபத்திரவமாக தும்மல், தலைவலி, தலைபாரம் போன்றவையும்
தோன்றும். இந்த நிலை வரை எழும் தொந்தரவுகள் சைனஸைடிஸ் வரையறைக்குட்பட்டவை.
இதே தொந்தரவுகள் தொடர்ந்து நீடிக்கும்போது, அது ஆஸ்துமாவாக உருவாகலாம்.
உடலின்
ஒவ்வாமைக்கு தனிப்பட்ட மற்றும் பொதுவான காரணிகள் ஏராளமாக இருக்கின்றன.
ஒருவருக்குக் குறிப்பிட்ட பதார்த்தம் ஒவ்வாமையைத் தரலாம். மேற்படி உணவைத்
தவிர்ப்பதன் மூலம் அவர் நிவாரணம் பெற முடியும். ஆனால், மழை, பனி போன்ற
சீதோஷ்ண மாறுதல்கள்
ஒருவரின் ஒவ்வாமை இயல்பை அதிகரிக்கும்போது சமாளிப்பது சற்று சிரமம்தான்.
உதாரணமாக, காற்றில் பரவும் மாசுகளை மழையும் பனியும் ஈர்த்து, நம்
சுவாசப்பரப்பிலேயே
நிலைநிறுத்துகின்றன. கூடவே, இந்தக் காலங்களில் பூச்செடி, மரங்கள் என்று
அதிகரிக்கும் மகரந்தச் சேர்க்கையும் சைனஸைத் தூண்டும். இந்தப் பொதுக்
காரணங்களை தவிர்க்க முடியாது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மூலம் ஓரளவு பாதுகாப்பு பெறலாம்.
சைனஸைடிஸை
எதிர்கொள்ள மருத்துவ சிகிச்சைகளை விட, லைஃப் ஸ்டைல் ஒழுங்குகளே நல்ல
ரிசல்ட் தரும். தூய பருத்தி ஆடைகள், கம்பளி ஆடையெனில் அவை தூசு
இல்லாதிருப்பது, பூக்கள், தூசுக்கள் சூழலைத் தவிர்ப்பது, மாஸ்க் அல்லது
கர்ச்சீஃப் உபயோகிப்பது என ஆயத்தமாக இருக்கலாம். பனி, மழை காலங்களில்
பாக்டீரியா தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ளதால் உடல் எதிர்ப்பு சக்தி
சீர்குலையாதிருக்க ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
சைனஸ்
அறைகளின் ஆரம்பகால பாதிப்புக்கு சாதாரண ஆன்டிபயாடிக் மருந்துகள்
போதுமானது. இறுகியும், மஞ்சள் நிறத்திலும் சளி இருக்குமானால் மருத்துவ
ஆலோசனையுடன் கூடுதல் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது
மாத்திரை வடிவில் கிடைக்கும் மருந்துகளை கொண்டு ‘வேது’ பிடிப்பது
பக்கவிளைவுகளற்ற சிறப்பான வழி. நாள்பட்ட சைனஸ் பாதிப்பு, காற்றறை சுவரை
தடிப்பாக்கி, அதன் வாயை அடைக்க முற்படும். இதற்கு எண்டோஸ்கோப்பிக் அறுவை
சிகிச்சை மூலம் நிவாரணம் பெறலாம். போதிய கவனிப்பு, சிகிச்சைகளின்றி இந்த
பிரச்னை ஆஸ்துமாவாக உருவெடுக்காமல் தடுக்கப்பட வேண்டும் என்பதில் கவனம்
இருக்கட்டும்!”
நன்றி:- டாக்டர் ந.கிருபானந்த், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், செங்கல்பட்டு
நன்றி:- அ.வி
http://azeezahmed.wordpress.com/

azeezm- புதுமுகம்
- பதிவுகள்:- : 62
மதிப்பீடுகள் : 0
Re: பகுதி-19 டாக்டரிடம் கேளுங்கள் -[விடாது துரத்தும் சைனஸ்... தப்பிக்க என்ன வழி ?]
சிறந்த கட்டுரைகள் தொடருங்கள் உறவே ##* :“:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|