சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சித்தமருத்துவ சங்கதிகள்  Khan11

சித்தமருத்துவ சங்கதிகள்

3 posters

Go down

சித்தமருத்துவ சங்கதிகள்  Empty சித்தமருத்துவ சங்கதிகள்

Post by Muthumohamed Sat 8 Jun 2013 - 18:42

சித்தமருத்துவ சங்கதிகள் எனும் இந்தத் தொடரை ,சித்தமருத்துவத்தின் பல்வேறு கூறுகளையும் ,பெருமைகளையும் திரட்டும் நோக்கில் ஆரபிக்கிறேன் .
ஒரே தலைப்பின் கீழ் இருக்குமானால் பின்னாளில் தேடிப்படிக்க எளிதாக இருக்கும் .எனவே ஒரெத்தலைப்பில் திரட்ட எண்ணுகிறேன் .
இது ஆய்வுகளுக்கும் ,அனுபானங்களுக்கும் உதவிடும் .

முதலில் சித்தமருத்துத்தில் பயன் படுத்தப்பெறும் காலம் .அளவு ,புடம் போடுதல் குறித்த விபரங்கள் மற்றும் எரிப்பு முறைகளை பார்ப்போம்.

இந்ததொடரில் எழுதப்பெறும் அத்தனை விபரங்களும் ,மூல நூல்களில் இருந்து பெறப்பட்டவை மட்டுமே ஆகும் .அத்தனையும் மிகப்பழைய ,புத்தகங்களில் இருந்தும் ,சுவடிகளில் இருந்து மூல நூலாகப் பதிக்கபட்டவைகளைளில் இருந்து மட்டுமே திரட்டப்பட்டவை ஆகும் .
அதில் எங்கிருந்து பெறப்பெட்டது என மூல நூலின் விபரமும் தர உத்தேசித்துள்ளேன் .
இது ஆய்வுகளுக்கு பயன் படுத்தப்படவேண்டும் என்பதர்க்ககவும் ,நமக்கு இந்தகைய விஷயங்களில் ,நமது என பின்னாளில் உரிமைக் கோர ஒரு முக்கிய பதிவாகவும் விளங்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஈகரை எனும் பெருமை மிகுகுழுமத்தில் பதிவிடுகிறேன் .

நண்பர்கள் தரும் உற்ச்சாகம் என்னை இதில் ஈடுபட தக்க சக்தியை தரும் என நம்புகிறேன் .

இனி சித்த மருத்துவத்தில் பயன் படுத்தப்பெறும்
காலம் ,அளவு , புடம் .எரிப்பு ஊது விபரங்கள்

ஒரு நாள் = 8 சாமம்
இரவு பகல் = 24 மணி

1 சாமம் = 3 மணி நேரம்
1 மணி = 2 1/2 நாழிகை
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்

1 நிமிடம் = 2 1/2 வினாடி தமிழ் முறை

4 நெல் எடை = 1 குன்றி எடை

3 1/2 குன்றி எடை = பண எடை
10 பண எடை = 1 வராகன் எடை
10 வராகன் எடை = 3 ரூபா எடை
1 வராகன் எடை = 32 குன்றி எடை . 1 3/4 தம்பிடி எடை
1 1/4 வராகன் எடை = 1 கழஞ்சி எடை

24 ரூபா எடை = 1 சேர்
5 சேர் = 1 வீசை
1 வைத்தியபலம் = 3 ரூபா எடை


1 உரி = அரைஇபடி பட்டிணம் படி
2 படி = 1 குறுநி , மரக்கால்
4 படி = 1 பதக்கு , 2 மரக்கால்

8 படி = 1 தூணி
24 படி = 1 கலம்



1 வெருகடி = 5 விரல் நுனி பிடியளவு
1 திரிகடி = 3 விரல் நுனி பிடியளவு


6 ரூபா எடையுள்ளது ஒரு எரு புடத்திர்க்கு

2 எரு = காடைப்புடம்
3 எரு = கவுதாரிப்புடம்

10 எரு =குக்குட புடம்
50 எரு = வராகப்புடம்
100 எரு = கஜப்புடம்
1000 எரு = கன புடம்


1 துருத்தி ஊதுவது == கன்னம்
2 துருத்தி ஊதுவது = உருக்கு
4 துருத்தி ஊதுவது = சத்து உலை

2 விரல் கன விறகு1 = 1 தீபாகினி

2விரல் கன விறகு2 =- கமலாக்கினி

2விரல் கன விறகு 5 = காடாக்கினி


காற்றில் கட்டுவது வாயு புடம்
ஜலத்தில் அமிழ்த்துவது ஜலப்புடம்
நெல்லில் வைத்து மூடுவது நெல் புடம்

சூரியனில் வைப்பது ரவிபுடம்
புகை அடங்க இடுவது அவிபுடம்
மணல் மூடி இடுவது மணல் புடம்

உமியில் எரிப்பது உமிப் புடம்
குழிக்குள் புடமிடுவஸ்து குழிபுடம்
குழித்தைலம் எடுப்பது குழிதைல புடம்
குப்பியில் வைத்து எரிப்பது குப்பிபுடம்


இவை மருந்துகள் செய்ய பயன் பெறும் என நம்புகிறேன் .
அளவும் அனுபானமும் சித்தவைத்தியத்தில் மிக முக்கியமானவ்பை .
எனவே இந்த நுண்ணிய அளவுகளை சரிவர பயன்படுத்த வேண்டும் .

ஆதாரம் - ராமகிரிச் சித்தர் ரசாயனம்
அன்புடன்
[b]அண்ணாமலை சுகுமாரன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சித்தமருத்துவ சங்கதிகள்  Empty Re: சித்தமருத்துவ சங்கதிகள்

Post by Muthumohamed Sat 8 Jun 2013 - 18:43

சித்தமருத்துவ சங்கதிகள் -2
அண்ணாமலை சுகுமாரன்


மருத்துவம் எனும் போதே தெரிந்துவிடுகிறது
இது நோய்க்கு அதைத் தீர்க்க மருந்து தரும் முறை என்பது .
சித்தமருத்துவம் என்பது சித்தர்களால் வடிவமைக்க்ப்பபட்ட ,
அவர்களின் நடைமுறையில் இருந்து வந்த மருத்துவம் என்பதும் புரிகிறது .
இன்னும் எத்தனையோ மருத்துவமுறைகள் இந்தியாவில் உண்டு .
ஆயுர்வேதம் ,யுனானி , அலோபதி எனும் ஆங்கில மருத்துவமுறை ,ஹோமியோ எனும்
ஜெருமானிய முறை போன்ற நிறைய வகை மருத்துவ முறை உள்ளன .
உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு முறைகள் மருத்துவத்தில் பழக்கத்தில் இருக்கிறது .

நீண்ட சரித்திரம் கொண்ட எந்த இனத்திற்கும் அவர்களுக்கு என்று ஒரு சிறப்பான மருத்துவமுறை வழி வழியாக இருந்து வரும் .
ஆப்ரிக்காவில் கூட ஊடு முறை எனும் மந்திர சடங்குகள் கொண்ட வழிமுறை உண்டு .
ஆயினும் நமது தமிழ் நாட்டின் சித்தமருத்துவம் அவற்றில் ஒன்றுதான ?
அதற்க்கு என்று சிறப்பு ஒன்றும் இல்லையா ?
நமது சித்தர்களால் பயன்படுத்த முறை ஏனைய மருத்துவ முறைகளில் ஒன்றுதானா ?
தனித்துவம் ஒன்றும் இல்லையா ?

,சித்தமருத்துவம் சிறப்பானதனித்துவ தகுதிகள் கொண்டது .

சித்தமருத்துவம் தன்னைப்பற்றிய ,விளக்கம் ஒன்றை தானேத் தருகிறது .
மருந்து எனப்படுவது எப்படி இருக்கவேண்டும் என்ற ஒரு விளக்கம் தந்து கொள்கிறது


"மறுப்பதுடல் நோய் மருந்தெனல் சாலும்
மறுப்பது உள நோய் மருந்தெனல் சாலும்
மறுப்பது இனி நோய் வாராதிருப்ப
மறுப்பது சாவை மருந்தெனலாகும் "


எத்தனை தெளிவாக மருந்து என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதை
வரை இருத்திருக்கிறார்கள் பாருங்கள் .
வேறு எந்த மருத்துவதிலாவது இப்படி மருந்து என்பது என்ன என
நெறிப்படுத்தப்பட்டுல்லதா? என்பது தெரியவில்லை .?\

மருந்து எனப்படுவது உடல் நோய்க்கு மருந்தாக இருக்கவேண்டும்
மருந்து என்பது உள நோய்க்கு மருந்தாக வேண்டும் ..நோய்களுக்கான
உளவியல் காரணங்களை ஆங்கில மருத்துவம் இப்போதுதான்
உணர்ந்து ஆய்வு செய்ய ஆரபிக்கிறது .
மருந்து மட்டும் உடலுக்கு வழ்கன்கினால் நோய் தீராது என உணர்கிறது
ஆனால் நமது சித்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடல் நோயுடன் அதைத் தீர்க்க உள்ளத்திற்கும் மருந்து தேவை எனக் கூறி இருக்கிறார்கள் .

மருந்து எனப்படுவது மீண்டும் அந்த நோய் வராமல் செய்யவேண்டும்
என உறுதியாக விதி வகுக்கிறது .

மருந்து எனப்படுவது மரணத்தை வெல்லும் வல்லமை கொண்டதாக இருக்கவேண்டும்
இவ்வுலகிற்கு ,வாழவந்தக் காரணம் பூர்த்தியாகும் வரை காயகல்ப்பம் உண்டு ,உடலை
கர்ப்பமாக்கி ,மரணமில்லா பெரு வாழ்வை வாழும் வல்லமை பெற்றதாக மருந்து எனப்படுவது இருக்க வேண்டும் என்கிறது இந்தப்பாடல் .

நமது சித்தமருத்துவத்தின் நோக்கம் எத்தனை தெளிவாக வகுக்கப்பட்டிருக்கிறது
என்பது வியப்பளிக்கப்படவில்லையா ?
எத்தனை உயரிய நோக்கம் கொண்டதாக சித்தமருத்துவ மருந்துகள் இருக்கவேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டிருக்கிறது என்பது நமது நீண்ட பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துக்காட்டுகிறது .

இப்படிப்பட்ட உயரிய நோக்கங்கள் கொண்ட நமது பாரம்பரிய சித்தவைத்தியம்
மாற்றுமுறை வைத்தியம் என அறிவிக்கப்பட்டிருப்பதையும் ,300 ஆண்டுகளே வரலாறு பின் புலம் கொண்ட ,இன்னும் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டி நாளும் ,மாறிவரும் ஆங்கில மருத்துவம் நமது நாட்டில் முதன்மை மருத்துவமாக இருக்கிறது .

ஆயினும் தகுதிபடைத்தவை என்றும் ஓதிக்கித்தள்ள இயலாதவை என்பதற்கு ஏற்ப ,
சித்தமருத்துவம் இன்றும் தன சீரிளமையுடன் தமிழைப்போலவே மக்கள் மத்தியில் ஜீவனாக வாழ்ந்து வருகிறது .

இவ்வாறு மரணமில்லாமல் வாழ இயலுமா என்பதற்கு திருமூலரே கூடவே தன்னையே சான்றாக சொல்லுகிறார்

இருந்தேன் இக்காயத்தே என்னில் கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என் நந்தி இணையடிக் கீழே - திருமந்திரம்

யோகத்தில் அமர்ந்து நீண்ட காலம் உயிர்வாழக்ஹ்ந்தேன்
இரவு பகல் என்று தெரியாமல் யோகக்கட்சியில் ஜோதிதரிசனம் கண்டேன்
தேவர்கள் போற்றும் கடவுளின் திருவடிகளில் நீண்ட காலம் இருந்தேன் என்கிறார் .
தனது குருவான நந்தியில் திருவடியில் எல்லையில்லா காலம் இருந்தேன் என்கிறார் .


ஒரு சிலேர் இவர் குறிப்பிடுவது நந்தி நாடி எனும் குரு நாடியை என கூறுவதுண்டு .


உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேன் - திருமந்திரம்
என்கிறார் திருமூலர் .
இதில் குறிப்பிடப்படும் உடம்பை வளர்க்கும் உபாயம் தான்
சித்தர்கள் அருளிய சித்தமருத்துவம் .
அதற்க்கு தக்க மதிப்புவைத்து ,சித்தவைத்தியத்தை அணுகினால் ,நரை திரை இல்லாத ,
என்றும் இளமையான ,நோயில்லாத வாழ்வும் மரணமில்லாத வாழ்வும் சாத்தியமே
என சித்தர்கள் உறுதிபட கூறுகிறார்கள் .

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சித்தமருத்துவ சங்கதிகள்  Empty Re: சித்தமருத்துவ சங்கதிகள்

Post by rammalar Sat 8 Jun 2013 - 19:08

சித்த மருத்துவம் சிறப்பான தனித்துவ தகுதிகள்
கொண்டது..
-
ஆனால் மக்களுக்கு இதில் நம்பிக்கை வரத்தக்க
அளவில் தேர்ந்த சித்த மருத்துவர்கள் இல்லை
என்பதே குறை...
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சித்தமருத்துவ சங்கதிகள்  Empty Re: சித்தமருத்துவ சங்கதிகள்

Post by Muthumohamed Sun 9 Jun 2013 - 3:05

rammalar wrote:சித்த மருத்துவம் சிறப்பான தனித்துவ தகுதிகள்
கொண்டது..
-
ஆனால் மக்களுக்கு இதில் நம்பிக்கை வரத்தக்க
அளவில் தேர்ந்த சித்த மருத்துவர்கள் இல்லை
என்பதே குறை...

தகவலுக்கு :”@: :”@: :”@:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சித்தமருத்துவ சங்கதிகள்  Empty Re: சித்தமருத்துவ சங்கதிகள்

Post by *சம்ஸ் Sun 9 Jun 2013 - 12:15

rammalar wrote:சித்த மருத்துவம் சிறப்பான தனித்துவ தகுதிகள்
கொண்டது..
-
ஆனால் மக்களுக்கு இதில் நம்பிக்கை வரத்தக்க
அளவில் தேர்ந்த சித்த மருத்துவர்கள் இல்லை
என்பதே குறை...
:,


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சித்தமருத்துவ சங்கதிகள்  Empty Re: சித்தமருத்துவ சங்கதிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum