Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
பெண்களின் மேக்கப் சாதனங்களில் கலந்துள்ள 500-க்கும் அதிகமான கெமிக்கல்களால் என்னென்ன ஆபத்து?
3 posters
Page 1 of 1
பெண்களின் மேக்கப் சாதனங்களில் கலந்துள்ள 500-க்கும் அதிகமான கெமிக்கல்களால் என்னென்ன ஆபத்து?
பெண்களுக்கு தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் காட்டும் அலாதி உலகுக்கேத் தெரியும்!சிம்பிளாக சொல்வதானால் பெண்களுக்கு பிடிக்காத அழகு சாதன பொருட்களே கிடையாது என்று சொல்லலாம். இன்றும் கூட அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கும் உலக வர்த்தக நிறுவனங்களின் பரிசோதனைக் கூடமாகவும் சந்தைக் காடாகவும்தான் ஆகிப் போனது நம் இந்தியா.
இதன் விளைவு… ”அழகு சாதனப் பொருட்களுக்குப் பின்னே ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய ஆபத்துகள் மறைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட அழகு சாதனப் பொருட்களின் தயாரிப்பும் விற்பனையும் இந்தியாவில் குறைந்த விலையில் அளித்து பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியப் பெண்களை டெஸ்டிங்கிறகு உட்படுத்துகிறது’ என்ற அதிர்ச்சித் தகவலை முன்னரே சொல்லி இருக்கிறது உலகச் சுகாதார நிறுவனம். அதிலும் ”பாதரசம் சேர்க்கப்படும் சோப், பாடி லோஷன், க்ரீம் மற்றும் பிற அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்குச் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்” என்றெல்லாம் உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிக்கையே வெளியிட்டு இருந்தது..
மேலும் கருத்தரித்த ஒரு பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு 8 முதல் 12 வாரம் வரையிலான தாய்மைக் காலத்தில் இனப்பெருக்க உறுப்புகள் உருவாகின்றன. அப்போது, சில ஹார்மோன்கள் தாயின் உடலில் தூண்டப்பட்டு அந்த குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன.இந்த காலக்கட்டத்தில் அந்த கருவுற்ற தாய் பயன்படுத்தும் தரமற்ற அழகு சாதனப் பொருட்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன் தூண்டலை தடை செய்து விடுகிறது. இதனால், அந்த தாயின் வயிற்றில் உருவாகும் குழந்தையின் இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதன் காரணமாக, அந்த குழந்தை, தாயின் வயிற்றில் இருக்கும் போதே மலட்டுத் தன்மை அடைவதற்கு வாய்ப்புகள் நிறைய இருப்பதாகவும் முன்னரே கூறியிருந்தாகள் ஆராய்ச்சியாளர்கள்.
இந்நிலையில், சராசரி பெண்கள் அன்றாடம் பயன்படுத்தும் அழகு சாதனங்களில் 500க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் கலந்துள்ளதாக இங்கிலாந்தில் உள்ள வாசனை திரவிய நிறுவனம் அதிர்ச்சி தகவலை அண்மையில் வெளியிட்டுள்ளது.அதாவது குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரு முறையாகிலும் பெண்கள் பயன்படுத்தும் உதட்டுச் சாயத்தில் (லிப்ஸ்டிக்) 9 வகை ரசாயனங்கள் கலந்துள்ளன.
சராசரியாக மனித உடல் கிரகித்துக் கொள்ளும் அளவிற்கும் 20 சதவீதம் அதிகமாக அலுமினியம், காட்மியம், மேங்கனீஸ், குடல் புற்று நோய்க்கு காரணமான குரோமியம் போன்ற உலோக கலவைகளும் லிப் ஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.
பற்பசை, ஷாம்பூ போன்றவை நீண்ட காலத்திற்கு காலாவதியாகாமல் இருப்பதற்காக அவற்றில் சிந்தெட்டிக் ரசாயனம் சேர்க்கப்படுகிறது.
இந்த ரசாயனம் பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.இதன் விளைவாக மார்பக புற்றுநோய் மற்றும் மலட்டுத் தன்மைக்கு பெண்கள் உள்ளாகும் அபாயம் உள்ளது.இது போல், பெண்கள் உபயோகிக்கும் பல்வேறு வகையான அழகு சாதனங்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய 500க்கும் மேற்பட்ட நச்சு ரசாயனங்களில் கலவை பயன்படுத்தப்படுகிறது.
தற்கால இளம்பெண்கள் விரும்பும் ‘அற்புத’ வளர்ச்சி, முகமாற்று அறுவை சிகிச்சை போன்ற முறைகளிலும் அதிக ஆபத்து உள்ளது.
இவ்வகை சிகிச்சைகளினால் விரைவில் முதுமை எய்துதல், முகச் சுருக்கம், நீரிழிவு நோய், மருந்து மாத்திரைகளின் சக்தியை கிரகித்துக் கொள்ள முடியாத இயல்பு போன்ற பக்க விளைவுகளும் ஏற்படலாம் என அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
முகநூல்
Re: பெண்களின் மேக்கப் சாதனங்களில் கலந்துள்ள 500-க்கும் அதிகமான கெமிக்கல்களால் என்னென்ன ஆபத்து?
என்றைக்கு இயற்கையை விட்டார்களோ அன்றைக்கே ஆபத்து உருவாக ஆரம்பிச்சாச்சு.
இவர்கள் சொன்னா திருந்தவா போகிறார்கள்?
இவர்கள் சொன்னா திருந்தவா போகிறார்கள்?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பெண்களின் மேக்கப் சாதனங்களில் கலந்துள்ள 500-க்கும் அதிகமான கெமிக்கல்களால் என்னென்ன ஆபத்து?
ahmad78 wrote:என்றைக்கு இயற்கையை விட்டார்களோ அன்றைக்கே ஆபத்து உருவாக ஆரம்பிச்சாச்சு.
இவர்கள் சொன்னா திருந்தவா போகிறார்கள்?
உண்மை தான் நாம் என்ன செய்ய முடியும்
Re: பெண்களின் மேக்கப் சாதனங்களில் கலந்துள்ள 500-க்கும் அதிகமான கெமிக்கல்களால் என்னென்ன ஆபத்து?
பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|