சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

அப்பாவி பொண்களே/ஆண்களே....இப்படி யாராவது ஆரம்பித்தா...உடனே உஷாராயிடுங்க... Khan11

அப்பாவி பொண்களே/ஆண்களே....இப்படி யாராவது ஆரம்பித்தா...உடனே உஷாராயிடுங்க...

2 posters

Go down

அப்பாவி பொண்களே/ஆண்களே....இப்படி யாராவது ஆரம்பித்தா...உடனே உஷாராயிடுங்க... Empty அப்பாவி பொண்களே/ஆண்களே....இப்படி யாராவது ஆரம்பித்தா...உடனே உஷாராயிடுங்க...

Post by Muthumohamed Mon 24 Jun 2013 - 10:09

அப்பாவி பொண்களே/ஆண்களே....இப்படி யாராவது ஆரம்பித்தா...உடனே உஷாராயிடுங்க... 995663_531654640227312_501637585_n

சுய அறிமுகத்துக்குப் பின், பேச ஆரம்பித்த கொஞ்ச நாள்ல..

1. உன்ன நா எப்டி கூப்பிட்றது??

அதாவது முழுப்பேர் சொல்லியா? இல்ல சுருக்கமாவா? இல்ல வேற ஏதாவது செல்லப் பேர் சொல்லிக் கூப்பிட்றதா?“னு அர்த்தம். உரிமையா பேச ஆரம்பிக்கிறதுக்கான முதல் படி இது தான். “உங்க இஷ்டம்“னு பதில் வந்தா, செல்லம்.. புஜ்ஜி.. குட்டி“னு ஏதாவது பேர் வச்சு கூப்பிட ஆரம்பிப்பாங்க. (எங்க வீட்ல ஒரு குட்டிப்பாப்பா இருக்கு, இல்ல பூனைக்குட்டி இருக்கு.. அத இப்டி தான் கூப்டுவேன்.. சோ க்யூட்..“னு உளறுவாங்க)

2. டி“போட்டு பேச ஆரம்பிப்பாங்க..


ஏதாவது பேசிகிட்டு இருக்கும்போது மறந்த மாதிரி “போடி“னு சொல்வாங்க. உடனே “ஸாரி ஸாரி தெரியாம சொல்லிட்டேன்பா..னு பதறிகிட்டு மன்னிப்பு கேப்பாங்க. நாளுக்கு நாள், வேணும்னே சீண்டுறதுக்காக சொல்ல ஆரம்பிச்சு பின் அதுவே பழக்கமாய்டும்.

3. உனக்கு நா யாரு?

இது அடிப்படை உள்நோக்கத்துல கேக்கப்படுது.. சாதாரணமா பேசிகிட்டு இருக்கும்போது திடீருனு “ஏம்பா, உனக்கு நா என்ன வேணும்? ஜஸ்ட் ப்ரெண்டா? க்ளோஸ் ப்ரெண்டா?“ங்குற மாதிரி போட்டு வாங்குவானுக.

4. உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்றேன்..

சாயந்திரம் ஆறு மணிக்கு ஆன்லைன் வரலாம்னு பேசிருப்பாங்க. ஆனா 5 மணிக்கே வந்து வெயிட் பண்ணேன்னு சீன் போடுவாங்க. ரெண்டு நிமிசம் லேட்டா வந்தாலும் ஓவரா கோவிச்சு, “உன்ன ரொம்ம்ம்ப மிஸ் பண்ணேன்“னு சொல்வாங்க.

5. உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்..

கொஞ்ச நாள் பேசுனதுக்கப்புறம் இந்த வசனத்த அடிக்கடி சொல்வாங்க. ஆனா என்னானு சொல்ல மாட்டாங்க. இப்ப வேணாம்.. ஆனா கண்டிப்பா சொல்றேன்னு சொல்வாங்க. எதிர்பார்ப்ப தூண்ட்றாங்களாம்.

6. பசிக்கவே மாட்டீங்குது.. உன்கூட பேசினா போதும்..

ஏற்கனவே வயிறுமுட்ட திண்ணுட்டு தான் வந்திருப்பாங்க. ஆனா இப்படி சொல்றதுனால, எதிர்தரப்புல இருக்குறவங்க ”ப்ளீஸ் சாப்பிட்டு வா, உடம்ப கெடுத்துக்காத“னு அக்கறையா பேசுவாங்க.

7. நா ரொம்ம்ம்ம்ப பொறுப்பான பருப்பு..

படிக்குற காலத்துல எந்நூறு அரியர்ஸ் வச்சிருப்பான், ஊர் சுத்திகிட்டு வெட்டியா இருப்பான். ஆனா ச்சாட்டிங்னு வந்துட்டா போதும்… அக்கறையும் அட்வைசும் பொங்கிட்டு வரும். “நல்லா படி, அப்பா அம்மாவுக்கு மரியாதை குடு, மத்தவங்க பெருமைப்பட்ற மாதிரி நட, எதையாவது சாதிக்கணும், தன்னம்பிக்கைய வளத்துக்க“ .. அப்படி இப்படினு வீராவேசமா பேசுவாங்க. அப்பதான் இவங்கள பொறுப்பானவன்“னு அந்தப் பொண்ணு மெச்சிக்குமாம்.

8. நா பெரிய அப்பாடக்கராக்கும்..

இவுனுகளுக்கு வேலை வெட்டியே இருக்காது.. ஆனா நா பெரிய அப்பாடக்கர், சமூக சேவை பண்றேன், கண் தானம் பண்ணிருக்கேன், இரத்தம் குடுத்தேன், ஏழைக் குழந்தைகளுக்கு உதவி பண்றேன்“னு ஓவரா அளந்து விடுவானுங்க.

9. கொசுவத்தி சுத்துவானுக..

நா ஒரு பொண்ண உயிருக்கு உயிரா காதலிச்சேன்.. ஆனா அவ என்ன வேணாம்னு உதறிட்டுப் போய்ட்டா“னு ஒப்பாறி வைக்காத குறையா கொசுவத்தி சுத்துவானுக. How unlucky she is?’னு ஃபீல் பண்ணி ஆறுதல் சொல்லணுமாம்… சென்டிமென்டா டச் பண்றாய்ங்கப்பா..

10. இந்த அளவுக்கு நா யார்கிட்டயும் பேசினதில்ல..

எந்தப் பொண்ணுகிட்ட ச்சாட் பண்ணினாலும் இந்த டைலாக் மறக்காம வந்திடும். ஒரே நேரத்துல நாலு பொண்ணுகூட ச்சாட் பண்ணுவான்.. இதே டைலாக்க நாலுபேர்கிட்டயும் சொல்லுவான். தனக்கு முக்கியத்துவம் குடுக்குறான்னு அந்தப் பொண்ணு நெனைக்கணுமாம்.

11. அப்புறம்.. சொல்லு..

இந்த ரெண்டு வார்த்தைகள் இல்லாம ச்சாட்டிங்கே இருக்காது. நடு ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் ச்சாட் பண்ணிட்டு குட் நைட் சொல்லுவாங்க.. ஸ்வீட் ட்ரீம்ஸ்“னு சொல்லிட்டு “அப்புறம்.. சொல்லு“னு திரும்ப ஆரம்பிப்பாங்க. உன் கூட பேசினா டைம் போறதே தெரில“னு வேற அப்பப்ப சொல்லிக்குவாங்க.

12. உன் ப்ரெண்ட்ஷிப் கிடைக்க குடுத்துவச்சிருக்கணும்.

சாதாரண விஷயத்தப் பத்தி பேசினாகூட, பொண்ணுங்கள புகழ்ந்து தள்ளிடுவாங்க. உதாரணத்துக்கு, பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபா பிச்சை போட்டேன்“னு அந்தப் பொண்ணு சொன்னாகூட, “ச்சே.. எவ்ளோ பரந்த மனசு உனக்கு? உன்ன மாதிரி இரக்க குணம் உள்ள பொண்ண நா பாத்த்தேயில்ல.. இந்தக் காலத்துல இதெல்லாம் ரொம்ப பெரிய்ய்ய விஷயம்.. உன்ன என் ஃப்ரெண்ட்னு சொல்றதுக்கே பெருமையா இருக்கு, உனக்கு வரப்போற புருஷன் ரொம்ம்ம்ப குடுத்து வச்சவன்“னு புகழ்ந்து தள்ளிடுவாய்ங்க.

13. கல்யாணப் பேச்சு..


என் வீட்ல பொண்ணு பாக்க ஆரம்பிக்கிறாங்க“னு பேச்ச ஆரம்பிப்பாங்க. பொண்ணு எப்படியிருக்கனும்னு எதிர்பார்க்குறீங்க“னு கேட்டுட்டா போதும். “உன்ன மாதிரி அமைதியா, உன்ன மாதிரி அழகா, உன்ன மாதிரி அக்கறையா இருக்கணும்“னு வரிசையா அடுக்கிகிட்டே போவாங்க. அந்தப் பொண்ணுக்கு கோவம் வந்துடுச்சுனா உடனே “ஐயோ.. நா உன்ன மாதிரினு தான் சொன்னேன். உன்னைனு சொல்லல“னு சமாளிப்பானுக.

14. என்னையெல்லாம் யாருக்குப் பிடிக்கப்போகுது??


எனக்கு யாருமே இல்லாத மாதிரி தோணுது, என்னைய எந்தப் பொண்ணு கல்யாணம் பண்ணிக்குவா? என்னைய யாருக்குப் பிடிக்கப்போகுது, வாழ்க்கைல ஒரு பிடிப்பே இல்ல“னு ஓவரா விரக்தியா பேசுவாங்க. அப்ப தானே பதிலுக்கு ”நா இருக்கேன்ல”னு அந்தப் பொண்ணு சொல்லும்..

15. உனக்குப் பிடிக்கலேனா யூரின் கூட போக மாட்டேன்..


பேச்சுவாக்குல அந்தப் பொண்ணு எதையாவது தனக்குப் பிடிக்கலேனு சொல்லிட்டாப் போதும்.. உடனே “இனிமே நா அத பண்ணி மாட்டேன், உன்ன விட எனக்கு எதுவும் முக்கியமில்ல“னு பிலிம் போடுவாங்க. உதாரணத்துக்கு ஃப்ரெண்ட்ஸ் கூட சினிமாவுக்குப் போறேன்“னு சும்மா போட்டு வாங்குவானுக. என் கூட ச்சாட் பண்ண மாட்டியா?“னு அவ கேட்டுட்டா போதும். உடனே, சரி நா கேன்சல் பண்ணிட்றேன். எனக்கு ப்ரெண்ட்ச விட, எனக்கு உன் கூட பேசுறதுதான் முக்கியம்னு சொல்வாங்க.

16. நா ரொம்ப நல்லவனாக்கும்..

உன் கூட பேச ஆரம்பிச்சதுக்கப்புறம் வேற எந்த பொண்ணையும் பாக்க தோணல. அம்மாகிட்ட கூட கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டேன் தெரியுமா??? உன் ப்ரெண்ட்ஷிப் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, உன் கூட பேசிகிட்டே இப்படியே இருந்திட்றேன்“னு சொல்வாங்க.

17. எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு..

இது கொஞ்சம் பழைய டெக்னிக் தான். இருந்தாலும் விட மாட்டிங்குறாய்ங்க. “உன் போட்டோவ பாத்தேன், எங்கயோ பாத்த மாதிரியிருக்குப்பா, ரொம்ப நெருங்குன சொந்தமா தெரியுற, அந்நியமாவே பாக்கத் தோணல தெரியுமா..“னு ரீல் விடுவாங்க. அதே மாதிரி தங்களோட போட்டேவ அனுப்பும்போது, உடற்கட்டு, கை, மார்பு தெரியுற மாதிரியான போட்டோவ பெரும்பாலும் அனுப்புவாங்க. ஆண்மையா இருக்கேன்னு காட்றாங்களாம்.

18. உன்கிட்ட உண்மைய மட்டும் தான் பேசுவேன்..

வெளிப்படையா இருக்காங்களாம்.. எட்டு முறை லூஸ் மோசன் போனதைக் கூட சொல்லுவாங்க.. அந்த அளவுக்கு தன்கிட்ட எல்லாத்தையும் ஓபனா சொல்றாங்களேனு பொண்ணுங்க ஆச்சர்யப்படணுமாம்.

19. பொசசிவ்வை கிளறுவாங்க..


கஸ்டமர்கேர்“ல இருந்து ஒரு பொண்ணு பேசுச்சு.. வாய்ஸ் நல்லாயிருந்துச்சுப்பா..னு சொல்லி பொண்ணுங்களோட அடிப்படை பொசசிவ் குணத்தை கிளறுவாங்க. திட்டு வாங்கினதுக்கப்புறம், “ஏய் சும்மா சொன்னேன்பா.. உன்குரலுக்கு ஈடு எதுவுமில்ல“னு வழிவானுக.

20. என் மேல நம்பிக்கை இல்லேனா….

“எனக்கு நெட் ப்ராப்ளம், நா ஊருக்கு போறேன்.. அதுனால ச்சாட்டிங் வர முடியாது, உன் நம்பர்ல இருந்து SMS பண்றியா??? என் மேல நம்பிக்கை இல்லேனா காய்ன் போன்ல இருந்து கூட பேசுப்பா..“ இது அவர்களின் உச்சகட்ட ஆயுதம். நம்பிக்கை இல்லையா?னு கேக்குறதுல தான் பல பொண்ணுங்களோட போன் நம்பர்கள் வாங்கப்படுது.. அப்புறம் என்ன??? ச்சாட்டிங் குறைந்து எஸ்எம்எஸ் ஆரம்பிச்சுடுவாங்க. அப்புறம்… வேறென்ன?? அப்படியே போக வேண்டியதுதான்.

நன்றி: யாழ் மின்னல்

ஸ்ரீ ராம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அப்பாவி பொண்களே/ஆண்களே....இப்படி யாராவது ஆரம்பித்தா...உடனே உஷாராயிடுங்க... Empty Re: அப்பாவி பொண்களே/ஆண்களே....இப்படி யாராவது ஆரம்பித்தா...உடனே உஷாராயிடுங்க...

Post by rammalar Mon 24 Jun 2013 - 19:37

:/
அப்பாவி பொண்களே/ஆண்களே....இப்படி யாராவது ஆரம்பித்தா...உடனே உஷாராயிடுங்க... 312055_508054125898150_975300609_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24050
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum