சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்...!!!  Khan11

பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்...!!!

4 posters

Go down

பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்...!!!  Empty பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்...!!!

Post by gud boy Thu 27 Jun 2013 - 12:20

[ பெண்களின் படைப்பு வினோதமானது அவளது அழகும், கவர்ச்சியும், நலினமும், ஆணைப் பொருத்தவரை தேவையானதாக இருக்கிறது. உலகம் முழுதும் அவள் வியாபாரப் பொருளாகிப் போனதற்கு காரணம் அவளது திறமையோ கல்வியோ அறிவோ அல்ல. அவளது உடல்தான் உடல் சார்ந்த கவர்ச்சிதான்.

ஒரு ஆணுடைய பார்வைக்கு முதல் கட்டம் பெண் என்பவள் கவர்ச்சிப் பொருள் தான். இந்தக் கருத்து சிலரை கோபமூட்டலாம். ஆனால் இதுதான் யதார்த்தம் இதுதான் உண்மை.

பெரும் பண முதலைகளின் பொருளாதார சுரண்டலுக்கு கருவியாக்கப்படுவது பெண்கள் தான். ஆண்களின் காம வேட்கையையும் வக்கிரத்தையும் நன்கு உணர்ந்த நிலையில் அதை ஊக்குவிக்கும் விதமாகத்தான் நவீனத்துவ வாதமும் பெண்ணின் உடையும் அமைந்துள்ளன.
பெண்களின் உடல் மீதான ஆண்களின் சிந்தனை எப்படியெல்லாம் தன் நிலையை வெளிப்படுத்துகிறது என்பதை உலக நடப்புகள் விளக்காமலில்லை.]


"பர்தா முஸ்லிம் பெண்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறதா..?" என்பது போன்ற கட்டுரைகளை வெளியிட்டு அதில் உலக நாடுகளில் முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படும் அவதியை - கொடுமையை அவ்வப்போது பலர் அக்கறையோடு வெளிபடுத்தி வருகின்றனர்.

அதுபோன்ற கட்டுரைகளின் தகவல்கள் உண்மையானவை என்றே வைத்துக் கொண்டு அவர்கள் எழுதும் கட்டுரையை அவர்களே மீண்டும் ஒரு முறை படிக்கட்டும். அங்கு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை விட அதில் ஈடுபடும் ஆண்களின் புத்தி - அவன் படைப்பு எத்துனை வக்கிரமானவை என்பது புலப்படும்.
பெண் பற்றியும் அவள் உடைப் பற்றியும் அக்கறையுள்ள ஆண்கள் பேச துவங்கியுள்ளதால் 'வெளிப்படையாக' பல விஷயங்களை பேச வேண்டித்தான் உள்ளது.

பெண் தன்னைப் பொருத்தவரை அனைத்து வித நியாயமான உடற்கூறு, உளவியல் நியதியைப் பெற்றவள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. தனக்கும் உணர்வுண்டு, அறிவு உண்டு, திறமையுண்டு, விருப்பு வெறுப்பு உண்டு, ஏக்கம் ஆசாபாசங்கள் அனைத்தும் உண்டு. கல்வித் தகுதியும் கற்றப்பின் நிர்வாகத் திறமையும் தனக்குண்டு என்பதை எடுத்துக் காட்டி ஆணுக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவளல்ல என்பதை நியாயபடபடுத்தலாம். ஏன் இங்கு கூட ஆணோடு தன்னை ஒப்பிடாமல் அவனைவிடவும் திறமை மிக்கவள் என்பதை நிரூபிக்கலாம்.

இதில் ஆயிரம் நியாயம் இருந்தாலும் கூட ஒரு ஆணுடைய பார்வைக்கு முதல் கட்டம் பெண் என்பவள் கவர்ச்சிப் பொருள் தான். இந்தக் கருத்து சிலரை கோபமூட்டலாம். ஆனால் இதுதான் யதார்த்தம் இதுதான் உண்மை.
அகில இந்திய வானொலி - தொலைக்காட்சி இயக்குனராகவும், ஆசிய பசிபிக் நாடுகளின் மலேஷிய செனடிக் திட்ட ஆலோசகராகவும் பணியாற்றிய 'சித்ரா வைத்தீஸ்வரனி'டம் பெண்ணியம பற்றி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.

'பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்'?.

அவர் பதிலளித்தார். 'நான் பார்த்தவரை எல்லா சமுதாயத்திலும் முதலில் பெண்கள் "செக்ஸ் சிம்பல்" ஆகத்தான் பார்க்கப்படுகிறார்கள்'

இந்தப் பெண்மணி ஆஸ்த்ரேலியா, சிங்கப்பூர், சீனா, மலேஷியா, கொரியா, மெக்சிகோ, பிரான்ஸ் என்று பலநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துனை நாடுகளிலும் ஆண்களின் பார்வை பெண்களின் மீது பட்டவிதத்தைத்தான் அவர் பதிலாக வெளிபடுத்தியுள்ளார்.

பெண்களின் படைப்பு வினோதமானது அவளது அழகும், கவர்ச்சியும், நலினமும்இ ஆணைப் பொருத்தவரை தேவையானதாக இருக்கிறது. உலகம் முழுதும் அவள் வியாபாரப் பொருளாகிப் போனதற்கு காரணம் அவளது திறமையோ கல்வியோ அறிவோ அல்ல. அவளது உடல்தான் உடல் சார்ந்த கவர்ச்சிதான்.
பெரும் பண முதலைகளின் (இவர்கள் எந்த மதத்தை சார்ந்நதவராகவும் இருக்கலாம் அல்லது மதமோ கடவுளோ வேண்டாம் என்று கூறி தன் கல்வியையும் கலாச்சாரத்தையும் கடவுளாக ஏற்றுக் கொண்டவராகவும் இருக்கலாம்) பொருளாதார சுரண்டலுக்கு கருவியாக்கப்படுவது பெண்கள் தான்.

தாய்லாந்தின் சில உணவகங்களில் செய்யப்படும் விளம்பரங்கள்.'எங்கள் உணவகத்திற்கு நீங்கள் சாப்பிட வந்தால் கையையோ கத்தியையோ நீங்கள் வீணாக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்கள் இருக்கையில் சாய்ந்து ஹாயான ரெஸ்ட் எடுங்கள். எங்கள் ஹோட்டல்களின் அழகிகள் உணவை உங்கள் வாயில் ஊட்டி விடுவார்கள். சாப்பிடுவதில் இத்துனை கிளுகிளுப்பா என்று நீங்கள் அசந்துப் போவீர்கள்.'

இதற்கு அடிப்படை காரணம் என்ன?

பெண்களின் உடல். அது சார்ந்த ஈர்ப்பு.

ஆண்களின் காம வேட்கையையும் வக்கிரத்தையும் நன்கு உணர்ந்த நிலையில் அதை ஊக்குவிக்கும் விதமாகத்தான் நவீனத்துவ வாதமும் பெண்ணின் உடையும் அமைந்துள்ளன.
பெண்களின் உடல் மீதான ஆண்களின் சிந்தனை எப்படியெல்லாம் தன் நிலையை வெளிப்படுத்துகிறது என்பதை உலக நடப்புகள் விளக்காமலில்லை.

IAS தேர்வு எழுதி அதிகாரியாக பொறுப்பேற்ற ரூபன் தியோல் பஜாஜ் அவர் கலந்துக் கொண்ட ஒரு விருந்தில் பஞ்சாப் மாநில டி.ஜி.பி கில்லும் கலந்துக் கொள்கிறார். சமயம் பார்த்து ஐயுளு அதிகாரியான அந்தப் பெண்ணின் பின்புறம் தன் கையால் தடவி விடுகிறார். ரூபன் ஒரு படித்த அதிகாரியாக இருந்ததால் இந்த பாலியல் சீண்டலை கோர்ட்வரை கொண்டு செனறு உலகிற்கு காட்டினார்.
DGP தண்டனைப் பெற்றது இங்கு சிறப்பு அல்ல. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பிலிருக்கும் ஒரு அதிகாரி இந்த கீழ்தரமான செயலில் ஈடுபடுகிறார் என்றால் என்ன காரணம்? பெண் மீதான ஈர்ப்பைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது.
பெண்மீதான தன் மோகத்தை தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் தான் கற்பழிப்புகள். ஈவ்டீஸிங்கள், சீண்டல் கொடுமைகள் நடக்கின்றன. இதற்கு வழி தெரியாதவர்கள் வயதுக்குவராத சிறு குழந்தைகளை ஆசை வார்த்தை பேசி கூட்டி சென்று தன் இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.
டாக்டர் பிரகாஷ், நடிகர் சுமன் உட்பட பிரபல்யங்கள், சங்கராச்சார்யார் - பிரேமனந்தா உட்பட ஆன்மீக குருக்கள். பலகாவலர்கள் இவர்கள் அனைவருமே பெண்களைப் பதம் பார்த்துள்ளார்கள்.
இப்படி கோடிக்கோடியான ஆண் வக்கிரங்களை சுட்டிக் காட்டலாம். இவை அனைத்துமே பெண்களின் மீதான ஆண்களின் ஈர்ப்புக்குரிய உதாரணங்கள்.


இதற்கெல்லாம் தீர்வு என்ன?

1) ஆண்களின் உணர்வுகளை சாகடித்து பேடிகளாக ஆக்க வேண்டும்.

2) மிகக்கடின தண்டனைகள் வழியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும்.

3) நிலைமைகளின் விளைவுகளை உணர்ந்து முடிந்தவரை பெண்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இதில் முதல் நிலையை தேர்ந்தெடுக்க சாத்தியமில்லை.

இரண்டாம் வழியில் குற்றங்கள் குறையலாம். தண்டனைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதத்தின் உள்ளே நாம் இங்கு நுழையவில்லை.

மூன்றாவது வழிதான் பாதுகாப்பிற்கு சிறந்த வழி. பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் இங்கு குறிப்பிட்டுள்ளது வெறும் புர்காவிற்கு மட்டுமல்ல அது அனைத்துப் பாதுகாப்பையும் குறிக்கும். அதில் மேலதிக உடையும் அடங்கும்.

பெண்களின் மேலதிக உடை அடிமைத்தனம் என்று விமர்சிப்போர் (தன்னை முழுமையாக மூடிக் கொண்டு ஆட்சிப் புரிந்த - இன்றைக்கும் அதே நிலையில் உலவும் ஜெயலலிதாவை அடிமையின் சின்னமாகக் கொள்ளலாமா..) இளம் பெண்களிடம் இந்தக் கருத்தை கொண்டு செல்வதின் மூலம் சுதந்திரம் என்பதற்கான பொருளை ஆடைக்குறைப்பு என்ற அர்த்தத்தில் உணர்த்தி நிலைமையை இன்னும் பலவீனப்படுத்தி விடுகிறார்கள்.

தொடையும் புட்டமும் மார்பும் தெரிய உடை உடுத்தி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படுபவள் வேண்டுமானால் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கலாம். அந்த மீடியாக்கலாச்சாரத்தால் கவரப்பட்டு அதேபோன்று உடை உடுத்தி சுதந்திரம் கொண்டாடும் பெண்களில் எத்துனைப் பேருக்கு பாதுகாப்பு வளையம் இருக்கிறது..?

மேலதிக உடை அடிமைத்தனம் என்று பல்லிலிக்கும் பல மேதலாவிகள்? அதையே முன்மொழிய துடிக்கும் நாகரீக? பெண்கள் இதற்கு ஒரு மாற்றுவழியை முன் மொழியட்டும் பார்க்கலாம்.

பெண் எந்த அளவிற்கு தன்னை ஆடையால் மறைத்துக் கொள்ளலாம் என்ன அளவு வைத்துள்ளீர்கள் என்று கேள்வியை நாம் அவர்களுக்கு வைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கிருந்தும் முறையான பதில் கிடைக்கவில்லை' அதை ஆண்களாகிய நீங்கள் பேசத்தேவையில்லை. பெண்கள் - நாங்கள் பார்த்துக் கொள்வோம்' என்று முழங்கும் பெண்களும் கூட இந்த அளவிற்கு மறைப்பதில் தான் பெண் சுதந்திரம் உள்ளது என்பதை சொல்லவில்லை.

பெண்ணின் ஆடை கழற்றுவதில் ஆண் வக்கிரம் பளிச்சிடுகிறது என்றால் அதையே சுதந்திரம் என்று பேசும் பெண்களே உங்களின் சுதந்திர சிந்தனை நல்ல சிந்தனைத்தான் போங்கள்.
நன்றி: இதுதான் இஸ்லாம்
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்...!!!  Empty Re: பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்...!!!

Post by kalainilaa Thu 27 Jun 2013 - 13:45

*_*_*_*_*_
காய்க்கிற மரம் கல்லடி படும் 
பெண்கள் யென்றால் காம கண்கள் மேயும் 
தவிர்க்க முடியாத ஒன்றாய் போனாலும் 
இஸ்ஸலாம் கூறும் நடை முறைகள் 
பெண்களை கன்னியப்படுதும் தவிர 
காயப்படுத்தாது என்பது உண்மையே
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்...!!!  Empty Re: பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்...!!!

Post by gud boy Thu 27 Jun 2013 - 15:42

kalainilaa wrote:*_*_*_*_*_
காய்க்கிற மரம் கல்லடி படும் 
பெண்கள் யென்றால் காம கண்கள் மேயும் 
தவிர்க்க முடியாத ஒன்றாய் போனாலும் 
இஸ்ஸலாம் கூறும் நடை முறைகள் 
பெண்களை கன்னியப்படுதும் தவிர 
காயப்படுத்தாது என்பது உண்மையே

!_!_
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்...!!!  Empty Re: பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்...!!!

Post by நண்பன் Thu 27 Jun 2013 - 16:00

நான் வசிக்கும் நாட்டில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாகத்தான் உள்ளார்கள் இரவு நேரங்களில் அவர்கள் வேலைகளை அவர்களே வெளியில் சென்று முடிக்கக் கூடியவர்களாகவும் உள்ளார்கள்.

காரணம் இங்கு சிறிய குற்றமாக இருந்தாலும் தண்டனைகள் அதிகமாக உள்ளது அந்தப்பயத்தில் நிறையப்பேர் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்கிறார்கள்.

நிச்சியமாக தண்டனைகள் அதிகமாகும் போது குற்றங்கள் குறையும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்...!!!  Empty Re: பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்...!!!

Post by ahmad78 Fri 28 Jun 2013 - 10:54

கலைநிலா wrote:காய்க்கிற மரம் கல்லடி படும்
பெண்கள் யென்றால் காம கண்கள் மேயும்
தவிர்க்க முடியாத ஒன்றாய் போனாலும்
இஸ்லாம் கூறும் நடை முறைகள்
பெண்களை கன்னியப்படுதும் தவிர
காயப்படுத்தாது என்பது உண்மையே
உண்மை உண்மை
!_!_!_!_!_!_!_!_!_!_!_!_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்...!!!  Empty Re: பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்...!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum