சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

வளமான வாழ்விற்கு தன்னம்பிக்கை ஓர் வழிகாட்டி Khan11

வளமான வாழ்விற்கு தன்னம்பிக்கை ஓர் வழிகாட்டி

3 posters

Go down

வளமான வாழ்விற்கு தன்னம்பிக்கை ஓர் வழிகாட்டி Empty வளமான வாழ்விற்கு தன்னம்பிக்கை ஓர் வழிகாட்டி

Post by Muthumohamed Fri 28 Jun 2013 - 22:10

நம்மைப்பற்றி நாம் என்ன எண்ணம் கொண்டிருக்கின்றோம் என்பதைப் பொறுத்துத்தான் நமது சந்தோஷமும் சாதனையும் அமைகின்றது. இதனையே தன்னம்பிக்கை என்போம். தன்னால் முடியும் என்று எண்ணுபவனின் எதிர்காலம் ஒளிமிகுந்ததாய் அமையும். நான் நல்லவன், கெட்டிக்காரன், சோம்பேறி அற்றவன், என்னால் எல்லாவற்றையும் சாதிக்கமுடியும் என்று கூறுபவனிடத்து தன்னம்பிக்கை இருக்கும்.

இது வாழ்வின் ஜீவத்துடிப்பு. அதன் ஆணிவேர் தன்னம்பிக்கைதான். தன்னம்பிக்கை உள்ளவன் மனித வாழ்க்கையின் கடைசி நிமிடம்வரை போராடுகின்றான். ஒரு மனிதன் தனது வாழ்வில் பல்வேறு வழிகளில் வெற்றியீட்டுகின்றான் என்றால், அதற்கு காரணம் அவன் தன்மேல் கொண்டுள்ள தன்னம்பிக்கைதான். தன்னம்பிக்கை உள்ளிருந்து புறப்படும் ஒரு சக்தி. அது உள்ளவர்களை அவர்களின் பேச்சின்மூலம், செயலின்மூலம் நடையுடை பாவனைகள் மூலம் உடனே அறிந்து கொள்ளலாம்.

தன்னம்பிக்கை உடையனிடத்தில் சிறந்த எண்ணத்திறனும், துணிவும் ஏற்படுகின்றன. அவன் எந்தச் செயலிலும் சூழ்நிலையையும் கண்டு அஞ்சாமல் துணிவுடன் செயல்புரிவதன் மூலம் வெற்றியடைந்து மேன்மை பெறுகின்றான். வாழ்வில் உயர்ந்தநிலை அடைய வேண்டும் என்பதே அவரது திடமான குறிக்கோளாகும். தன்னம்பிக்கை உடையவனுக்கு அவை கனவுகள் அல்ல. ஏனெனில் அவனது துணிவும், எண்ணத்திறமையும், அவற்றை நினைவாக்கி நிகழவைக்கின்றன. இவனது தொடர்ந்த சிந்தனை அவனது குறிக்கோளை அவனது ஆழ்மனதில் உணர்வலைகளாகப் பதிந்துவிடுகிறது. அவனது நினைவற்ற மனதில் பதிந்துள்ள அலைகள் அவரது எண்ணத்திறமையை வளர்த்து தன் குறிக்கோளை அடையத் தேவையான வழிமுறைகளை உணர்த்துகின்றன.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வளமான வாழ்விற்கு தன்னம்பிக்கை ஓர் வழிகாட்டி Empty Re: வளமான வாழ்விற்கு தன்னம்பிக்கை ஓர் வழிகாட்டி

Post by Muthumohamed Fri 28 Jun 2013 - 22:11

தன்னம்பிக்கை உருவாவதற்கான காரணிகளைக் குறிப்பிடும்போது ஒரு குழந்தை தாயின் கருவில் உருவாகும்போது தாயானவள் போதியளவு பாதுகாப்பு, அரவணைப்பு வழங்கும்போது அது வெளியுலகில் வந்து பல இடர்பாடுகளையும், சூழ்நிலைகளையும், சந்திக்கும்போது தந்தையும், தாயும் தைரியமூட்ட, ஊக்கமூட்ட குழந்தை நிஜமான தன்னம்பிக்கையில் வளரும். அவை எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் தட்டிக் கொடுங்கள். தைரியம் கொடுங்கள். குழந்தை தானனாகவே தன்னம்பிக்கையில் வளர்ச்சிபெறும்.

ஒரு மனிதன் முழுமையாக தன்னம்பிக்கையில் வளர்ச்சிபெற அவனின் கல்விஅமைப்பு, மதச்சார்புள்ள வளர்ப்புமுறை பால், உணர்வு, அறிவும் செயலும் போன்ற ஏராளமான காரணங்களே சிறு குழந்தையாயிருக்கும் போது குழந்தை செய்யக்கூடிய பல எளிதான காரியங்களை அவனைச் செய்ய பயிற்சி கொடுத்தால் குழந்தைக்கு ‘நம்மால் முடியும்’ என்ற பெருமிதம், அதனால் தன்னம்பிக்கை ஏற்படும். கொஞ்சம் வளர்ந்தவுடன் சுமார் 14 – 16 வயதில் சற்று சிரமமான பயிற்சிகளை, சோதனைகளை கொடுத்தால் மாணவன் இவ்வுலகில் பல தோல்விகளும் வெற்றிக்குப்படிகளே என்ற உணர்வை, உலக இயல்பை, தோல்விகளை சமாளிக்கும் மனோபாவத்தை பெறுகிறது.

தன்னம்பிக்கை குறைவதற்கான காரணிகளை நோக்குமிடத்து தாயின் கருவில் உருவாகும்போது தாயானவள் அதனை ஏற்க முடியாமலும் பல்வேறு பிரச்சனைகளுக்குள் போராடுகின்றாள். குழந்தை வெளியுலகிற்கு வந்ததும் பல்வேறுபட்ட போராட்டங்களை சந்திக்கின்றது. அதற்கு முகம் கொடுக்க முடியாமல், எதிர்நீச்சல் போடாது தவிக்கின்றான். வன்மம் வளருகின்றது. பகையுணர்வுடனும் வாழமுயல்கின்றான். பெற்றோரினன் அன்பு, ஆதரவு கிடையாமல் போகின்றது. உலகத்தையே வெறுக்கின்றான். கல்வியில் ஆர்வமில்லாமல் காணப்படுகின்றான்.

இதற்கு உதாரணமாக: பரீட்சையில் பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் 3 சிறுவர்கள் பரீட்சையை எழுதுகின்றான், “என்னுடைய பெற்றோர் என்னை மக்கு என்று அடிக்கடி பேசுவார்கள். இம்முறை கூடிய மதிப்பெண் எடுக்காவிட்டால் அனாதை இல்லத்தில் சேர்ப்பதாக கூறியதாகவும், “மற்றைய சிறுவன், “தான் வீட்டில் இருப்பதிலும் பார்க்க மருந்து குடிப்பது மேல்” எனவும், தன்னை வீட்டிற்கு வர வேண்டாம் என கூறியதாகவும், மூன்றாவது சிறுவனின் பெற்றோர் இம்முறை பரவாயில்லை கெட்டிக்காரன். அடுத்த பரீட்சையில் கெட்டித்தனமாக படித்து நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என தைரியம் ஊட்டினார்கள்.

பார்த்தீர்களா பெற்றோரின் வளர்ப்பு முறையை; பிள்ளைகள் ஒரு பரீட்சையில் தவறிவிட்டால் உலகமே இருண்டு விடாது. படிப்பும், பரீட்சையும் வாழ பல வழிகளில் ஒருவழி என்று சொல்லிக் கொள்ள வேண்டும், அவர்களில் மிகக் கவனம் எடுக்க வேண்டும். தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும். பாராட்ட வேண்டும்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வளமான வாழ்விற்கு தன்னம்பிக்கை ஓர் வழிகாட்டி Empty Re: வளமான வாழ்விற்கு தன்னம்பிக்கை ஓர் வழிகாட்டி

Post by Muthumohamed Fri 28 Jun 2013 - 22:11

மன்னிக்கும் மனோபாவத்தை வளர்க்க வேண்டும். குழந்தைகள் பிற மனிதர்களையோ, சம்பவங்களையோ கண்டு பயப்படாதிருக்க கலங்காதிருக்க நாம் தைரியமூட்டி வழிவகைகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

மனிதன் ஏன் தன்னம்பிக்கையற்றுப் நிற்கிறான் ? தனது திறமையில் அவனுக்கு சந்தேகம், தனது முடிவெடுக்கும் திறன் பற்றி பயம், தன்னால் முடியும் என்பதில் நம்பிக்கையில்லை. என்ன ஆகுமோ என்ற பயம்.

தன்னம்பிக்கையற்றவனுக்கு தன்னைப்பற்றிய கௌரவமான அபிப்பிராயம் இருக்காது; தான் எதற்கும் உதவாக்கரை என்று தன்னைப்பற்றியே மதிப்பு போட்டுக்கொள்கிறான். ஏதாவது குருட்டு அதிஷ்டம் கிடைக்காதா என வானத்தைப் பார்ப்பவன் தைரியம் குறைவு, எதையும் செய்ய தயங்குவான். பிறருடன் கலகலப்பாக பழகமாட்டான். பிறருடன் பழகினால் அவர்கள் தன்னை அவமானப்படுத்தி விடுவார்களோ என்ற பயம். பிறரைச் சார்ந்து நிற்க ஆசைப்படுவான் தன் இயலாமைக்கு சமூகத்தைக் குற்றம் சாட்டுவான். தன்னம்பிக்கையில்லாதவன் செத்துக்கொண்டு இருக்கிறான். அவன் ஓர் நடைப்பிணம். பொறுப்பைக் கண்டு பயப்படுகின்றான்.

தன்னம்பிக்கையில்லாதவன் பயமும், கூச்சமும் நிறைந்தவனாகக் காணப்படுகின்றான். பிறருடன் பழகக் கூச்சமடைகின்றான். தொழிலில், குடும்பத்தில், சமுதாயத்தில் தோல்வியை தழுவுகின்றான். இவர்கள் அதிக மன எழுச்சி அடைபவர்கள். மன எழுச்சி காரணமாக செயல்புரிய இயலுவதில்லை. சமூகத்திலிருந்து ஓதுங்கிப்போக நினைப்பவர்கள் எப்பொழுதும் சுய ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள் தமக்குள்ளே ஆலோசனையில் ஆழ்ந்துவிடுவார்கள். தயக்கம் இருக்கும் சூழலைப் புரிந்து கொள்ளமாட்டார்கள் தம்மால் என்ன முடியும் என்ற எண்ணத்துடன் தவறான முடிவுகள் எடுக்கின்றார்கள். அவர்கள் நடைமுறையில் உலகில் வாழக் கஸ்டப்பட்டு கற்பனை உலகில் வாழத் துவங்குகிறார்கள். தன்னை நம்பமாட்டார்கள். கட்டிய மனைவியை நம்பமாட்டார்கள். பிறரைச் சார்ந்து வாழக் கவலைப்படுவார்கள். தங்கள் பொறுப்பை, கவலைகளை யார் தலையிலாவது சுமத்தி விடுவார்கள். சிறுகுழந்தைகள் போல் எதிலும் சந்தேகம் பிறக்கும்.

இவர்கள் பலவீனமானவர்கள், இவர்கள் சிறு விஷயத்தை பெரிதுபடுத்துவார்கள். அவர்கள் செய்யும் காரியம் தவறு என்று பிறர் எடுத்துக் காட்டிவிடட்டால் மனம் உடைந்து போவார்கள். பேச்சில் சிரமப்படுவான், அவசர உணர்ச்சியுடையவன், மனஉறுத்தல் உடையவன், சோர்வடையும் தன்மை, எரிச்சல் போன்ற குணங்களை உடையவனாகக் காணப்படுகின்றான்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வளமான வாழ்விற்கு தன்னம்பிக்கை ஓர் வழிகாட்டி Empty Re: வளமான வாழ்விற்கு தன்னம்பிக்கை ஓர் வழிகாட்டி

Post by Muthumohamed Fri 28 Jun 2013 - 22:12

தன்னம்பிக்கையில் வளர சில வழிகள் :-

பயத்தின் காரணத்தை புரிந்து கொள்ளல், சோகத்தின் தாழ்வு மனப்பான்மையின் காரணத்தை கண்டுபிடிப்பதுதான். அச்சமயத்தில் பயத்தை எழுதி ஒரு பெட்டியில் போடுங்கள். வாரம், மாதம் கழித்து படித்துப் பாருங்கள்.

சில சமயங்களில் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களிலும் நாம் துன்பப்படுகிறோம். இது முட்டாள்தனம் அந்தச் சமயத்தில் ஒரு பிரார்த்தனை செய்யுங்கள் அவன் கையில் பாரத்தைப் நாடுங்கள். நேரம் இருக்குமானால் கோயிலுக்குச் செல்லுங்கள். மனமாரக் கண்ணைமூடி பிரார்த்தியுங்கள்.
உங்களைப்பற்றி பிறர் பாராட்டியதை எழுதி ஒரு தாளில் வைத்திருங்கள். உங்கள் வாழ்வில் பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கக்கூடும் அதன் சாரத்தை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். நம்பிக்கை தளரும்போது படித்துப்பாருங்கள் அப்போது மனம் மீண்டும் இலட்சியத்தில் பிறக்கும். தன்னம்பிக்கையால் பூரிப்படையும். தைரியத்தால் வலுப்பெறும்.

நாம் ஏதாவது காரியத்தில் ஈடுபட வேண்டும். எழுதுங்கள், பாடுங்கள், காலாற நடந்து செல்லுங்கள், கொத்துங்கள், பாத்தி கட்டுங்கள், செடிபயிரிடுங்கள், பல காரியங்களைச் செய்யும்போது மனம் ஒரு சாதனையில் திகழும்.
தன்னம்பிக்கைக்கு மருந்து வேலைதான். காரியம்தான் எனக்கு எழுதவராது என்று சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி எழுத்தாளனாக முடியும். என்னால் முடியும் நான் எந்தக் காரியத்தையும் சிறிது சிறிதாக செய்துவிடுவேன் என்ற மனோபாவத்தில் எண்ணங்களை மனதிற்குள் போடும்போது நமக்குள்ளே இருக்கும் நம்பிக்கையை நாம் தட்டிக் கொடுக்கிறோம் அப்போது தான் நாம் முழுமையாக தன்னம்பிக்கை உள்ள மனிதனாக வாழமுடியும், வளரமுடியும்.

தனித்து நின்றுதான் துணிச்சலோடு நின்றுதான் மகத்தான சாதனைகளும், மகத்தான புரட்சிகளும் உலகில் நிகழ்ந்திருக்கின்றன. சுயமாக சிந்தியுங்கள் தனித்து நில்லுங்கள் முதலில் எண்ணங்களில் புரட்சி நிகழட்டும்.

தன்னம்பிக்கை வளர
• என்னைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தல்.
• எனக்குள் இருக்கும் எமிர்மறையான உரையாடலை இனங்கண்டு விடுதலை
• நேர்மறையான உரையாடலை வளர்த்தல்
• என்னோடு ஆழமான உறவை ஏற்படுத்தல்.
• எனக்கு ஆரோக்கியம் தரும் நல்வாழ்க்கை முறையை வாழ்தல்.
• சவால்களை எதிர்கொள்ளுதல்.
• திறந்த, தெளிவான உரையாடல்.
• நான் உள்வாங்கும் விடயங்களை ஆராய்ந்து அறிதல்.
• பிறரை சாட்டும் மனநிலையிலிருந்து விடுதலை.
• என்னை மன்னித்து என்மேல் கருணைகொள்ளல்.
• நல்ல உறவை வளர்த்தல்.

by NAGEN VELAYATHAM
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வளமான வாழ்விற்கு தன்னம்பிக்கை ஓர் வழிகாட்டி Empty Re: வளமான வாழ்விற்கு தன்னம்பிக்கை ஓர் வழிகாட்டி

Post by ahmad78 Sat 29 Jun 2013 - 11:47

தன்னம்பிக்கை வளர நல்ல தகவல்கள்
:/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வளமான வாழ்விற்கு தன்னம்பிக்கை ஓர் வழிகாட்டி Empty Re: வளமான வாழ்விற்கு தன்னம்பிக்கை ஓர் வழிகாட்டி

Post by ansar hayath Sat 29 Jun 2013 - 20:31

ahmad78 wrote:தன்னம்பிக்கை வளர நல்ல தகவல்கள்
:/

 !_
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

வளமான வாழ்விற்கு தன்னம்பிக்கை ஓர் வழிகாட்டி Empty Re: வளமான வாழ்விற்கு தன்னம்பிக்கை ஓர் வழிகாட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum