சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

பான் கார்டு (PAN Card) என்றால் என்ன? Khan11

பான் கார்டு (PAN Card) என்றால் என்ன?

3 posters

Go down

பான் கார்டு (PAN Card) என்றால் என்ன? Empty பான் கார்டு (PAN Card) என்றால் என்ன?

Post by gud boy Wed 21 Aug 2013 - 17:29

நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) என்றால் என்ன?

www.uzhavan.com%28%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%29.jpg" target="_blank" rel="nofollow">www.uzhavan.com%2528%25E0%25AE%2589%25E0%25AE%25B4%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2529.jpg" style="width: 225px;height: 135px" alt="" />
நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு(Permanent Account Number-PAN) நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான்கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்களும் பற்றி பார்போம்.

1. PAN CARD என்றால் என்ன?
Permanent Account Number என்பதின் சுருக்கமே.


2. அதன் முக்கியதுவம் என்ன?
வங்கி கணக்கு தொடங்குவதற்கும்,மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச்சந்தையில் முதிலீடு செய்வதற்க்கும் அடிப்படைத் தேவை ஆகிவிட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம்பளம்கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.


3. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.


4அதற்கு என்ன செலவாகும்?
இதற்காக ரூபாய் 94/- NRI களுக்கு ரூபாய் 744/- மட்டுமே
செலவாகும். புரோக்கர் மூலமாக ரூபாய் 250/-முதல் செலவாகும்.


5. PAN CARD - ன் அவசியம்:
1) ரூ.5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும் போது அல்லது விற்கும் போது அவசியம்.
2) வாகனம் அல்லது மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது (இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக)
3) ரூ.50,000/-க்கு மேல் வங்கியில் Fixed Deposit செய்யும் போது அவசியம்.
4) அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கில் வைக்கப்படும் Fixed Deposit ரூ.50,000 தாண்டும் போது அவசியம்.
5) ஒப்பந்த மதிப்பு ரூ.1லட்சம் மிகும் போது செய்யப்படும் பிணையங்களின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது அவசியம்.
6) வங்கி கணக்கு துவங்கும் போது.
7) தொலைபேசி, செல்போன் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது.
8) தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிக்கு செலுத்தும் கட்டணம் ரூ. 25,000/- மிகும் போது அவசியம்.
9) ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD/Pay Order அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ.50,000/- க்கு அதிகமாக செலுத்தும் போது அவசியம்.
10) வருமான வரி ரிட்டன தாக்கல் செய்ய அவசியம்.
11) சேவை வரி மற்றும் வணிக வரிதுறையில் பதிவு சான்று பெற Pan Card கட்டயமாகும்.
12) முன்பு, மியூச்சுவல் ஃபண்டில் ரூ.50,000 மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யும் போதுதான் பான்கார்டு அவசியமிருந்தது. ஆனால், தற்போது எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான்கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்.
மேலும், மைனர் பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது, பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, தற்போது மைனர்களுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.



இதனால் அனைவரும் அவசர அவசரமாக பான்கார்டு பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பான் கார்டு பெறுவது என்பது கடினமான காரியமாகச் சிலர் நினைக்கின்றனர். சிலர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பான் கார்டு வாங்கித் தருவதாகக் கூறி குறிப்பிட்ட தொகையைவிட அதிகமான கட்டணத்தை வசூலித்து கொள்ளை லாபம் அடித்தும் வருகின்றனர்.


"மத்திய அரசு 2007 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்படும் அனைத்து ரிட்டன்களுக்கும், மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கும் பான் கார்டு எண்ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கியுள்ளது.


மேலும், இந்தக் கார்டை வாங்கினால் அரசுக்கு ஆண்டுதோறும் வருமான வரி செலுத்த வேண்டியிருக்குமோ என்ற ஒருவித அச்சமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. உண்மையில், பான் கார்டு வாங்குவதால் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. அனைவரையும் வருமான வரம்புக்குள் கொண்டு வருவதற்காகவே இந்த பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


பான் கார்டு பெறுவதற்கான நடைமுறைகள் தற்போது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.
www.uzhavan.com%28%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%29.jpg" target="_blank" rel="nofollow">www.uzhavan.com%28%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%29.jpg" style="width: 200px;height: 141px" alt="" />

பான்கார்டு பெற விரும்புவோர் வருமான வரித்துறையின்Form49-ஏ என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் முகவரிக்கான சான்றிதழை இணைக்க வேண்டும்.

இந்த விண்ணப்பப் படிவத்தை http://www.utitsl.co.in/pan (or) www.tin-nsdl.com (or) www.incometaxindia.gov.in,ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்திலும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம். அப்ளை செய்யப்பட்ட கார்டி-ன் Status அறிய


இதற்கு கீழ்கண்ட அடையாள சான்றிதழ்களில் சில அவசியம்.விலாசம் தொடர்பாக கீழ்கண்ட சான்றிதழ்களில் சிலவும் அவசியம்.
1. பள்ளி டிசி1. மின் கட்டண ரசீது
2. பிளஸ் டூ சான்றிதழ்2. தொலைபேசி கட்டண ரசீது
3. கல்லூரி் சான்றிதழ்3. வங்கிக் கணக்கு விவரம்
4. வங்கிக் கணக்கு விவரம்4. வீட்டு வாடகை ரசீது
5. வாட்டர் பில்5. பாஸ்போர்ட்
6. ரேசன் கார்டு6. ரேசன் கார்டு
7. வீட்டு வரி ரசீது7. வாக்காளர் அடையாள அட்டை
8. பாஸ்போர்ட்8. வீட்டு வரி ரசீது
9. வாக்காளர் அட்டை9. ஓட்டுனர் உரிமம்
10. ஓட்டுனர் உரிமம்10.பணியாற்றும் நிறுவனத்திடம் பெறும் கடிதம்


விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போதுமானவை.
உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற என்றஇணையத்தளத்தை நாடலாம்.

சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.
ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை பெற பான்கார்ட் உதவுகிறது.
பான் கார்டில் உள்ள எண்-எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும். அதைத் தெரிந்து கொள்வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் ACHPL456B என்று வைத்துக்கொள்வோம்.
முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப்பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டா என்பதை குறிக்கிறது.
C - Company
P - Person
H - HUF(Hindu Undivided Family)
F - Firm
A - Association of Persons (AOP)
T - AOP (Trust)
B - Body of Individuals (BOI)
L - Local Authority
J  - Artificial Juridical Person
G - Government
5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும். அடுத்து வரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையது தான்.

மத்திய வருமான வரித்துறை அலுவலகம் மூலம், 2003 ஜூலை முதல் தேதிக்கு முன்பு வரை விநியோகிக்கப்பட்ட பான்கார்டுகளை தற்போதும் பயன்படுத்தலாம். எனவே, புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. கலர் ஃபோட்டோவுடன் கூடிய புதிய லேமினேட் கார்டை பெற வேண்டும் என விரும்பினால் மட்டும் புதிதாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பெறும் போது, ஏற்கனவே இருந்த எண்தான் ஒதுக்கப்படும். இதேபோல், பான் கார்டு தொலைந்து போனாலோ அல்லது ஏதாவது சேதமுற்றாலோ கூட விண்ணப்பித்து புதிய கார்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

இனி வரும் காலங்களில் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் பான் கார்டு என்பது அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. எனவே, அதை இப்போதே வாங்கி வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பான் கார்டு (PAN Card) என்றால் என்ன? Empty Re: பான் கார்டு (PAN Card) என்றால் என்ன?

Post by Muthumohamed Wed 21 Aug 2013 - 19:49

பான் கார்டு பற்றிய விரிவான விளக்க பதிவுக்கு நன்றி பாய்

என்னிடம் ஏற்கனவே பான் கார்டு இருக்கிறது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பான் கார்டு (PAN Card) என்றால் என்ன? Empty Re: பான் கார்டு (PAN Card) என்றால் என்ன?

Post by பானுஷபானா Thu 22 Aug 2013 - 14:00

நானும் ஒன்னு வாங்கி வச்சிக்கனும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பான் கார்டு (PAN Card) என்றால் என்ன? Empty Re: பான் கார்டு (PAN Card) என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum